வெகுநேரமாக வெயில் புணர்ந்து
உச்சப் பரவசம் அடைந்திருந்த
அறைச்சுவர்கள் வெம்மையைப்
பிரசவித்துக் கொண்டிருந்தன
சுழன்று கொண்டிருந்த
மின் காற்றாடி நின்றுபோன
எதிர்பாராத தருணத்தில்
வந்தது அந்தக்கடிதம்
பிரமை குறித்தான
யோசனையில் ஆழ்ந்திருந்த
எனக்கு நடுக்கத்தைக் கொடுத்தது
அந்தக் கடிதம்
நிச்சயம் அதில்
நல்ல சேதியாகத்தான்
இருக்க வேண்டும்
கைகள் நடுங்க உதடுகள் உலர
கடித உறையின் முனைகளை
பதமாக கிழிக்கிறேன்
பதட்டத்தில் சற்றே கோணலாகி
உள்ளிருந்து என்னைப்பார்த்து
சிரிக்கிறது கடிதம்
பிரித்துப் படிக்கத் தொடங்குகிறேன்
ஆம்
எதிர்பார்த்தது போலவே
நல்ல சேதிதான்
கடவுள் இறந்து விட்டாராம்
எல்லை மீறிய மகிழ்ச்சியின்
கொண்டாட்டத்தில்
துள்ளியெழுகிறேன் படுக்கையிலிருந்து
மின் காற்றாடி சட்டென்று
சுழலத் தொடங்குகிறது
அறைச்சுவர்கள்
குளிர்ந்து விட்டன
கடித உறையை கிழித்தபோது
துண்டாகிப் போன
அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
குற்றுயிராய்.
- பொன்.வாசுதேவன்
நன்று
ReplyDeletem......
ReplyDeletenallaayirukku!
//
மின் காற்றாடி சட்டென்று
சுழலத் தொடங்குகிறது
அறைச்சுவர்கள்
குளிர்ந்து விட்டன
கடித உறையை கிழித்தபோது
துண்டாகிப் போன
அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
குற்றுயிராய்.
//
ippadi mudichchathu nantru:)
அன்பு வாசு,
ReplyDeleteரொம்ப பிடிச்சிருந்தது இந்த கவிதை... அஞ்சல் தலையில் கிழிந்த பறவை பாடாய் படுத்துகிறது... கடைசி வரிகள்.... அபாரம். கடவுள்கள் மரித்த பிறகு தான் கவிதை பிறக்கிறது... ஆனால் பறவை குற்றுயிராய் போனது கவிஞனுக்கு தெரிகிறது, மரித்துக் கொண்டு இருப்பதும் கடவுள் தானா வாசு??? குழைத்து குழைத்து பிதுக்கி பிதுக்கி செய்த களிமண் சிற்பம், கையெல்லாம் ரத்தமான ரத்தம், விணைப்பயன் என்று சிரிக்கிறார் கடவுள்... அகம் பிரம்மாஸ்மி!!!
அன்புடன்
ராகவன்
அழகிய பொய்களாலான கவிதை. நல்லாயிருக்கு.
ReplyDeleteஇப்படித்தான் தோன்றுகிறது பல நேரங்களில்.
ReplyDeleteபூங்கொத்து!
ReplyDelete:) last lines with ur stamp!!
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு வாசு.
ReplyDelete// மரித்துக் கொண்டு இருப்பதும் கடவுள் தானா வாசு???//
அருமை ராகவன்.
முடிவு அருமை
ReplyDeleteஇறுதி வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு.
ReplyDeleteGod died on 14.5.2009:
ReplyDeletewhen tamil community cried for help,God didn't respond....
so,God died on May 14th,2009
கடவுளை மரிக்கச்செய்து காகிதப் பறவைக்கு உயிர்க்கொடுத்து வலி உணர்ந்த விதம் அருமை....
ReplyDeletesir..
ReplyDeleteungalin 2 visayankalukku naan vilakkam yen thalathileye koduththullen.
ithu pola periya aatkalukkellaam pathil sonnathillai..athuve konjam nadukkamaayirukkirathu.
antha nadukaththudan sonna pathilil yethaavathu pizhai iruppin perithu paduththa venaamnga sir!
m..
aganazhikai-na yenna arththam sir?
athai appadiye piriththu porul yeduththukkanumaa sir?
ஒரு நல்ல கவிதையாகியிருக்கும் - செதுக்கியிருந்தால் ... தேவையில்லாத வார்த்தைகள் கவிதையின் கச்சிதத்தையும் தீவிரத்தையும் குறைக்கின்றன ...
ReplyDelete//
வெகுநேரமாக வெயில் புணர்ந்து
உச்சப் பரவசம் அடைந்திருந்த
அறைச்சுவர்கள் வெம்மையைப்
பிரசவித்துக் கொண்டிருந்தன
//
இதை
”வெய்யில் வன்புணர்ந்த அறைச்சுவர்”
என்றால் ஆகாதா ...
கடித உறையை கிழித்தபோது
ReplyDeleteதுண்டாகிப் போன
அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
குற்றுயிராய்.---//
ரொம்ப நல்ல பஞ்ச்... நன்றி வாசு
வார்த்தைகள் வலிந்து திணிக்கப்பட்டு எழுதப்பட்ட கவிதையாக தெரிகிறது
ReplyDeleteஆஹா !
ReplyDeleteஅருமையான பதிவு!!
//அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
ReplyDeleteதுடித்துக் கொண்டிருக்கிறது
குற்றுயிராய்.//
கடவுள் இறந்த காரணமாக இருக்கலாம்
கிழிக்கப் பட்ட அஞ்சல் வில்லையில் இருந்த பச்சை குருவிக்கு பிறச்சேர்க்கைகள். இன்னும் யாரு தபால் அனுப்புறாங்க உங்களுக்கு ?!!!!!!
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு. எப்போதும் போல படமும் அருமைங்க.
நிறைய இருக்கு கைவசம் என்றே தெரிகிறது. வர வர மொட்டை படம் போட்டு பதிவே வரதில்லையே? டெம்பிளேட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்களே!! :)
ராகவா! களை கட்டுது!!! போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ... :))