எந்த ஒரு படைப்பையும் அதை அனுபவித்து முடிகிற அந்த தருணத்தில் கிடைக்கிற நிறைவான உணர்வுக்கு ஈடான ஒன்று வேறெதிலும் இல்லை எனலாம்.
ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து தீர்த்து விட முடியாத பலவற்றை நாம் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் கண்டடைகிறோம். இவ்வகையான அனுபவங்கள் நமக்குள்ளாக கிளர்த்தும் உணர்வெழுச்சியை முழுமையாக வரிகளில் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. சிலவற்றை பார்த்து, அனுபவித்து மட்டுமே உணர இயலும். அப்படியான படங்களில் ஒன்றுதான் ‘ஒரே கடல்‘
மாற்றத்தை அறிய முடியாமல், அதே நேரம் நம்முள் மாற்றம் நிகழ்ந்து விடுவதை வாழ்வின் பல தருணங்களில் உணர்கிறோம். ஒரு பூ மலர்வதற்கு ஒப்பானது நம் வாழ்வின் மாற்றங்கள். புதிதாக சிலரை சந்திக்கும் பொழுதுகளிலும், அவர்களோடு ஈர்ப்பும் பிரியமுமாக நம் போக்கு மாறுவதும் இது போலத்தான்.
நினைவுகளில் உலாவும் சம்பவங்களின் ஊடாக சந்தோஷம், துக்கம் என நமக்குள் நிகழ்த்தும் உணர்வுச் சிதறல்கள் நம் மனப்போக்கையே மாற்றி விடுகிறது. சொற்ப சந்தோஷங்கள் மட்டுமே அனுபவிக்கக் கிடைக்கிற நம் வாழ்வில், அதையும் கூட கொண்டாடத் தெரியாமல், விட்டுக் கொடுப்பதும், சகிப்புத்தன்மையுமற்று, அவசரத்தில் நம் செய்கைகள் நம்மையும், நம் பிரியங்களையும் வறட்சியான வாழுலகிற்குள் தள்ளி விடுகிறது.
பிரியம், அன்பு, பாசம், காதல், சந்தோஷம், பிரிவு இப்படியான உணர்வுகளுக்குள் ஆட்படாத மனித வாழ்க்கையே கிடையாது. மனிதனுக்கு மட்டுமின்றி விலங்குகளிடமும் இவ்வுணர்வுகள் இருப்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையே நெகிழ்ச்சியான சம்பவங்களால் புனையப் பட்டது. உணர்வுவயப்படுதலே உண்மையான வாழ்க்கை.
‘ஒரே கடல்‘ படம் ஏற்படுத்துகிற உணர்வலைகள் நம்மை பலவாகவும் யோசிக்க வைக்கிறது. செயற்கைத்தனம் துளியுமற்ற இயல்பான இதுபோன்ற படங்களின் மீதான காதலை அதிகரிக்கிறது.
ஒரே கடல் (2007)
உறவுகள் மீதான பிடிப்பற்று தனக்கென நியதிகள் ஏற்படுத்திக் கொண்டு அறிவுஜீவியாக தனது வாழ்வை வரித்துக் கொண்டிருக்கும் பொருளியல் ஆய்வாளர் டாக்டர் நாதன் (மம்முட்டி).
தீப்தி (மீரா ஜாஸ்மின்) நடுத்தர வர்க்க குடும்பப்பெண். அவள் கணவன் ஜெயன் (நரென்) இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
நாதனின் தோழி பெலா (ரம்யா கிருஷ்ணன்) வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்களை நேரடியாக சந்தித்திருப்பவள்.
கருத்து ரீதியாக எதிரெதிர் துருவங்களான நாதன், தீப்தி என்ற இருவருக்குமிடையே ஏற்படும் உறவும், அதையொட்டி இருவருக்குள்ளும் எழும் உளப் போராட்டங்களுமே ‘ஒரே கடல்‘ என்கிற இப்படம். மம்முட்டி, மீரா ஜாஸ்மின், நரென், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவரின் இயல்பான நடிப்பும் சிறப்பாக வந்துள்ளது.
2007 வெளியான இந்த மலையாள மொழி திரைப்படம் வங்காளத்தை சேர்ந்த எழுத்தாளர் சுனில் உபாத்யாய எழுதிய ‘ஹிராக் தீப்தி‘ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கேரள எழுத்தாளர் எம்.பி.குமரன் அவர்களால் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட இந்நாவல் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு நாவலுக்கான பரிசு பெற்றுள்ளது.
ஷ்யாம் பிரசாத் இயக்கிய இப்படத்திற்கு இசை ஓசெப்பச்சன். பாடல்களை பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்வேதா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை குறிப்பிடப்பட வேண்டியது.
இப்படம் யு டியூபில் முழுவதும் காணக்கிடைக்கிறது.
http://www.youtube.com/watch?v=2nXn4HCWuI4&feature=player_embedded
தரவிறக்கம் செய்து பார்க்க :
http://rapidshare.com/files/178376695/Ore-Kadal.part1.rar
http://rapidshare.com/files/178391848/Ore-Kadal.part2.rar
http://rapidshare.com/files/178410256/Ore-Kadal.part3.rar
http://rapidshare.com/files/178370373/Ore-Kadal.part4.rar
பாடல்களை கேட்க
http://www.raaga.com/channels/malayalam/album/M0001166.html
இப்படம் பெற்றுள்ள விருதுகள்
Selected in Indian Panorama as the opening movie
Selected to Rome (Italy) International Film festival showcased as one of the outstanding film from Asia in this festival
Film Festivals
O IFFI Indian Panorama -2007
Asiatic –Rome- 2008
Fribourg International Film Frestival- Switzerland 2008
Indian Film Festival Los Angeles -2008
International Film Festival of Minneapolis -2008
Cine Del Sur – Granada, Spain -2008
Stuttgart Festival of Bollywood and Beyond (July-2008)
Festival of Malayalam Films – Vollodoid, Spain (June -2008)
International Film Festival of Kerala- 2007
Hyderabad International Film Fest
Pune International Film Festival
MAMI Festival – Mumbai
Habitat Film Festival – New Delhi
Asian Film Festival - Abudhabi
Kerala State Award 2007
Second Best Film - Ore Kadal - Best Actress - Meera Jasmine
Best Background Score – Ouseppachan - Best Editor- Vinod Sukumaran
Dubai Amma Awards 2007
Best Movie - Ore Kadal - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Best Supporting Actress - Ramya Krishnan - Best Camera Man - Azhakappan
Best Music Director - Ouseppachan
IFFK 2007 Awards
NETPAC Award for the Best Malayalam Film
Fipresci Award for the Best Malayalam Film
Asianet Film Award 2007
Best Actor award – Mammootty - Best Actress award - Meera Jasmine
Film Critics Award 2007
Best Movie - Best Directior - Best Female Singer - Best Camera man
Best Sound Recorder.
Vanitha Film Award 2007
Best Actor- Mammootty - Best Actress - Meera Jasmine
FOKANA Film Award 2007
Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Sify Award 2007
Best Movie - Ore Kadal - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Amrita Film Awards 2007
Best Directo r- Shyamaprasad - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Best Supporting Actress - Ramya Krishnan - Best Music Director :Ouseppachan
Best Female Singer : Shweta Mohan
Other Awards
John Abraham Award for Ore Kadal
V.Santharam National Award for the Best Actress - Meera Jasmine
First Sreevidya Award for Best Actress -Meera Jasmine
Bollywood & Beyond 2008 (Stuttgart, Germany): Audience Best Film Award for Ore Kadal
நல்லதொரு அறிமுகம் கண்டிப்பா பாக்கத்துட வேண்டியது தான்
ReplyDeleteஆரம்பத்தில இருந்து முடிவு வரைக்கும் நெகிழ்ந்து போய் பார்த்த படம். டிவிடி தேடிக்கிட்டிருக்கேன் கிடைக்கலை. தமிழ்ல வந்திருந்தா நம்மாளுங்ககிட்ட நாறிப்போயிருக்கும். இன்னொன்னு தெரியுமா வாசு. அந்தப் படத்தில் வரும் எல்லாப்பாட்டுமே சுபபந்துவராளியில்தான். ஒரே ராகத்தில் எத்தனை வித்தியாயாசம்? ஓசப்பச்சனை எப்படிப் பாராட்டினாலும் தகும். படிக்குமாத்திரமே, மம்முட்டியின் கண்ணும், மீராவும் இதோ அருகில். நன்றி வாசு.
ReplyDeleteஅருமையான திரைப்படம் பற்றிய நல்ல பதிவு சார்.
ReplyDeleteremba nalla pakirvu.....!
ReplyDelete//எந்த ஒரு படைப்பையும் அதை அனுபவித்து முடிகிற அந்த தருணத்தில் கிடைக்கிற நிறைவான உணர்வுக்கு ஈடான ஒன்று வேறெதிலும் இல்லை எனலாம்//
kandippaa........!
எனக்கு ( மீண்டும் எனக்கு ) படத்தின் கதை / கரு பிடிக்கவில்லை , ஒரு நடுத்தர வர்கத்து, மணமான பெண் , இவ்வளவு சுலபமாக தன்னை இழப்பாள் என்று நம்ப முடியவில்லை...ஒரு சில விதி விலக்கு இருக்கலாம்... அந்த மாதிரி விதி விலக்குகளை பார்த்து நமக்கு கிடைப்பது என்ன ...படத்தில் இசை நன்றாக இருக்கும், எல்லாருடைய நடிப்பு மிக நன்றாக இருக்கும் ..ஆனால் படத்தில் message இல்லை.
ReplyDeleteபிரியம், அன்பு, பாசம், காதல், சந்தோஷம், பிரிவு இப்படியான உணர்வுகளுக்குள் ஆட்படாத மனித வாழ்க்கையே கிடையாது.//
ReplyDeleteexactly sir
எல்லோரும் பார்த்து ரசிக்கட்டும் என்று "தரவிறக்கம் செய்து பார்க்க" லிங்க் கொடுத்துள்ளீர்கள், அதில் உள்ள உங்கள் நல்ல எண்ணம் புரிகின்றது.....ஆனால் அது தவறாக முடிந்துவிட வாய்ப்பு உள்ளதல்லவா? அந்த படத்தின் உரிமை உள்ளவர்கள் யு டியுபிலோ அல்லது வேறு ஒரு தளத்திலோ ஏற்றி வைத்திருந்தால் நாம் தரவிறக்கம் செய்து பார்க்க ஊக்க படுத்தலாம், இல்லையென்றால் இது சட்டபடி குற்றம் ஆகிவிடும் அல்லவே? கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteஇந்த வீக்எண்ட் பார்த்துடறேன். பகிர்வுக்கு நன்றி வாசு
ReplyDeleteஅருமையான படம் .
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
நல்ல அறிமுகம் வாசு சார். நன்றி.
ReplyDeleteசேட்டன் அடிபொளி படமானு.நன்றி சாரே!
ReplyDeletei've seen this film... excellent one.. (nammalungalukku pidikkathe..=))
ReplyDeleteதம்பி வெட்டோத்தி சுந்தரம்
ReplyDeleteசுமார் பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மை கதை
படத்தின் இயக்குனர் V.C.வடிவுடையான்.
முதன் முதலாக கரண்-சரவணன் கூட்டணி
http://www.vettothi.com/