Thursday, April 1, 2010

பாவத்தின் சம்பளம் மரணம்


ஆகச்சிறந்த துயரங்களால்
புனையப்பட்டிருக்கிறான் அவன்

பூனைச்சீற்ற வேகமும்
மண்புழுவினையொத்த
சுயமற்ற நெளிதலும்
புரளச்செய்கிறது அவன் உலகை

அவன் அனாதை
அயோக்கியனும்கூட
கள்ளத்தனத்தை விரும்பிப் பயின்றவன்
காதல் துரோகி
இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்

அவனுக்கான சிலுவைகள்
ஏராளமாக இருக்கிறது
எதைத் தேர்வது
எதில் அறைந்து கொள்வது
என்ற குழப்பத்தில் இருக்கிறான்

அவன் கைகளை
மரப்பலகையின் மேல் பரத்தி
உள்ளங்கைகளுக்குள் ஆணியை
இறக்கும்போது வழிவது
அவன் பாவங்கள்தான்

அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்
எனவே
அவனை யாரும்
துன்புறுத்த வேண்டாம்
தண்டிக்கவும் வேண்டாம்

அவனாகவே
அவன் உயிரை
பறித்துக் கொள்ளட்டும்
தயைகூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்

அவன் மீண்டும் உயிர்த்தெழவும் கூடும்
அப்போது வந்து கொண்டாடாதீர்கள்
தேவகுமாரன் அவன் என்று.

- பொன்.வாசுதேவன்

12 comments:

  1. அவன் கைகளை
    மரப்பலகையின் மேல் பரத்தி
    உள்ளங்கைகளுக்குள் ஆணியை
    இறக்கும்போது வழிவது
    அவன் பாவங்கள்தான்//

    மிக அருமை வாசு..

    ReplyDelete
  2. ஈஸ்டர் special ஆ வாசு சார் , உண்மையைச் சொல்லணும்னா உங்க கவிதைகள் நாலைந்து முறை படித்தால் தான் கொஞ்சம் புரிகிறது.
    கற்பனையை வளர்த்து விடுகிறது

    ReplyDelete
  3. //அவனுக்கான சிலுவைகள்
    ஏராளமாக இருக்கிறது
    எதைத் தேர்வது
    எதில் அறைந்து கொள்வது
    என்ற குழப்பத்தில் இருக்கிறான்
    //
    ஆமென்!

    ReplyDelete
  4. சோக‌ கீத‌ம் வேண்டாம் சில‌ ச‌ந்தோச‌ங்க‌ளை கொண்டாடுங்க‌ள்

    ReplyDelete
  5. //அவன் மீண்டும் உயிர்த்தெழவும் கூடும்
    அப்போது வந்து கொண்டாடாதீர்கள்
    தேவகுமாரன் அவன் என்று.//

    ஆனால் அது நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. தேவகுமாரர்கள்( மதம் கடந்து, சமூகம் கடந்து, அரசியல் கட்சிகள் கடந்து) உயிர்தெழுந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பல விசயங்களூடன் பொருத்திப்பார்க்க முடிகிறது கவிதையின் மொழி வழியாக. நல்ல கவிதை. வாழ்த்துக்கள் வாசு.


    உங்களின் வலை பக்கத்தின் புதிய வடிவமைப்பு எளிதில் LOad ஆகிறது. பழைய வலைப்பக்கம் laoad ஆவதில் சிரமம் இருந்தது.

    ReplyDelete
  6. இப்பொழுதுதான் கவனிக்கிறேன. பின்னூட்டம் என்பதை விட உங்களது " பின்மொழிகள் " அழகான வார்த்தையாக படுகிறது. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  7. //அவனைவிட பாவங்களை
    நீங்களும் செய்திருக்கிறீர்கள்
    நானும்தான்
    எனவே
    அவனை யாரும்
    துன்புறுத்த வேண்டாம்
    தண்டிக்கவும் வேண்டாம்//

    பொன் அண்ணா,

    நியாயமான தீர்ப்பு.

    ReplyDelete
  8. //அவன் மீண்டும் உயிர்த்தெழவும் கூடும்
    அப்போது வந்து கொண்டாடாதீர்கள்
    தேவகுமாரன் அவன் என்று.//

    NAMMA MAKKALA THANE SOLLUREENGA(ENNAIYUM SERTHUTHAN)

    ReplyDelete
  9. வாசு இ‌து யாரு? நித்யானந்தரா :D

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname