Sunday, November 4, 2018

அகநாழிகை சிறுகதைகள்

‘அகநாழிகை’ முதல் இதழ் 2009ல் வெளியானது. 2017 வரை எட்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஏழாவது இதழ் ஸ்டாலின் ராஜாங்கம், ஜோ டி குரூஸ் ஆகிய இருவரின் விரிவான நேர்காணல்களையும், பிற கட்டுரைகளையும் மட்டும் உள்ளடக்கியது. கவிதைகள், சிறுகதைகள் ஏழாவது இதழில் இடம்பெறவில்லை. 1 முதல்8 வரையிலான இதழ்கள் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என படைப்பிலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியது.
அகநாழிகையின் முதல் இதழில் இருந்து எட்டாவது இதழ் வரை வெளியான சிறுகதைகளை இதழ்வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறேன். இப்போது பார்க்கும்போது ‘அகநாழிகை’ சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதழில் சிறுகதைகளை எழுதியிருக்கிறவர்களும் சரியான தேர்வுகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். மொத்தம் 8 இதழ்களில் 42 சிறுகதைகள் வெளியாகியுள்ளது. ‘அகநாழிகை’ சிறுகதைகள் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது.
••

அகநாழிகையில் வெளியான சிறுகதைகளின் பட்டியல்
இதழ் 01
பூனைக்குட்டி - பாவண்ணன்
நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
கிறக்கம் - யுவன் சந்திரசேகர்
பாலை நில காதல் – எஸ்.செந்தில்குமார்
மழை புயல் சின்னம் - விஜய மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா
ஓடும் குதிரைக்குப் பத்து கால்கள் - ரா.கிரிதரன்
இதழ் 02
இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் – கே.பாலமுருகன்
ரவிக்கையுள் மறையும் வனம் – லஷ்மி சரவணக்குமார்
கனவு கவிதை நான் – அதி பிரதாபன்
பால்ய நதி – சாரதா
சங்கமித்திரை – நிலா ரசிகன்
நத்தை – அ.மு.செய்யது
மூன்று கதைகள் - எட்கர் கேரத் – தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
இதழ் 03
ரெஜியின் பூனை – ரௌத்ரன்
கோழை – சாந்தன்
சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே – தமிழில்: நதியலை
பிண ஆய்வாளன் – கமலாதாஸ் – தமிழில்: தி.சு.சதாசிவம்
முதல் வேளை – மா ஃபெங் – தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
இதழ் 04
அடைக்கலம் - பாவண்ணன்
போதி மரம் - ரிஷான் ஷெரிப்
உறவுகள் - ஐயப்பன் கிருஷ்ணன்
தலைமைச் செயலகத்தின் பின்புறம் ஆடுகள் மேய்கின்றன - அய்யப்ப மாதவன்
காக்கைச் சோறு - மதியழகன் சுப்பையா
இதழ் 05
சோழிகள் (குறுநாவல்) – விமலாதித்த மாமல்லன்
நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக் குடை – தாரா கணேசன்
வித்தை – விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்
செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி – தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
இதழ் 06
மாசு மருவற்ற வெளி – வாமு கோமு
வாக்குமூலம் – பரமிதா சத்பதி (ஒரியா) – தமிழில்: சித்தன்
பூமராங் – ரிஷான் ஷெரிப்
வெயிற்பந்தல் – ராகவன் சாம்யேல்
ஈஸ்வர வடிவு – இந்திரா பாலசுப்ரமணியன்

இதழ் 07
சிறுகதைகள் வெளியாகவில்லை.
இதழ் 08
கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி
மாயம் - ஜீ.முருகன்
துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ்ராஜ்
கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன்
தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன்.வாசுதேவன்
மிக இரகசிய இயக்கம் - தருமு பிரசாத்
•••

தன்னைத் துகிலுரிக்கும் கவிதைகள்


பொன்.வாசுதேவனின் உன்மத்தப் பித்தன், நிழலின் வாக்குமூலம் கவிதைத் தொகுப்புகளுக்கு எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய விமர்சனம்



பொருளொன்றின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் போது எதிர்த்திசையில் நிழல் விழுகிறது. நிழல் ஒருபோதும் நிஜம் ஆகிவிடாது. இருந்தும் நிஜத்தின் சாயலை நிழல் தாங்குகிறது. அந்த உரிமையில் அவை தன் எஜமானனின் அழுக்குகளை, வன்மங்களை, கசப்புகளை, அபத்தங்களை வார்த்தைகளாக்கினால் அவை பொன். வாசுதேவனின் கவிதைகளுக்கு நிகரானதாக மாறக்கூடும்.

பொன். வாசுதேவனின் நிழலின் வாக்குமூலம்மற்றும் உன்மத்தப் பித்தன்கவிதை தொகுப்புகள் இப்படியான கவிதைகளை தன்னுள்ளே வைத்திருக்கிறது. மனிதன் தன்னையே கண்ணாடியில் பார்க்கிறான். கண்ணாடியோ மனிதனை மட்டும் காட்டாமல் விமர்சனம் செய்வதற்குத் தோதாக அவனின் அழுக்குகளை அவனுக்குக் காட்டுகிறது. கடக்க வேண்டிய கசப்புகளையும் பாதுகாக்க வேண்டிய பண்புகளையும் சுய விமர்சனத்தின் மூலமே அறிந்து கொள்கிறான். நிழலின் உரிமையும் கண்ணாடியின் விமர்சனமுமாக விரிகிறது பொன். வாசுதேவனின் கவிதைகள். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் நிரூபிக்கவியலாத மனிதக் கணங்களை வார்த்தைகளாக்குகின்றன இக்கவிஞரின் வரிகள்.

எல்லாவற்றிலும்
உன்னை நீயே கர்வமாய்
உற்று நோக்கி அக மகிழ்கிறாய்
ஆதார மனநிலையின் நீட்சியாய்
பருவந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறாய்
காண்போர்க்கேல்லாம் வெவ்வேறாய்
உன்னைச் சித்திரப்படுத்தி
ஊர்கின்றது நாட்கள்

மனிதன் அதிகமாகத் தெரிந்துகொண்டிருப்பது தன்னைப் பற்றி மட்டும்தான். அதை அவனால் கொண்டாடாமல் இருக்க முடிவதில்லை. தன்னை அவன் கொண்டாடும் அதே நேரத்தில் தன் கொண்டாட்டம் பார்ப்பவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிய மறுக்கிறான். சுய கொண்டாட்டத்தை பதிவு செய்யும் அதே நேரத்தில் இந்த அபத்தங்களையும் கவிதைகளில் பதிவு செய்கிறார்.

இயற்கையை வர்ணித்து சங்ககாலத்திலிருந்து கவிதைகள் இயற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இவ்விரு தொகுப்புகளிலும் கூட மரங்கள், பறவைகள், விலங்குகள் என சகல ஜீவராசிகள் சார்ந்தும் கவிதைகள் இடம் பெறுகின்றன. வாசிப்பில் அவை நவீனமான தோற்றத்தை உருக்கொள்கிறது.

அகல இறக்கை விரித்து
தாழ்வானில் பறந்தபடி
பெரு நீர்ப்புலத்தில் அசைவுறும்
தன்னிழல் தான் கண்டு
சுய வேட்டையின் மூர்க்கஞ் செலுத்தி
கூரலைகை பிரித்து நீரிலிட்டு
மீன் கவ்விப் பற்றி
காற்றையுந்தி
உயரப்பறக்கிறது பறவை
பிழைத்துப் பெருமூச்சிடுகிறது
பறவையின் நிழல்.

இயற்கையைத் தன் மொழியில் விவரிக்கும் விதம் வர்ணனையோடு நில்லாமல் சிந்தனைக்கும் வழிகோலுகிறது. எது கவிதை என்பதைச் சார்ந்தும் சில கவிதைகள் இடம்பெறுகின்றன. பல கவிதைகள் கருவின் அளவில் மிக ஆழமானதாக இருக்கிறது. இருந்தும் வாசகனைக் குழப்பாமல் தெளிவுற, எளிய வார்த்தைகளால் அதை உருவாக்கியிருக்கும் விதம் எல்லாக் கவிதைகளையும் மனதுள்ளே பதிய வைக்கிறது.
உன்மத்தப் பித்தன் நூலின் முன்னுரை வழியே பொன். வாசுதேவனின் இலக்கியச் செயல்பாடுகளையும், நவீன கால கவிதைகளின் வளர்ச்சியையும் நுண்மையாக அறிந்து கொள்ளமுடிகிறது. அவற்றைக் கடந்து கவிதைகளை வாசிக்கும் பொழுது நவீன கவிதைக்கான எடுத்துக்காட்டாக இத்தொகுப்புகள் இருக்கும் எனும் நம்பிக்கையை கவிதைகள் எழுப்புகின்றன.

-கிருஷ்ணமூர்த்தி
krishik10@gmail.com

உன்மத்தப் பித்தன், நிழலின் வாக்குமூலம் (கவிதைத் தொகுப்புகள்)
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்



அகநாழிகை கட்டுரைகள்



‘அகநாழிகை’ இதழில் 2009 முதல் 2017 வரை வெளியான கட்டுரைகள்
01
ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - எம்.சி.ராஜா சிந்தனைகள் / வே.அலெக்ஸ்
அலகிலா சாத்தியங்களினூடே / வெ.சித்தார்த்
தமிழ் சினிமாவும், சில மசால் வடைகளும் / அஜயன் பாலா
உரையாடல் சிறுகதைப் பட்டறை / ஆதிமூல கிருஷ்ணன்
பரமார்த்த குருவும் சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகளும் பரிசுத்த ஆவிகளும் / வளர்மதி
பிரிவில் கிளர்ந்தெழும் நெருக்கம் / நதியலை
மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும் : நேர்காணல் : மனுஷ்யபுத்திரன் / பொன். வாசுதேவன்
02
அமுதமும் அமைதியும் / பாவண்ணன்
அல்ஜீரிய சுதந்திரப் போர் / அஜயன் பாலா
உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம் / ஜெயமோகன்
புதிய வெளிகளைத் தேடி / சு.தமிழ்ச்செல்வி
20ம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ இசை / ரா. கிரிதரன்
ஓவியங்களில் புலரும் தொன்மம் / செந்தி
அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும் : மனுஷ்யபுத்திரன் நேர்காணல் / பொன்.வாசுதேவன்
03
இடம்பெயர்ந்த மனிதர்கள்: எட்வர் செய்த்தும் ஓரியண்டலிசமும் / எச். பீர் முகமது
கவிஞன் ஏன் காணாமல் போகிறான் / வா.மணிகண்டன்
மத்தியக் கிழக்கின் வாழ்வும், திரையும் / அய்யனார் விஸ்வநாத்
கைந்நிலை சில பாடல்களும் கனிமொழியின் அகத்திணையும் / லாவண்யா சுந்தரராஜன்
பின்நவீனத்துவத்தின் மறைவும் அதற்கு அப்பாலும் / ஆலன் கிர்பி / தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
சமாதானத்தின் இசை / ரா.கிரிதரன்
எட்றா வண்டியெ / வா.மு.கோமு
தாய்ச்சொல் / தொல். திருமாவளவன்
குதூகலப் பூங்காவின் சித்திரம் / மொழி
04
நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை : எம்.ஏ.நுஃமான் நேர்காணல் / பாஃஹிமா ஜஹான்
ச்சாப் ஸ்டிக்ஸ் / ஜெயந்தி சங்கர்
கலையார்வம் கொண்டவர்கள் மந்த புத்திக்காரர்கள் : அடூர் கோபாலகிருஷ்ணன் / ஆர்.அபிலாஷ்
சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா / ரா.கிரிதரன்
காதலின் வரைபடம் / நதியலை
அதாஃப் சோயிப் நேர்காணல் / அமித் ஹிசைன் / தமிழில்: நதியலை
சுதந்திரம் : பால் சக்கரியா / நேர்காணல்: ஷோபா வாரியர் / தமிழில்: சி.சரவண கார்த்திகேயன்
நிபந்தனையற்ற வரவேற்பு / கலாப்ரியா
சொற்கப்பல் நடத்திய நாவல் விமர்சன அரங்கு / அஜயன் பாலா
05
சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா / ரா.கிரிதரன்
கவிதையின் ரசவாதம் / வா.மணிகண்டன்
தமிழ்ச் சமூக இயல்புகள் / அண்ணா கண்ணன்
பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் / ரௌத்ரன்
கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் / ஆர்.அபிலாஷ்
06
ஆணின் பெண் : உடை அரசியல் / கொற்றவை
திருடனின் வீடு / எஸ்.செந்தில்குமார்
மிலோரட் பாவிச் : மாயவெளி / வெ.சித்தார்த்
கரிசனமும் யதார்த்த இம்சையும் / அய்யனார் விஸ்வநாத்
வாழ்வே புனைவாய் / உமா ஷக்தி
கிறுக்கணுக்க மகன் கவிதைகள் / ந.பெரியசாமி
07
வேளாரும் வேட்ப மொழி / ராஜ சுந்தரராஜன்
காதலியரின் அரசி / குட்டி ரேவதி
பெரியாரின் பெண்ணியம் : பாட பேதமும், இயந்திரத்தனமும் / தி.பரமேசுவரி
காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி / சித்தார்த் வெங்கடேசன்
தெருவில் நகர்கிறது சைக்கிள் / எச்.பீர் முகமது
புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா / ராஜ்சிவா
வறட்சியில் கொதிப்பு / ஜீவ கரிகாலன்
இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை / இசை
புணர்ந்தன பிரிந்தன பிரிந்தன புணர்ந்தன / பொன். வாசுதேவன்
மாதவிக்குட்டியின் டைரிக் குறிப்புகள் / கமலாதாஸ் / தமிழில்: யாழினி
அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலம் / தாரா கணேசன்
••

Comments system

Disqus Shortname