Friday, February 11, 2011

ஒரு வாழ்க்கையை கடந்து செல்வது எப்படி?





தொட்டிச்செடி மண்ணுள்

துளைத்துத் துழாவி தரை தட்டும்
கட்டெறும்பின் ஏமாற்றத்தோடு
புரிதலற்ற செய்கைகளாக கண்ணெதிரே
உதிர்ந்து கொண்டிருக்கின்றன பொழுதுகள்

இரவில் மலர்ந்து
விடியலில் அயரும் நட்சத்திரங்களாகி
பூத்துப் பரிகசிக்கிறது
அன்றன்றைய வாழ்க்கை

உறையும் நீர் போல் இறுகிக் கொண்டிருக்கும்
மரத்த முலைகளிலிலிருந்து
இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது
இறைஞ்சுதலற்று கருணையுமிழ்ந்த பால்

துயரத்தின் விளிம்புகளில்
அலைகளாய் எழுந்தமர்கிறது தன்னிரக்கம்

பகலையும் இரவையும்
மறுபடி மறுபடிக் கடந்து
சென்று கொண்டிருக்கிறான்
ஜெயித்துக் கொண்டிருப்பதாய் கனவு காண்கிறவன்.

*
பொன்.வாசுதேவன்

6 comments:

  1. மிக அருமை வாசு சார்..

    ReplyDelete
  2. //மரத்த முலைகளிலிலிருந்து...
    ஜெயித்துக் கொண்டிருப்பதாய் கனவு காண்கிறவன்//

    வாழ்த்துக்கள் வாசு சார்...

    ReplyDelete
  3. நல்லாருக்கு வாசு!

    ReplyDelete
  4. //ஜெயித்துக் கொண்டிருப்பதாய் கனவு காண்கிறவன்//

    எப்படி இப்படி?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname