Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Sunday, November 4, 2018

கல்விளக்கு




துயர நதியில் பாய்ந்து தனிமையில் கரையொதுங்கிய மனமொன்று கரையோர மரத்தைத் தெப்பமாக்கியபடி அதன் நிழலில் தஞ்சமடைந்தது. வாழ்க்கைக்கும் உறவுக்கும் இடையே பரந்துகிடக்கும் எல்லையற்ற சமவெளிகளின் விரிவுகளை கண்கள் நிறைக்க நிறைக்க தரிசித்து அதன் பூரண வெளிகளின் ஆற்றுதலில் தன் அன்பைப் பொழிகிறது.
உனக்குள்தான் வாழ்வு எத்தனை நொய்ந்த தருணங்களைத் தந்திருக்கிறது...கணந்தோறும் பற்றியெரிந்தபடி, புகைந்து காற்றில் பரவியபடி உன் வாழ்க்கையை இவ்வளவு காலம் நீ கடத்தி வந்திருக்கிறாய். வாழ்வின் உள் ரகசியங்களைப் பேசும்போதும், எழுதும்போதும் அதன் உவப்பற்ற வெளிப்பாடுகள் உள்கடத்திக்கொள்கிறேன்.
பரிச்சயமும் அதன் பின்னான புரிதல்களும் பரிச்சயமற்ற உணர்வு ஸ்பரிசங்களுமான சில மணி நேர, சில நாட்கள் எனினும் ஒட்டுமொத்த வாழ்வுக்குமானவை அவை. ஒரு தசாப்தத்துக்கானவை அவை. எந்தவொரு அடையாளத்துக்குள்ளும் அவற்றை அடைத்துவிட முடியாது. இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்தில் வாழ்ந்துவிடுதவற்கான எத்தனிப்புகள் சட்டென விண்ணிலிருந்து பாய்ந்தொளிரும் ஒரு விண்கல்லைப்போல தோன்றி உனக்குள் சுடர்ந்தது. சமூகத்தின் ஒழுங்குகளும், நிர்ப்பந்தங்களும், தர்க்கங்களும் ஒப்புக்கொள்ளாத இவற்றில்தான் வாழ்க்கையின் புதிய பரிமாணங்கள் இருக்கிறதென்றால் அதில் நியதி இருக்கத்தான் செய்கிறது.
வாஞ்சையோடு உன் கைகளைப் பற்றிக்கொண்டு அதன் நரம்புகளின் ஊடாக உன்னை உள் கடத்திக்கொண்டு உன்னுள்ளிருந்த கங்குகளை அணைக்க முயல்கிறேன். நம்மைத் தீய்த்து நெருக்குகிறது அந்த நெருப்பு. அந்தப் புகையிலிருந்து தினமொரு சித்திரமாய் எழுந்துகொண்டிருக்கிறோம்.
பேசுவதும், எழுதுவதும், அழுவதும் சிரிப்பதுமாக நகரும் நதியைப்போல வாழ்வெனும் பெரும் சமுத்திரத்தை நோக்கியதான மெல்லிய நகர்தல் அது.
சூழலின் நிர்ப்பந்தத்தால் இரு வேறு முனைகளில் இருந்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அவரவரிடமிருக்கும் அன்பின் நூற்கண்டுகளை முனை பற்றியபடி உருட்டிவிட்டுக்கொண்டிருக்கும் இந்த வாழ்வுதான் எவ்வளவு இனிமையானது. புழங்கும் உறவுகளும் புதிரான உறவுகளும் இணையும் புள்ளி அது. நமக்குள் நம்மைக் கண்டுகொள்ளும் இந்த யத்தனிப்புகளில் பிரதிபலிக்கும் கற்பித வெளியில் கண்ணாடியாக ஒருவரை ஒருவர் பிரதிபலித்துக்கொள்கிறோம். ஒருவரிடம் ஒருவரை ஒப்புக்கொடுக்கிறோம்.
எப்பொழுதும் அச்சத்தையும் பாதுகாப்பையும் ஒருசேர வழங்கியபடியிருக்கும் நிராகரிக்க முடியாமல் ஏற்றுக்கொண்ட சுய வாழ்க்கையின் கீறல்களிலிருந்து ஆசுவாசம்கொண்டு அதன் தழும்புகளைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறோம். மீற விரும்பினாலும் பிணைத்தபடியிருக்கும் சங்கிலிகளைத் துண்டித்துக்கொள்ள வலுவின்றி அதன் எல்லைகளுக்குள் துவண்டுகொண்டிருக்கிறது மனம்.
சூர்ப்பனகையின் நிறைவுறாக் காமமாக ஆழ்கிணற்றுப் பாசியாக, புன்னை மரத்தடியில் நடப்பட்டு முழுமையான வளர்ச்சியடையாத செம்பருத்திச் செடியைப்போல உனக்குள்ளும் மண்டிக் கிடக்கிறது கனவுகள். எங்கோ உருவாகிக் கிடந்து மழை வெயிலில் காய்ந்து சிதைந்து உருமாறி கையில் கிடைத்துக் கொண்டுவரப்பட்டு கல்விளக்காக மாறி இன்று வறளாத நேசத்தின் அன்பில் தினம்தோறும் கழுவித் துடைத்து ஏற்றப்படும் விளக்கைப்போல பிரகாசிக்கிறது வாழ்க்கை. அதன் வெளிச்சத்தின் பரவலில் அடர்த்தியில் குதூகலிக்கிறது அன்றாடங்கள்.

•• கனவும் நனவும் குழைந்த வாழ்க்கை ••

Monday, October 22, 2012

கீர்த்தனா.. அம்மு.. ப்ளீஸ்.. - நிச்சித்தம்


கீர்த்தனா.. அம்மு.. என் பேர் விநாயகம்.. குரு.. நான் உன் புருஷன். இதை முதல்ல நம்பு. ப்ளீஸ்..  உங்க அம்மா நம்ம காதலை பிரிக்கறதுக்காக உன்னை கோயிலுக்கு கூட்டிட்டு போய் உன் தலையின் மீது மை தடவி வெச்சி இருக்காங்க. அப்புறம் உன் வயித்துல வசிய மருந்து வச்சி இருக்காங்க, இதனால நீ என்ன பார்த்தா கத்துவே. அப்புறம் திட்டுவே. நான் சொன்னா நம்பு. ப்ளீஸ்.. உனக்கு தெரியாது. நீதான் சொன்னே. என்னை எங்க அம்மா இப்படி பண்ணிட்டா. என்னை கை விட்றாத. அப்புறம் நீ என்னை கெடுத்ததுக்கே (தப்பு) அர்த்தம் இல்லைன்னு சொன்னே.

கீர்த்தனாஅம்மு, அப்புறம் உன் ஸ்கூல் ஃபிரண்டு மஞ்சு, மனிஷா, மோனிஷா, ப்ரியா இவங்கள்லாம் உன் பெஸ்ட் பிரண்ட். அவங்க கூட பேசக்கூடாதுன்னு உங்க அம்மா உன்னை காலேஜ் பர்ஸ்ட் இயர்ல கூட ஒரு வாட்டி இப்படி பண்ணிட்டாங்க. அப்புறம் நான் பொய் சொல்றேன்னு நினைச்ச. உங்க காலேஜ்ல இருக்கற எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேளு. அவங்களுக்கு போன் பண்ணு. உன் மனசுல நான் மட்டும்தான் இருக்கேன். நீ சொன்னே. நான் உனக்குதாண்டா.. என்னை நம்புடா அப்படின்னு சொன்னே. நான் சொன்னா நம்பு. என்னை நம்பலன்னா உன் காலேஜ் பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணு.

ப்ளீஸ். அம்மு. நீயும் நானும் லவ் பண்ணும் போது நம்ம நிறைய போட்டோ எடுத்திருக்கறோம்டி. அதெல்லாம் நான் உனக்கு காட்றேன்டி. என் போன் நம்பர் 67800 94430. ப்ளீஸ்.. இந்த நம்பருக்கு கால் பண்ணு. ஆனா உனக்கு போன் பண்ணணுன்னு தோணாது. ஆனா நீ போன் பண்ணு. ப்ளீஸ். அப்படியும் உனக்கு நம்பிக்கையில்லன்னா உன் பிரண்டு பத்மப்பிரியாவுக்கு போன் பண்ணு. அவ நம்பர் 87878 43562, அப்புறம் ப்ரியாவுக்கு போன் பண்ணு. ப்ளீஸ் டி. என்னை நம்பு. நான் உன்னை கெடுத்துட்டேன்டி. ப்ளீஸ் டி. நான் உன்னை கல்யாணம் பண்ணாம விட்டுட்டா அந்த பாவம் என்னை சும்மா விடாது டி. ப்ளீஸ் டி. எனக்கு ஒரு போன் பண்ணுடி.. ப்ளீஸ்… உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன். எனக்கு என்னை பத்தின நினைவுகள் நைட் ஒரு மணிக்கு வரும்.. அப்ப நீ அழுவே. என்னை நம்பு ப்ளீஸ்.

உன் வயத்துல இருக்கற வசிய மருந்து ஒரு நாள் கலையும் அம்மு. அப்ப உனக்கு ஒருவேளை வேற பையனோட கல்யாணம் நடந்து இருந்தா உன் வாழ்க்கையில ஒரு நாள் கூட நீ சந்தோஷமா இருக்க மாட்டடி. நரக வேதனை அனுபவிப்பே. என்னை நம்பு. நம்ம சாதாரணமா பழகலை. அது உங்க அப்பா, அம்மாவுக்கு புரியல. அந்த பாவத்தை அவங்க கண்டிப்பா அனுபவிப்பாங்க. இது சத்தியம்.

இந்த லெட்டர் நீயும் நானும் லவ் பண்ணும் போது நான் எழுதினது. உன் கிட்ட ஒருநாள் இதைப்பத்தி சொன்னா எனக்கு எதனா ஆயிடுச்சுன்னா அந்த லெட்டர் காட்டு நான் வந்துடுவேன்னு சொன்னே.. வா.. கீர்த்தனா.. அம்மு.. என்னை நம்பு டி. ப்ளீஸ். உனக்காக நான் எப்பவும் காலமெல்லாம் காத்திருப்பேன்டி. உன் காதலே எனக்கு நிம்மதி டி. ப்ளீஸ் கீர்த்தனா.. அம்மு..

கீர்த்தனா.. அம்மு.. இந்த லெட்டரை உன் அம்மாவுக்க காட்டாம படி. 

இதை நீ படிச்சிட்ட பிறகு உன் அம்மா கிட்ட காட்டாத டி.. ப்ளீஸ்.. அது என்னை சாவடிச்சிடும்.

                                             இப்படிக்கு,
காதலுடன் காத்திருக்கும்,
M.விநாயகம் (குரு) – கீர்த்தனா (அம்மு)

இந்த லெட்டர் யார் கையில கிடைச்சாலும் ப்ளீஸ் உங்க கால்ல விழுந்து கேக்குறேன். கீர்த்தனா.. அம்மு.. கிட்ட கொடுங்க.. ப்ளீஸ்.. அவ ரொம்ப பாவம்.


                           

Comments system

Disqus Shortname