எதிர்காற்றில் கண்ணில் புகுந்த தூசி போல உறுத்திக்கொண்டேயிருந்தது.
எப்போது வரும்.. அகநாழிகை அடுத்த இதழ்?
கேள்விகள்.. ஆர்வமான எதிர்பார்ப்புகள்.. தங்கள் படைப்பு எப்போது வெளியாகும் என அதை அச்சில் பார்க்கும் பரவசங்கள்..
எல்லாவற்றையும் அமைதியாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது நான். இதோ.. அதோ.. என ஒரு மாதங்களைக் கடத்தி ஒருவழியாக அகநாழிகை இதழ் தயாராகி விட்டது.
மதுரை புத்தகக் கண்காட்சிக்குள் கொண்டுவர நினைத்தும் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பொருளாதாரம்தான்.
சோர்வுறும் போதெல்லாம் ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும், உதவும் நேசங்களுக்கும், ‘இதெல்லாம் ஒரு..‘ என்று உள்ளுக்குள் எள்ளலோடு சிரித்துக் கொள்பவர்களுக்கு ஒரு புன்னகையோடும் அகநாழிகை இந்த இதழ் வெளியாகிறது.
வழக்கம்போலவே என்னை உந்தி முன்னிலும் வேகமாய் உத்வேகத்துடன் சுழலச்செய்கின்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்பு.
...
பொன்.வாசுதேவன்
பேச : 999 454 1010
................................................................................................................................................................
அகநாழிகை இந்த இதழில்...
குறுநாவல்
சோழிகள் – விமலாதித்த மாமல்லன்
சிறுகதைகள்
நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக்குடை – தாரா கணேசன்
வித்தை – என்.விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்
மொழிபெயர்ப்பு சிறுகதை
செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி
(தமிழில் : நாகரத்தினம் கிருஷ்ணா)
கட்டுரைகள்
சமாதானத்தின் இசை – ரா.கிரிதரன்
கவிதையின் ரசவாதம் – வா.மணிகண்டன்
தமிழ்ச் சமூக இயல்புகள் – அண்ணா கண்ணன்
பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் – ரௌத்ரன்
கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் – ஆர்.அபிலாஷ்
கவிதைகள்
சிவரமணி
லாவண்யா சுந்தரராஜன்
நிலாரசிகன்
சுகிர்தா
ச.முத்துவேல்
ஆர்.அபிலாஷ்
சோ.சுப்புராஜ்
ரவி உதயன்
மாமல்லன் கார்த்தி
இவள் பாரதி
பாண்டித்துரை
ராகவன் சாம்யேல்
கார்த்திகா
ராமலஷ்மி
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
பிங் ஹ்சின் (தமிழில் : ஜெயந்தி சங்கர்)
000
congratulations. keep up the pace. happy to know :)
ReplyDelete:))
ReplyDeleteமகிழ்வான செய்தி மற்றும் சிறு உறுத்தலும்..
வாழ்த்துகள் வாசு
ReplyDeleteமகிழ்ச்சி & வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் வாசு.
ReplyDeleteநன்றியும் ("இன்னபிறவும்" பற்றிய வா. மணிகண்டன் மதிப்புரையை வெளியிட்டதற்கு)
அட்டைப்படம் அருமை. உங்கள் புகைப்படமும் :)
ReplyDeleteஅட்டைப்படம் மிக அழகு. இதழை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் வாசுதேவன். தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவாசு உங்க புகைப்படம் ஒரு சித்தர் போல இருக்கு. தாடி மட்டும் மிஸ்ஸிங் :)
ReplyDeleteவாழ்த்துகள் வாசு! மற்றும் ஆவலுடன்...! :)
ReplyDeleteவாழ்த்துக்களும் நன்றியும்:)! ஆவலுடன் காத்திருக்கிறோம். அட்டைப்படத் தேர்வு மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துகள் வாசு மற்றும் ஆவலுடன்..
ReplyDeleteyour photo is really nice...please don't change
ReplyDeleteமகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteஅனைவரது அன்பிற்கும் நன்றி.
ReplyDelete- பொன்.வாசுதேவன்
//சோர்வுறும் போதெல்லாம் ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும், உதவும் நேசங்களுக்கும், ‘இதெல்லாம் ஒரு..‘ என்று உள்ளுக்குள் எள்ளலோடு சிரித்துக் கொள்பவர்களுக்கு ஒரு புன்னகையோடும் அகநாழிகை இந்த இதழ் வெளியாகிறது//
ReplyDeleteஇதுல எது யாருன்னு தெரியாம கிசு கிசு போல எழுதிட்டீங்க. நல்லா இருக்கு. நல்லது படிச்சிடுவோம்
வணக்கம்..இந்தப்பதிவை படித்தது முதலே எனக்குள்ளும் ஒரு குட்டிக் கனா...என் புத்தகங்கள் தன் மார்புக்கு மாலையாவதாய் ...தேவதை ஒருத்தி வந்து அசரிரீ சொல்கிறாள்.அதிகாலை 5.29 நடக்குமா...பொன்னு சொன்னது சொல்லுங்க வாசு சார்.
ReplyDeletemy best wishes
ReplyDeletesend us the details of subscription
thx
venkat