Thursday, February 18, 2010

பிள்ளை விளையாட்டு


எண்களை இணைக்க முயல்வதில்
ஆரம்பிக்கிறது
காயத்ரியின் விளையாட்டு

ஒன்றை இரண்டோடு
இணைக்கும் போது
அவளுக்கு எதுவும் புலப்படவில்லை

மூன்றும் நான்கும்
சேர்கையில் பின்னங்கால்கள்
ஓரளவு தெரிந்தது

நத்தையின் நிதானத்தோடு
எண்களைத் தேடி
ஊர்ந்தது அவளது எழுதுகோல்

நிகழ்ந்துவிடக்கூடிய சாத்தியங்களின்
அருகாமையில் குழப்பமுற்று
சற்றே தணிகிறாள்

கடைசியில் முழுமையாகத்தெரிந்த
படுத்திருந்தபுலியைப் பார்த்து
தானே வரைந்த
திருப்தியோடு மூடுகிறாள்
படக்கதை புத்தகத்தை.

- பொன்.வாசுதேவன்

23 comments:

  1. அருமை.
    சிறு வயதில்தான் எத்தனை எத்தனை விளையாடுக்கள்.

    ReplyDelete
  2. பத்திரிகையில் வரும் படப் புதிரைப் போட ஒரு போட்டியே இருந்த காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்.

    //நிகழ்ந்துவிடக்கூடிய சாத்தியங்களின்
    அருகாமையில் குழப்பமுற்று
    சற்றே தணிகிறாள்//

    அருமை.

    //தானே வரைந்த
    திருப்தியோடு மூடுகிறாள்//

    உண்மை:)! ரசித்தேன்.

    ReplyDelete
  3. கவிதைக்கான கரு எந்த இடத்திலும் கிடைத்து விடுகிறது. கவிதை வாசித்து முடித்த போது, மனது உண்மையிலேயே சந்தோஷப்பட்டது.

    ReplyDelete
  4. ரசித்தேன்

    ReplyDelete
  5. கு்ழந்தை மடிந்தமர்ந்து கன்னத்தில் கைவைத்தபடி வரையும் காட்சி தோன்றுகிறது..

    அருமையா இருக்கு இந்த பிள்ளை விளையாட்டு..

    ReplyDelete
  6. அருமையா ரசிக்கும்படியா இருக்கு சார்.

    ReplyDelete
  7. //தானே வரைந்த
    திருப்தியோடு மூடுகிறாள்//

    :-}}}

    ReplyDelete
  8. கவிதை விளையாட்டும், படமும் ரசிக்கும்படி இருக்கிறது.

    ReplyDelete
  9. உண்மைதான்.எதையும் ரசித்தால் அங்கு ஒரு கவிதை பிறக்கும்.அழகு.

    ReplyDelete
  10. வாவ். கவிதையும் அதற்குப் படமும் மிக அழகு.

    ReplyDelete
  11. கவிதையும் படமும் மிக அருமை வாசு!

    உயிரோசைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான கவிதை...

    கண்முன்னால் உட்கார்ந்து காயத்ரி வரைவதுபோல் தோன்றுகிறது.

    //நிகழ்ந்துவிடக்கூடிய சாத்தியங்களின்அருகாமையில் குழப்பமுற்றுசற்றே தணிகிறாள்//

    குழந்தைகளின் இயல்பைப் படம்பிடித்துக்காட்டும் வரிகள்!

    ReplyDelete
  13. வாழ்க்கையின் தத்துவமும் இதில் இருப்பதாக நான் உணர்கிறேன் :-)

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  15. கவிதை அருமை வாசு.

    பிள்ளையின் விளையாட்டு மட்டுமல்ல உங்கள் சொல் விளையாட்டும் நன்றாக இருக்கின்றது.

    எந்த விசயத்தையும் ஆரம்பிக்கும் போது ஒன்றும் புலப்படாமலும், பின் தீரா முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தை அழகாக சொல்லி இருக்கின்றது கவிதை

    ReplyDelete
  16. பால்யப் பருவ நினைவுத்திரும்பலாக...

    ReplyDelete
  17. அருமை நண்பரே. அடர்த்தியான படிமங்கள் வெளிக்கிளம்பும், எளிய வார்த்தைகளாலான கவிதை. பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  18. இசை எங்கும் எதிலும் இருக்கும். கவிதையும் அப்படியே... சிறந்த வாசிப்பனுபவத்தை தந்தது தங்கள் கவிதை.
    -தோழன் மபா

    ReplyDelete
  19. padamum.........varikalum miga azhagu!

    ReplyDelete
  20. காயத்ரியைப் போலவே நானும் கவிதையின் சித்திரத்தைப் பி(ப)டிக்க இயலாமல் முதல் வரியிலிருந்து ஊர்ந்து கொண்டிருந்தேன். கடைசியில் காயத்ரி புலியைக் கண்டபோது நானும் ஒரு திருப்தியான கவிதை கண்ட உணர்வுடன் அடுத்த பக்கம் சொடுக்கினேன். நல்ல இயல்பான கவிதை. நன்றி.

    ReplyDelete
  21. நல்லா இருந்தது இவ்வள்வு எளிமையாக கவிதை எழுத எனக்கும் ஆசை ம்ஹும்!!

    ஜேகே

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname