Wednesday, April 22, 2009

“அகநாழிகை“ பொன்.வாசுதேவன் கவிதைகள்


“அகநாழிகை“ பொன்.வாசுதேவன் கவிதைகள்

-------------------------------------------------------

மனமொளிர் தருணங்கள்

தளர்ந்து இறுகும்

சிறகுகள் அசைத்து

கால் புதைய காற்றில்

நடக்கிறது ஒரு பறவை

என்னை நானே

அருந்தி இரசிக்கும் தருணம் அது

காற்று உதிர்த்த

பறவைச் சிறகின் கதகதப்பை

கைப்பற்றி

கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்

தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது

பறவை

உதிர்ந்த சிறகு குறித்த

கவலையேதுமற்று.



இழைவாங்கி கோர்த்துக் கொண்டிருக்கிறது

கற்பனை வெளியில்

தேங்கிய ஆசைகள்

அறியாத அந்தரங்கம்

மனதையவிழ்த்துப்போட்டு

நேர்த்தியாய்

தீர்க்கமாய் உயிர்ப்பூட்டி

இழை வாங்கியில்

ஒவ்வொன்றாய்க் கோர்த்து

ஆசைகளை இறுக்கியணைத்து ஆடுகிறது

காற்றைப் புணர்ந்த

விழுதுகளின் வேகத்தோடு

எதையும் சொல்வதற்கு

விருப்பமின்றி

தொலைவில் நின்று

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

நான்।

காத்திருக்கிறார்கள் அவர்கள்

முகமொளிர் முறுவலுடன்

சாளரங்கற்ற அறையின்

இருளாழத்தில்

எனது கவிதையை

எழுதிக் கொண்டிருந்தேன்.

காற்றுவெளியில் மிதந்து

பரவிக்கொண்டிருந்த

வார்த்தைகளின் வாசம்

ஈர்த்ததாய்க்கூறி

அவர்களாகத்தான் வந்தார்கள்.

வார்த்தைகளை உலையிலிட்டு

நான் தகதகக்கச் செய்ததும்

அவர்களின் பொருட்டேதான்.

தரைக்கொடியேற்றி

தளம்வரைச் சென்றதும்

அவர்களிட்ட நீர்ச்சுழி உறிஞ்சித்தான்.

இன்றும் அவர்கள் காத்திருக்கிறார்கள்

இரக்கமற்ற குரூரத்துடன்.

நினைவுகளில் உராய்ந்திழைந்து

விரல்வழியே வெளிவரும்

எனது வார்த்தைகளின் வரவுக்காக.

20 comments:

  1. முதல் கவிதையில் உங்கள் டச் நன்றாகத் தெரிகிறது.. மூன்றாம் கவிதை சற்று ஆழமாக இருக்கிறது. இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருக்கிறது.. எனினும் மூன்றும் மும்முத்துக்கள்!!!

    தொடருங்கள்!!!

    ReplyDelete
  2. ///ஆதவா said...
    முதல் கவிதையில் உங்கள் டச் நன்றாகத் தெரிகிறது.. மூன்றாம் கவிதை சற்று ஆழமாக இருக்கிறது. இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருக்கிறது.. எனினும் மூன்றும் மும்முத்துக்கள்!!!

    தொடருங்கள்!!!///

    நானும் வழிமொழிகின்றேன்......

    ReplyDelete
  3. அருமை... அருமை...


    சூப்பர்...


    நல்லா இருக்கு, நல்லா இருக்கு...


    படங்கள் எல்லாம்...


    ஹி.. ஹி..ஹி...


    கவிதையும்தான்.

    ReplyDelete
  4. முதல் கவிதை படித்ததும் முகம் மலரச் செய்கின்றது அருமை. இரண்டாவது மூன்றாவது கனமாது
    ஆழமாக இருக்கின்றது. உங்கள் கவிதை அனைத்துமே நன்றாகவே உள்ளது. உங்களை படித்து கற்றுக் கொள்ள வேண்டும்.
    நேற்று நவீன விருட்சத்தில் அழகியசிங்கர் அவர்கள் எழுதி 'கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா' என்ற கட்டுரையை படிக்கும் போது உங்கள் கவிதைகள்தான் நினைவில் வந்தன.

    ReplyDelete
  5. முதல் இரண்டு கவிதைகளும் எளிதாகப் புரிந்து விட்டன வாசு.. ஆனால் மூன்றாவது கவிதையின் சாரம்தான் கொஞ்சம் குழப்புகிறது.. வழக்கம்போலவே பொருள் செறிந்த கவிதைகள், அருமை..

    ReplyDelete
  6. //கார்த்திகைப் பாண்டியன் said...
    முதல் இரண்டு கவிதைகளும் எளிதாகப் புரிந்து விட்டன வாசு.. ஆனால் மூன்றாவது கவிதையின் சாரம்தான் கொஞ்சம் குழப்புகிறது.. வழக்கம்போலவே பொருள் செறிந்த கவிதைகள், அருமை.//

    எனக்கும்தான். மீண்டும் வருகிறேன், விளங்கியபின்.

    ReplyDelete
  7. தூரத்தில் சென்று கொண்டிருக்கிறதுபறவைஉதிர்ந்த சிறகு குறித்த கவலையேதுமற்று.

    arumai

    ReplyDelete
  8. alagana kavithaigal

    aana enaku than konjam puriyalai nga

    ReplyDelete
  9. kadaisi kavithai

    arumaiyo arumai thala

    yappa mudiyala

    ReplyDelete
  10. முதல் கவிதை நெகிழ்வு,
    இரண்டாவதின் அந்தரங்க இழைவாங்கியை மிகவும் ரசித்தேன்

    //ஒவ்வொன்றாய்க் கோர்த்துஆசைகளை இறுக்கியணைத்து ஆடுகிறதுகாற்றைப் புணர்ந்தவிழுதுகளின் வேகத்தோடு //

    //நின்றுவேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதுநான்।//

    மிகவும் அருமை,


    //காத்திருக்கிறார்கள்இரக்கமற்ற குரூரத்துடன் நினைவுகளில் உராய்ந்திழைந்துவிரல்வழியே வெளிவரும்எனது வார்த்தைகளின் வரவுக்காக.//

    ஐயோ, மிகவும் பிடித்திருக்கிறது,
    மூன்றுமே மிகவும் அருமை

    தாங்கள் எழுதிய அந்த 120 கவிதைகளையும் தினமும் ஒவ்வொன்றாக வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்,

    சீக்கிரம் தொகுப்பாக கொண்டு வாருங்களேன் அவைகளை.

    ReplyDelete
  11. rasiththeen muthal kavithai arumai.

    mankuthiray.

    ReplyDelete
  12. காத்திருக்கிறார்கள் அவர்கள் - fantastic ... the flow of thoughts and language into the unknown invite to and invoke the experience in the interior mindscape of a poet / a poem ...

    ReplyDelete
  13. woow super...
    அனைத்து கவிதைகளும் அருமை..
    முதல் கவிதை மிகவும் அருமை...

    ReplyDelete
  14. நானும் வழிமொழிகின்றேன்......

    ReplyDelete
  15. யப்பா.... என் சிறு மூளையை சற்றும் எட்ட மறுக்கிறது..... இதுபோன்ற கவிதைகள்!

    முதல் கவிதை எனக்கு சற்று புரிந்தது.

    இதுபோன்று நவீன் கவிதைகள் எழுத தனித்திறமை வேண்டும்... உங்களுக்கு அது நன்றாகவே கைவரப்பெற்றிருக்கிறது..

    வாழ்த்துக்கள் நண்பா!

    (என்னபா போன் எதுமே வரல! :) )

    ReplyDelete
  16. கவிதையை விட உதாரணப்படங்கள் அருமை நண்பா..!

    ReplyDelete
  17. இன்னும் நான் கவிதையை படிக்க வில்லை..உங்களிடம் ஒரு விசயம் கேட்க வேண்டும் என்று படிக்காமலே வந்துவிட்டேன்..உங்கள் பதிவுகளில் வரும் படங்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள்.அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
  18. ”மனமொளிர் தருணங்கள்”
    வாழ்வில் சில நிகழ்வுகள் இதுமாதிரிதான் இருக்கும். இதன் கருததை +வாகவும் எடுத்துக்கொள்ளலாம்..-வாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

    அழகான வாழ்வியல் நிகழ்வு.

    ReplyDelete
  19. கவிதைகள் மூன்றும் அருமை..

    ReplyDelete
  20. வணக்கம்
    கவிதகள் வாசித்தேன். நீங்கள் யுகமாயின்னி இதழில் கவிஞர் அம்சப்ப்ரியா எழுது கட்டுரைத்தொடரான் கவிதைக்கரையோரம் வாசிக்கவேண்டும். பதுக்கவிதாஇ, நவீனக்கவிதை, இரண்டுக்கமான உறவு, எதிர்வினைகள் என்று உதாரணங்களுடன் தொடர்கிறார். பிச்சமூர்த்தி தொடக்கம் 80 களின் இறுதிவரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்த புதுக்கவிதையிலும் மரபில் சந்தித்த அதே குளறுபடிகளை காணநேர்ந்ததால் தான் நவீனக்கவிதை பிறந்தது.அவசியம் வாசித்து உங்கள் கவிதை முனைப்புகளை பதப்படுத்த வாழ்த்துகள். சித்தன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname