Sunday, February 28, 2010

மானிடர் பக்கங்கள்

தண்டோரா என்கிற ‘மணிஜி‘ இயக்கிய குறும்படத்திற்கு விருது

பன்னாட்டு அரிமா சங்கங்களின் ஒரு அங்கமான திருச்சி அரிமா சங்கம் நடத்திய குறும்படப் போட்டி விழாவில் தண்டோரோ இயக்கிய ‘சியர்ஸ்‘ (CHEERS) என்ற குறும்படத்திற்கு விருதும், ரூ.5000/- ரொக்கப்பரிசும் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இப்படியான சரித்திரப்புகழ் பெற்ற சம்பவத்தில் பங்கேற்று மகிழ வருமாறு மணிஜி அழைத்ததால், நேரில் காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு திரையிட்ட படங்களிலேயே சுருக்கமாக, சொல்லவந்ததை தெளிவாக காட்சிப்படுத்திய ஒரே படம் மணிஜியுடையதுதான். இது வெற்றுப்புகழ்ச்சியல்ல. குறும்படம் என்ற இலக்கணத்திற்கு ஒப்ப இருந்ததே அப்படத்தின் சிறப்பு. மணிஜியின் குறும்படம் திரையிட்டு முடிந்ததும் ஏராளமானோர் மணிஜியுடன் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதே இதற்கு சாட்சி. கலைஞனுக்கு மிகுந்த சந்தோஷம் கொடுப்பதே அவனது செயல்களுக்கான அங்கீகாரம் என்பதுதானே.

இந்நிகழ்ச்சிக்கு சென்று வந்ததில், ஆங்கரை பைரவி, நெய்வேலி பாரதிக்குமார், தேனி முகமது சஃபி, கவிஞர் ரத்திகா, ‘தொனி‘ சிற்றிதழாசிரியர் புவனராஜன், நாவல் குமாரகேசன் என சில எழுத்தாளர்களையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் மணிஜியின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அங்கிருந்து பயணமானோம். ‘நெற்குஞ்சம்‘ எழுதிய எழுத்தாளர் தேன்மொழி மற்றும் ‘சௌந்தரசுகன்‘ சிற்றிதழ் ஆசிரியர் சுகன் அவர்களையும் சந்திப்பதாக திட்டம். ஆனால் தேன்மொழி அவர்கள் பணியின் காரணமாக வெளியூர் சென்றிருந்ததால் சந்திக்க இயலவில்லை. சுகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

வழியில் தஞ்சை கோயிலை ஒரு வெளிப்பார்வை பார்த்து விட்டு, மணிஜியின் பள்ளித்தோழர்கள் பகிர்ந்துகொண்ட குறுபாகற்காய், வாழைப்பூ, மிளகாய் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பெரம்பலூர் வழியாக வந்து சேர்ந்தோம். திருவையாறில் ஆண்டவர் இனிப்பகம் என்ற கடையில் கோதுமை அல்வா மற்றும் தயிர் சாதம் மிகப் பிரபலம் என்றார் மணிஜி. அங்கு சென்றால், அவர் சொன்னது போலவே கடையில் அவ்வளவு கூட்டம். சூடான அல்வாவை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். வெகுநாட்களுக்குப் பிறகு  பாடல்களை கேட்டு, பாடல் வரிகளைக் குறித்து பேசிக்கொண்டே நீண்ட தூரம் காரோட்டியதும் ஒரு மகிழ்வான அனுபவம்தான்.

முக்கிய தகவல்கள் :

  1. தமிழில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காததால், மணிஜி விரைவில் ஆங்கிலப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
  2. மணிஜி இயக்கும் ஆங்கிலப் படத்தில் நானும், பிரபல ஹாலிவுட் நடிகை Maria Josphine இருவரும் நடிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

hollywood

0

விதூஷ், அறிவன், பரிதிமால் மற்றும் அனானி நண்பர்களுக்கு...

உயிரோசையில் வெளியான எனது ‘பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி‘ என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக சில சர்ச்சையான கருத்துகள் எழுந்திருக்கிறது.

எனது கட்டுரையின் கருத்துகளோடு மாற்றுக்கருத்து எதுவும் இல்லாவிட்டாலும், பதிவர் விதூஷ் அளித்த பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக பதிவர்கள் அறிவன், பரிதிமால் மற்றுமொரு அனானி நண்பர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

பொதுவாக தமிழ் மொழியாய்வுகள் மூன்று அடிப்படையில் இருந்து வந்துள்ளன. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழினை ஆய்வு செய்யும் மொழியாய்வுகள் ஒரு வகை. இம்மாதிரியான மொழியாய்வுகளில் தமிழின் வேர்ச்சொல்லை தேடும்போது சமஸ்கிருதத்திலிருந்து உதாரணம் காட்டி எழுதுவார்கள். இது ஒரு வகையான ஒப்பு நோக்கல். தனக்கு நன்கு புலமையுள்ள ஒன்றோடு வேறொன்றை இணை நோக்கிப் பார்ப்பது இயற்கைதானே. அடுத்தபடியாக மேலை மொழிகளோடு இணைத்து தமிழ் மொழியை ஒப்பு நோக்குதல். தமிழின் வேர்ச்சொல் பாரசீக மொழியிலிருந்தோ, உருது மொழி அல்லது வேறொரு மொழியிலிருந்தோ மருவிய வார்த்தைகள் என்ற ஒப்பாய்வு. உதாரணத்திற்கு, அரிசி என்ற வார்த்தையை ‘ரைஸ்‘, என்பதிலிருந்து வந்ததாக சொல்வது. அல்லது ரைஸ் என்ற வார்த்தை ‘அரிசி‘யிலிருந்துதான் வந்தது என்று கூறுவது. மொழியாய்வின் மூன்றாவது பார்வை, தமிழியம், திராவிடம் சார்ந்த பார்வை. தமிழ்தான் அனைத்திற்கும் வேர்ச்சொல் என்ற பார்வை. இதுவே என்னுடைய கட்டுரை எழுதப்பட்ட நோக்கும். மொழியாய்வின் வழியே நாம் கூறும் கற்பிதங்களுக்கு, நிரூபணச் சாத்தியங்களை உண்டாக்குவது மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் ஒரு தொடக்கப்புள்ளிகள். அல்லது ஒரு புள்ளியின் நீட்சிகள் மட்டுமே. இவ்வாறான மொழியாய்வுகள் தொடரப்படுவது மொழியின் செழுமைக்கும், பூரணத்துவத்துக்கும் வழி வகுக்கும்.

ஞானக்கூத்தனின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

எனக்கும்

தமிழ்தான் மூச்சு

ஆனால் பிறர்மேல்

அதை விடமாட்டேன்.

 

எனவே, மொழிப்பற்று என்பது வேறு, மொழி வெறி என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும். மொழி என்பது ஒரு உணர்வாக இருக்க வேண்டும். எனது தாய், எனது மனைவி, எனது மகள் என்பது போல எனது மொழி என்கிற உணர்வும், புரிதலும் அவசியம்.

கட்டுரையை வாசித்து ஆரோக்கியமான விவாதங்களையெழுப்பிய நண்பர்களுக்கு நன்றி.

0

முட்டையிலிருந்து கோழியா... கோழியிலிருந்து முட்டையா ?

vaal

வால்பையன் (பொருத்தமான ஆள்தான்) எழுதியிருந்த ‘பரிணாமம் – முன்னுரை‘ என்ற பதிவை வாசித்தேன். ஆக்கப்பூர்வமான இடுகை.

// பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!//

உண்மைதான். வாழ்த்துகள் ‘வால்பையன்‘ என்கிற அருண்

0

- பொன்.வாசுதேவன்

34 comments:

  1. தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மணிஜிக்கு பாராட்டும் உங்களுக்கு நன்றியும்.:)

    ReplyDelete
  3. தண்டோராக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மணிஜிக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. மணிஜிக்கு பாராட்டும் உங்களை வைத்து படம் எடுக்க இருப்பதற்கு என்......... :)

    நல்ல பகிர்வு வாசு.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.மொழி பற்று வேறு .மொசி வெறி என்பது வேறு அருமையான விள்க்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அன்பு அங்கிள் மணிஜிக்கு வாழ்த்துகள், Cheers பார்க்கனமே... வாசு நல்ல பதிவு .. இது போன்றும் தொடர்ந்து எழுதவும்.

    வாலோட நல்ல போட்டோ கிடைக்கலயா? Maria Josphine அப்பாவா பக்கத்துல நிக்கறது?

    ReplyDelete
  8. மெய்யாலுமா? அந்த படத்தில ஒரு ஓப்பனிங் சாங் எழுத எனக்கு சான்ஸ் கிடைக்குமா...?

    ReplyDelete
  9. தண்டோராவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாவ்!

    வாழ்த்துக்கள் மணிஜி!

    சந்தோசமான பகிரல் வாசு.

    mariya josphine-னுடன் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என தோன்றுகிறது.

    1.அம்மணிக்கு தமிழ் தெரியாது.

    2.அம்மணியின் துப்பாக்கி வான் நோக்கி இருப்பது.

    இல்லையா வாசு?

    :-))

    ReplyDelete
  11. தண்டோராவிற்கு வாழ்த்துகள்!

    // எனது தாய், எனது மனைவி, எனது மகள் என்பது போல எனது மொழி என்கிற உணர்வும்//

    என் தாய், என் மனைவி, என் மகள்,
    எனது மொழி
    சரிதானே?

    ReplyDelete
  12. மணியான பதிவு,வாழ்த்துகள்,[முதல்லையே சொல்லியிருக்கலாம்லே,நாங்களும் வந்துருப்போம்ல.]

    ReplyDelete
  13. ஹாய் வாசு,உங்க பக்கத்துல நிக்கிற அந்த பொம்பள புள்ளைய ரொம்ப புடிச்சிருக்கு.

    ReplyDelete
  14. இயக்குனர் மணிஜிக்கு வாழ்த்துக்கள். வருங்கால ஆலிவுட் நாயகன் வாசுக்கும் ஆல் தி பெஸ்ட்...... :)

    ReplyDelete
  15. ஓகே ரைட்டு.. ஒழுங்கா ஒரு படம் வராது போலருக்கு:)

    ReplyDelete
  16. தண்டோரா மணிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  17. முதலில் மணிஜிக்கு வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன்.
    எல்லாம் பாசதலைவனுக்கு பாராட்டு விழா பார்த்த விளைவு.

    தஞ்சை , கும்பகோணம் இருமங்கும் நெல் வயல்களின் சுவாச காற்று இதமளிக்கும் விசயம்.

    ஹீரோ வாசுவுக்கு வாழ்த்துக்கள்.(ஆஸ்கார் வாங்குற மாதிரி கனவு வருது).

    வாழ்த்துக்கள் வால், 20 வருட இலக்கியவாதியிடமிருந்து (வாசு) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. //மணிஜி இயக்கும் ஆங்கிலப் படத்தில் நானும், பிரபல ஹாலிவுட் நடிகை Maria Josphine இருவரும் நடிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//

    வில்லன் ரோல் இருக்கா ?

    ReplyDelete
  19. தண்டோராவுக்கு என் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. வாசு,

    {எனவே, மொழிப்பற்று என்பது வேறு, மொழி வெறி என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும். }

    ஒரு தகவலுக்கு..எனது விவாதம் மொழி வெறியின் நூற்றிலொரு கூறாகக் கூட இருக்க வாய்ப்பில்லை..அனானி சிறிது விளித்தல் வாக்கியத்தில் சிறிது சறுக்கியிருக்கருப்பதாகக் கருதுகிறேன்...

    மற்றபடி மிக அருமையான பதில்களில் அவருடைய கடைசிப் பதிலும் ஒன்று...

    ReplyDelete
  21. ஏதோ படாதபாடுபட்டு ஹாலிவுட் புரொடியூஸரை புடிச்சிருக்காரு.. அதுவும் உங்களுக்குப் புடிக்கலையா..?

    ஒரு தமிழன் நல்லாயிருந்தா எத்தனை பேருக்குங்க வயிறு எரியுது..?

    சரி.. சரி.. படத்துல வில்லன் ரோல் ஏதாச்சும் இருந்தா எனக்குக் கொடுக்கச் சொல்லுங்க..

    படத்தையும், அவரையும் ஒரு வழி பண்ணிருவோம்..!

    ReplyDelete
  22. wow maniji..!! congrats..!! & all da best..!!

    thanks for sharing vasuji..

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் மணிஜி அவர்களே....

    ReplyDelete
  24. //

    மணிஜி இயக்கும் ஆங்கிலப் படத்தில் நானும், பிரபல ஹாலிவுட் நடிகை Maria Josphine இருவரும் நடிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

    //

    என்னங்க வாசு ... இப்படி எல்லாம் பயம் காட்டறீங்க ... எனக்கெல்லாம் படம் எடுக்கும் ஆசையே போய்விடும் போல ... :) ... anyways வாழ்த்துகள்

    ReplyDelete
  25. மணிஜிக்கு வாழ்த்துகள்
    :)

    ReplyDelete
  26. தண்டோரா மணிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆங்கில படத்தில் நடிக்கவிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    வால்பையன் அருண் சாரின் பதிவு வாசித்தேன். நன்றாக அலசி இருக்கிறார்.

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் தண்டோரா!!

    ReplyDelete
  28. தண்டோரா மணிஜி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் போன பதிவிர்க்கான என் பின்னூட்டம் என் கருத்தையும் நான் படித்து அறிந்ததை, உங்கள் அருமையான பதிவை படித்ததும் மனதில் தோன்றியதை, மட்டும் பகிர வேண்டியே குறிப்பிடப்பட்டது, இதில் மொழி வெறி சாயம் பூசியது தேவையற்றது.
    எனக்கு தெரிந்தது கை மண்ணுக்கும் கம்மியானது என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது. இல்லையா.. :)) மேலும் போன பதிவிலேயே பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி, திபெத்திய மொழி பற்றியும் முடிந்தால் எழுதுங்களேன். அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே..

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் இருவருக்கும்...நடிகர் பொன்.வாசுதேவன்...கிளைகள் இன்னும் விரியட்டும்

    ReplyDelete
  30. வாழ்துக்கள் தண்டோரா அண்ணே :-))

    ReplyDelete
  31. தண்டோராவுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. நன்றி தல அறிமுகத்திற்கு!

    ReplyDelete
  33. மணிஜிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname