Monday, October 4, 2010

புத்தக விமர்சனம் : ஆண்டியிடம் சிக்கிய தோண்டி

தமிழ் இலக்கியத்தில் புத்தக விமர்சனம்திறனாய்வு என்ற துறை பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாதது ஒரு குறைதான்அப்படியே இருந்தாலும் அது ஒரு கட்டாயத்திற்காகவோ,தனிப்பட்ட விருப்பின் பொருட்டு செய்யப்பட்டதாகவவோ இருந்து வந்துள்ளதுஉலக அளவில் இலக்கியத்தின் ஒரு மிக முக்கியமான துறையான விமர்சன இயல் தமிழில் கவனம் பெறாமல்அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் மேலோட்டமான கண்ணோட்டத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.









சமீபத்தில் மனுஷ்ய புத்திரனோடுபேசிக்கொண்டிருக்கும்போது வண்ணதாசனின் கடிதங்கள் தொகுப்பைப் பற்றிய பேச்சு வந்ததுஅப்போது மனுஷ்ய புத்திரன் "வண்ணதாசனின் இதர படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் ஒப்பீடு செய்ய இயலாதவைஅவரது படைப்புகளில் வெளிப்படுகின்ற மனித உறவு சார்ந்த ஆழ்ந்த அகச்சிக்கல்கள் அவரது கடிதங்களில் வெளிப்படுவது கிடையாதுஅவை பளிங்கு போன்றவைஅப்பழுக்கற்ற நேரடியான மனோநிலையில் எழுதப்பட்டவை வண்ணதாசனின் கடிதங்கள்என்று கூறினார்மிகவும் யோசிக்க வைத்த விஷயம் இதுகாரணம்வண்ணதாசனின் படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் மீதான ஈர்ப்பு எனக்கும் கிடையாதுஒரு விமர்சனம் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இதை என் அனுபவபூர்வ உண்மையாகக் கொள்கிறேன்எந்தத் தேவைகளும்நிர்ப்பந்தங்களும் இல்லாத இவ்வாறான கூற்றுகளே படைப்பின் உண்மையான விமர்சனமாக இருக்க முடியும்.

அழகியலுடன் கூடிய ரசனை சார்ந்த விமர்சனங்கள் படைப்பை பிறரும் வாசிக்க உந்துதலைத் தருகின்றனபடைப்பின் மீதான கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று வெளியிடும் மனோபாவம் இன்று யாரிடம் உள்ளதுபடைப்பின் தன்மையைத் திறனாய்வு செய்வதை விடுத்து படைப்பினை ஆக்கியவரையும்அவரது சார்புக் கோட்பாடு பற்றியும் அறிந்துகொண்டு ஒரு முன்முடிவோடு வைக்கப்படுபவையே இன்று விமர்சனங்களாகவும்இதைச் செம்மையாகச் செய்கிறவர்கள் விமர்சகர்களாகவும் அறியப் படுகிறார்கள்.

விமர்சனத்தில் கவனம் செலுத்திய வ.வே.சுஐயர் அழகியல் சார்ந்த ரசனையின் அடிப்படையில் தனது விமர்சனங்களை முன்வைத்தார்அவரை அடுத்து க.நா.சுப்ரமண்யம் படைப்புகள் மீதான தனது விமர்சனங்களை படைப்பாளிகளைப் பட்டியலிட்டும்அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அதை அடித்தும்திருத்தியும் விமர்சகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.நா.சு.வின் விமர்சனப்போக்கு படைப்பாளியின் மீதான கருத்துக்களைப் படைப்பின் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியாகக் கொள்வதற்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது எனலாம்அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாநா.வானமாமலைதருமு சிவராமு,தொ.மு.சி.ரகுநாதன்கைலாசபதி மற்றும் வெங்கட்சாமிநாதன் விமர்சகர்களாக அறியப்பட்டுள்ளனர்.

எழுத்து‘ இதழில் 1960களில் தொடர்ந்து வெளியான வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் விமர்சனம் சார்ந்த தீவிர நம்பிக்கைகளை அளித்ததுஆனாலும், கா.நா.சு.வைப் போலவே குறுகிய பார்வையும், காழ்ப்புணர்ச்சியும், பண்டிதத்தன்மையுடனான அணுகுமுறையும் கொண்ட வெங்கட்சாமிநாதனின் விமர்சனங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்ப்பித்தது..நா.சு.வின் வழியிலேயே வெங்கட்சாமிநாதன் செய்த ‘பாலையும் வாழையும்‘ மற்றும் ‘எதிர்ப்புக்குரல்‘ போன்றவைக்குப் பிறகு வெங்கட்சாமிநாதனுக்கு ஒரு தனி அணி உருவாகியது ஒன்றுதான் இதனால் கிடைத்த பலன்.  அதே காலகட்டத்தில் படைப்புகளைப் புதிய கோணத்தில் திறனாய்வு செய்யத் துவங்கிய தருமு சிவராமுவும் காலப்போக்கில்.நா.சு., வெங்கட்சாமிநாதனைப் போலவே மாறிப்போனது பரிதாபமானது.

தொடர்ச்சியாக மார்க்சியப் பார்வையில் படைப்புகளை அணுகிய தமிழவன்,ஞானிதனக்கென ஒரு தனித்த பார்வையில்தனது அனுபவத்துக்கு உட்பட்ட ரசனையோடு படைப்புகளை விமர்சனம் செய்த சுந்தரராமசாமிபாலா போன்றோரின் இலக்கிய மதிப்பீடுகள் கருதத் தக்கதாகவும்விமர்சனத்திற்கு உட்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்ஆரம்ப காலம் முதற்கொண்டே இலக்கிய விமர்சனம் என்பது சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளதுஆனால் தற்போதைய நவீன இலக்கியச் சூழலில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல புத்தகம் திறனாய்வு அல்லது விமர்சனம் செய்ய அவர் ஆழ்ந்த வாசிப்பனுபவம் உள்ளவராகவோ,தேர்ந்த ரசனை கொண்டவராகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஒன்றுவிமர்சகர் படைப்பாளிக்கு நண்பராக இருக்க வேண்டும் அல்லது விமர்சிக்கப் போகிறவரின் அணியில் படைப்பாளி இணைந்திருக்க வேண்டும்.ஒரு படைப்பை விமர்சனம் செய்கிற விமர்சகர் கைக்கொள்கிற அளவுகோல்தான் என்னஅப்படியொன்று இருக்கின்றதா என்றால் கிடையாது என்பதுதான் பதில்.






 நம் விமர்சகர்கள் பலருக்கும் வேண்டியவர்களைப் பாராட்டுவதும்,வேண்டாதவர்களைப் புறந்தள்ளி எழுதுவதும்தான் விமர்சனம் என்ற எண்ணம் இருக்கிறது.  ஒரு படைப்பினைக் குறித்த அறிவார்ந்த விமர்சனத்தை விடுத்து படைப்பின் மீது சுயநலம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திமாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதே தலையாய பணியாகக் கொண்டு செயல்படுகின்றனர்அசல் ஆக்கங்களின் நிலையே இப்படியென்றால் மொழியாக்கப் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

விமர்சனம் என்பது படைப்பின் மீதான முழுமையான மதிப்பீடாகக் கொண்டு வளர்க்கப்பட வேண்டும்.  படைப்பு வாசிப்பவனுக்கு ஏற்படுத்தும் அனுபவத்தை வெளிக்கொணர்வதாக அதன் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டு விமர்சனப் போக்கு உருவாக விமர்சகர்களின் அனுபவமும்தகுதியும் முக்கியமானது.அவ்வகையில் அளிக்கப்படுகின்ற விமர்சனமே உண்மையானதாக இருக்கும்.

படைப்பின் ஆக்கத்தில் உள்ள நிறை குறைகளைச் சுட்டி அதைப் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே முறையான ஒரு விமர்சனத்தின் பணியாக இருக்க வேண்டும்எந்த அளவிற்கு இலக்கியம் நவீன உருக்கொண்டதோ அதே அளவிற்கு விமர்சன வளர்ச்சியில் தேங்கித்தான் இருக்கின்றது.விமர்சனத்தின் தயையில்தான் படைப்பும்அதை ஆக்கியவனும் கருதத்தக்க அங்கீகாரத்துக்கான காத்திருத்தலை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

- பொன்.வாசுதேவன்

உயிரோசை இணைய இதழில் (4.10.2010) வெளியானது.

10 comments:

  1. இப்போதுதான் சுடச்சுட உயிரோசையில் படித்தேன்.
    நியாயமான ஆதங்கம்.

    ReplyDelete
  2. எங்க ஊர்காரரான வே.மு.பொதியவெற்பன் நல்லதொரு விமர்சகர் வாசு. நல்லதொரு கட்டுரை.

    ReplyDelete
  3. இந்த கட்டுரை வாசிக்கும் போது உங்களின் நேரடியாக பேசுவது போல் இருந்தது.
    தமிழ் சூழலில் விமர்சன தளத்தில் ஒரு பெரும் இடைவெளி பற்றிய ஆதங்கம் எனக்கும் உண்டு.
    ஒரு தட்டையான இடத்தையே அது தந்தது.
    விமர்சனம் என்பது படைப்புகளை எல்லாவற்றிலும் எல்லாவிதத்திலும் ஆராய்ந்து மேம்படுத்த வேண்டும்.
    நீங்கள் சொல்வது போல் படைப்புகளை விட்டு விட்டு படைப்பாளிகளை சகட்டு மேனிக்கு கிழித்தது. இதனால் வெற்றிடம் தவிர்க்க முடியாதகி விட்டது போலும். எல்லோருக்கும் தெரிந்த ஒன்று 'நல்ல விமர்சனம் நல்ல படைப்புகளை கொண்டுவரும்' என்பதே.
    இந்த விமர்சனம் உங்களின் மீதான எனது எதிர்பார்ப்பை அதிகபடுத்தி உள்ளது.

    ReplyDelete
  4. திரு.வாசுதேவன் அவர்களுக்கு,தமிழில் தரமான விமர்சனம் வரவேண்டும் என்ற வுங்கள் எண்ணம் நியாயமானதுதான்.
    வண்ணதாசன் கடிதங்கள் அவரது கதைகள் அல்ல.கடிதங்கள்.அவரது எழுத்துக்கள் மனம் சார்ந்த தளங்களில் இயங்குபவை.அவரது கடிதங்களிலும் அவரை தேடுபவர்களுக்கான செய்திகள் வுண்டு.இதுதான் இலக்கியம் ,இது இலக்கியமல்ல என்று எதை அளவு கோலாக்க முடியும் ?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இதைச் சொல்வதற்கே ஒரு தில் தேவைப்படுகிறது இப்போது. நல்ல வெளிப்பாடு

    ReplyDelete
  7. வண்ணதாசன் கடிதங்களும்,எழுத்துக்களும் ஈர்ப்புடையதுதான்.தமிழ் இலக்கிய உலகில் அவர்
    ஒரு ஆகர்சசக்தி.

    ReplyDelete
  8. தமிழில் விமர்சனம் எ‌ன்று தனியாக ஒரு பிரிவு இல்லவே இ‌ல்லை.
    படைப்பாளிகளே விமர்சகர்களாக மாறும்போது அவர்களது நடுநிலைமை சிதைந்து தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகள் பிரதிபலிக்கும் சூழல் இருக்கிறது. கட்டுரை அருமை. இன்னும் நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம் வாசு.

    ReplyDelete
  9. //நம் விமர்சகர்கள் பலருக்கும் வேண்டியவர்களைப் பாராட்டுவதும்,வேண்டாதவர்களைப் புறந்தள்ளி எழுதுவதும்தான் விமர்சனம் என்ற எண்ணம் இருக்கிறது. ஒரு படைப்பினைக் குறித்த அறிவார்ந்த விமர்சனத்தை விடுத்து படைப்பின் மீது சுயநலம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்தி, மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதே தலையாய பணியாகக் கொண்டு செயல்படுகின்றனர். //

    புரிந்து கொள்ள முடிகிறது. இனிமேல் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. :)

    ReplyDelete
  10. SOLVATHELLAAM UNMAI... IKKATTURAI VIMARSANATHTHIRKKU APPAARPATTATHU..!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname