Monday, December 27, 2010

கவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

கவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்



அனைவரும் வருக !
...............................................................................................................................................


எனது கவிதைத் தொகுப்பு 
‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘  (உயிர்மை பதிப்பகம்)  
வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த 
நண்பர்கள் அனைவருக்கும் அன்பும், நன்றியும்.

- பொன்.வாசுதேவன்

Thursday, December 23, 2010

மதியப்பூனை முதல் மயிரு வரை - சரவண கார்த்திகேயன்

‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘ புத்தக வெளியீடு அழைப்பிதழ்


மதியப்பூனை முதல் மயிரு வரை

சி.சரவணகார்த்திகேயன் எழுதிய பதிவு இது.
(http://www.writercsk.com).


புத்தகக்காட்சியை மையமிட்டு வழக்கம் போல் இந்த வருட‌க்கடைசியிலும் நிறையப் புத்த‌கங்கள் கௌரவமான‌ நிகழ்வுகள் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த‌ ஆண்டு சற்றே பிரத்யேக கவனத்துடன் இந்நிகழ்வுகளை எதிர்பார்க்கிறேன். இவற்றுள் சில பாசத்திற்குரியவர்களுடையவை; இன்னும் சில ப்ரியத்துக்குரியவர்களுடையவை.

எனது பதிப்பாளர் அகநாழிகை பொன்.வாசுதேவனின் முதல் கவிதைத்தொகுப்பான 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை', நான் சமீபத்தில் வியந்து வியந்து படித்து வரும் எழுத்துக்குச் சொந்தக்காரராகிய விமலாதித்த மாமல்லனின் கதைகள் முழுத்தொகுதி, இதுகாறும் என் மன‌திற்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே எழுதி வரும் முகுந்த் நாகராஜனின் நான்காவது கவிதைத்தொகுப்பான 'K அலைவரிசை', ஆரம்பம் முதலே நான் கவனித்துச் சிலாகித்து வரும் கார்த்திகாவின் கன்னிக் கவிதைத்தொகுப்பான‌ 'இவளுக்கு இவள் என்றும் பேர்', சக பதிவுலக நண்பர்களான‌ நர்சிம், நிலா ரசிகன் ஆகியோரது கவிதைத்தொகுப்புகள் - முறையே 'தீக்கடல்', 'வெயில் தின்ற மழை' - ஆகியன வரும் டிசம்பர் 26, 2010 அன்று (மாலை 5.30) உயிர்மை பதிப்பகம் சார்பில் தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் வெளியிடப்படவிருக்கிறது.

மனுஷ்ய புத்திரனின் ஏழாம் கவித்தொகுப்பான 'இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்' கிறிஸ்துமஸ் அன்றும், நான் மிக எதிர்பார்க்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலான 'துயில்' புத்தாண்டு அன்றும் அதே அரங்கில் (மாலை 6 மணி) வெளியிடப்படுகின்றன‌.

இவை தவிர, கவிஞரும் நண்பருமான‌ யாத்ராவின் முதல் கவித்தொகையான 'மயிரு' (தலைப்பைப் பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது - என்ன தைரியம்!) அகநாழிகை பதிப்பகம் சார்பில் டிசம்பர் 29, 2010 அன்று வெளியிடப்படுகிறது (Venue not yet unveiled).

இந்நிகழ்வுகளுள் எதிலெதிலெல்லாம் ஆஜர் ஆகி அட்டென்டன்ஸ் போடுவேன் என்பது இன்னமும் உறுதியாகா நிலையில் (அடியேன் Positioning பெங்களூர் எனக் குறிப்பறிக‌), இப்போதைக்கு தொடர்புடைய நண்பர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

- சி.சரவண கார்த்திகேயன்

Wednesday, December 22, 2010

Monday, December 20, 2010

எனது கவிதைத் தொகுப்பு வெளியீடு & உயிர்மை புத்தக வெளியீட்டு அரங்கு - 4

எனது கவிதைத் தொகுப்பு வெளியீடு & 
உயிர்மை புத்தக வெளியீட்டு அரங்கு - 4




நண்பர்களுக்கு வணக்கம்.

26.12.2010 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் என்னுடைய கவிதைத் தொகுதி ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘   
வெளியிடப்பட உள்ளது.



எனது கவிதைத் தொகுதியுடன் தோழமை எழுத்தாளர்களின் பிற புத்தகங்களும்
வெளியிடப்பட உள்ளன.

உறவும், நட்புமாக கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.

மிக்க அன்புடன்,
பொன்.வாசுதேவன்
பேச : 999 454 1010
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
...............................................................................................................................................................

உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 4 
உயிர்மையின் 12 நூல்கள்
நாள் 26. 12. 2010, ஞாயிற்று கிழமை நேரம்மாலை 5.30மணி
இடம்தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்,(LLA Building)
735, அண்ணா சாலை சென்னை


வரவேற்புரை மனுஷ்ய புத்திரன்
முதலாம் அமர்வு கட்டுரைத் தொகுப்புகள்
1. இப்போது அவை இங்கு வருவது இல்லை-கிருஷ்ணன் ரஞ்சனா
  சிறப்புரை : அழகியபெரியவன்
2. ஒப்பனையில் ஒளிந்திடும் உலகம்முருகேச பாண்டியன்
   சிறப்புரை: மணா
3. பெருகும் வேட்கைஅழகிய பெரியவன்
   சிறப்புரை : முருகேச பாண்டியன்

இரண்டாம் அமர்வு சிறுகதைகள்
1. விமலாதித்த மாமல்லன் கதைகள்
   
   சிறப்புரை : சுகுமாரன்
2. வெள்ளைப் பல்லி விவகாரம்லஷ்மி மணிவண்ணன்
   சிறப்புரை : லீனா மணிமேகலை
3. சுகுணாவின் காலைப் பொழுது மனோஜ்
   
   சிறப்புரை : ஷாஜி


மூன்றாம் அமர்வு கவிதைத் தொகுப்புகள்
1. இவளுக்கு இவள் என்றும் பேர்கார்த்திகா
  சிறப்புரை: சுப்ரபாரதி மணியன்
2. K அலைவரிசை முகுந்த் நாகராஜன்
  சிறப்புரை: .ராமசாமி
3. தீக்கடல்-நர்சிம்
  சிறப்புரை: நா.முத்துக்குமார்
 வெயில் தின்ற மழைநிலா ரசிகன்
   சிறப்புரை : பவா.செல்லத்துரை
5. இசைக் குமிழிஹவி
   சிறப்புரை : ஸ்ரீநேசன்

6. ஞாயிற்றுக் கிழமை மதியப் பூனை-பொன்.வாசுதேவன்
   சிறப்புரை: இந்திரன் 
........................................................................................................................................

அனைவரும் வருக !

Sunday, October 24, 2010

பா.ராஜாராம் இல்லத் திருமணத்தில் பதிவர்கள் (படங்கள்)

என்ன சொல்ல... மாதவராஜ், காமராஜ், மணிஜீ, சிவாஜி ஷங்கர் என எல்லோரும் பாசத்தைப்பிழிந்து எழுதி விட்டார்கள். இனி என்ன எழுதினாலும் எடுபடாது.. எடுத்த படங்களையாவது பகிர்ந்து கொள்ளலாம்...


மணிஜீ-யும் நானும்


கவிஞர் ராஜசுந்தராஜனுடன் நான்



நான், கவிஞர் ராஜசுந்தரராஜன், மணிஜீ, சரவணக்குமார்


சரவணக்குமார், கும்க்கி, ஜெர்ரி, சிவாஜி ஷங்கர்


‘சினேகிதன்‘ அக்பர், நான், தெய்வா, சிவாஜி ஷங்கர், ஜெர்ரி, மணிஜீ



மணமகள் வீட்டு சார்பில் மொய் எழுதும் சரவணக்குமார்


நாட்டரசன் கோட்டை கண்ணுடைய அம்மன் கோவில் ஊருணியில் மணிஜீ, நான்



பா.ரா, குடும்பத்துடன் நாங்கள் அனைவரும்..

மற்ற விவரங்களை தோழர் மாதவராஜ், காமராஜ், சிவாஜி ஷங்கர், மணிஜீ பதிவுகளில் காண்க...

- பொன்.வாசுதேவன்

Sunday, October 17, 2010

சி.சரவணகார்த்திகேயன் எழுதிய பரத்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வு படங்கள்

அகநாழிகை பதிப்பக வெளியீடான
சி.சரவணகார்த்திகேயன் எழுதிய
‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு படங்கள்












Monday, October 11, 2010

சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ புத்தக வெளியீடு அழைப்பிதழ்

நண்பர்களே !

அகநாழிகை பதிப்பகம் வெளியீடான, சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Monday, October 4, 2010

புத்தக விமர்சனம் : ஆண்டியிடம் சிக்கிய தோண்டி

தமிழ் இலக்கியத்தில் புத்தக விமர்சனம்திறனாய்வு என்ற துறை பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாதது ஒரு குறைதான்அப்படியே இருந்தாலும் அது ஒரு கட்டாயத்திற்காகவோ,தனிப்பட்ட விருப்பின் பொருட்டு செய்யப்பட்டதாகவவோ இருந்து வந்துள்ளதுஉலக அளவில் இலக்கியத்தின் ஒரு மிக முக்கியமான துறையான விமர்சன இயல் தமிழில் கவனம் பெறாமல்அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் மேலோட்டமான கண்ணோட்டத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.









சமீபத்தில் மனுஷ்ய புத்திரனோடுபேசிக்கொண்டிருக்கும்போது வண்ணதாசனின் கடிதங்கள் தொகுப்பைப் பற்றிய பேச்சு வந்ததுஅப்போது மனுஷ்ய புத்திரன் "வண்ணதாசனின் இதர படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் ஒப்பீடு செய்ய இயலாதவைஅவரது படைப்புகளில் வெளிப்படுகின்ற மனித உறவு சார்ந்த ஆழ்ந்த அகச்சிக்கல்கள் அவரது கடிதங்களில் வெளிப்படுவது கிடையாதுஅவை பளிங்கு போன்றவைஅப்பழுக்கற்ற நேரடியான மனோநிலையில் எழுதப்பட்டவை வண்ணதாசனின் கடிதங்கள்என்று கூறினார்மிகவும் யோசிக்க வைத்த விஷயம் இதுகாரணம்வண்ணதாசனின் படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் மீதான ஈர்ப்பு எனக்கும் கிடையாதுஒரு விமர்சனம் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இதை என் அனுபவபூர்வ உண்மையாகக் கொள்கிறேன்எந்தத் தேவைகளும்நிர்ப்பந்தங்களும் இல்லாத இவ்வாறான கூற்றுகளே படைப்பின் உண்மையான விமர்சனமாக இருக்க முடியும்.

அழகியலுடன் கூடிய ரசனை சார்ந்த விமர்சனங்கள் படைப்பை பிறரும் வாசிக்க உந்துதலைத் தருகின்றனபடைப்பின் மீதான கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று வெளியிடும் மனோபாவம் இன்று யாரிடம் உள்ளதுபடைப்பின் தன்மையைத் திறனாய்வு செய்வதை விடுத்து படைப்பினை ஆக்கியவரையும்அவரது சார்புக் கோட்பாடு பற்றியும் அறிந்துகொண்டு ஒரு முன்முடிவோடு வைக்கப்படுபவையே இன்று விமர்சனங்களாகவும்இதைச் செம்மையாகச் செய்கிறவர்கள் விமர்சகர்களாகவும் அறியப் படுகிறார்கள்.

விமர்சனத்தில் கவனம் செலுத்திய வ.வே.சுஐயர் அழகியல் சார்ந்த ரசனையின் அடிப்படையில் தனது விமர்சனங்களை முன்வைத்தார்அவரை அடுத்து க.நா.சுப்ரமண்யம் படைப்புகள் மீதான தனது விமர்சனங்களை படைப்பாளிகளைப் பட்டியலிட்டும்அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அதை அடித்தும்திருத்தியும் விமர்சகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.நா.சு.வின் விமர்சனப்போக்கு படைப்பாளியின் மீதான கருத்துக்களைப் படைப்பின் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியாகக் கொள்வதற்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது எனலாம்அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாநா.வானமாமலைதருமு சிவராமு,தொ.மு.சி.ரகுநாதன்கைலாசபதி மற்றும் வெங்கட்சாமிநாதன் விமர்சகர்களாக அறியப்பட்டுள்ளனர்.

எழுத்து‘ இதழில் 1960களில் தொடர்ந்து வெளியான வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் விமர்சனம் சார்ந்த தீவிர நம்பிக்கைகளை அளித்ததுஆனாலும், கா.நா.சு.வைப் போலவே குறுகிய பார்வையும், காழ்ப்புணர்ச்சியும், பண்டிதத்தன்மையுடனான அணுகுமுறையும் கொண்ட வெங்கட்சாமிநாதனின் விமர்சனங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்ப்பித்தது..நா.சு.வின் வழியிலேயே வெங்கட்சாமிநாதன் செய்த ‘பாலையும் வாழையும்‘ மற்றும் ‘எதிர்ப்புக்குரல்‘ போன்றவைக்குப் பிறகு வெங்கட்சாமிநாதனுக்கு ஒரு தனி அணி உருவாகியது ஒன்றுதான் இதனால் கிடைத்த பலன்.  அதே காலகட்டத்தில் படைப்புகளைப் புதிய கோணத்தில் திறனாய்வு செய்யத் துவங்கிய தருமு சிவராமுவும் காலப்போக்கில்.நா.சு., வெங்கட்சாமிநாதனைப் போலவே மாறிப்போனது பரிதாபமானது.

தொடர்ச்சியாக மார்க்சியப் பார்வையில் படைப்புகளை அணுகிய தமிழவன்,ஞானிதனக்கென ஒரு தனித்த பார்வையில்தனது அனுபவத்துக்கு உட்பட்ட ரசனையோடு படைப்புகளை விமர்சனம் செய்த சுந்தரராமசாமிபாலா போன்றோரின் இலக்கிய மதிப்பீடுகள் கருதத் தக்கதாகவும்விமர்சனத்திற்கு உட்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்ஆரம்ப காலம் முதற்கொண்டே இலக்கிய விமர்சனம் என்பது சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளதுஆனால் தற்போதைய நவீன இலக்கியச் சூழலில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல புத்தகம் திறனாய்வு அல்லது விமர்சனம் செய்ய அவர் ஆழ்ந்த வாசிப்பனுபவம் உள்ளவராகவோ,தேர்ந்த ரசனை கொண்டவராகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஒன்றுவிமர்சகர் படைப்பாளிக்கு நண்பராக இருக்க வேண்டும் அல்லது விமர்சிக்கப் போகிறவரின் அணியில் படைப்பாளி இணைந்திருக்க வேண்டும்.ஒரு படைப்பை விமர்சனம் செய்கிற விமர்சகர் கைக்கொள்கிற அளவுகோல்தான் என்னஅப்படியொன்று இருக்கின்றதா என்றால் கிடையாது என்பதுதான் பதில்.






 நம் விமர்சகர்கள் பலருக்கும் வேண்டியவர்களைப் பாராட்டுவதும்,வேண்டாதவர்களைப் புறந்தள்ளி எழுதுவதும்தான் விமர்சனம் என்ற எண்ணம் இருக்கிறது.  ஒரு படைப்பினைக் குறித்த அறிவார்ந்த விமர்சனத்தை விடுத்து படைப்பின் மீது சுயநலம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திமாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதே தலையாய பணியாகக் கொண்டு செயல்படுகின்றனர்அசல் ஆக்கங்களின் நிலையே இப்படியென்றால் மொழியாக்கப் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

விமர்சனம் என்பது படைப்பின் மீதான முழுமையான மதிப்பீடாகக் கொண்டு வளர்க்கப்பட வேண்டும்.  படைப்பு வாசிப்பவனுக்கு ஏற்படுத்தும் அனுபவத்தை வெளிக்கொணர்வதாக அதன் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டு விமர்சனப் போக்கு உருவாக விமர்சகர்களின் அனுபவமும்தகுதியும் முக்கியமானது.அவ்வகையில் அளிக்கப்படுகின்ற விமர்சனமே உண்மையானதாக இருக்கும்.

படைப்பின் ஆக்கத்தில் உள்ள நிறை குறைகளைச் சுட்டி அதைப் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே முறையான ஒரு விமர்சனத்தின் பணியாக இருக்க வேண்டும்எந்த அளவிற்கு இலக்கியம் நவீன உருக்கொண்டதோ அதே அளவிற்கு விமர்சன வளர்ச்சியில் தேங்கித்தான் இருக்கின்றது.விமர்சனத்தின் தயையில்தான் படைப்பும்அதை ஆக்கியவனும் கருதத்தக்க அங்கீகாரத்துக்கான காத்திருத்தலை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

- பொன்.வாசுதேவன்

உயிரோசை இணைய இதழில் (4.10.2010) வெளியானது.

Tuesday, September 14, 2010

அகநாழிகை அடுத்த இதழ்

எதிர்காற்றில் கண்ணில் புகுந்த தூசி போல உறுத்திக்கொண்டேயிருந்தது.

எப்போது வரும்.. அகநாழிகை அடுத்த இதழ்?
கேள்விகள்.. ஆர்வமான எதிர்பார்ப்புகள்.. தங்கள் படைப்பு எப்போது வெளியாகும் என அதை அச்சில் பார்க்கும் பரவசங்கள்..

எல்லாவற்றையும் அமைதியாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது நான். இதோ.. அதோ.. என ஒரு மாதங்களைக் கடத்தி ஒருவழியாக அகநாழிகை இதழ் தயாராகி விட்டது.

மதுரை புத்தகக் கண்காட்சிக்குள் கொண்டுவர நினைத்தும் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பொருளாதாரம்தான்.

சோர்வுறும் போதெல்லாம் ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும், உதவும் நேசங்களுக்கும், ‘இதெல்லாம் ஒரு..‘ என்று உள்ளுக்குள் எள்ளலோடு சிரித்துக் கொள்பவர்களுக்கு ஒரு புன்னகையோடும் அகநாழிகை இந்த இதழ் வெளியாகிறது.

வழக்கம்போலவே என்னை உந்தி முன்னிலும் வேகமாய் உத்வேகத்துடன் சுழலச்செய்கின்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்பு.

...
பொன்.வாசுதேவன்
பேச : 999 454 1010
................................................................................................................................................................

அகநாழிகை இந்த இதழில்...


குறுநாவல்

சோழிகள் – விமலாதித்த மாமல்லன்

சிறுகதைகள்

நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக்குடை – தாரா கணேசன்
வித்தை – என்.விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்

மொழிபெயர்ப்பு சிறுகதை

செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி
(தமிழில் : நாகரத்தினம் கிருஷ்ணா)

கட்டுரைகள்

சமாதானத்தின் இசை – ரா.கிரிதரன்
கவிதையின் ரசவாதம் – வா.மணிகண்டன்
தமிழ்ச் சமூக இயல்புகள் – அண்ணா கண்ணன்
பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் – ரௌத்ரன்
கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் – ஆர்.அபிலாஷ்

கவிதைகள்

சிவரமணி
லாவண்யா சுந்தரராஜன்
நிலாரசிகன்
சுகிர்தா
ச.முத்துவேல்
ஆர்.அபிலாஷ்
சோ.சுப்புராஜ்
ரவி உதயன்
மாமல்லன் கார்த்தி
இவள் பாரதி
பாண்டித்துரை
ராகவன் சாம்யேல்
கார்த்திகா
ராமலஷ்மி
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
பிங் ஹ்சின் (தமிழில் : ஜெயந்தி சங்கர்)

000

Wednesday, August 25, 2010

அறிவிப்பு

நண்பர்களுக்கு,


வணக்கம். மதுரை புத்தகக் கண்காட்சி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. 


மதுரை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் ‘உயிர்மை‘ புத்தக அரங்கில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


மேலும், அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடான சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுதியும் மதுரை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும். இப்புத்தக வெளியீட்டு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.




பரத்தை கூற்று (கவிதைகள்) - சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : அகநாழிகை
விலை : ரூ.50/-


அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்


1. கருவேல நிழல் (கவிதைகள்) பா.ராஜாராம் - ரூ.40/-


2. கோவில் மிருகம் (கவிதைகள் - என்.விநாயகமுருகன் - ரூ.40/-


3. நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) - லாவண்யா சுந்தரராஜன் - ரூ.40/-


4. கூர்தலறம் (கவிதைகள்) - டிகேபி காந்தி - ரூ.40/-


5. உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன் - ரூ.40/-


6. தலை நிமிர்வு (கவிதைகள்) - ரூ.40/-


7. பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் - ரூ.50/-


8. அய்யனார் கம்மா (சிறுகதைகள்) - நர்சிம் - ரூ.40/-


9. கலைஞர் என்னும் கலைஞன் (கட்டுரைகள்) - டி.வி.இராதாகிருஷ்ணன் - ரூ.20/- 
    (நயினார் பதிப்பகம்)


10. தொலைக்கப்பட்ட தேடல்கள் - வெ.இராதாகிருஷ்ணன் - 100/- (நயினார் பதிப்பகம்)


.......................................................................................................
அகநாழிகை பதிப்ப வெளியீடுகளை 
ஐசிஐசிஐ வங்கிக்கணக்கு எண் 155501500097 - 
P.VASUDEVAN - MADURANTAKAM BRANCH 
வழியாக பணம் செலுத்தியும் பெறலாம்.
.......................................................................................................


அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கிடைக்கும் புத்தக கடைகள்


சென்னை : நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர் & டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்.


மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்)


*****************************************************************************


உங்களது படைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்து சிறந்த முறையில் புத்தக வடிவாக்கம் செய்துதர எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.


பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
எழுத : aganazhigai@gmail.com & nayinarbooks@gmail.com









Thursday, July 22, 2010

தொன்மத்தில் துளிர்க்கும் வாழ்வின் விதை

டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் தனது ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை.


காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது

இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.







என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள்

ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.







அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை

ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.







இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா

தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள்.  நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.







இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை  அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது. 

- வெ.இராதாகிருஷ்ணன்

...................................................................................................................................

டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ 

புத்தக வெளியீட்டு நிகழ்வு



குறிப்பு :



  1. இந்த சிறுகதைத் தொகுப்பு 24.7.2010 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா யுனிவர்சிட்டி அலுமினி கிளப், ஹெக்டே ஹாலில் நடைபெற உள்ளது.
  2. புத்தக வெளியீட்டு விழாவில் ரூ.100/- மதிப்புள்ள இந்த புத்தகம் 50% சிறப்பு சலுகையில் ரூ.50/-க்கு கிடைக்கும்.
  3. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ (பாகம் - 1) என்ற சிறுகதைத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.
அனைவரும் வருக !


- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname