என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான்
வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.
எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.
நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.
ஞாநி
நன்றி : http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_17.html
000
சாருநிவேதிதா மற்றும் ஞாநி இருவரது பதிவுகளையும் இங்கு வெளியிட காரணம் அதில் ‘அகநாழிகை‘ தொடர்பான விஷயம் இடம் பெற்றிருந்தது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பொன்.வாசுதேவன்
நடத்துங்க...
ReplyDeleteஇவ்ளோ சீக்கிரமா தப்பிச்சிட்டீங்களே..! அச்சச்சோ.. இந்த மேட்டர் அவ்ளோதானா..?
ReplyDeleteஅடுத்த வாரத்துக்கு நாங்க என்ன செய்யறது..? எங்களுக்கும் பொழுது போக வேண்டாமா..?
// சாருநிவேதிதா மற்றும் ஞாநி இருவரது பதிவுகளையும் இங்கு வெளியிட காரணம் அதில் ‘அகநாழிகை‘ தொடர்பான விஷயம் இடம் பெற்றிருந்தது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
ReplyDeleteஇருப்பினும், எனக்கு அதிருப்தி மட்டும் குறையவில்லை. காரணம்... ஞாநியின் செயல்பாடுகளைக் குறைகூறுவதற்கான வாய்ப்பாக மட்டுமே 'அகநாழிகை' புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டுள்ளார், சாரு. நிகழ்விடத்தை மட்டும் குறிப்பிடுவதற்கு அந்த நிகழ்ச்சி பயன்பட்டிருக்கிறது. அது, முழுக்க முழுக்க ஞாநியை விளாசுவதற்கான பதிவு என்பது தெளிவு. இந்த நிலையில், அகநாழிகையின் பதிப்பகத்தாரால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஒருவரை சாடும் நோக்கத்துடன், அந்த விழா நிகழ்வுகளின் எதிர்மறை அம்சங்களை மட்டுமே பதிவு செய்த ஓர் இடுகையை இங்கே நீங்கள் இட்டிருக்கக் கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து.
ரைட்டு. நடக்கட்டும்.
ReplyDeleteஉ.தவுக்கு போரடிக்குதாம்.
எல்லோரும் நிம்மதியா இருக்க விட மாட்டார் போல இருக்கு.
pleaae stop these kind of posts, trying to make fight between Gnani and charu. We are bored and it is irritating.
ReplyDeleteWhat Azagiri is doing in politics the same you are doing in Blog.
Not much difference.
அப்ப அவ்வளவு தானா.... :)
ReplyDeleteஏற்புடைய கருத்துதாங்க.
ReplyDeleteரைட்டு.
ReplyDeleteஇந்த எழுத்து உலகத்தில் எல்லோரும் எழுதிக் கொண்டும் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ReplyDeleteThese kind of word wars will not stop even if the the world agrees to stop the wars between countries.
தொடர்புடையவராக நீங்கள் இருப்பதால், எந்தவித சேர்க்கைகளையும் தவிர்த்து,சார்பற்ற நிலையில் பதிவிடுவது தேவைதான் என்றே நான் கருதுகிறேன்.அதைத்தான் செய்தும் இருக்கிறீர்கள்.
ReplyDeleteநல்லது
ReplyDelete