Wednesday, February 10, 2010

கேபிள் & பரிசல் புத்தக வெளியீடு இன்ன பிற

    கேபிள் சங்கர் & பரிசல்காரன் புத்தக வெளியீட்டு விழா

     

    அகநாழிகை திறந்து வைத்த வாசல் பலருக்கு, பதிவர்களையும் எழுத்தாளர்கள் என்று மதித்து, அவர்களின் புத்தகங்களையும் வெளியிட வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டியது.

     

    அவ்வகையில் ‘நாகரத்னம் பதிப்பகம்‘ சார்பில் திரு.குகன் அவர்கள் பிரபல பதிவர்களான ‘கேபிள் சங்கர்‘ மற்றும் ‘பரிசல்‘ இருவருடைய புத்தகங்களையும் வெளியிடுவது பாராட்டுக்குரியது. பதிவர்களின் புத்தகங்களாகிய இவற்றை பதிவர்கள் அனைவரும் வாங்கி ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது போன்றது.

     

    கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரன் இருவரது எழுத்துக்களை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. Minimum Guarantee எனப்படும் குறைந்தபட்ச உத்திரவாதம் மட்டுமின்றி அதிகபட்ச உற்சாகத்தையும், வாசிப்பு சுவாரசிய்த்தையும் அளிக்கக் கூடியவை.

     

    எனவே பிப்ரவரி 14 காதலர் தினம் (!?) அன்று வெளியிடப்பட உள்ள கேபிள் சங்கர் மற்றும் பரிசல் இருவரது புத்தகங்களையும் கூச்சப்படாமல் கேட்டு வாங்கி வாசித்து மகிழவும் மேலும் இதுபோன்ற பல வெளியீட்டு விழாக்கள் நடத்த எங்களைப் போன்ற பதிப்பாளர்களுக்கு உற்சாகம் தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

     

    புத்தகம் வெளியிடும் கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரன் மேலும் பல புத்தகங்கள் வெளியிடவும், தொடர் வெற்றிகள் பெறவும் எனது நல்வாழ்த்துகள்.

    cable parisal

    பின்குறிப்பு : அகநாழிகை வெளியிட்டுள்ள புத்தகங்களும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்‘ புத்தகக் கடையில் கிடைக்கிறது என்பதை அறியவும்.

     

    0

    அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

     

    பதிவர்கள் அச்சு ஊடகத்திற்கு வருவது மகிழ்ச்சியான செய்தி. இதன் அவசியம் என்ன என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். எழுத்து என்பதை ஆவணப்படுத்துவது அச்சு வடிவத்தில் அது வருகின்ற போதுதான் என்பது மறுக்கவியலாத உண்மை.

     

    அந்த வகையில் முதலாவதாக பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது ‘அகநாழிகை‘ மட்டுமே என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இணையத்தில் எழுதுவதோடு அச்சு ஊடகங்களிலும் அவர்கள் சிறக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி பதிவர்களின் புத்தகங்களையே அகநாழிகை இதுவரை வெளியிட்டு வந்துள்ளது. எல்லோரும் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் என்பதும், முதலாவதாக அவர்களது புத்தகங்கள் அச்சில் வருவதைக் காண்பது அகநாழிகை வாயிலாகத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

    ‘அகநாழிகை‘ இலக்கிய இதழ் அக்டோபர் 2009 ல் வெளியானது. அதன் பிறகு இரண்டாவது இதழ் டிசம்பர் 2009 லும், மூன்றாவது இதழ் (பிப்ரவரி 2010) தற்போது தயாராகிறது. அகநாழிகை படைப்பிலக்கியத்தின் பன்முக வெளிப்பாடாக குறுகிய காலத்தில் பலரைச் சென்றடைந்து கவனம் பெற்றுள்ளது. தமிழின் முக்கியப் படைப்பாளிகள் பலரும் ‘அகநாழிகை‘ இதழ் குறித்த தங்கள் மகிழ்ச்சியையும், ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்கள். இது அகநாழிகையின் பங்கேற்ற படைப்பாளிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

     

    அகநாழிகை இதழை அனைவரும் தங்களுக்கான களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். புதிய படைப்பாளிகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதிலும், படைப்புகளில் சோதனை முயற்சிகள், ஆகச்சிறந்த படைப்புகளை வெளியிடுவதிலும் அகநாழிகை கவனம் செலுத்துகிறது.

     

    இன்னுமொரு முக்கிய விஷயம், அகநாழிகை தொடர்ந்து இயங்குவதற்கான சூழல் ஏற்படுத்துவது. அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி சேர்வதன் வாயிலாக பலரைச் சென்றடையும் வாய்ப்பு உள்ளது. அகநாழிகையின் ஆண்டு சந்தாவாக மிகவும் குறைவான தொகையே (ரூ.200/-) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     

    மேலும் ரூ.1000/- செலுத்தி அகநாழிகையின் புரவலராக இணையலாம். ஒரு முறை செலுத்தினால் போதுமானது. சந்தா தனியே செலுத்தத் தேவையில்லை. புரவலர்களின் பெயர்கள் தொடர்ந்து அகநாழிகை இதழில் வெளியிடப்படும்.

     

    நண்பர்கள் விரும்பினால் அகநாழிகைக்கு நன்கொடை அல்லது விளம்பரங்கள் அளிக்கலாம். இது அகநாழிகை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க உதவும். அகநாழிகை இலக்கிய இதழ் ஒரு லாப நோக்கமற்ற இயக்கம் என்பதை நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். எனவே சந்தா / புரவலர் / நன்கொடை / விளம்பரம் என உதவுவதன் வழியே அகநாழிகையின் பணிகளை சாத்தியப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பும் அமையும்.

     

    அகநாழிகை இலக்கிய இதழுக்கு சந்தா / புரவலர் / நன்கொடை / விளம்பரம் அளிக்க aganazhigai@gmai.com என்ற மின்னஞ்சலில் அல்லது 999 454 1010 என்ற அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

     

    அகநாழிகை சந்தா மற்றும் பதிப்பக வெளியீடுகளை ICICI வங்கிக் கணக்கு எண். 155501500097 P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி பெறலாம்.

    அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

                 கவிதைத் தொகுதிகள்

    1. கருவேல நிழல் – பா.ராஜாராம் / ரூ.40

    2. கோவில் மிருகம் – என்.விநாயகமுருகன் / ரூ.40

    3. நீர்க்கோல வாழ்வை நச்சி – லாவண்யா சுந்தரராஜன் ரூ.40

    4. கூர்தலறம் – TKB காந்தி ரூ.40

    5. உறங்கி விழித்த வார்த்தைகள் – மதன் ரூ.40

    6. தலை நிமிர்வு – பாரதிவசந்தன் ரூ.130

                  1. சிறுகதைத் தொகுதி

              1. அய்யனார் கம்மா – நர்சிம் / ரூ.40

                            1. கட்டுரைத் தொகுதி

                        1. பார்ப்பன CPM + அமார்க்சியம் = ஈழ விடுதலை எதிர்ப்பு அரசியல்(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)

                              1. - தொகுப்பாசிரியர் : வளர்மதி (அச்சில்)

                                நாவல்

                          1. ‘எட்றா வண்டியெ...‘ – வாமு கோமு (அச்சில்)

                              மேற்கண்ட புத்தகங்களில் உறங்கி விழித்த வார்த்தைகள் – மதன் மற்றும் தலை நிமிர்வு – பாரதிவசந்தன் ஆகிய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இவர்களில் மதன் ‘பிரக்ஞையில்லா சமிக்ஞைகள்‘  என்ற வலைத்தளம் வழியே பரவலாக அறியப்பட்டவர்.

                               

                              மற்றொருவரான பாரதிவசந்தன், புதுவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது 12வது புத்தகம் ‘தலை நிமிர்வு‘. இவரது ‘தம்பலா‘ என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வரும் பாரதிவசந்தனின் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது தமிழிய தலித்திய கவிதைகளின் முழுத் தொகுப்பு அச்சிடப்பட்டு, தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிட தயார் நிலையில் உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.

                               

                              0

                               

                              கவிஞர் விக்ரமாதித்யனுக்கு ‘விளக்கு‘ விருது

                              vikramathithan 

                              2009 ம் ஆண்டிற்கான விளக்கு விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அவருடைய கவிதைப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. கவிஞர்கள் கௌரவப்படுத்தப்படுவது கொண்டாடப்பட வேண்டியது. நவீன கவிஞர்களில் பலருக்கு பெயர் கிடைக்கும் அளவிற்கு பணமோ, புகழோ பெரிய அளவில் கிடைத்து விடுவதில்லை. ஆத்ம திருப்தி மட்டுமே அவர்களை கவிதையெழுத வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. நான் கடவுள் படத்தில் தனக்கு நடிப்பும் வரும் என்று நீருபித்தவர் கவிஞர் விக்ரமாத்தியன் ‘நம்பி‘ என்று நண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் கவிஞர் விக்ரமாதித்யனை ‘அகநாழிகை‘ வாழ்த்துகிறது. பொட்டில் அறைந்தாற்போல் நம்மோடு பேசும் கவிஞர் விக்ரமாதித்யனின் ஒரு கவிதை.

                               

                              மௌனம்

                               

                              உதாரணங்கள் காட்டிப்

                              பேசாதே

                               

                              எல்லா

                              உதாரணங்களும்

                              சலிப்பூட்டுபவை

                               

                              மேற்கோள்கள்

                              காட்டிப் பேசாதே

                               

                              எல்லா

                              மேற்கோள்களும்

                              அரதப்பழசு

                               

                              பேசாதே

                              பேச்சுதான்

                              பெரும் முட்டாள்தனம்

                               

                              பெரும் பேச்சு

                              விருதா வாழ்வு

                               

                              மௌனத்தின் அருமை

                              சாதுக்களுக்குத் தெரியும்.

                               

                              0

                               

                              வெறுமையும் நானும் (கவிதை)

                               

                              சமீபத்தில் நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. பதிவர் D.R.அஷோக் எழுதியது. இந்தக் கவிதையின் வழியே விரியும் காட்சி மிகவும் பரவசமானது. பலமுறை வாசித்து ரசித்தேன்.

                            வெறுமையும் நானும் – பரவசம்

                             

                            வெறுமை தரும் சூழல்

                            தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை

                            கூட்டம் தேடி.. கூட்டம் அடைந்தும்

                            ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல

                            துள்ளி விளையாடிய மழலை அமைதியாய்

                            கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு

                            அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில்

                            எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன்

                            எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம்

                            பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர்

                            திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில்

                            திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு

                            டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில்

                            வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி

                            வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது

                            தண்டோராவின் இன்றைய பதிவு

                            வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில்

                            வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக

                            தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி

                            எனக்கு மட்டும் வெறுமையாய்

                            வெறுமை தரும் கனமற்று.

                             

                             

                            D.R.அஷோக்

                             

                            0

                             

                            அகநாழிகை வெளியீடுகள்

                            என்.விநாயகமுருகன் டிகேபி காந்தி நர்சிம் பா.ராஜாராம் லாவண்யா சுந்தரராஜன்

                            மதன் bharathi vasanthan valarmathi

                            18 comments:

                            1. வா.மு.கோமு நாவல் எப்போது வெளியாகிறது?

                              ReplyDelete
                            2. அடுத்த மாதம் வெளியாகிறது நிலாரசிகன்,

                              ReplyDelete
                            3. எழுத்தாளனுக்கு முன்னுரை கொடுத்து வாழ்த்தும் அகநாழிகைக்கு வாழ்த்துக்கள்.

                              ReplyDelete
                            4. //பதிவர்களின் புத்தகங்களாகிய இவற்றை பதிவர்கள் அனைவரும் வாங்கி ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். //

                              கண்டிப்பாக... வாங்கிரலாம்...

                              :)

                              ReplyDelete
                            5. நீங்கள் செய்யும் இந்த சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும். பல புதிய எழுத்தாளர்களை வலையுலகிலிருந்து நீங்கள் உருவாக்க வேண்டும். அகநாழிகைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

                              ReplyDelete
                            6. மிக்க நன்றி வாசுதேவன் சார்..

                              ReplyDelete
                            7. சக மனிதனை நேசிப்பதிலிருந்து துவங்குகிறது சக படைப்பாளியை விதந்தோதுவதும் அடுத்த தொகுப்பு அசோக் அவர்களுடயதா ?

                              நண்பர்களுக்கு வாழ்த்துகள்

                              ReplyDelete
                            8. தேங்க்ஸ் வாசு..

                              ReplyDelete
                            9. வாசு சார் விழாவில் சந்திப்போம்..:))

                              ReplyDelete
                            10. படித்துக்கொண்டே வரும்போது இந்த எளியவனின் பெயரும் வந்தது ஆச்சிரியமே. நன்றி வாசு

                              //ஆத்ம திருப்தி மட்டுமே அவர்களை கவிதையெழுத வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது// :)

                              நண்பர்களுக்கு வாழ்த்துகள்

                              ReplyDelete
                            11. வாழ்த்துக்கள் sir,
                              உங்க கவிதையும் நல்லா இருந்தது. இந்த பதிவர்கள் வரிசையில் உங்கள் பெயரும் வருவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

                              ReplyDelete
                            12. அன்பின் அகநாழிகை

                              நல்ல செயல் - பதிவர் புத்தகங்களைப் பதிப்பிப்பது நல்ல செயல்

                              வாமு கோமு புத்தகம் வெளியானவுடன் அனுப்புக ( விலைக்குத்தான் - இலவசமாக அல்ல )

                              நல்வாழ்த்துகள்

                              ReplyDelete
                            13. அன்பின் பப்ளிஷர்,
                              // எழுத்து என்பதை ஆவணப்படுத்துவது அச்சு வடிவத்தில் அது வருகின்ற போதுதான் என்பது மறுக்கவியலாத உண்மை.//
                              சத்தியமான வார்த்தைகள்.தங்களின் பணி சிறக்க எல்லாவகையிலும் உதவ எப்போது தயாராக உள்ளோம்.நன்றி.

                              ReplyDelete
                            14. கேபிள். பரிசல் புத்தகம் வாங்க பணம் கேபிள் கணக்குக்கு அனுப்பப்பட்டு விட்டது - புத்தகம் வரவேண்டும் அவ்வளவுதான் - அகநாழிகை சந்தா உங்கள் கணக்கிற்கு அனுப்பி விட்டேன்

                              வா.மு.கோமு நாவல் வேண்டுமே - அனுப்புக - பணம் கணக்கில் வரவு வைத்து விடுகிறேன்

                              நல்வாழ்த்துகள் அகநாழிகை
                              நட்புடன் சீனா

                              ReplyDelete
                            15. நல்வாழ்த்துகள். எனது தொடர்கதைகள் ஆறுதனை ஒரே புத்தகமாக உங்கள் பதிப்பகம் மூலமாக வெளியிட இயலுமா?

                              ReplyDelete
                            16. ஆர்வம் குன்றாது தாங்களும், அகநாழிகையும் தொடர்ந்து இயங்க வாழ்த்துகள் அன்பு அண்ணன். என்றும் உடனிருப்போம்..

                              ReplyDelete
                            17. பிப்பிபிபிப்பிரவரி இதழை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

                              ReplyDelete
                            18. //அகநாழிகை said...

                              அடுத்த மாதம் வெளியாகிறது நிலாரசிகன்,///

                              எனக்கொரு பிரதி. இப்பொழுதே பதிவுசெய்துகொள்கிறேன்.நேரில் அதற்கான பணம் தருகிறேன் வாசு :)

                              நாவலின் தலைப்பே அசத்துகிறதே!!

                              ReplyDelete

                            உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

                            Comments system

                            Disqus Shortname