இயல்பு
இழையிழையாய்
வெளியேறிக் கொண்டேயிருக்கும்
விரலை விட்டு
குளிக்கும் பொழுதில் உடல் கீறி
வெளிப்படுத்தும் தன்னிருப்பை
தவிர்க்க முடியாதுதான்
மறுபடி நறுக்க மறுபடி வளரும்
வீட்டிலே போட்டோமென்றால்
குடும்பத்திற்கு ஆகாது
விளக்கேற்றியபின் நறுக்கவும் கூடாது
நெடுநாளாகக் காத்திருந்தும்
வளர்க்கின்றனர் நகங்களை
தன்னையே கீறக்கூடுமென
அறிந்திருந்தும்
வெறியுடன் கடித்துத் துப்புபவரும் உண்டு
சிந்தனையில் இருப்பதைக்காட்டி ..
விரல்களுதிர்ந்த மனிதனைக் காண்கிறேன்
விரல்களை ஆக்கிரமித்த
நகங்களிலில்லை அவனிடம்
உண்மைதான்
வேறு வழியில்லைஎன்றுதான்
விட்டுவிடவும்
வெட்டித்தள்ளவும் வேண்டியிருக்கிறது
நகங்களை.
"சிந்தனையில் இருப்பதைக்காட்டி ..
ReplyDeleteவிரல்களுதிர்ந்த மனிதனைக் காண்கிறேன்
விரல்களை ஆக்கிரமித்த
நகங்களிலில்லை அவனிடம் .."
ரசனையுள்ள எழுத்துக்கள். ரசித்தேன்.
உயிரோசையிலேயே படித்துவிட்டேன்....இயல்பான கவிதை...நன்றாக உள்ளது
ReplyDeleteதொடர்ந்து தங்களின் ஊக்கத்திற்கு
ReplyDeleteமிக்க நன்றி டாக்டர்.
//வெறியுடன் கடித்துத் துப்புபவரும் உண்டு
சிந்தனையில் இருப்பதைக்காட்டி ..//
//விரல்களுதிர்ந்த மனிதனைக் காண்கிறேன்
விரல்களை ஆக்கிரமித்த
நகங்களிலில்லை அவனிடம்//
ஒரு சிறு திருத்தம் :
இந்த வரிகளை இப்படி வாசிக்க வேண்டும்.
- பொன்.வாசுதேவன்
Rajeswari said...
ReplyDelete//உயிரோசையிலேயே படித்துவிட்டேன்....இயல்பான கவிதை...நன்றாக உள்ளது//
மிக்க நன்றி தோழி,
நகங்களை ஒரு குறியீடாக வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும்போது, நிறைய அர்த்தங்கள் தெரிகிறது.அமித்து அம்மா சொல்லித்தான் இக்கவிதை வெளியானதே தெரியுமா? என்னை மாதிரி திங்கள்கிழமைக் காலையிலருந்தே லொட்டு லொட்டுன்னு திறந்துப் பாத்துக்கிட்டேயிருந்தா இந்தப் பிரச்னையே இல்ல பாருங்க.( என்ன பண்றது? நான் புதுசா எழுதறதால இந்த ஆர்வக்கோளாறு)
ReplyDeleteகவிதை நல்லாருக்கு,
ReplyDeleteஅதன் இயல் அருமை.
அருமைங்க... நகங்களைக் குறித்த இக்கவிதை வெகு இயல்பாக இருக்கிறது. கொஞ்சம் யோசிக்கவும் கூடுகிறது.
ReplyDeleteஇப்படியும் கவிதை எழுதலாம் என்று யோசிக்கிறேன்!!! அவ்வளவு அழகு!!
((நகங்கள் குறித்து "ஞாபக நகங்கள்" என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறேன்.. பின் வரும் நாட்களில் வலையில் சமர்ப்பிக்கிறேன்.))a
//வேறு வழியில்லைஎன்றுதான்
ReplyDeleteவிட்டுவிடவும்
வெட்டித்தள்ளவும் வேண்டியிருக்கிறது
நகங்களை.//
வித்தியாசமான வரியும் கருவும்
கலக்கல் .. மிகவும் யதார்த்தம்.
ReplyDeleteஒரு கவிஞர் எனது இனிய நண்பர் .. ஆஹா ஆனந்தம்.
எல்லா புகழும் இண்டர்நெட்டிற்கே...
//வேறு வழியில்லைஎன்றுதான்
ReplyDeleteவிட்டுவிடவும்
வெட்டித்தள்ளவும் வேண்டியிருக்கிறது
நகங்களை.//
இயல்பு இயல்பாக இருக்கிறது
//வெறியுடன் கடித்துத் துப்புபவரும் உண்டு
ReplyDeleteசிந்தனையில் இருப்பதைக்காட்டி ..//
இந்த சிந்தனையில்தான் ஒரே நாளில் இரு பதிவா?
வாழ்த்துகள் அண்ணா :)
ReplyDeleteஉயிரோசையில் படித்துவிட்டேன்.
ReplyDeleteஇயல்பான நடை..
உண்மைதான்
வேறு வழியில்லைஎன்றுதான்
விட்டுவிடவும்
வெட்டித்தள்ளவும் வேண்டியிருக்கிறது
அருமை.
ஆஹா.....!! நெம்ப சூப்பரா இருக்குதுங்கோ தம்பி.......!!!
ReplyDeleteமேலும் எம்பட வாழ்த்துக்கள்.....!!!!
" வாழ்க வளமுடன்......"
கவிதையின் எளிமையான வெளிப்பாடு படிப்பவரை, அக்கவிதையை தொடர்ந்து எழுதிக் கொண்டு போகத் தூண்டுகிறது. கவிதையுடன் அருமையான ஒரு உரையாடலை ஏற்படுத்திவிடுகிறது. இந்த சிந்தனைத் தொடர்சங்கிலி, முடிவில்லாத வெளியில் பயணப்படுவது ஒரு அற்புத அனுபவம்.
ReplyDeletenice kavithai...
ReplyDeleteஇயல்பு கவிதை இனிமையான கவிதை. நன்று
ReplyDeleteமேலும் உயிரோசை வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா இருக்கு. உயிரோசை - வாழ்த்துகள் வாசு.
ReplyDeleteஅனுஜன்யா
இங்கு நகம் என்னும் படிமம் அழைத்துச்செல்லும் ஆழம் கவிதைக்கு ஒரு விஸ்தாரமான பரப்பை ஏற்படுத்தி மனதுள் விஸ்வரூபமாய் விரிகிறது. கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
ReplyDeleteபதிவர் சந்திப்பு புகைப்படங்களில்
ReplyDeleteஅந்த செருப்பு அலைபேசி புகைப்படத்திற்கு ஒரு கவிதை தோனுச்சு,அமித்து அம்மா அவர்கள் கூட பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள்
எதிர்முனையில்
எவருமில்லையென்பதறியாது
அந்த ஒற்றைச் செருப்பு
அலைபேசியின் காதில்
தன் எஜமானன் அறியாது
மெல்லிய குரலில்
புலம்பியபடியிருக்கிறது
காலமெலாம்
நடந்து நடந்து
தேய்ந்த கதையை
இதன் நீட்சியாக இன்னும் சில வரிகள்
அந்த செருப்பின் பின்னூட்டம்
தயவு செய்து இந்த
புகைப்படத்தையும்
கவிதையையும்
அழித்துவிடுங்கள்
என் எஜமானர்
பார்ககவோ வாசிக்கவோ
நேர்கையில்
சங்கடப்படுவார்.
மன்னிக்கவும் தங்களின்
ReplyDeleteபுகைப்படத்திலிருந்து
ஒரு கவிதையை
திருடியதற்காக
நகம் போலவே,அளவுக்கு மீறி வளரும்போது நறுக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு எம் வாழ்வில்.அருமையான தத்துவம்.வாழ்த்துக்களும் கூட.
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு...வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete