சூரியக்கதிர்களை
இழுத்தோடும் ரயிலொன்றின்
ஜன்னலோர இருக்கையில்
என்னோடு பயணப்படுகிறது
உன் நினைவுகள்
போதையுண்ட எதிர்காற்று
அலைக்கழித்த
என் கண்ணிமைகளை
மூடித்திறக்கையில்
அனிச்சையாய்
பூரித்துப் பூக்கிறாய் நீ
விழியோர நீர்த்துளிகளாய்
பெருந்தாகத்துடன்
குடிப்பதற்காய்
உயர்த்திக் கவிழ்த்த
பிளாஸ்டிக் குவளை நீரின்
பதற்றத்தோடு
உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
உன் பிரியத்தின் அழுத்தங்கள்
இருட்டத் தொடங்கியதன்
அவதானிப்பில்
வேகமாய்க் கூடடையும்
பறவையின் அவசரத்துடன்
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கும்
காதல்
இருந்தது
இருக்கிறது
இருக்கும்
இவ்வாறெல்லாம்.
- பொன்.வாசுதேவன்
மறக்க முடியாத காதல், துக்கம் நெஞ்சை அடைக்கும் படி எண்ண அலைகள் ஓடி கொண்டிருக்கும்... நல்ல ஆளுமையுள்ள கவிதை வாசுதேவன். வாழ்த்துக்கள்....
ReplyDeleteகவிதை அருமை சார்.
ReplyDelete//பிளாஸ்டிக் குவளை நீரின்
ReplyDeleteபதற்றத்தோடு
உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
உன் பிரியத்தின் அழுத்தங்கள் //
காதலின் அழுத்தம் தெரிக்கும் கவிதை..
அருமை
ReplyDeleteமிகவும் அருமை, யோசித்து பார்க்க முடியா ஒப்பீடுகள்...class!!
ReplyDeleteI love you Vasu..
ReplyDelete//பூரித்துப் பூக்கிறாய் நீ
ReplyDeleteவிழியோர நீர்த்துளிகளாய்//
அருமை.
நல்லாருக்கு!
ReplyDeletebutterfly Surya said...
ReplyDeleteI love you Vasu..
me too vaasu!
இது போதுமே ...வேறென்ன வேண்டும்?
ReplyDeleteவாசு அண்ணா உங்கள் கவிதைகளைப் படிச்சு ரசிக்க மட்டுமே முடிகிறது.விமர்சனம் செய்ய என்ன இருக்கு.அவ்ளோ ஆழமாயிருக்கும் எப்பவும்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாசு கவிதை அருமை - என்ன சொல்வது
ReplyDeleteகவிதை அழகு
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
Supper... vasu, I love this one :)
ReplyDeleteஅருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .
ReplyDeleteகவிதை மிக அருமையாக இருக்கிறது...
ReplyDeleteகவிதை ரொம்ப நல்லாருக்கு வாசு சார் .
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDelete//நூற்கண்டின் முனையெனப் பற்றி
சூரியக்கதிர்களை
இழுத்தோடும் ரயிலொன்றின்
ஜன்னலோர இருக்கையில்//
ரசித்தேன்.
கவிதை நன்று வாழ்த்துகள்
ReplyDelete//நூற்கண்டின் முனையெனப் பற்றி
ReplyDeleteசூரியக்கதிர்களை
இழுத்தோடும் ரயிலொன்றின்
ஜன்னலோர இருக்கையில் //
நல்லப் புதிய உவமை...
'அவதானிப்பில்' என்றால் ?
ReplyDeleteஇந்தக் கவிதை காதலில் இருந்தவன் , இருப்பவன் , இருக்கப்போபவன்.. அனைவருக்கும் பொருந்துகிறது...
ReplyDeleteஅருமை.. புதிய முயற்சி!!
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.உங்கள் கவிதைக்கணைகள்.
ReplyDeleteremba pidichchirukku..........
ReplyDeleteபோதையுண்ட எதிர்காற்று
ReplyDeleteஅலைக்கழித்த
என் கண்ணிமைகளை
மூடித்திறக்கையில்
அனிச்சையாய்
பூரித்துப் பூக்கிறாய் நீ
விழியோர நீர்த்துளிகளாய் //
மிக அழகான கற்பனை....
பெருந்தாகத்துடன்
குடிப்பதற்காய்
உயர்த்திக் கவிழ்த்த
பிளாஸ்டிக் குவளை நீரின்
பதற்றத்தோடு
உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
உன் பிரியத்தின் அழுத்தங்கள் //
அருமையான வார்ப்பு....
மிக அழகு உங்கள் கவிதை...