
நீ புறப்பட்டுப் போன பிறகு...
ஒன்றுக்கும் மேற்பட்ட
முகங்கள் வைத்திருக்கும்
உன்னை
அப்பொழுதுதான் கண்டேன்
ஒவ்வொரு அசைவிலும்
கசியும் நினைவுகளாய்
நம் பழைய சந்திப்புகளில்
வேறொரு விதமாய் கூட்டத்தில்
இறுதியாகத்தான்
பேச வேண்டியிருக்கிறது
நிறைய உன்னோடு
என்னை மறுமுறை எதிர்கொள்ளும்
அத்தருணம்
எந்த முகத்தை
தரிசிக்கத் தருவாய் எனக்கு.
(‘வடக்கு வாசல்‘ அக்டோபர் 2007 இதழில் வெளியானது)
என் மௌனம் முழுவதும்
இனியும் என்ன பதிலைத் தரப்போகிறேன்
உச்சியில் பறக்கும்
ஒற்றைப் புறாவின்
மௌனத்தை
சற்றேனும் பிய்த்தெடுத்து
தர இயன்றால் பரவாயில்லை
யோசித்திருக்கும் இவ்வேளையில்
துளிர்த்த சிறு மௌனத்தை
சேமித்து வைத்திருக்கிறேன்
மறக்காமல் பெற்றுக்கொள்
ஏன் சிரிக்கிறாய் புகைப்படமாய்
என்னைப் பார்த்து.
(‘வடக்கு வாசல்‘ மார்ச் 2008 இதழில் வெளியானது)
- பொன். வாசுதேவன்
வாழ்த்துகள்
ReplyDeleteவடக்கு வாசல்
\\எந்த முகத்தை
ReplyDeleteதரிசிக்கத் தருவாய் எனக்கு\\
நல்ல கேள்வி
வாழ்த்துகள் வாசுதேவன்.
ReplyDelete// நிறைய உன்னோடு
ReplyDeleteஎன்னை மறுமுறை எதிர்கொள்ளும்
அத்தருணம்
எந்த முகத்தை
தரிசிக்கத் தருவாய் எனக்கு.//
என்னத்த சொல்வது...
கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியத்துதான்
//ஏன் சிரிக்கிறாய் புகைப்படமாய்
ReplyDeleteஎன்னைப் பார்த்து.//
புன்னகைக்கும் புகைபடமா அது!
வடக்கு வாசலில் வந்தது! எங்கள் இதய வாசலில் நுழைந்தது!
ReplyDeleteஇரண்டாவது கவிதையில்
உச்சியில் பறக்கும்
ஒற்றைப் புறாவின்
மௌனத்தை
சற்றேனும் பிய்த்தெடுத்து
தர இயன்றால் பரவாயில்லை//
யோசித்திருக்கும் இவ்வேளையில்
துளிர்த்த சிறு மௌனத்தை//
ரசிக்க வைத்த வரிகள்!
கலக்கறீங்க நண்பா!
வாழ்த்துக்கள் சார்:)
ReplyDeleteமனப்பூர்வமான வாழ்த்துகள் !!!
ReplyDeleteகவிதைகள்
ReplyDeleteஅருமை!!
\\சிறு மௌனத்தை
ReplyDeleteசேமித்து வைத்திருக்கிறேன்
மறக்காமல் பெற்றுக்கொள்\\
நல்லா இருக்குங்க.
இரண்டு கவிதைகளுமே அருமை.இரண்டாவது,excellent.
ReplyDeleteரொம்பப் பிடிச்சிருக்கு.
அந்த உதடுகள்..
பார்த்ததுமே இருக்கையை விட்டு எழுந்துவிட்டேன்.யப்பா..
அருமை வாழ்த்துகள் வடக்கு வாசல்
ReplyDeleteஅந்த உதடுகள்.. :-)
ReplyDeleteவடக்கு வாசல்..... வித்தியாசமான பெயர்... இந்த இதழ்களைக் கேள்விப்படுவதோடு சரி!!!
ReplyDeleteமுதல் கவிதை!!!! க்ளாஸ்ஸ்!!!! பாராட்டுகள்!
இரண்டாவது கவிதை பிரமாதம்.
இரண்டு கவிதைகளையும் படித்துவிட்டு, என்ன எழுதவேண்டுமென்று தோணவில்லை... ஏனெனில் சில கவிதைகளுக்கு விமர்சனங்களைக் காட்டிலும் மெளனமே சிறந்த விமர்சனம்!!!!
எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா.. காரணம் அதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் தோணும்னு நினைக்கிறேன்.. இரண்டாவது கவிதையில் புறாவைப் பற்றிய வார்த்தைகள் அருமை.. கலக்குங்க வாசு..
ReplyDeleteஏம்ப்பா.. இந்த புத்தகம்லாம் எங்க கிடைக்கும்னு சொன்னா நாங்களும் கொஞ்சம் படிப்போம்ல..
ReplyDeleteஅத்தருணம்
ReplyDeleteஎந்த முகத்தை
தரிசிக்கத் தருவாய் எனக்கு//
எதிர்பார்ப்போடு கலந்த
ஏக்கங்கலுடன் காத்திருக்கிறேன்
ஏந்திலையே உனக்காக....
ஒற்றைப் புறாவின்
ReplyDeleteமௌனத்தை
சற்றேனும் பிய்த்தெடுத்து
தர இயன்றால் பரவாயில்லை
யோசித்திருக்கும் இவ்வேளையில்
துளிர்த்த சிறு மௌனத்தை
சேமித்து வைத்திருக்கிறேன்
மறக்காமல் பெற்றுக்கொள்//
அழகு வரிகள்...
இரு கவிதைகளும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ReplyDeleteஇரண்டும் நன்றாக இருக்கிறது. முதல் கவிதையை திரும்பத் திரும்ப படித்தேன்! வாழ்த்துகள்!
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
ReplyDelete//வாழ்த்துகள்//
ஊக்கத்திற்கும்,
வாழ்த்திற்கும் நன்றி, ஜமால்.
இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// நிறைய உன்னோடு
என்னை மறுமுறை எதிர்கொள்ளும்
அத்தருணம்
எந்த முகத்தை
தரிசிக்கத் தருவாய் எனக்கு.//
//என்னத்த சொல்வது...
கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியத்துதான்//
இராகவ்,
இரசனைக்கு நன்றி.
கொடுத்தால்தானே வாங்க முடியும்,
சொல்லரசன் said...
ReplyDelete//புன்னகைக்கும் புகைபடமா அது!//
அதுவும் ஒரு அர்த்தப்புன்னகைதானே நண்பா.
ஊக்கத்திற்கு நன்றி.
ஷீ-நிசி said... .
ReplyDelete//வடக்கு வாசலில் வந்தது!
எங்கள் இதய வாசலில்
நுழைந்தது!//
ஷீ...
நான் ஒத்துக்கறேன்...
நீ கவிஞன்தான்னு..
ஊக்கமே கவிதையா இருக்கே.
நன்றி.
வித்யா said...
ReplyDelete//வாழ்த்துக்கள் சார்:)//
நன்றி தோழி.
வேத்தியன் said...
ReplyDelete//மனப்பூர்வமான வாழ்த்துகள் !!!//
வேத்தியன்,
ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
thevanmayam said...
ReplyDelete//கவிதைகள் அருமை!!//
வருகைக்கும்,
ஊக்கத்திற்கும் நன்றி சார்.
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\சிறு மௌனத்தை
சேமித்து வைத்திருக்கிறேன்
மறக்காமல் பெற்றுக்கொள்\\
//நல்லா இருக்குங்க.//
நன்றி ஜமால்.
ச.முத்துவேல் said...
ReplyDelete//இரண்டு கவிதைகளுமே அருமை.இரண்டாவது,excellent.
ரொம்பப் பிடிச்சிருக்கு.//
ஊக்கத்திற்கு நன்றி முத்துவேல்.
//அந்த உதடுகள்..
பார்த்ததுமே இருக்கையை விட்டு எழுந்துவிட்டேன்.யப்பா..//
ஏன்… நண்பா
அது மாதிரி உதடுகளை
பார்த்ததில்லையா...?
Suresh said...
ReplyDelete//அருமை வாழ்த்துகள் வடக்கு வாசல்//
நன்றி சுரேஷ்.
Suresh said...
//அந்த உதடுகள்.. :-)//
எங்கேயாவது
பார்த்த ஞாபகமா நண்பா.
அது மட்டும் கெடச்சா...ஆ...ஆ....ஆ...
(திறந்த வாயோட சத்தம்)
ஆதவா said...
ReplyDelete//வடக்கு வாசல்..... வித்தியாசமான பெயர்...
இந்த இதழ்களைக் கேள்விப்படுவதோடு சரி!!!
முதல் கவிதை!!!! க்ளாஸ்ஸ்!!!! பாராட்டுகள்!
இரண்டாவது கவிதை பிரமாதம்.
இரண்டு கவிதைகளையும் படித்துவிட்டு, என்ன எழுதவேண்டுமென்று தோணவில்லை... ஏனெனில் சில கவிதைகளுக்கு விமர்சனங்களைக் காட்டிலும் மெளனமே சிறந்த விமர்சனம்!!!!//
ஆதவாவின் இரசனையான
விமர்சனத்தின் மீது எனக்கு மதிப்பு உண்டு.
நன்றி நண்பா.
‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை‘
என்பார் கண்ணதாசன்.
மௌனமே சிறந்த மொழி.
கணையாழியில் வெளியான ‘மொழி‘ என்ற
எனது முதல் கவிதை
மௌனத்தைப் பற்றியதுதான்.
கார்த்திகைப் பாண்டியன் said...
ReplyDelete//எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா.. காரணம் அதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் தோணும்னு நினைக்கிறேன்.. இரண்டாவது கவிதையில் புறாவைப் பற்றிய வார்த்தைகள் அருமை.. கலக்குங்க வாசு..//
ஊக்கத்திற்கும் அன்புக்கும் நன்றி கார்த்தி.
கார்த்திகைப் பாண்டியன் said...
ReplyDelete//ஏம்ப்பா.. இந்த புத்தகம்லாம் எங்க கிடைக்கும்னு சொன்னா நாங்களும் கொஞ்சம் படிப்போம்ல..//
கேட்டா நாங்களும் சொல்வோம்ல..
Rajeswari said...
ReplyDeleteஅத்தருணம்
எந்த முகத்தை
தரிசிக்கத் தருவாய் எனக்கு//
//எதிர்பார்ப்போடு கலந்த
ஏக்கங்கலுடன் காத்திருக்கிறேன்
ஏந்திலையே உனக்காக....//
கவிதைக்கு பின்னூட்டமாய் கவிதையா…?
(ஏய்... யார்லே என் பாட்டுக்கு எதிர்பாட்டு போடறது)
நன்றி தோழி.
Rajeswari said...
ReplyDelete//இரு கவிதைகளும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//
தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி, தோழி ராஜி.
ஊக்கத்திற்கு மிக்க நன்றி
ReplyDeleteகுடந்தை அன்புமணி.
கவிதைகள் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள் வாசுதேவன்!
ReplyDelete(முதல் படம் ஓ.கே. இரண்டாவது??)
www.vadakkuvaasal.com நீங்கள் அதன் வலைத்தள முகவரியையும் சேர்த்தே இங்கே தந்திருக்கலாமே..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லாம் சரி. அப்புறம் ஏன் கவிதைகள் அனுப்ப வில்லை வாசுதேவன்?
வடக்கு வாசல் இணையதள முகவரியை சிபாரிசு செய்ததற்கு நன்றி முத்துலட்சுமி.
ராகவன் தம்பி
Deepa said...
ReplyDelete//கவிதைகள் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள் வாசுதேவன்!
(முதல் படம் ஓ.கே. இரண்டாவது??)//
நன்றி தீபா.
Deepa said...
ReplyDelete//கவிதைகள் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள் வாசுதேவன்!
(முதல் படம் ஓ.கே. இரண்டாவது??)//
நன்றி தீபா.
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ReplyDelete//www.vadakkuvaasal.com நீங்கள் அதன் வலைத்தள முகவரியையும் சேர்த்தே இங்கே தந்திருக்கலாமே..
வாழ்த்துக்கள்..//
வாழ்த்துக்கு நன்றி,
(வடக்கு வாசல் முகவரி அறியப்படுத்தியதற்கும்,,,)
ராகவன் தம்பி said...
ReplyDelete//வாழ்த்துக்கள்.
எல்லாம் சரி. அப்புறம் ஏன் கவிதைகள் அனுப்ப வில்லை வாசுதேவன்?
வடக்கு வாசல் இணையதள முகவரியை சிபாரிசு செய்ததற்கு நன்றி முத்துலட்சுமி.
ராகவன் தம்பி//
கே.பி. சார்,
நலம்தானே ?
உங்கள் வருகையும்,
ஊக்கமும் மகிழ்வூட்டுகிறது. அய்யாசாமியை சந்தித்தேன், தொலைபேசியில் வருகிறேன்.
(வடக்கு வாசல் ஆசிரியர் நீங்கள்தான் என புல பதிவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை)
வாழ்த்துக்கள், ரெண்டு கவிதையுமே நன்று.
ReplyDelete