Saturday, March 13, 2010

புத்தக வெளியீட்டு விழா





திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக வெளியீட்டு விழா
வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக 5 புது புத்தகங்களின் வெளியீட்டு விழா 13.03.2010 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளியில் நடைபெற உள்ளது. விழாவினை மாவட்ட ஆட்சி தலைவர் மு. இராஜேந்தின் ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்து உரையாற்றுகிறார்கள். விழாவின் முதல் அமர்வாக மலையாள மொழியில் கே.ஆர். மீரா அவர்கள் எழுதி தமிழில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த " சூர்ப்பனகை" என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் ஜி. திலகவதி ஐ.பி.எஸ். காவல் துறை கூடுதல் தலைவர் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் சந்திரபோஸ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கற்றது தமிழ் பட இயக்குனர் ராம் உரையாற்றுகிறார்.

இரண்டாவது அமர்வாக பின்னி மோசஸின் ” நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து” என்ற என்ற கவிதை தொகுப்பை வெண்ணிலா கபடி குழு இயக்குனர். சுசீந்திரன் வெளியீட, எழுத்தாளர் பவாசெல்லதுரை பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உரையாற்றுகிறார்.

மூன்றாவது அமர்வாக அய்யனார் விஸ்வநாத்தின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்படுகின்றது. மூன்று புத்தகங்களையும் கவிஞர் சமயவேல் வெளியிடுகிறார். ”உரையாடலினி” என்ற சிறுகதை தொகுப்பை நம் தினமதி நாளிதழின் ஆசிரியர் பி. நடராஜன் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து இயக்குனர். சந்திரா உரையாற்றுகிறார். தனிமையின் இசை” என்ற கவிதை தொகுப்பை திரு. வி. ரமேஷ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கவிஞர். தமிழ்நதி உரையாற்றுகிறார். ”நானிலும் நுழையும் வெளிச்சம்” என்ற கவிதை தொகுப்பை புகைப்பட கலைஞன் பினுபாஸ்கர் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். புத்தகம் குறித்து எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார்கள். சி. பலராமன் நன்றிகூற முதல் நாள் விழா நிறைவு பெறுகிறது.

இரண்டாவது நாள் 14.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில் 4 புத்தகங்களின் வெளியீட்டு விழா அதே இடத்தில் நடைபெறுகிறது. விழாவினை திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைக்கிறார். முதல் அமர்வாக மலையாள மொழியில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ”ஒற்றைக் கதவு” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட, ஏ.எல்.சி.யின் பொது செயலாளர் அறிவர். ரிச்சாட் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார்.
இரண்டாவது அமர்வாக பி.ஜே. அமலதாஸ் தொகுத்த ”இன்றும் வாழும் தெருக்கூத்து” என்ற புத்தகத்தை திரைப்பட கலைஞர் நாசர் வெளியிட கவிஞர். இளையபாரதி பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து முனைவர் பார்திபராஜா உரையாற்றுகிறார்.

மூன்றாவது அமர்வாக கே.ஸ்டாலினின் ”பாழ் மண்டபம் ஒன்றின் வரைபடம்” என்ற கவிதை தொகுப்பை கவிஞர். ரவி சுப்ரமணியன் வெளியிட, கவிஞர் அய்யப்ப மாதவன் பெற்றுக்கொள்கிறார்.

நான்கவது அமர்வாக வெ. சுப்ரமணியபாரதியின் ”வெ. சுப்ரமணிய பாரதி கதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் நா. முருகேச பாண்டியன் வெளியிட உயிர்எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் பெற்றுக்கொள்கிறார்.
நிறைவாக கே. முருகன் நன்றியுரை கூற விழா நிறைவு பெறுகிறது.


அனைவரும் வருக !


4 comments:

  1. congrats vasu and ayyanar viswanath.

    ReplyDelete
  2. vaazhthukal.......... veliyidum anaivarukkum.

    ReplyDelete
  3. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname