Thursday, February 11, 2010

கேணி இலக்கிய சந்திப்பில் எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. ஞாநி அவர்கள் இல்லத்தில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிறு பிற்பகல் 3.30 மணிக்கு கேணி இலக்கிய சந்திப்பு நடைபெறுகிறது.

தமிழின் முக்கிய படைப்பாளுமைகளின் கருத்துப் பகிர்வும் தொடர்ச்சியாக அவர்களுடனான உரையாடலும் என நீளும் இந்நிகழ்வு சிறப்பான ஒன்று. கேணி இலக்கியச் சந்திப்பின் இம்மாத விருந்தினராக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் பங்கேற்கிறார். ஜெயமோகன் அவர்களின் உரையும் அதன் பிறகு வாசகர் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !

2 comments:

  1. அதே நாளில் அதே k.k.நகரில்,இங்கிட்டு ஞானி, அங்கிட்டு கேபிள், பரிசல் புத்தக வெளியீடு, என்ன ஓரே இலக்கிய கூட்டமா இருக்கு k.k.நகர் பகுதியில்?

    ReplyDelete
  2. வாசு
    கேணிக்கூட்டத்துக்கு பூங்கொத்துடன் வரலாமா?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname