
மொழி
உன்னுடன் சேர்ந்து வரும்
மௌனம் போதுமெனக்கு
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை
எனது பேச்சினைக் கேட்டு
எதையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை
உன் மௌனத்தைத் தவிர
உனது மௌனம் என்னை
மறுத்துப் பேசாது
உனக்கும் எனக்குமிடையே என்றும்
கருத்து வேறுபாடுகளில்லை
எனது மொழி உனக்கும்
உனது மௌனம் எனக்கும் விளங்கும்
தொடர்பின்றி நான் பேசினாலும்
உனது மௌனம் என்னிடம்
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மௌனத்தைக் கடைபிடிக்கும்வரை.
(கணையாழி – மே, 1992 இதழில் வெளியானது)
ஞாபகம்
எங்கேயோ பார்த்திருந்தேன்
அந்த அழகான தண்டவாளங்களை
அதனை ஒட்டிப் பரந்திருந்த
முட்செடிகளை
மீண்டும் இன்று பார்க்கிறேன்
நீளமாய்ச் சென்று வளைந்து
அம்பின் முனையைப் போலிருந்த
தண்டவாளங்களை
எங்கேயாவது பார்த்திருப்பேன்
கூடவே சென்று கொண்டிருந்த
பரந்திருந்த முட்செடிகள் இடையில்
ஒரு நதிக்காக இடைவெளி விட்டு
மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தது
என்றாலும
நதியின் மேல் தொடர்ந்து சென்று
ஒரு வளைவில்
ஒன்றிணைந்து புள்ளியாகி
மறைந்தது தண்டவாளம்
என்னைப் பற்றிய
பிரக்ஞை ஏதுமின்றி.
(நவீன கவிதை – இதழ் 5 – மார்ச்., 1994 இதழில் வெளியானது)
இமைகளுக்கு மத்தியில்
மனதை நனைத்துச் சென்ற
மழைச்சேறில்
கால்வைத்து நடந்து சென்றாய்
நீ
சிதறி விழுந்த நீர்த்துளிச் சேர்க்கை
நெய்த நினைவுகளில்
இடமுண்டா புரள
திரும்பத் திரும்ப
நீயுமற்ற எனக்கு
தனியாய்
கண் மூடி சலனமற்று நிற்கிறேன்
விழியிடுக்குள்களில் நீர் கசிய
சிறு துளிச்சேர்க்கையில்
வழியத் தயாராய் இருக்கும்
உன் விழிக் கண்ணீரின் சூழலில்
வழிந்தோடுகின்றாய்
நீ
நினைவுகளாய் என்னை விட்டு.
(புதிய பார்வை – 1-15, மே 1997 இதழில் வெளியானது)
- பொன்.வாசுதேவன்
muthal rendum laknu purinjuduju
ReplyDeletekadaisi oru 5 thadava padicha poravum lighta puriyara maathiri irukku bossssssssssss
first supernkoooooooooooo
second top ngooooooooooooo
third purinja solliduven(super sir)
கவிதைகள் அருமை
ReplyDeleteமுதல் கவிதை வாய் பேசா பெண்மையை அடக்கியாளும் ஆணின் மொழி.. இரண்டாவது கவிதை கண்ட காட்சியை கவிதைபடுத்துகிறது.. மூன்றாவது கவிதையில் தனிமையின் வலி பெருகுகிறது.. மூன்றுமே நன்றாக உள்ளன வாசு.. வாழ்த்துக்கள்..
ReplyDeletewow ... இன்னுமா உங்களின் ஒரு கவிதைத் தொகுதியியை யாரும் வெளியிடவில்லை ... amazing poetry ...
ReplyDeleteமூன்று கவிதைகளுமே பிடித்திருக்கிறது, மிகவும் கூர்மையான அவதானிப்பு,
ReplyDeleteமொழி, இமைகளுக்கு மத்தியில் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
அருமையான கவிதைகள் தலைவா
ReplyDeleteமூன்றுமே நல்லா இருக்கு,
ReplyDeleteகடைசி கவிதை படித்ததும் சட்டென்று தனிமையை பிசுபிசுக்க செய்கின்றது. அருமையான கவிதை.
இரண்டாவது கவிதையின் உள் அர்த்தம் எனக்கு சரியாக பிடிபடவில்லை இன்னும் இரண்டு மூன்று தடவை படித்துப் பார்கிறேன்.
ஆனாலும் வரிகள் உன்றி ரசித்தவையை காட்சிபடுத்துவதாக தோன்றுகின்றது.
முதல் கவிதை அழகானது.
அருமை வாசு..
ReplyDeleteவாழ்த்துகள்
முதல் கவிதையைப் படித்துவிட்டு என்னால் மௌனமாய் இருக்கமுடியவில்லை. நல்லாயிருக்குங்கிறத சொல்லித்தான் ஆவணும்.
ReplyDelete/அம்பின் முனையைப் போலிருந்த/
என்னா ஒரு தொலை நோக்குப் பார்வை. ரசித்தேன். நல்ல காட்சிக்கவிதை.
மூன்றும் முத்துக் கவிதைகள்.
ReplyDeleteமுதல் கவிதை மொழி-மௌனம்.
கவிதை அழகாகக் கோர்க்கப்பட்ட வரிகள்.ஆனால் யார் யாரிடம் மௌன மொழியில் பேசுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.8-10 தடவைகள் வாசித்துவிட்டேன்.மனம் பிடித்த ஒருவர் மௌனமாய் இருப்பது என்பது பெரும் கொடுமையே.
ஞாபகம்-தண்டவாளம்,முட்செடிகள்.வாழ்வில் எம்மைக் கடக்கின்ற எல்லாமே எம்மை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுமா?சில ஞாபகங்கள் அழுத்தமாக எம் மனதில் மட்டும்.
இமைகளுக்கு மத்தியில்-காதல்-பிரிவு-நினைவுகள்-தனிமை.
வாசு அண்ணா மனம் நிறைந்த கவிதைகள்.
மூன்றுமே முத்துதான்..
ReplyDeleteபாராட்டுகள் நண்பா..
நண்பரே!
ReplyDeleteஇப்போதுதான் பார்த்தேன். கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன. இப்போது கவிதைகள் எழுதுகிறீர்களா? உங்களிடம் வாசகனை இழுக்கின்ற எழுத்து நடை இருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும்.
மூன்று கவிதைகளும் அழகு...
ReplyDeleteமூன்றாவது கவிதை வெகு அழகு...
மூன்றில் முதலிரண்டு கவிதைகளினால் ஏற்பட்ட தாக்கம் மிகுதியாக இருக்கிறது. அதிலும் முதல் கவிதை பழைய நினைவுகளுக்கு என்னை அழைத்துச் செல்லுகிறது. மெளனம் என்பது மிகச்சிறந்த கவிதைமொழி என்பதை உணர்ந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும்.
ReplyDeleteகணையாழியில் எழுத நானும் ஆசைப்பட்டேன். பிறகுதான் தெரியும். தற்சமயம் வருவதில்லை என்பது!!! மூன்று கவிதைகளும் பிரமாதம்..
/வழியத் தயாராய் இருக்கும்/
ReplyDeleteஎன்ன ஒற்றுமை. இவ்வரிகளை நானும் ஒரு கவிதையில் அப்படியே எழுதியிருக்கிறேன்.
கவிதைகள் அனைத்தையும் ரசித்தேன்..
ReplyDeleteமுதல் மொழி' நல்லா இருக்குங்க..
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்னும் தோனுது.
உங்க பெயர் வித்தியாசமானதாகவும் யோசிக்கவும் வைக்கிறது..
வாழ்த்துக்கள்
கவிதைகள் அருமை!!
ReplyDeleteமூன்றாவது பெஸ்ட்!!
மூன்று கவிதைகளும் நன்றாய் உள்ளது.என்னை மிகவும் கவர்ந்தது ”மொழி”
ReplyDeleteஅருமையான தமிழ்...!
ReplyDeleteமூன்றுமே முத்துக்கள். [அங்கங்க கொஞ்சம் புரியல.. அதுக்கு என்ன பண்ணுறது] :-))))
ReplyDelete