
அகன்று
உயர்ந்து
தாழ்ந்து
நெருங்கி
விலகி
சேர்ந்து
பிரிந்து
அடித்து
அணைத்து
அழுது
சிரித்து
செலவழிக்கலாம்
வருகிறது
புது வருடம்...
வாழ்த்துக்கள்...!
- பொன். வாசுதேவன்
" புதிய பார்வை " ஆகஸ்ட் 16-31, 2007- ல் வெளியானது.
நிழல் மிதிபடாத
மாலை வேளையில்
விடிகிற இரவின்
ஒவ்வொரு பக்கங்களிலும்
ஆடாமல் காத்திருக்கிறது
எனக்கான ஊஞ்சல்
கண்களை பிடுங்கிஎறிந்ததைபோல்
தடுமாற வைக்கும்
இருட்டினுள்
விழி திறந்து மூடி
விளையாடும் அக்கணங்களில்
கட்டியணைத்து
ஆறுதல் பேசும் உன்னோடு
சுழன்று சென்று கொண்டிருக்கிறேன்
உச்சிக்கு
இருளிலும் இடைவிடாது
தொடரும் நிழலுடன்...