பிரியங்கள் உதிர்த்த கனி
ஞாபகத்தின் காலடியில்தஞ்சம் புகும்இன்றைய மீள்நினைவுகளைபிரியங்களால் ஒத்தியெடுத்துபடுக்கையில் கிடத்துகிறேன் ஊர்ந்து கொண்டிருக்கும்அன்பின் கணங்களைஅனுபவித்தபடிபயணிக்கிற திசைகளிலெல்லாம்தடம் தரிசித்துநீங்கிக் கொண்டிருக்கிறது நான் பொய்த்துப்போனபெருமழைக்காலத்தின்வெக்கை நினைவுகளில்மிச்சமிருந்த பழைய பிரியங்கள்நனைத்துக் கொண்டிருக்கிறது வலுக்கட்டாயமாய்உதிர்ந்த பிரியங்களைதிசைக்கொன்றாய் வீசிச்சுழற்றிகடத்திக் கொண்டிருக்கிறது காற்று.
0
பால்ய விளையாட்டு வாழ்ந்து தீர்த்த பால்யத்தின்நிறைவேற்றாத நேர்த்திக்கடனாய்மிச்சமிருக்கின்றது பிரியங்கள் உலர்த்தி பதப்படுத்திபத்திரப்படுத்திசேமித்து வைத்திருந்தபிரியங்களைகாதலைக் கொண்டாடும்ஒரு தினத்தில்பீங்கான் குவளையிலிருந்துகவிழ்த்துக் கொட்டிபார்த்தபடியிருக்கிறேன் விளையாட்டின் ஞாபகங்களைநினைவிலேந்தியசொப்புகளின் ஏக்கத்தோடுகாலங்களுக்குப் பின்னும்யாசித்துக் கொண்டுவெறிக்கின்றன பிரியங்கள் பிரியங்களைச் சுமந்துமுணுமுணுத்தபடியிருக்கும்அவற்றின் சப்தம்அறையெங்கும்மெல்லப்பரவிசலசலப்பால் நிறைகிறது நெளிந்து கொண்டிருக்கும்பிரியங்களைஒவ்வொன்றாய்க் கையிலெடுத்துஆசுவாசப்படுத்திஆற்றுப்படுத்திஆசைதீர பார்த்துவிட்டுமறுபடியும்குவளைக்குள் இட்டுமூடிவைக்கிறேன் பத்திரமாய்.
- பொன்.வாசுதேவன்
hope i had already read them some time past :)
ReplyDeletegood to read all again.
இரண்டும் அருமை. இரண்டாவது மிகப் பிடித்தது வாசு.
ReplyDeletevaazhththukal....!
ReplyDeleteintha 2 me vaasiththirukkiren.
2 - vathu mikavum pidikkum:)
நல்ல கவிதைகள் இரசித்தேன்
ReplyDeleteம்ம்... அருமையா இருக்கு..
ReplyDeleteவாழ்த்துகள் வாசு
ReplyDeleteரொம்ப அருமையா இருக்குங்க வாசு ரெண்டு கவிதையுமே.
ReplyDelete//மறுபடியும்
குவளைக்குள் இட்டு
மூடிவைக்கிறேன் பத்திரமாய்.//
இந்த வரிகளை மிக மிக அனுபவித்தேன்.
mika sirappaana varikal...
ReplyDeleteஉலர்த்தி பதப்படுத்தி
பத்திரப்படுத்தி
சேமித்து வைத்திருந்த
பிரியங்களை
காதலைக் கொண்டாடும்
ஒரு தினத்தில்
பீங்கான் குவளையிலிருந்து
கவிழ்த்துக் கொட்டி
பார்த்தபடியிருக்கிறேன்
vaazthukal paratukal