இன்றைக்கு எப்படியாவது
கடவுளைக் கொன்றுவிட
திட்டமிட்டிருக்கிறேன்
இனியும் பொறுமையில்லை
முழுமையாக உதிர்ந்து விட்டன
சகிப்புத்தன்மையின் செதில்கள்
வந்துவிட்டார் கடவுள்
எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது
பின்புறமிருந்து முகத்தில்
துணியைப் போர்த்தி
வசமான பிடியுடன் இறுக்குகிறேன்
திமிறிக் களைத்து தோற்று
உடல் தளர்ந்து பிரிகிறது
கடவுளின் உயிர்
குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்
வழியும் இரத்தத்தை சுவைத்தபடி
தொலைவில் வந்து பார்க்கிறேன்
தகன மேடையில் யாரோ
கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்
எனது உடலை.
- பொன்.வாசுதேவன்
நல்ல கவிதை
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
nallaayirukku..............
ReplyDeletethalaipputhaan puriyala.
romba nalla irukku satreyana athirvudan
ReplyDeleteகடவுளை கொன்று உங்களை கிடத்தி, நீங்கள் உங்களை கடவுள் என்கின்றீர்களா?
ReplyDeleteஉங்களிடம் உள்ள நல்ல குணத்தை கடவுள் னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். சரியா? அது தானே நம் இஷ்டப்படி நடக்க விடாமல் தடுக்கிறது
ReplyDeletewow super vasu
ReplyDeleteஅழுத்தமான பதிவு..
ReplyDeleteஅருமை!
ReplyDeletekavithai arumai anna,
ReplyDeletemelum nalam ariya aaval.
anbudan
ursularagv
நல்ல கவிதைங்க. கடவுள்களை எத்தனை முறை கொன்றாலும் சாவதில்லை. ஏனெனில் யாரும் கடவுளைக் காணவும் முடிவதில்லை.
ReplyDeleteஆனாலும் தற்கொலை ஒரு கோழைத்தனமான செயல்தான்.
அன்புடன்
ஆதவா
This comment has been removed by the author.
ReplyDelete