திரைப்பட வசனகர்த்தா, வசனகர்த்தா, கதாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி மற்றும் கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட கலைஞர் கருணாநிதியை கலைஞன் என்ற கோணத்தில் அணுகி, அவருடைய திரையுலக வரலாற்றை ஆரம்பம் முதல் இன்றைய காலம் வரை ‘கலைஞர் என்னும் கலைஞன்‘ என்ற இந்த சிறு நூலில் பதிவு செய்திருக்கிறார் டி.வி.ராதாகிருஷ்ணன்.
‘தமிழா... தமிழா‘ என்ற தனது வலைப்பதிவுகளின் வாயிலாக பரவலாக கவனிக்கப்பட்டவரும், சுவாரசியமான எழுத்தாளருமான டி.வி.ராதாகிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாக ‘சௌம்யா தியேட்டர்ஸ்‘ என்ற நாடகக் குழுவையும் நடத்தி வருகிறார். இதுவரை 15 நாடகங்களை எழுதி, இயக்கியதுடன் நடித்தும் இருக்கின்றார். பல்வேறு பத்திரிகைகளில் இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளது.
டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘பாரத ரத்னா‘ என்ற நாடகம் 2005க்கான ‘இலக்கியச் சிந்தனை‘ அமைப்பின் பரிசினைப் பெற்றுள்ளது. இந்நாடகம் புத்தக வடிவிலும் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விரைவில் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘சிகப்பு ரோஜா‘ என்ற சிறுகதைத் தொகுப்பும், இரண்டு நாடகங்களின் புத்தகமும் வெளியாக உள்ளது.
‘கலைஞர் என்னும் கலைஞன்‘ - டி.வி.ராதாகிருஷ்ணன்
வெளியீடு : நயினார் பதிப்பகம்
விலை : ரூ.20/- மட்டும்
டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய
‘கலைஞர் என்னும் கலைஞன்‘
புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
அனைவரும் வருக !
- டி.வி.ராதாகிருஷ்ணன் & பொன்.வாசுதேவன்
எங்க சித்தப்பா டிவிஆர் கலக்குறார். நல்வாழ்த்துகள் !
ReplyDeleteடி.வி.ஆர். சாருக்கு வாழ்த்துகள்.:)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா, அவசியம் கலந்து கொள்கிறேன் ..
ReplyDeleteநல்வாழ்த்துகள் ஐயா. நயினார் பதிப்பகம் மேலும் பல புத்தகங்களை வெளியிடவும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅய்யா டி.வி.ஆர் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
ReplyDeleteCongrats!!!
ReplyDeleteஅன்பின் டிவிஆர்
ReplyDeleteபுத்தக வெளியீட்டு விழா வெற்றி பெற நல்வாழ்த்துகள்
பகிர்வினிற்கு நன்றி வாசு
நட்புடன் சீனா
Vazhthukal Vasu
ReplyDelete