Showing posts with label அழைப்பிதழ். Show all posts
Showing posts with label அழைப்பிதழ். Show all posts

Monday, October 11, 2010

சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ புத்தக வெளியீடு அழைப்பிதழ்

நண்பர்களே !

அகநாழிகை பதிப்பகம் வெளியீடான, சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 21, 2010

டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தக வெளியீட்டு நிகழ்வு







புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரூ.100 மதிப்புள்ள ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தகம் 50 சதவிகித கழிவில் ரூ.50/-க்கு கிடைக்கும். 


மேலும், டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ சிறுகதைத் தொகுப்பு பாகம் - 1 வருகை தருகின்ற அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.


அனைவரும் வருக !


...................................................................................................................................................


- பொன்.வாசுதேவன்





Friday, June 18, 2010

டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘கலைஞர் என்னும் கலைஞன்‘ புத்தக வெளியீட்டு விழா

திரைப்பட வசனகர்த்தா, வசனகர்த்தா, கதாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி மற்றும் கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட கலைஞர் கருணாநிதியை கலைஞன் என்ற கோணத்தில் அணுகி, அவருடைய திரையுலக வரலாற்றை ஆரம்பம் முதல் இன்றைய காலம் வரை ‘கலைஞர் என்னும் கலைஞன்‘ என்ற இந்த சிறு நூலில் பதிவு செய்திருக்கிறார் டி.வி.ராதாகிருஷ்ணன்.

‘தமிழா... தமிழா‘ என்ற தனது வலைப்பதிவுகளின் வாயிலாக பரவலாக கவனிக்கப்பட்டவரும், சுவாரசியமான எழுத்தாளருமான டி.வி.ராதாகிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாக ‘சௌம்யா தியேட்டர்ஸ்‘ என்ற நாடகக் குழுவையும் நடத்தி வருகிறார். இதுவரை 15 நாடகங்களை எழுதி, இயக்கியதுடன் நடித்தும் இருக்கின்றார். பல்வேறு பத்திரிகைகளில் இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளது.

டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘பாரத ரத்னா‘ என்ற நாடகம் 2005க்கான ‘இலக்கியச் சிந்தனை‘ அமைப்பின் பரிசினைப் பெற்றுள்ளது. இந்நாடகம் புத்தக வடிவிலும் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘சிகப்பு ரோஜா‘ என்ற சிறுகதைத் தொகுப்பும், இரண்டு நாடகங்களின் புத்தகமும் வெளியாக உள்ளது.

‘கலைஞர் என்னும் கலைஞன்‘  - டி.வி.ராதாகிருஷ்ணன்
வெளியீடு : நயினார் பதிப்பகம்
விலை : ரூ.20/- மட்டும்





டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய 
‘கலைஞர் என்னும் கலைஞன்‘ 
புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்


அனைவரும் வருக !

- டி.வி.ராதாகிருஷ்ணன் & பொன்.வாசுதேவன்

Friday, April 9, 2010

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. 


விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. 


இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். 


பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. 


இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Friday, March 5, 2010

சொற்கப்பல் விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது – அனைவரும் வருக !

நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 .2010

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்

6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை

பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78

தொடர்பு எண் : 9994541010 / 9884060274 / 9940446650

,

வரவேற்புரை : பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் : அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு

சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்

முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி

நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1 அமிர்தம் சூர்யாவின் ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’

விமர்சகர்கள் :

வே. எழிலரசு

பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2 சந்திராவின் ‘காட்டின் பெருங்கனவு’

விமர்சகர்கள் :

சதா

காலபைரவன்

நன்றியுரை : வேடியப்பன்

----------------------------------------------------------------------------------------------

அனைவரும் வருக !

தமிழ்மகன் > அகநாழிகை > தடாகம்.காம் >

மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

Comments system

Disqus Shortname