விடிகிற இரவின்
ஒவ்வொரு பக்கங்களிலும்
ஆடாமல் காத்திருக்கிறது
எனக்கான ஊஞ்சல்
கண்களை பிடுங்கிஎறிந்ததைபோல்
தடுமாற வைக்கும்
இருட்டினுள்
விழி திறந்து மூடி
விளையாடும் அக்கணங்களில்
கட்டியணைத்து
ஆறுதல் பேசும் உன்னோடு
சுழன்று சென்று கொண்டிருக்கிறேன்
உச்சிக்கு
இருளிலும் இடைவிடாது
தொடரும் நிழலுடன்...