Showing posts with label அகநாழிகை இலக்கிய இதழ். Show all posts
Showing posts with label அகநாழிகை இலக்கிய இதழ். Show all posts

Sunday, November 4, 2018

அகநாழிகை சிறுகதைகள்

‘அகநாழிகை’ முதல் இதழ் 2009ல் வெளியானது. 2017 வரை எட்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஏழாவது இதழ் ஸ்டாலின் ராஜாங்கம், ஜோ டி குரூஸ் ஆகிய இருவரின் விரிவான நேர்காணல்களையும், பிற கட்டுரைகளையும் மட்டும் உள்ளடக்கியது. கவிதைகள், சிறுகதைகள் ஏழாவது இதழில் இடம்பெறவில்லை. 1 முதல்8 வரையிலான இதழ்கள் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என படைப்பிலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியது.
அகநாழிகையின் முதல் இதழில் இருந்து எட்டாவது இதழ் வரை வெளியான சிறுகதைகளை இதழ்வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறேன். இப்போது பார்க்கும்போது ‘அகநாழிகை’ சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதழில் சிறுகதைகளை எழுதியிருக்கிறவர்களும் சரியான தேர்வுகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். மொத்தம் 8 இதழ்களில் 42 சிறுகதைகள் வெளியாகியுள்ளது. ‘அகநாழிகை’ சிறுகதைகள் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது.
••

அகநாழிகையில் வெளியான சிறுகதைகளின் பட்டியல்
இதழ் 01
பூனைக்குட்டி - பாவண்ணன்
நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
கிறக்கம் - யுவன் சந்திரசேகர்
பாலை நில காதல் – எஸ்.செந்தில்குமார்
மழை புயல் சின்னம் - விஜய மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா
ஓடும் குதிரைக்குப் பத்து கால்கள் - ரா.கிரிதரன்
இதழ் 02
இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் – கே.பாலமுருகன்
ரவிக்கையுள் மறையும் வனம் – லஷ்மி சரவணக்குமார்
கனவு கவிதை நான் – அதி பிரதாபன்
பால்ய நதி – சாரதா
சங்கமித்திரை – நிலா ரசிகன்
நத்தை – அ.மு.செய்யது
மூன்று கதைகள் - எட்கர் கேரத் – தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
இதழ் 03
ரெஜியின் பூனை – ரௌத்ரன்
கோழை – சாந்தன்
சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே – தமிழில்: நதியலை
பிண ஆய்வாளன் – கமலாதாஸ் – தமிழில்: தி.சு.சதாசிவம்
முதல் வேளை – மா ஃபெங் – தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
இதழ் 04
அடைக்கலம் - பாவண்ணன்
போதி மரம் - ரிஷான் ஷெரிப்
உறவுகள் - ஐயப்பன் கிருஷ்ணன்
தலைமைச் செயலகத்தின் பின்புறம் ஆடுகள் மேய்கின்றன - அய்யப்ப மாதவன்
காக்கைச் சோறு - மதியழகன் சுப்பையா
இதழ் 05
சோழிகள் (குறுநாவல்) – விமலாதித்த மாமல்லன்
நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக் குடை – தாரா கணேசன்
வித்தை – விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்
செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி – தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
இதழ் 06
மாசு மருவற்ற வெளி – வாமு கோமு
வாக்குமூலம் – பரமிதா சத்பதி (ஒரியா) – தமிழில்: சித்தன்
பூமராங் – ரிஷான் ஷெரிப்
வெயிற்பந்தல் – ராகவன் சாம்யேல்
ஈஸ்வர வடிவு – இந்திரா பாலசுப்ரமணியன்

இதழ் 07
சிறுகதைகள் வெளியாகவில்லை.
இதழ் 08
கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி
மாயம் - ஜீ.முருகன்
துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ்ராஜ்
கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன்
தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன்.வாசுதேவன்
மிக இரகசிய இயக்கம் - தருமு பிரசாத்
•••

அகநாழிகை கட்டுரைகள்



‘அகநாழிகை’ இதழில் 2009 முதல் 2017 வரை வெளியான கட்டுரைகள்
01
ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - எம்.சி.ராஜா சிந்தனைகள் / வே.அலெக்ஸ்
அலகிலா சாத்தியங்களினூடே / வெ.சித்தார்த்
தமிழ் சினிமாவும், சில மசால் வடைகளும் / அஜயன் பாலா
உரையாடல் சிறுகதைப் பட்டறை / ஆதிமூல கிருஷ்ணன்
பரமார்த்த குருவும் சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகளும் பரிசுத்த ஆவிகளும் / வளர்மதி
பிரிவில் கிளர்ந்தெழும் நெருக்கம் / நதியலை
மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும் : நேர்காணல் : மனுஷ்யபுத்திரன் / பொன். வாசுதேவன்
02
அமுதமும் அமைதியும் / பாவண்ணன்
அல்ஜீரிய சுதந்திரப் போர் / அஜயன் பாலா
உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம் / ஜெயமோகன்
புதிய வெளிகளைத் தேடி / சு.தமிழ்ச்செல்வி
20ம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ இசை / ரா. கிரிதரன்
ஓவியங்களில் புலரும் தொன்மம் / செந்தி
அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும் : மனுஷ்யபுத்திரன் நேர்காணல் / பொன்.வாசுதேவன்
03
இடம்பெயர்ந்த மனிதர்கள்: எட்வர் செய்த்தும் ஓரியண்டலிசமும் / எச். பீர் முகமது
கவிஞன் ஏன் காணாமல் போகிறான் / வா.மணிகண்டன்
மத்தியக் கிழக்கின் வாழ்வும், திரையும் / அய்யனார் விஸ்வநாத்
கைந்நிலை சில பாடல்களும் கனிமொழியின் அகத்திணையும் / லாவண்யா சுந்தரராஜன்
பின்நவீனத்துவத்தின் மறைவும் அதற்கு அப்பாலும் / ஆலன் கிர்பி / தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
சமாதானத்தின் இசை / ரா.கிரிதரன்
எட்றா வண்டியெ / வா.மு.கோமு
தாய்ச்சொல் / தொல். திருமாவளவன்
குதூகலப் பூங்காவின் சித்திரம் / மொழி
04
நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை : எம்.ஏ.நுஃமான் நேர்காணல் / பாஃஹிமா ஜஹான்
ச்சாப் ஸ்டிக்ஸ் / ஜெயந்தி சங்கர்
கலையார்வம் கொண்டவர்கள் மந்த புத்திக்காரர்கள் : அடூர் கோபாலகிருஷ்ணன் / ஆர்.அபிலாஷ்
சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா / ரா.கிரிதரன்
காதலின் வரைபடம் / நதியலை
அதாஃப் சோயிப் நேர்காணல் / அமித் ஹிசைன் / தமிழில்: நதியலை
சுதந்திரம் : பால் சக்கரியா / நேர்காணல்: ஷோபா வாரியர் / தமிழில்: சி.சரவண கார்த்திகேயன்
நிபந்தனையற்ற வரவேற்பு / கலாப்ரியா
சொற்கப்பல் நடத்திய நாவல் விமர்சன அரங்கு / அஜயன் பாலா
05
சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா / ரா.கிரிதரன்
கவிதையின் ரசவாதம் / வா.மணிகண்டன்
தமிழ்ச் சமூக இயல்புகள் / அண்ணா கண்ணன்
பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் / ரௌத்ரன்
கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் / ஆர்.அபிலாஷ்
06
ஆணின் பெண் : உடை அரசியல் / கொற்றவை
திருடனின் வீடு / எஸ்.செந்தில்குமார்
மிலோரட் பாவிச் : மாயவெளி / வெ.சித்தார்த்
கரிசனமும் யதார்த்த இம்சையும் / அய்யனார் விஸ்வநாத்
வாழ்வே புனைவாய் / உமா ஷக்தி
கிறுக்கணுக்க மகன் கவிதைகள் / ந.பெரியசாமி
07
வேளாரும் வேட்ப மொழி / ராஜ சுந்தரராஜன்
காதலியரின் அரசி / குட்டி ரேவதி
பெரியாரின் பெண்ணியம் : பாட பேதமும், இயந்திரத்தனமும் / தி.பரமேசுவரி
காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி / சித்தார்த் வெங்கடேசன்
தெருவில் நகர்கிறது சைக்கிள் / எச்.பீர் முகமது
புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா / ராஜ்சிவா
வறட்சியில் கொதிப்பு / ஜீவ கரிகாலன்
இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை / இசை
புணர்ந்தன பிரிந்தன பிரிந்தன புணர்ந்தன / பொன். வாசுதேவன்
மாதவிக்குட்டியின் டைரிக் குறிப்புகள் / கமலாதாஸ் / தமிழில்: யாழினி
அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலம் / தாரா கணேசன்
••

Friday, March 7, 2014

அகநாழிகை - இதழ் 7 - மார்ச் 2014 ... தற்போது விற்பனையில்..

அகநாழிகை - இதழ் 7 - மார்ச் 2014 ... தற்போது விற்பனையில்..

160 பக்கங்களில் வெளிவந்திருக்கும் ‘அகநாழிகை’ (இதழ் 7 - மார்ச் 2014) இதழுக்கான வரவேற்பும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் வாதைகளின் இறுகிய இழைகளை நெகிழ்த்தித் தளர்த்துகிறது. நன்றி.

இதழில்....

விரிவான இரு நேர்காணல்கள் : ஸ்டாலின் ராஜாங்கம் • ஜோ டி குரூஸ்

கட்டுரைகள் :

கேளாரும் வேட்ப மொழி - ராஜ சுந்தரராஜன் 

காதலியரின் அரசி - குட்டி ரேவதி

தெருவில் நகர்கிறது சைக்கிள் - எச்.பீர்முகமது

வறட்சியில் செழிப்பு - ஜீவ கரிகாலன்

இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை - இசை

பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும், இயந்திரத்தனமும் - தி.பரமேசுவரி

காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி - சித்தார்த் வெங்கடேசன்

புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா? - ராஜ் சிவா

புணர்ந்தன பிரிந்தன பிரிந்தன புணர்ந்தன - பொன்.வாசுதேவன்

மொழிபெயர்ப்பு : மாதவிக்குட்டியின் டைரிக் குறிப்புகள் - கமலாதாஸ்
- தமிழில் : யாழினி

புத்தக விமர்சனம் : கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலம் - தாரா கணேசன்



• புத்தக வடிவில் 160 பக்கங்கள்

• விலை ரூ.120 (அஞ்சல் செலவு ரூ.30)


Thursday, January 13, 2011

அகநாழிகை புதிய இதழ்

நண்பர்களுக்கு, வணக்கம்.

2011 துவங்கி புத்தக வெளியீட்டு நிகழ்வுகள், புத்தகச் சந்தை, விமர்சனக் கூட்டங்கள், நண்பர்கள் பலரது புத்தகங்களும் வெளிவந்துள்ளதும்என புத்துணர்ச்சியோடு இலக்கியச் செயல்பாடுகள் முன்னகர்வது மகிழ்வூட்டுவதாக உள்ளது.

உயிர்மை பதிப்பக வெளியீடாக எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘ வெளிவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. நண்பர்கள் வாசித்து தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

*

அகநாழிகை பதிப்பகம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் இதுவரை 12 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. புத்தகச் சந்தையில் அரங்கு எண்.274-ல் (நிவேதிதா புத்தகப் பூங்கா) அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு நாட்களில் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளதான செய்தியும் அறிந்தேன்.

இந்த ஆண்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் :

1. பரத்தை கூற்று (கவிதைகள்) - சி.சரவண கார்த்திகேயன்
2. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைகள்) - செல்வராஜ் ஜெகதீசன்
3. மயிரு (கவிதைகள்) - யாத்ரா

இந்த ஆண்டின் வெளியீடான இம்மூன்று புத்தகங்களும் அதனதன் அளவில் தனித்துவமானவையாக புத்தகச் சந்தையிலும் முக்கிய கவனம் பெற்றுள்ளவை.

*

அகநாழிகை (இதழ் எண்.6) தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம்போலவே முக்கியப் படைப்பாளிகளின் ஆகச்சிறந்த படைப்புகளும், நம்பிக்கையூட்டும் எழுத்துகளையும் அகநாழிகையில் வாசிக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் உண்டு.

‘அகநாழிகை‘ இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. எந்த பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பரமோ, ஆதரவோ இன்றி இந்த ஓராண்டை கடந்துள்ளது. பெரும் சிரமத்துடனான இம்முயற்சியை வலி என்று கூட சொல்லலாம். ஆனால் ஏதோவொன்றை நோக்கி நம்பிக்கையிழக்காமல் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஆறுதலாயிருக்கிறது. இது நண்பர்களின் உதவியோடும், சந்தாதாரர்களாகிய வாசகர்களின் அன்போடும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு சந்தா அளித்த நண்பர்களின் சந்தா தொகை முடிந்துவிட்டதால் சந்தாவை புதுப்பித்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையிலும் சந்தா புதுப்பிக்க நினைவூட்டு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.

அகநாழிகை இதழின் ஆண்டு சந்தா தொகை ரூ.150 மட்டுமே.

சந்தா தொகை செலுத்தும் விவரங்கள் இப்பக்கத்திலேயே உள்ளது அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

*

மிக்க அன்புடன்
பொன்.வாசுதேவன்
ஆசிரியர் - அகநாழிகை
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
பேச : 999 454 1010

*


அகநாழிகை இதழ் எண்.6-ல் இடம்பெற்றுள்ள படைப்புகள்


கட்டுரை


1. ஆணின் பெண் : உடை அரசியல் - கொற்றவை

2. திருடனின் வீடு - எஸ்.செந்தில்குமார்

3. மிலோராட் பாவிச் : மாயவெளி - வெ.சித்தார்த்

4. கரிசனமும் யதார்த்த இம்சையும் - அய்யனார் விஸ்வநாத்

சிறுகதை

1. மாசு மருவற்ற வெகுளி - வாமுகோமு

2. வாக்குமூலம் - ஒரிய மூலம் : பரமிதா சத்பதி தமிழில் : சித்தன்

3. பூமராங் - ரிஷான் ஷெரிப்

4. வெயிற்பந்தல் - ராகவன் சாம்யேல்

5. ஈஸ்வர வடிவு - இந்திரா பாலசுப்பிரமணியன்

மதிப்புரை

1. வாழ்வே புனைவாய் - உமாஷக்தி

2. கிறுக்கனுக்க மகன் கவிதைகள் - ந.பெரியசாமி

கவிதைகள்

விக்ர மாதித்யன்
ராஜசுந்தரராஜன்
வசுமித்ர
நரன்
யாத்ரா
செல்வராஜ் ஜெகதீசன்
கதிர்பாரதி
சுகிர்தா
நர்சிம்
இவள்பாரதி
விதூஷ்
லதாமகன்
வேல்கண்ணன்
ஆதவா

*

அகநாழிகை வெளியீடுகள் கிடைக்குமிடங்கள்

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை.

நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.

சாந்தி புக்ஸ், (சாந்தி திரையரங்க வளாகம்), அண்ணா சாலை, சென்னை.

பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை.

சுதர்சன் புக்ஸ், 74, எஸ்.பி.ஆபிஸ் ரோடு, நாகர்கோவில்.

*

Tuesday, September 14, 2010

அகநாழிகை அடுத்த இதழ்

எதிர்காற்றில் கண்ணில் புகுந்த தூசி போல உறுத்திக்கொண்டேயிருந்தது.

எப்போது வரும்.. அகநாழிகை அடுத்த இதழ்?
கேள்விகள்.. ஆர்வமான எதிர்பார்ப்புகள்.. தங்கள் படைப்பு எப்போது வெளியாகும் என அதை அச்சில் பார்க்கும் பரவசங்கள்..

எல்லாவற்றையும் அமைதியாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது நான். இதோ.. அதோ.. என ஒரு மாதங்களைக் கடத்தி ஒருவழியாக அகநாழிகை இதழ் தயாராகி விட்டது.

மதுரை புத்தகக் கண்காட்சிக்குள் கொண்டுவர நினைத்தும் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பொருளாதாரம்தான்.

சோர்வுறும் போதெல்லாம் ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும், உதவும் நேசங்களுக்கும், ‘இதெல்லாம் ஒரு..‘ என்று உள்ளுக்குள் எள்ளலோடு சிரித்துக் கொள்பவர்களுக்கு ஒரு புன்னகையோடும் அகநாழிகை இந்த இதழ் வெளியாகிறது.

வழக்கம்போலவே என்னை உந்தி முன்னிலும் வேகமாய் உத்வேகத்துடன் சுழலச்செய்கின்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்பு.

...
பொன்.வாசுதேவன்
பேச : 999 454 1010
................................................................................................................................................................

அகநாழிகை இந்த இதழில்...


குறுநாவல்

சோழிகள் – விமலாதித்த மாமல்லன்

சிறுகதைகள்

நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக்குடை – தாரா கணேசன்
வித்தை – என்.விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்

மொழிபெயர்ப்பு சிறுகதை

செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி
(தமிழில் : நாகரத்தினம் கிருஷ்ணா)

கட்டுரைகள்

சமாதானத்தின் இசை – ரா.கிரிதரன்
கவிதையின் ரசவாதம் – வா.மணிகண்டன்
தமிழ்ச் சமூக இயல்புகள் – அண்ணா கண்ணன்
பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் – ரௌத்ரன்
கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் – ஆர்.அபிலாஷ்

கவிதைகள்

சிவரமணி
லாவண்யா சுந்தரராஜன்
நிலாரசிகன்
சுகிர்தா
ச.முத்துவேல்
ஆர்.அபிலாஷ்
சோ.சுப்புராஜ்
ரவி உதயன்
மாமல்லன் கார்த்தி
இவள் பாரதி
பாண்டித்துரை
ராகவன் சாம்யேல்
கார்த்திகா
ராமலஷ்மி
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
பிங் ஹ்சின் (தமிழில் : ஜெயந்தி சங்கர்)

000

Thursday, May 27, 2010

அகநாழிகை - ஜுன் 2010 இதழ்

அகநாழிகை - ஜூன் 2010 இதழ் வெளியாகியுள்ளது.




நேர்காணல்

''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை
நேர்காணல் : பஃஹிமா ஜஹான்


''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா
நேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன்


''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப்
நேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை


சிறுகதைகள்


பாவண்ணன்
அய்யப்ப மாதவன்
ரிஷான் ஷெரிப்
ஐயப்பன் கிருஷ்ணன்
மதியழகன் சுப்பையா


கட்டுரைகள்


கலாப்ரியா
ஜெயந்தி சங்கர்
அஜயன்பாலா
நதியலை
ஆர்.அபிலாஷ்


வாழ்க்கைத்தொடர் : சுபின் மேத்தா


ரா.கிரிதரன்


கவிதைகள்


தீபச்செல்வன்
பெருந்தேவி
சாகிப்கிரான்
தூரன் குணா
ஆங்கரை பைரவி
தபவி
செந்தி
வெய்யில்
லாவண்யா சுந்தரராஜன்
விதூஷ்
கௌரிப்ரியா
ரகசியசினேகிதி
மண்குதிரை
ஆதவா
உழவன்
நந்தாகுமாரன்
சி.சரவணகார்த்திகேயன்


000


அகநாழிகை கிடைக்குமிடங்கள்


சென்னை


நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.
போன் : 28158171, 28156006


டிஸ்கவரி புக் பேலஸ், கேகேநகர் மேற்கு, சென்னை. 
செல் : 9940446650 போன் : 65157525


திரு.குகன், நாகரத்னா பதிப்பகம். செல் : 9940448599


மதுரை 


பாரதி புக் ஹவுஸ், 28, வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை-1. செல் : 97893 36277


கோயம்புத்தூர்


விஜயா புத்தக நிலையம், 20, ராஜவீதி, கோவை.
போன் : 04222577941


சேலம்


தக்கை வெ.பாபு, சேலம். செல் : 98651 53007



Thursday, March 25, 2010

அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும் - மனுஷ்ய புத்திரன் நேர்காணல்


“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்“ - மனுஷ்ய புத்திரன் 

நேர்காணல் : பொன்.வாசுதேவன்


மனுஷ்ய புத்திரனை அவரது நேர்காணல்களின் இரண்டாவது பகுதிக்காக மார்ச் ஆம்தேதி அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்தேன்"விட்ட இடத்திலிருந்து தொடந்து பேசலாமா?" என்று கேட்டேன்"எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம்" என்றார்.


பொன் வாசுதேவன் :


சாருவை உயிர்மை அளவுக்கு மீறி கவனப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன், என் நண்பர்களுக்காகத்தான் நான் இந்தப் பத்திரிகையை நடத்துகிறேன் என்று.தமிழ்ச் சூழலை உய்விப்பதோ அல்லது எல்லாவற்றையும் நாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று நாடகமாடுவதிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லைசாருவின் அபிப்ராயங்கள்அணுகுமுறைகள் தொடர்பான எனது மாறுபட்ட அபிப்ராயங்களை நான் திரும்பத் திரும்ப எழுதியிருகிறேன்கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதிக்கு நான்இந்தியா டுடேயில் எழுதிய மதிப்புரையைப் போல சாருவைத் தவிர வேறு யாருக்கும் எழுதினால் அவர்கள் ஜென்மத்திற்கும் என் முகத்தில் முழிக்க மாட்டார்கள்ஆனால் அவர் தொடர்ந்து என்னிடம் நட்பு பாராட்டினார்இதெலாம் உயிர்மைக்கு முந்தைய கதைஆனால் அவரைச் செயல்படவிடாமல் தடுப்பதன் மூலமாக அவரை இல்லாமல் ஆக்க யாரும் நினைத்தால் நான் சாருவின் பக்கம் நிற்பேன்பரஸ்பரம் கொண்டாடவும் கடுமையாக மறுத்துக் கொள்ளவும் ஒருவன் வேண்டாமாதமிழ்ச்சூழலில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு எழுத்தாளர் என்றால் அது சாருதான்அதுகூட ஒருவிதமான மொண்ணையான பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்டதுதமிழ் இலக்கியச் சூழலின் விழிப்பு நிலையினை உருவாக்கியதில் அவருடைய பங்கு முக்கியமானதுபொலிடிக்கல் கரெக்ட்னெஸ்சிற்கு எதிராகடிப்ளமசிக்கு எதிராகப் பேச ஒரு ஆளாவது வேண்டாமாஇன்றைக்கு என்னை மகாகவி என்று எழுதுவார்நாளை என்னைத் தலைகுப்புறக் கவிழ்க்கவும் செய்வார்இது ஒரு முரண்பாடு அல்லநாம் வெவ்வேறு ஆளுமைகளாக சிதறுண்டு போயிருக்கிறோம்இதில் பிம்பங்களை உருவாக்குவது அபத்தம்பிம்பங்களைக் கலைத்து அடுக்குவதும் அதனோடு விளையாடுவதும்தான் இன்றைய பின் நவீனத்துவ உலகில் சாத்தியம்சாரு அதைத்தான் செய்கிறார்இதற்காகத்தான் அவரை நான் நேசிக்கிறேன்அறிவுசார்ந்த துணிச்சல் இல்லாதவர்களால் இதைத் தாங்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.


அவர் அடைந்த இடம் என்பது அவரின் எழுத்துக்கள்வழியே அடைந்தது. உயிர்மை அதற்குச் சிறிதளவு பயன்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.


உயிர்மையின்மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது அரசியல் அதிகார மையத்தை நோக்கித் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கிறதுஅது சார்ந்த செயல்பாடுகளை முன்னிறுத்துகிறது என்று சொல்லப்படுகிறதுஇது ஒரு இலக்கியச் சூழலில் செயல்படும் பத்திரிகைக்குப் பொருத்தமானது என்று நினைக்கிறீர்களா?


மனுஷ்ய புத்திரன் : வாசுதேவன்இதை நான் உங்கள் கேள்வியாக எடுத்துக்கொள்ளப் போவதில்லைஒரு நபர் தொடர்ந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மாதாமாதம் தன் பத்திரிகையில் அழுவதைத் தாங்கமுடியாமல்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று சந்தேகமாக இருக்கிறதுஉயிர்மை அதிகாரத்தின் அடிவருடி.அவர் அதிகாரத்திற்கு எதிரான போராளிஇதை நிறுவுவதற்காக அவரும் அவரது ஊழியர்களும் உயிர்மையையும் அதன் எழுத்தாளர்களையும் வசைபாடி வசைபாடி வைக்கும் ஒப்பாரியைப் பார்த்தால் எனக்கே கண்ணீர் வருகிறதுஇந்தத் துன்பத்திலிருந்து இந்த நபரை விடுவிப்பதற்கு நான் செய்யக்கூடியது எதுவும் இருந்தால் நிச்சயம் செய்வேன்.


ஒருவர் தனக்கு நூலக ஆணை மறுக்கப்பட்டது என்று அதிகாரத்திற்கு எதிரான புரட்சியாளராக மாறுவது சாத்தியம் என்றால் வேறு சில அற்பக் காரணங்களுக்காக ஒருவர் அதிகாரத்தின் அடிவருடியாகவும் மாறுவது சாத்தியம்தான் இல்லையா?. நமது அட்டைக்கத்தி கோமாளி புரட்சியாளர் சிந்திக்கவேண்டும்.


தனக்கு நூலக ஆணை மறுக்கப்பட்டதைப் பற்றிப் பேசும் கோமாளிப் புரட்சியாளர் யார் மூலமாக அந்த நூலக ஆணை தனக்குக் கிடைத்தது என்பதையும் வெளிப்படையாகச் சொல்லவேண்டும்நூற்றுக்கணக்கான சிறுபத்திரிகைகள் வெளிவரும் சூழலில் தனது பத்திரிகைக்கு மட்டும் அந்த ஆணை கிடைத்தது உரிய வழிமூலமாகத்தான் என்று அவர் சொல்லத் துணிவாரென்றால் அவரது நிழல்கூட அவரைக் காறித் துப்பும்.அன்று கனிமொழி உதவினார்அதனால் அவரது முதல் நாடாளுமன்ற உரை அவசர அவசரமாக மொழி பெயர்க்கப்பட்டு அந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டதுஇப்போது கனிமொழி உதவ வில்லைஅதனால் அவர் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.


ரவிக்குமாருக்கும் நடந்தது அதுதான். அவர் அந்தப் பத்திரிகையின் உடன் இருந்தது அதன் சாதிய அடையாளங்களை மறைக்கப் பயன்பட்டதுஅவரது முதல் சட்டமன்ற உரை ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டதுஇப்போது அவர் உடன் இல்லை என்றதும் கோமாளிப் புரட்சியாளர் ரவிக்குமார் மேல் விழுந்து பிராண்டுகிறார்.


'தமிழச்சி தங்கபாண்டியன் இன்னொரு பிராண்டல் இலக்கு. நமது புரட்சியாளர் நடத்துகிற மாநாட்டில் தமிழச்சி நாடகம் நடித்து சுந்தர ராமசாமியின் பிரதிகளை நிகழ்கலையாக நடத்தினால் அவரிடம் போய் எங்கள் இணைய இதழுக்கு ஆசிரியராக இருங்கள் என்று கெஞ்சலாம்.அவர் தங்கள் எல்லைக்குள் இல்லை என்று தெரிந்ததும் அவரை நோக்கி அதிகார மையம் அதிகார மையம் என்று கூப்பாடு போட்டுப் பிலாக்கணம் வைக்கலாம்.


எழுத்தாளர் இமையம் வரை இந்த வரலாறு தொடர்கிறது. தங்கள் வட்டத்திற்குள் யார் இருக்கிறார்கள்இல்லை என்ற அடிப்படையில்தான் கோமாளிப் புரட்சியாளரின் அட்டைக் கத்தி புரட்சிகள் தொடங்குகின்றன.கனிமொழிரவிக்குமார் போன்ற வெகுசன அரசியல் அடையாளம் கொண்டவர்களின் பெயர்களைத் தம்மோடு இணைத்துக்கொண்டு ஆதாயமடையலாம் என்று கனவுகண்டது யார் என்பதைத் தமிழ் வாசகர்கள் நன்கறிவார்கள்அந்தக் கனவு நிறைவேறாது என்று தெரிந்ததும் இப்போது அதிகார எதிர்ப்பு அரசியல்.


அதிகாரம், அதைப் பயன்படுத்தி விருதுகள் பெறுவது பற்றியெல்லாம் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்சல்மா எந்த அரசியல் தகுதியின் அடைப்படையில் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பினை அடைந்தார் என்பதைக் கோமாளிப் புரட்சியாளர் எழுதலாமே.அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும் இந்திரா பார்த்தசாரதியும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் அ.மார்க்ஸும் போன்ற சர்வதேச இலக்கியத்தோடு தொடர்புகொண்ட பல எழுத்தாளர்கள் வாழக்கூடிய ஒரு சூழலில் இவர்களை எல்லாம்தாண்டி குறைந்தப்பட்ச தொடர்பியல் மொழிகூட இல்லாத சல்மா ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டாரே அது எப்படி என்றோ,இன்றளவு அவர் மேற்கொண்டுவரும் உலகப் பயணங்கள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன என்றோ நமது அதிகார எதிர்ப்பாளர் துணிச்சலாக எழுதலாமேஎழுத முடியாதுகோமாளிப் புரட்சியாளரின் இரட்டை நாக்கு வேறு வேறு திசைகளில் நகரக்கூடியது.


உண்மையில் எனக்கு அதிகார மையத்தைச் சேர்ந்த என் நண்பர்களை இப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டிய அவசியமோ, எனது நோக்கம் நிறைவேறாதபோது அவர்களை வசைபாடவேண்டிய மனப் பிராந்தியோ எதுவும் இல்லை.


சிறுபத்திரிகையோடு தொடர்புடையவர்கள் அதிகார மையதிற்கு நெருக்கமாகச் செல்லும்போது எவ்வளவு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.உயிர்மையை அழிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு உலக இலக்கிய இதழை நடத்தும் ஆசாமியின் நண்பர்கள் இருவர் ஒருமுறை நூலகத் தேர்வுக் குழுவில் இடம்பெற்றார்கள்உயிர்மை அந்த ஆண்டு விண்ணப்பித்திருந்த அத்தனை நூல்களுக்கும் எதிராக அவர்கள் தங்களது குறிப்புகளை எழுதிவைத்தார்கள்உயிர்மையின் முதுகெலும்பை அதன் மூலம் முறிக்கலாம் என்று நினைத்தார்கள்.வேறு ஒரு நண்பர்மூலம் இதை அறிந்தேன்அடுத்த நாள் அந்தக் குறிப்புகள் அனைத்தும் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தேன்அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றால் என்னவென்பதை அவர்களுக்கு வேறு வழியில் காட்டினேன்.


இன்று உயிர்மையோடு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சிலர் அரசியல் தொடர்புடையவர்கள் எனில் அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் நூல் வெளியீட்டுக் கூட்டங்களுக்குத் தமக்கு உவப்பான எழுத்தாளர்களை அழைப்பது போல சில சமயம் அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள்இதில் உயிர்மைக்கு எந்த ஆதாயமும் கிடையாதுகுறுக்கு வழியில் உயிர்மை எந்த ஆதாயத்தையும் நாடிப்போனது கிடையாது.

இலக்கிய மாநாடுகளை நடத்தி தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பெரும்கூட்டத்தைக் கூட்டியவர்கள் நாங்கள்தான் என்று பெருமையடித்து வந்த நமது கோமாளிப் புரட்சியாளர் இன்று அந்தச் செல்வாக்கு வேறு நபர்களிடம் போய்விட்டதைப் பார்த்து மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறார். இலக்கியக் கூட்டங்களில் பெரும்கூட்டம் கூடுவதைப் பற்றிப் புலம்பி இந்த வெள்ளத்தில் சிறிய விஷயங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றிக் கண்ணீர் விடுகிறார்இதே குற்றச்சாட்டு இதற்கு முன்பு தன்மீதும் தன் பத்திரிகைமீதும் வைக்கப்பட்டபோது அதை எப்படிக் கேலியும் கிண்டலும் செய்தார் என்பது அவருக்கு மறந்துபோய்விட்டதுஅப்துல் கலாமை தான் நடத்திய கூட்டத்திற்கு நமது கோமாளிப் புரட்சியாளர் வரவழைத்தது அப்துல் கலாம் அதிகார மையத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்லஅவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதால் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்அப்துல் கலாம் தனது பத்திரிகை பற்றிச் சொன்ன பொன்மொழி ஒன்றைத் தனது விளம்பர வாசகமாகப் பயன்படுத்தியது அந்த வாசகத்தைச் சொன்னவரின் பெயரை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்காக அல்லஅந்தக் கருத்தின் ஆழத்திற்காகத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


தீப்பொறி ஆறுமுகம் அ.தி.மு.க வில் சேர்ந்தபோது கலைஞர் தன் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க மறுத்துவிட்டார் என்று அதற்குக் காரணம் கூறினார்நமது அட்டைக் கத்தி புரட்சியாளரின் அதிகார எதிர்ப்பும் கிட்டத்தட்ட இதற்குச் சமமானதுதான்.


நான் கனிமொழி போன்றவர்களிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வது இதுதான். இவர் இன்று போடுகிற அதிகார எதிர்ப்பு நாடகங்களை உண்மை என்று நம்பி இவருக்கு எதிராக எதுவும் செய்துவிடாதீர்கள்உங்கள் உடன் இருக்கும் யாராவது சிறுபத்திரிகை ஆசாமிகள் அப்படிச் செய்யுமாறு உங்களைத் தூண்டுவார்கள்அதற்குப் பலியாகிவிடாதீர்கள்பிறகு அதற்கும் சேர்த்துப் புரட்சியாளர் அடையாளத்தை claim பண்ண ஆரம்பித்துவிடுவார்தமிழ் வாசகர்கள் ஏற்கனவே நானும் ரவுடிதான்’ என்ற கூச்சலைக் கேட்டு போரடித்துப் போயிருக்கிறார்கள்மேற்கொண்டு அவர்களால் தாங்க முடியாது.


உயிர்மை தனது வியாபார நோக்கங்களுக்காக சர்ச்சைகளைச் தொடர்ந்து உருவாக்குகிறது, ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப் படுகின்றனவே?


தெருவில் ரெண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டால் அதைக் கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்காகத்தான் அந்தச் சண்டை நடக்கிறது என்று நம்ப ஆரம்பிப்பது போன்றதுதான் இது. சண்டை போடுகிறவனுக்கு ஒரூ நோக்கம் இருக்கிறதுவேடிக்கை பார்ப்பவனுக்கு எந்த நோக்கமும் இல்லைதன் நேரத்தையும் மனதையும் அழித்துக் கொள்வதைத் தவிரஇரண்டு எழுத்தாளர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அவர்கள் புத்த்கம் விற்குமாகேளிக்கை நாடி இந்தச் சண்டைகளை விரும்பிச் சுவைப்பவர்களும் புத்தகம் படிப்பவர்களும் வேறு வேறு வர்க்கம்.


ஒரு எழுத்தாளன் அல்லது ஒரு பதிப்பகம் ஒரு சூழலில் பெறும் முக்கியத்துவத்தின் காரணங்கள் ஆழமானவை. அவை உழைப்பிலிருந்தும் அறிவார்ந்த ஒழுங்கிலிருந்தும் பிறப்பவைஇது இல்லாதவர்கள இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் சர்ச்சைகளினால் வியாபாரம் நடக்கிறது என்று எழுதுகிறார்கள்.. வித்தை காட்டி காசு வாங்கும் மோடி மஸ்தானையும் தமிழ் எழுத்தாளனையும் ஒன்றாகக் கருதும் ஆட்கள் இருக்கும் வரை இத்தகைய குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்யும்.


ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை நிர்மூலமாக்குவதன் வழியே தங்கள் படைப்பினை முன்வைக்கும் படைப்பாளிகளின் பார்வை சரியான ஒன்றா?


அப்படிப்பட்ட படைப்பாளிகள் யாரும் தமிழில் இருக்கிறார்களா என்ன?எனக்குத் தெரியவில்லைநீங்கள் சுகிர்தராணியையும் லீனா மணிமேகலையையும் உதாரணமாய் வைத்து இந்தக் கேள்வியை கேட்டு என்னை காமெடி பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன்இலக்கியம் எப்போதுமே பிறழ்வுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுகிறதுசீதையின் மேல் ராவணன் கொள்ளும் காதல்லஷ்மணனின் மேல் சூர்ப்பனகை கொள்ளும் காதல்வாலி தன் தம்பி சுக்ரீவனின் மனைவி தாராவின் மேல் கொள்ளும் இச்சை இதெல்லாம்தான் ராமாயணம்.


மகாபாரதத்தில் ஐவருக்கு மனைவியாக வாழும் பாஞ்சாலி, அவளைச் சபையில் துகிலுரியும் துரியோதனன்கர்ணனின் பிறப்பின் மர்மம் இதெல்லாம்தான் மகாபாரதம்.

நமது மாபெரும் காப்பியம் சிலப்பதிகாரம் கடைசியில் ஒரு ஆண்,இரண்டு பெண் என்ற பாலியல் கதைதானேநம்முடைய மரபில் எதைப் பார்த்தும் யாருக்கும் எந்த அதிர்ச்சியும் கிடையாதுஅதிர்ச்சி என்பது போலியான சமூகப் பாசாங்கு.


சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு கவிதையில் நாலு இடத்தில் யோனி என்ற வார்த்தையையோகுறி என்ற வார்த்தையையோ பயன்படுத்தினால் உடல் மொழியையும் பாலியலையும் எழுதிவிட்டோம் என்று உரிமை கோருகிறார்கள்இதைவிட சுலபமானதுஒரு பெண் குறியின் அல்லது ஆண்குறியின் புகைப்படத்தைப் பிரசுரிப்பது.


தமிழில் மொனியும் கு..ராஜகோபாலனும் லா..ராமாமிருதமும் ஜானகிராமனும்தான் உண்மையில் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள்அவர்கள் அதைப் பற்றிய ஆழமான படிமங்களையும் மனச் சித்திரங்களையும் உருவாக்குகிறார்கள்.


மாறாக, வேசிகளைப் பற்றி எழுதிய ஜிநாகராஜனின் எழுத்துக்கள் எதுவும் பாலியல் சார்ந்தது அல்லஇதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் சும்மா புணர்ச்சி புணர்ச்சி என்று எழுதுபவர்கள் அந்தச் சொல்லைக் கல்லில் அழுத்தி தேய்கிறார்களே ஒழியஅந்தச் சொல்லின் பரவசத்தை அவர்களால் நெருங்கக் கூட முடியவில்லைஉண்மையில் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் பாலியல் குறித்த வக்கிரத்தையோ ஏக்கத்தையோதான் எழுதுகிறார்களே தவிர அதன் பரவசத்தைஅதன் மனோ விசித்திரங்களை அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதுதான் என் அபிப்ராயம்.


விந்தும் மாதவிடாய் குருதியும் பற்றிய வெற்றுச் சித்திரங்களை தமிழில் பாலியல் இலக்கியங்கள் என்றோ ஒழுக்க மதிப்பீடுகளைக் குலைக்கும் எழுத்துக்கள் என்றோ நாம் அறிவித்துக்கொண்டால் நாம் பைத்தியம் இல்லையா? பெரும் மேதமைகொண்ட ஒரு எழுத்தாளனே மதிப்பீடுகளைக் குலைக்கும் எழுத்துக்களை எழுத முடியும்.இலக்கியத்திற்குள் ஷாப்பிங் செய்பவர்கள் எல்லாம் தமிழில் கலக எழுத்தாளர்களாக மாறிவிட்டார்கள்இதுதான் இந்த மொழிக்கு நேர்ந்த பெரும் அவமானம்.


நவீன தமிழ்க் கவிதையின் பொதுவான பண்புகளை நீங்கள் உடைத்திருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கும் பிரத்யேகமான நடை நீங்கள் திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றா?


அதைத் திட்டம் என்று சொல்வதைவிட ஒருவிதமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு எழுத்தாளனும் இத்தகைய கண்டுபிடிப்பு முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டிருக்கிறான்அது ஒரு தங்கவேட்டை.சிலருக்கு அது வசமாகிறதுநான் என மன அமைப்பிற்குத் தகுந்த ஒரு மொழிக் கட்டுமானத்தைச் சிறிது சிறிதாக உருவாக்கி வந்திருக்கிறேன்.அதுகூட வெளிப்பாட்டின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில் உருவானதுதான்ஒரு குழந்தை எப்படி இந்த உலகை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைச் சிறிது சிறிதாக அறிந்துகொள்கிறதோ அதுபோலவே வெளிப்பாட்டின் பிரச்சினைகளை அறிந்துகொள்கிறேன்நடை என்பது என் கவிதைகளின் அதன் இயல்புகளின் சாராம்சமான தோற்றம்நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றனஉரையாடலின் சாத்தியங்களை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டுவருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன்மேலும் பிரத்யேகமான அனுபவங்களைக் கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லைஅன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டுவருகிறேன்அதற்கு லகுவான ஒரு ரகசிய ஓசையை மறைத்து வைத்துக்கொண்டிருக்கக் கூடிய ஒரு மொழி நடை தேவையாக இருக்கிறது.


பல கவிதைகள் ஒரெ மொழிநடையைக் கொண்டிருப்பதுபோல தோன்றுகிறதே?


இதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். கவிதைக்குக் கவிதை நடையை மாற்ற வேண்டும் என்கிறீர்களாஏற்கனவே சொன்னேன்நடைதான் என் இயல்பு என்றுநான் நான்கைந்து அடிப்படை கட்டுமானங்களைக் கவிதையில் பயன்படுத்துகிறேன்அதைத்தான் மாறி மாறிப் பிரயோக்கிறேன்சாத்தியமாகக் கூடியதும் அதுதான்கவித்துவத்தின் மன எழுச்சிக்கு ஏற்ப சில கவிதைகள் உயர்கின்றனசில தாழ்கின்றன.எனினும் காலப்போகில் என் கவிதைகள் சிறுகச் சிறுக மாறுதலடைந்து வந்திருக்கின்றனஇந்த உடல் மாறுவதுபோல.


ஒரு கவிதையை எங்கிருந்து தொடங்குகிறீர்கள்?


எங்கிருந்து வேண்டுமானாலும். எனக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு வாக்கியம் மட்டுமேஅது எங்கிருந்தாவது காற்றில் பறந்து வரும். ‘எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்’ என்ற வாக்கியம் சாதாரணமானதுஆனால் அந்த வாக்கியம் திடீரெனெ நம் மனதின் எல்லாத் தளங்களிலும் அதிரத் தொடங்கும்உண்மையில் அது ஒரு நிலநடுக்கம் போன்றதுஇவ்வாறு சாதாரண வாக்கியங்களைசாதாரண உண்மைகளை அசாதாரணமான எல்லைக்கு நகர்த்துவதே என் வழிமுறையாக இருக்கிறது.


எழுதும்போது உங்களை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?


கட்ந்த ஓராண்டாகத் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறேன்.கவிதைக்குள் தொடர்ச்சியாக இயங்குவது கடும் உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறதுஎழுதுவது ஒரு வாதைசவுக்கின் ஓசை காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்தீவிரமான மன நிலைகளைத் தொடர்ந்து வாழ்வது நமது ஆயுளைக் கணிசமாகக் குறைக்கக்கூடியது என்று தோன்றுகிறது.



உங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த வெற்றியாக நீங்கள் எதைக் கருதுவீர்கள்?


வெற்றி தோல்விகளின் அபத்தங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.இவ்வளவு நாள் இந்தப் பூமியில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேனே இதுதான் நான் அடைந்த ஆகச் சிறந்த வெற்றிஎன் தகுதிக்கும் உழைப்புக்கும் மீறியே எனக்கு எல்லாம் நிறைய கிடைத்திருக்கின்றன.இதற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

00
    

Tuesday, March 16, 2010

அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது

march 2010 wrapper

அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது.

இடம் பெற்றுள்ள படைப்புகள் :

 

நேர்காணல்

“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்” – மனுஷ்யபுத்திரன்

நேர்காணல்  : பொன்.வாசுதேவன்

சிறுகதைகள்

  1. ரெஜியின் பூனை – ரௌத்ரன்

  2. கோழை – சாந்தன்

  3. சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே (தமிழில் : நதியலை)

  4. பிண ஆய்வாளன் – கமலாதாஸ் (தமிழில் தி.சு.சதாசிவம்)

  5. முதல் வேளை – மா ஃபெங் (தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன்)

கட்டுரைகள்

  1. இடம் பெயர்ந்த மனிதர்கள் : எட்வர்ட் செய்த்தும் ஓரியண்டலிசமும் – எச்.பீர்முகமது

  2. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? – வா.மணிகண்டன்

  3. மத்தியக்கிழக்கின் வாழ்வும் திரையும் – அய்யனார் விஸ்வநாத்

  4. கைந்நிலை சில பாடல்களும், கனிமொழியின் அகத்திணையும் – லாவண்யா சுந்தரராஜன்

  5. பின்நவீனத்துவத்தின் மறைவும் அதற்கு அப்பாலும் – ஆலன் கிர்பி (தமிழில் : மோகன ரவிச்சந்திரன்)

வாழ்க்கைத் தொடர்

  1. சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா – ரா.கிரிதரன்

நூல் அறிமுகம்

  1. எட்றா வண்டியெ – வா.மு.கோமு

  2. தாய்ச்சொல் – தொல்.திருமாவளவன்

  3. குதூகலப் புங்காவின் சித்திரம் – மொழி

கவிதைகள்

  1. யாத்ரா

  2. கார்த்திகா வாசுதேவன்

  3. என்.விநாயகமுருகன்

  4. தாராகணேசன்

  5. ராமலஷ்மி

  6. கதிர்பாரதி

  7. சேரல்

  8. விதூஷ்

  9. அஜயன்பாலா சித்தார்த்

  10. யாழினி

  11. நேசமித்ரன்

  12. ஹேமி கிருஷ்

  13. தர்ஷாயணி

  14. பா.ராஜாராம்

  15. ராகவன் ஸாம்ஏல்

  16. அனுஜன்யா

  17. கௌரிப்ரியா

  18. அனிதா

  19. பாரதி வசந்தன்

  20. வெய்யில்

  21. ஒழவெட்டி பாரதிப்ரியன்

  22. மணி ஜி (தண்டோரா)

  23. எம்.கார்த்திகைப்பாண்டியன்

  24. ஆதவா

  25. நந்தாகுமாரன்

  26. மதன்

  27. கென்

…………………………………………………………………………………………………………………………….….

தமிழ்ப் படைப்புலகின் தனித்துவக்குரலான ‘அகநாழிகை‘ இதழ் சிற்றிதழ்களுக்கே உரித்தான பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டு வருவதால் வினியோகம் முதலிய விஷயங்களில் முழுமையாக செயல்படுவதற்கான முயற்சிகள் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு சந்தாதாரர்களே முக்கிய ஊக்கமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அகநாழிகை இதழ் தற்போதைக்கு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.  மேலும் பரவலான வினியோகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே இதழ் வேண்டுவோர் நேரடியாக கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

 

அகநாழிகையின் ஆண்டு சந்தா ரூ.200  இரண்டாண்டு சந்தா ரூ.350 ஆயுள் சந்தா 3000 புரவலர் நன்கொடை ரூ.2000

 

சந்தா  மற்றும் அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை

ICICI வங்கிக்கணக்கு எண். 155501500097 – P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH  என்ற கணக்கில் செலுத்தி பெறலாம்.

 

ONLINE வழியே புத்தகங்களை பெற :

http://www.ezeebookshop.com மற்றும் http://www.udumalai.com 

 

அகநாழிகை விற்பனைக்கு கிடைக்கும் புத்தக கடைகள்

நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.

டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை.

பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம், மதுரை.

 

அகநாழிகை இதழை கமிஷன் அடிப்படையில் வினியோகிக்க முகவர்கள் தேவை. தொடர்பு கொள்க.

படைப்புகள் அனுப்ப சந்தா, விளம்பரம் மற்றும்

அனைத்து தொடர்புகளுக்கும் :

பொன்.வாசுதேவன் – 9994541010

ஆசிரியர் – அகநாழிகை

aganazhigai@gmail.com

Comments system

Disqus Shortname