Saturday, July 4, 2009

நாடோடிகள் : அரிப்பும்… ஆற்றுப்படுத்தலும்

நாடோடிகள் படம் சிறப்பாக வந்திருப்பதாக வலைப்பக்களில் தொடர்ந்து விமர்சனங்கள்.. அச்சு ஊடகங்களிலும் அதன்படியே ஒரு நல்ல கண்ணோட்டம் இருந்ததால் தவறவிடாமல் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

000

na4 அரசுப் பணியில் சேர்ந்தால் மட்டுமே மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் சசிக்குமார், பி.ஏ.. அவன் மீது வெறித்தனமாக காதலில் இருக்கும் மாமன் மகள் அனன்யா.

கணிணி மையம் ஆரம்பிக்கும் முயற்சி செய்து கொண்டே, சசியின் தங்கையை காதலித்துக்கொண்டிருக்கும் சசியின் நண்பன் விஜய்.

வெளிநாட்டில் வேலைக்குப் போக விரும்பும் மற்றொரு நண்பன் பரணி.

இவர்கள் மூவரும் சசிக்குமாருடன் படித்த வகுப்புதோழன் சரவணன் காதலை நிறைவேற்றப் போராடி உதவி உடல், மன ரீதியான இழப்புக்குப் ஆளாகிறார்கள்.

பிறகு, அந்த காதலர்கள் பிரிந்ததைக் கேட்டு கொந்தளித்து அவர்களை சேர வற்புறுத்துகிறார்கள்.

படம் முடிந்து விடுகிறது.

000

‘நாடோடிகள்‘ படத்தில் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. ஒளி ஊடகத்தின் தன்மை புறத்தோற்றத்தை அப்படியே நேரில் கண்டுணர்வதான முறையில் உள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் சிறு குன்று போலான மலை மேல் நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஒளிப்பதிவுக்கருவி 360 கோணம் போன்றதொரு தோற்றத்தில் நகரின் முழு வடிவையும் கவர்ந்து காட்சியாக்குகிறது. மிக அழகான காட்சி. இதுபோல பல காட்சிகள்.

தமிழ் சினிமாவின் கதைக்களம் நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டே உருப்பெற்றுக் கொண்டிருந்த விபரீதமான காலகட்டத்தில் இயக்குநர்களின் நடிகர்களாக புதுமுகங்கள் பலரும் வரத்தொடங்கினார்கள். இவர்கள் புதியவர்களாகவும், பாசாங்கற்ற பாவனைகளை திரைப்படங்களில் வெளிப்படுத்தியது பார்வையாளர்களின் மன உத்வேகத்தை தூண்டியது. அதன் காரணமாக ரசிகமனம்சார் ஆதரவும் அவர்களுக்கு பெருமளவு கூடியது.

na3 புதியதான இயக்குநர்கள் பலரும் வாசிப்பு பழக்கத்துடனும், உலக சினிமா பரிச்சயத்துடனும் களத்தில் இறங்கி தங்கள் கிராமங்களையும், அங்கு வாழ்ந்த மக்களையும், காதலையும், விரோதத்தையும் கதைக்களனாக்கி காட்சிப்படுத்தி, ரசனையோடு இசைப்பாடலை வாங்கி தங்களை வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொண்டனர்.

தெளிவான திரைக்கதை ஒன்று மட்டுமே இந்த வெற்றிகளை இவர்களுக்கு சாத்தியமாக்கியது. இவ்வெற்றியைப் பெற்றவர்களில் சசிக்குமாரும் ஒருவர். இயக்குநராக ‘சுப்ரமணியபுரம்‘ தயாரிப்பாளராக ‘பசங்க‘ இரண்டு படங்களிலும் தன் திறனை வெளிப்படுத்திய இவர், நடிப்பதற்காக வந்து இயக்குநரானவர் என்று அறியப்படுகிறது.

ஆசை யாரை விட்டது ? நாடோடிகள் படத்தின் மூலம் சசிக்குமாரும் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

நாடோடிகள் படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி ஏற்கனவே இரண்டு படங்களைத் தந்து நம்மை சோதித்தவர். தற்போது இப்படத்தில் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுத்து நம்மை சோதித்திருக்கிறார்.

மிகவும் சராசரி இயக்குநரின் மனோபாவத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இப்படம் குறிப்பிட்டு பேசக்கூடிய படம் அல்ல. அப்போது ஏன் இப்படம் குறித்து நாம் விமர்சிக்கவோ, நன்றாக வரவில்லையே என விவாதிக்கவோ வேண்டும்.

na2 காரணம் இருக்கிறது. பொதுவாகவே இன்றைய தேதியில் மிகச்சிறந்த படமாக இது பேசப்படுகிறது. அரசியல் கட்சிக்கு ஓட்டு போடும்போது, இருக்கிற திருடனில் கொஞ்சமாக திருடுபவன் எவனோ அவனுக்கே என் ஓட்டு என்று சிலர் சொல்வார்கள். பல மோசமாக படிக்கும் மாணவர்கள் இருக்கும் வகுப்பில், சுமாராகப் படிக்கும் மாணவன் முதலிடம் பெறுவதில்லையா.. அதுபோலத்தான். திரையரங்குகளில் தற்போது ஓடும்படங்களில் நல்ல படம் இதுதான் என்று மனம் முடிவு செய்துவிட்டது.

மிக மோசமான கதையமைப்பு, அடுத்து பாடல் வரும், சண்டை வரும், வில்லனிடம் மாட்டிக்கொள்வார்கள் என்று சராசரி ரசிகன் கூட கண்டுபிடித்துவிடும் விதமாக அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள், நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுவதும் எல்லா காட்சியிலும் ஒரு வசனம், கஞ்சா கருப்பு செய்யும் சகிக்க முடியாத நகைச்சுவை, உடலிச்சையை காதல் என்று நண்பன் சொல்லித்திரிவதைக்கூட கண்டறியாத, காதலில் பிரிய வசதியாக வாழ்ந்த சூழ்நிலையும், பொருளாதார சிக்கலும்தான் காரணம் என்பதைக்கூட உணர இயலாத மனமுதிர்ச்சியற்ற கதாநாயகன் சசிக்குமார் இவையெல்லாம் திரைப்படத்தை பலவீனப் படுத்துகின்றன.இயல்பாக இருக்க பலமுறை முயற்சித்து, அனைவருமே நன்றாக ‘நடித்தி‘ருக்கிறார்கள்.

‘அதே கண்கள்‘ என்றொரு பழைய படம். இசையிலேயே பயமுறுத்துவார்கள். அதுபோல பின்ணணி இசையின் மூலம் பயமுறுத்த முயல்கிறார் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு. பயத்திற்கு பதிலாக சிரிப்புதான் வருகிறது.

மாமன் மகளின் அளவில்லா நேசம், நண்பர்களின் நெருக்கம், பெற்றவர்களின் ஆதரவு என மனநெகிழ்வளிக்கக்கூடிய காட்சிகளை வைத்து மட்டுமே படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. பக்கம் பக்கமாய் அறிவுரை கூறுகிறார் சசிக்குமார். விரைவில் இவரது குரலையும் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு என அரைத்து தோசை வார்ப்பார்கள் என்பது நிச்சயம். டி.ராஜேந்தரை சின்னதாக மினியேச்சர் பண்ணது போலவே அவரை நினைவூட்டுகிறார் சசி. என்ன பற்களைக் கடிப்பதில்லை.

ஒரு காட்சியில் காதலர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு, “அய்யகோ... அவர்களிடம் பேருந்துக்கு பணமிருக்காதே..“ என்று உணர்வுவயப்பட்டு, கழுத்திலிருக்கும் சங்கிலி, சட்டைப்பை, பேண்ட் என தான் போட்டிருந்த ஜட்டியைத்தவிர எல்லாவற்றுக்குள்ளிருந்தும் பணத்தை பேருந்துக்குள் வீசுகிறார். மிகவும் அழகாக செய்திருக்க வேண்டிய காட்சியை சிறந்த நகைச்சுவைக் காட்சியாக்கி விட்டார் சசி. நெகிழ்வுக்குப் பதிலாக சிரிப்புதான் வந்தது.

na1 படத்தின் தேவையற்ற இரைச்சல், வாகன உபயோகம், காலம்காலமாக பழக்கத்திலிருக்கும் கதை சொல்லும் உத்தி, வில்லன் வீட்டுக்குள் நாய் இருப்பது, நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தறுப்பது, முக்கியமான வேலையாகச் செல்லும் வழியில் சாலையில் நின்றிருக்கும் எவளோ ஒருத்திக்கு வாகனத்தில் இடம் கொடுத்து, அவளுடன் மது அருந்தி நடனம் ஆடுவது, கதாநாயகனின் நண்பர்களுக்கு மட்டும் உடல் உறுப்பு இழப்பு, காது செயலிழப்பு, அதை வைத்து நகைச்சுவை, கதாநாயகனின் பாட்டியை சாகடித்து அனுதாபம் பெற முயல்வது என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை சமுத்திரக்கனி.

வசந்த ராகம், ரயில் பயணங்களில், ஒருதலை ராகம், பாலைவனச் சோலை காலத்துக்கதையை சற்றே நவீனப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். காதலை பிரதான மூலதனமாக கொண்டு இயங்கிவரும் தமிழ் திரைப்படச் சூழலில் எதையெதையோ சொல்லி சலித்துப் போய் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புளித்துப்போன திரைக்கதைதான் நாடோடிகள் திரைப்படம். 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால், 500 நாட்கள் வரை ஓடியிருக்கும்.

000

பரவலாக நல்ல படம் என்ற பேச்சு இருக்கிறதே என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நாடோடிகள் படத்தைப் பார்க்கச் சென்ற எனக்கு இது ஒரு படமல்ல ; நல்ல பாடம்.

000

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

54 comments:

 1. நல்ல விமர்சனம்.

  ஒரு படம் பார்க்கும் முன்பு நம் எதிர்பார்ப்பு என்ன என்பதை யோசித்து விட்டு பார்க்க வேண்டும். இல்லை என்றால் இது தான் நிலை.

  ஒரு பொழுது போக்கிற்காக சென்றிருந்தீர்கள் என்றால் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. AnonymousJuly 04, 2009

  'நாடோடிகள்' பற்றிய உங்களது பார்வையில் நேர்மையும், தெளிவும் இருக்கிறது என்றே அறிகிறேன். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால், உங்களது இந்தப் பதிவு குறித்து நான் கருத்துச் சொல்வது சரியானதல்ல.

  அதேநேரத்தில் சினிமா குறித்த எனது பார்வையை இங்கே பதிவு செய்ய விழைகிறேன்.

  சினிமா ரசனையைப் பிரித்துப் பார்ப்பதில் எள்ளளவும் எனக்கு உடன்பாடில்லை. சில்ரன் ஆஃப் ஹெவனை ரசித்துருகுபவனையும், சிலம்பாட்டத்தைக் கண்டு களிப்புறுபவனையும் ஒன்றாகவே பார்க்கிறேன். இந்தக் கருத்து, சற்று நெருடலை ஏற்படுத்தலாம். ரசிக்கப்படும் பொருள்தான் வெவ்வேறு. ரசிப்பவனின் மனநிலைதான் வெவ்வேறு. ஆனால், மனநிறைவு என்பது பொது. ஒரு படைப்பு அனைவராலுமே 'நல்ல' படைப்பு என்று சொல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை.

  'இயல்பு' என்ற ஒன்றை முழுக்க முழுக்கக் கொண்டிருக்கும் படம் தான் 'சிறந்த படம்' - 'உலக சினிமா' என்றெல்லாம் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இயல்பு மட்டுமல்ல... இயல்புக்கு மீறியவற்றைக் கொண்டிருப்பதும் நல்ல சினிமா என்றே கருதுகிறேன். அதாவது, இயல்பில் சாத்தியப்படாத ஒன்றை சினிமாவில் காட்டப்படுவதும் தவறல்ல.

  ReplyDelete
 3. உங்கள் விமர்சனம் அருமை. கிட்டத்தட்ட படம் பார்த்தது போலவே இருக்கின்றது. அதே போல் என்னத்தான் அப்படி மோசமாக இருக்குன்னு பார்க்கணும் என்றே தோணுது.

  //நகரின் முழு வடிவையும் கவர்ந்து காட்சியாக்குகிறது. மிக அழகான காட்சி. இதுபோல பல காட்சிகள்.//

  விமர்சனத்தில் கவித்துவம் புகுத்தும் விதமழகு.

  //சரவணன் காதலை நிறைவேற்றப் போராடி உதவி உடல், மன ரீதியான இழப்புக்குப் ஆளாகிறார்கள்.//

  என்ன இழப்பு என்று யோசிக்க வைக்கின்றது.

  ஏன் நன்றாக இல்லை என்று சொல்லி இருக்கும் கருத்துகள் ஏற்புடையவையாக இருந்தாலும் படம் பார்க்காமல் உங்கள் விமர்சனத்தை விமர்சிக்க இயலாது.

  ReplyDelete
 4. க்ளோபன் கருத்தோடு என்னால் உடன்ப்பட முடிகிறது..
  ஆனா இப்ப ஓடுற குதிரையுல இது கொஞ்சம் நல்ல குதிரை அவ்வளவு தான்..

  ReplyDelete
 5. தெளிவான பாரபட்சமற்ற விமர்சனம்.பொதுவில் சுமாரான படம்.முதிர்ச்சியற்ற நிலை படத்தில் பரவலாக தெரிகிறது,இசையையும் சேர்த்து. நன்றாகவே இழு இழுவென்று இழுத்திருக்கிறார்கள். சீரியல் பார்ப்பதுபோல் நிறைய இடங்களில் படுகிறது.ஆட்கள் தேர்வை பாராட்டலாம்.சிலருக்கு நடிப்பு என்பதே வரவில்லை.சசிகுமாரை ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்படம் அவருக்கு ஒரு சறுக்கல்.ஒரு மெஸேஜ் சொல்லியிருப்பது நல்ல விசயம். ஆனா, அதுமட்டுமே வச்சுக்கிட்டு இழுத்திருக்கக்கூடாது. பேசாம, ரோட்ல போற வண்டிங்கள, ஓரமா உட்கார்ந்து வேடிக்கைப்பார்க்கலாம் போல.படத்துக்குள்ளயும் நிறைய அனாவசியமான காட்சிகள்.

  ReplyDelete
 6. //ஒரு காட்சியில் காதலர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு, “அய்யகோ... அவர்களிடம் பேருந்துக்கு பணமிருக்காதே..“ என்று உணர்வுவயப்பட்டு, கழுத்திலிருக்கும் சங்கிலி, சட்டைப்பை, பேண்ட் என தான் போட்டிருந்த ஜட்டியைத்தவிர எல்லாவற்றுக்குள்ளிருந்தும் பணத்தை பேருந்துக்குள் வீசுகிறார். மிகவும் அழகாக செய்திருக்க வேண்டிய காட்சியை சிறந்த நகைச்சுவைக் காட்சியாக்கி விட்டார் சசி. நெகிழ்வுக்குப் பதிலாக சிரிப்புதான் வந்தது.//

  அந்த காட்சியில் சசி என் கிட்ட ஒன்னுமே இல்லடா....எங்கிட்டாச்சும் போய் நல்லாஇருங்கடா” என்று சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து..ஆனால் அவர்கள் வைத்த காட்சியும் சரி என்கிறது என் திரைக்கதை அறிவு

  ReplyDelete
 7. படம் இன்னும் பார்க்கவில்லை!! உங்கள் விமரிசனம் அருமை!!

  ReplyDelete
 8. //பொருளாதார சிக்கலும்தான் காரணம் என்பதைக்கூட உணர இயலாத மனமுதிர்ச்சியற்ற கதாநாயகன் சசிக்குமார் //

  கதாநாயகன் சூப்பர்மேனாதான் இருக்கனுமா -:)

  ReplyDelete
 9. //வினோத்கெளதம் said...
  க்ளோபன் கருத்தோடு என்னால் உடன்ப்பட முடிகிறது..
  ஆனா இப்ப ஓடுற குதிரையுல இது கொஞ்சம் நல்ல குதிரை அவ்வளவு தான்..
  //

  ரிப்பீட்டு

  ReplyDelete
 10. //உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் சிறு குன்று போலான மலை மேல் நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஒளிப்பதிவுக்கருவி 360 கோணம் போன்றதொரு தோற்றத்தில் நகரின் முழு வடிவையும் கவர்ந்து காட்சியாக்குகிறது. மிக அழகான காட்சி. இதுபோல பல காட்சிகள்.//

  இது போன்ற விமர்சன பாணியை ஏன் மற்றவர்கள் பின்பற்றுவதில்லை என்று தெரியவில்லை.

  உங்கள் கண்ணோட்டம் அருமை வாசு சார்.

  ReplyDelete
 11. கிளிஷேக்களை கிழிச்சு தொங்கப்போட்டுருக்கீங்க. அதுக்கு முதல்ல ஒரு ஷொட்டு :))

  நான் இன்னமும் படம் பார்க்கலை. அதனால உங்க விமர்சனத்தை மாத்திரம் எடுத்துக்கிட்டு இந்த பதிவைப்பத்தின என்னோட கருத்தை சொல்றேன்.

  எனக்கென்னமோ நீங்க உலகத்திரைப்படத்தை ரசிக்கப்போய் ஏதோ மசாலாப்படம் கிடைச்சதுங்கற நினைப்புல எழுதுன விமர்சனமாத்தான் இதைப் பார்க்கத்தோணுது.

  ஒரு நல்ல திரைப்படத்துக்கான அளவீடுகள் நீங்க எதை வச்சு குறிக்கறீங்கன்னு தெரியலை. இருப்பினும் இந்த படத்தை நான் பார்ப்பேன்னுதான் நினைக்குறேன்:)

  விமர்சனப்பார்வைக்கு நன்றி.

  -சென்ஷி

  ReplyDelete
 12. விமர்சனம் செய்யவென்றே படம் பார்த்தீங்களோ!

  படத்தில் ஒளிப்பதிவைத்தவிர உங்கள் ஞானக்கண்ணுக்கு நல்ல விசயமே தெரியலையா

  ரொம்ப காட்டமா எழுதி இருக்கீங்க.

  மற்றபடி உங்கள் எழுத்துக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா!

  ReplyDelete
 13. மிகவும் சராசரி இயக்குநரின் மனோபாவத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இப்படம் குறிப்பிட்டு பேசக்கூடிய படம் அல்ல. அப்போது ஏன் இப்படம் குறித்து நாம் விமர்சிக்கவோ, நன்றாக வரவில்லையே என விவாதிக்கவோ வேண்டும்.//

  இப்போது தான் நான் இப்படத்தைப் பார்த்து முடித்தேன், உங்கள் விமர்சனத்தோடு நிரம்பவே ஒத்துப் போகின்றேன்.

  ReplyDelete
 14. வாசு சார்.. உங்கள் விமர்சனம் ஆச்சரியப்படுத்துகின்றது. பல பேர் அதன் சிறப்புகளை ஏகத்துக்கு சொல்லியபின்பும் அதிலிருந்து விலகி உங்கள் பார்வையை நேர்மையா வைத்திருப்பது பாராட்டதக்கது.

  ReplyDelete
 15. சொல்ல நெனைச்சேன்.. ஐயா சொல்லிட்டீங்க. ஓவர் ரேட்டிங் உச்சகட்டத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது நம்ம ஊர்ல...

  ReplyDelete
 16. நல்ல விமர்சனம் வாசு சார்

  ReplyDelete
 17. ம்ஹூம்..
  நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகவேமாட்டேன்...!
  ஒரு வேளை சசி பேசுவது, உங்களுக்கு காமெடியாகத் தோணலாம்.
  அதுதான் எங்க‌ வட்டார வழக்கு...!
  ஒரு மாதிரி இழுத்து இழுத்து பேசுவாங்க..!
  எனக்கென்னவோ, நீங்க இந்த மாதிரி விமர்சனம் பண்ணவே படம் பார்த்தபோல் தெரிகின்றது.

  ReplyDelete
 18. நான் படம் பார்க்கவில்லை, என்னுடைய கருத்திற்கும் இடமில்லை நண்பா...

  எதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த உணர்வு உங்களின் விமர்சனத்தில் தெரிகின்றது அவ்வளவுதான்...

  ReplyDelete
 19. அதீத எதிர்பார்ப்பு சில சமயம் ஏமாற்றம் தந்து விடும். ஆனால் இயல்பற்ற நடிப்பு, சுமாரான இசையமைப்பு, யூகிக்கக் கூடிய காட்சி அமைப்புகள் என்றி நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தால் எப்படியும் சுமார் ரகம் தான் போல!

  ReplyDelete
 20. படம் பார்க்கவில்லை. கமர்ஷியல் சினிமாவில் காசு பண்ண வேண்டும்.ஜெயிக்க வேண்டும். அது தான் அவர்கள் இலக்கு.


  படத்தை பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 21. விமர்சனம் என்ற பெயரில் ​வெறும் கதையை மட்டுமே எழுதுபவர்கள் மத்தியில் இது ஒரு பளிச் இடுகை. திரைப்படத்தின் எல்லாக் கூறுகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது நல்ல முயற்சி. படத்தின் வணிக ரீதியான வெற்றி மட்டுமே பிற படங்களின் வணிகத்தரத்தை ஒட்டி அமைகிறது. ​மொத்த படத்தின் தரத்தை பிற படங்க​ளைக் ​கொண்டு மிதிப்பிடுவது சாத்தியப்படாது.

  ReplyDelete
 22. படத்தைப் பற்றி நீங்க சொல்லியிருப்பது அத்தனையும் ஏற்புடையதே.ஆனால் எனக்கு பிடிச்சிருந்தது காரணம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிளாங்கா போனதுதான்.

  நீங்க பதிவுலகில் படத்திற்கான பாஸிட்டிவ் விமர்சனங்களை படித்து ஏகத்துக்கு எதிர் பார்ப்போடு போயிருப்பீர்களாயிருக்கும்.
  இல்லாவிடில் அட்லீஸ்ட் 'நெறஞ்ச மனசு' என்ற மகா மொக்கை கொடுத்த சமுத்திரகனி படமா? பரவாயில்லையேங்கிற எண்ணமாவது தோன்றியிருக்கும்.

  //உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் சிறு குன்று போலான மலை மேல் நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஒளிப்பதிவுக்கருவி 360 கோணம் போன்றதொரு தோற்றத்தில் நகரின் முழு வடிவையும் கவர்ந்து காட்சியாக்குகிறது. மிக அழகான காட்சி. இதுபோல பல காட்சிகள்.//

  நானும் இந்தக் காட்சியை மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 23. உங்கள் விமர்சனம் உங்கள் கருத்து!

  ஆனால் என்னைப்பொறுத்தவரை,
  இது தமிழ்சினிமாவின் பெரும்பாலான இயக்குனர்களுக்கும் 'அரிப்பெடுத்து' போலி காதலர்களுக்குமான சவுக்கடியாக இருக்கிறது. மிக அருமையான திரைப்படம். நண்பர்களின் அந்த வலியை திரையில் காட்டியிருக்கும் விதம் மிக மிக அருமை.

  ReplyDelete
 24. படம் பார்க்க போகவேண்டும் என்று மனதில் ஒரு ஐடியா இருந்தது.இப்போது இல்லை.

  ReplyDelete
 25. //பரவலாக நல்ல படம் என்ற பேச்சு இருக்கிறதே என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நாடோடிகள் படத்தைப் பார்க்கச் சென்ற எனக்கு இது ஒரு படமல்ல ; நல்ல பாடம்.//

  அகநாழிகை, எனக்கும் இதே அனுபவம் தான்.

  படத்தின் குறைகளை எனது பதிவில் நானும் சொல்லி இருக்கிறேன்

  ReplyDelete
 26. அதெப்படிங்க, பத்திரிக்கைகளையும், வலையையும் நம்பி படத்துக்குப் போனீங்க?

  அந்த படம் உங்களுக்குக் கொடுத்தது ஒரே ஒரு ப்ரொயோஜனம்,... இந்த பதிவு ஒரு நல்ல விமர்சனம்.

  இப்ப கிராமத்து சப்ஜெக்டுதான் ஓடிக்கிட்டு இருக்கு!!!! வர்ற படமெல்லாம் அப்படித்தான்.... They just follow the f**ing previous successes நம்மாளுங்க திருந்த மாட்டாங்கய்யா...

  ReplyDelete
 27. ஆதவா,
  படம் பார்த்துவிட்டு பின்னர் இதுபோன்ற பின்னூட்டங்களை இடுவது நன்று என நினைக்கிறேன்.

  நாடோடிகள் - நல்ல தரமான திரைப்படம்.

  ReplyDelete
 28. க்ளோபன்.... உலக சினிமா குறித்த உங்கள் கருத்தே என்னுடையதும். இயல்பு என்பது சலனமற்ற ஆற்றைப் போன்றது. அதன் மீறல், கடந்து செல்லும் நதியின் ஓசையைப் போன்றது.

  உலக சினிமா அல்லது சிறந்த படம் என்பது அவரவர் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தது. நீங்கள் சொன்னது போல, இயல்பில் சாத்தியமாகாத விஷயத்தை கவிதையிலும் உணர்கிறோம். அது ஒரு சிறந்த கவிதையாகிறது. அது விர்சுவலாக திரையில் காணும் பொழுது ஏன், சிறந்த படமாகாது??

  நல்லதொரு பின்னூக்கம்!! Globen

  ReplyDelete
 29. ஊர்சுற்றி

  நாடோடிகள் படம் "நல்லபடம்", அல்லது "தரம்தாழ்ந்த படம்" என்று நான் சொல்லவேயில்லை. ஏனெனில் நான் அதை இன்னும் பார்த்திருக்கவில்லை, அகநாழிகையிடம் வலையில் சொல்லுவதை மட்டும் நம்பி ஏன் படத்திற்குப் போனீர்கள் என்று கேட்டேன்!!! தட்ஸ் இட். மேலும், தரமான, தரமற்ற படமென்பது அவரவர் பார்க்கப்படும் கோணத்தையும், புரிதலையும் பொறுத்தது. உங்களைப் பொறுத்தவரையில் அது நல்ல தரமான திரைப்படம். என்னைப் பொறுத்தவரையிலும் அது ஒரு படம். அவ்வளவே1

  ReplyDelete
 30. Hi

  There are people in the world, who can not digest the victory of others. The author of this article belongs to this category.

  What he wants? Vijay/Ajith/Simbu movies?

  The Team had developed a story which is happening here in our soil. Not in USA/Europe..

  So please be true to yourself..

  Sankara N Thiagarajan
  Amsterdam, NL

  ReplyDelete
 31. //ஒரு காட்சியில் காதலர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு, “அய்யகோ... அவர்களிடம் பேருந்துக்கு பணமிருக்காதே..“ என்று உணர்வுவயப்பட்டு, கழுத்திலிருக்கும் சங்கிலி, சட்டைப்பை, பேண்ட் என தான் போட்டிருந்த ஜட்டியைத்தவிர எல்லாவற்றுக்குள்ளிருந்தும் பணத்தை பேருந்துக்குள் வீசுகிறார். மிகவும் அழகாக செய்திருக்க வேண்டிய காட்சியை சிறந்த நகைச்சுவைக் காட்சியாக்கி விட்டார் சசி. நெகிழ்வுக்குப் பதிலாக சிரிப்புதான் வந்தது.

  //
  இந்த காட்சியின் போது நான் பார்த்த தியேட்டரில்
  செம கைதட்டு. எனக்கும் பிடித்திருந்தது.
  ஒருவேளை எல்லோரும் நிறை சொல்கிறார்கள்
  என்று நீங்க குறை சொல்றிங்க போல......

  ReplyDelete
 32. Hi,

  This Raj from Bangalore.. and first time i am reading ur writing..

  This is very bad way that u r making comments.... about this movie..

  You are only complaining not referring any good reference to make your words valid.

  It is really good movie and feels it is one of good collection of tamil movie.

  The movie express the practical & realistic feeling and emotions of common persons and visualized in artistic way other than few commercial song.

  This movie far far better than other super man & super hero's movie. This people are coming out with better film. Also, you cannot define this is international movie structure.

  So, don't try to discourage this team and you always propose + an - but with details of fault and with mind setting of owner [director].

  Thanks,
  K Kamal Raj

  ReplyDelete
 33. நல்ல விமர்சனம்.

  இங்கே வந்துள்ள பின்னூட்டங்களைத் தொகுத்து "நல்ல சண்டைக்காட்சிகள் நிறைந்த படம்" என்று வெளியிடலாம்.

  ReplyDelete
 34. வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கீங்க வாசு.. ஆனா எனக்கு இதுல உடன்பாடு இல்ல.. நான் ரொம்ப ரசிச்சு பார்த்த படம்.. thats ok.. opinions do differ..:-)))

  ReplyDelete
 35. AnonymousJuly 05, 2009

  //இயக்குநராக ‘சுப்ரமணியபுரம்‘ தயாரிப்பாளராக ‘பசங்க‘ இரண்டு படங்களிலும் தன் திறனை வெளிப்படுத்திய இவர், நடிப்பதற்காக வந்து இயக்குநரானவர் என்று அறியப்படுகிறது. ஆசை யாரை விட்டது ? நாடோடிகள் படத்தின் மூலம் சசிக்குமாரும் நடிக்க முயற்சித்திருக்கிறார்.//

  அப்போ சுப்ரமணியம் படத்தில நடித்தது சசிகுமார் இல்லையா??!!

  ReplyDelete
 36. AnonymousJuly 05, 2009

  sorry சுப்ரமணியபுரம்....

  ReplyDelete
 37. பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன்....ம்..!

  தேர்ந்த பார்வை.

  ReplyDelete
 38. ஹ்ம்ம்ம்ம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்..

  ReplyDelete
 39. அடங்கொன்னியா...!!


  தலைவரே... கொல வெறியோட எழுதீருக்கீங்க.........?????

  ReplyDelete
 40. உங்களுக்கு சிரிப்பைத் தருகிற அதே பேருந்து காட்சிதான் என்னைப் பெரிதும் ஈர்த்தது... சரி, அவரவருக்கு அவரவர் பார்வை...

  ReplyDelete
 41. நண்பர் அகநாழிகை,
  நேற்று உங்கள் விமர்சனம் படித்தேன்,பின்பு என்னடா?இந்த ஆள் இப்படி சொல்லுகிறார்?ஒருவேளை விஜை ரசிகரோ?
  அயன் படத்தை நல்ல படம்னு சொன்ன ஆளாச்சேன்னு?
  மாற்று கருத்துக்கள் எழ ,நல்ல ப்ரின்டாக டவுன்லோடு போட்டு உடனே பார்த்தேன்.
  நீங்கள் கேட்ட அதே கொர் ஓசை முதல் எட்டு ரீலுக்கு தொடர,
  இந்த படத்தில் சசியின் அறிமுக காட்சி பாக்யராஜை அப்பட்டமாக நினைவு படுத்தியது.
  படத்தில் ஆந்திர பதிப்புக்கு தேவையோ ?மந்த்ரா போன்ற ஒரு நாட்டு கட்டை வைத்து தேவை இல்லாத பாடல்(அந்த சுந்தர் சி பாபு வின் ஐடியாவோ?)
  படத்தில் நன்றாக நடித்தவர்கள் இரண்டே பேர்.
  அந்த நாமக்கல் வில்லன்.(பசங்க பட ஆசிரியர்?)சுருட்டை முடி நண்பர் (செவித் திறன் இழக்கும் நபர் )
  படத்தின் அந்த நொறுக்குத்தீனி நாயகி வரும் இடங்களும் அவளின் உடல் மொழிகளும் மீண்டும் பருத்தி வீரன் பிரியா மணியை நினைவூட்டியது.
  அதுவும் சில இடங்களில் பாலா வைப்பது போல டி ஷர்ட் போட்டு வரும் தங்கை, அழுதபடி குலுங்கி ஓடி வந்து தேரரும் காட்சிகள்,(ஏன்யா?)
  சசிகுமாரை நம்பியிருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.(ஒருத்தனை உசுப்பேத்தி உசுப்பேத்தியே )
  அந்த சரவணா பாத்திரம் (கண்டிப்பா காசு குடுத்து நடிக்க வந்திருப்பான்)
  அவனை எல்லாம் நிக்க வைச்சு?
  அவன் நடிப்புக்கு ஜாக்குவார் தங்கம் மகன் நடிப்பே தேவலை(பார்க்க படம் சூர்யா)
  அந்த பொண்ணு ஐயோ மகா அல்பமான நடிப்பு(சித்தி சீரியல்?பொண்ணு)
  சசி உங்கள் திறமையை இப்படி வீணாக்க வேண்டாம்.
  சமுத்திரக்கனி ,இந்த முறை நீங்கள் அமைத்த கூட்டணி தான் இந்த வெற்றியை அமைத்துள்ளது.(சசிகுமார்)
  இனி மக்கள் உஷாராய்டுவங்கோ.
  சசியின் அப்பா பிதாமகன் மகாதேவனை நினைவு படுத்தினார்,அனால் ஏமாறி விட்டார்.
  லாரன்சு மாதிரியே ஒரு நண்பன்
  ஹலோ நீங்க என்ன பமாகா எதிர்ப்பு அணியா?
  படத்தில் அன்பு மணி மாதிரியே மேக் அப் ?
  எதேச்சையாக அமைந்தது என்று சொல்லாதீர்கள்.
  பபூன் மாதிரி இருக்கிறது.
  அய்யோ அந்த பாடல்.
  சம்போ.
  கடவுளே பத்து நிமிடத்திற்கும் மேலாய் வருகிறது?
  தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களுக்கு என் அனுதாபங்கள்.
  படம் ஒரு தடவை சசிகுமார் என்னும் பெயருக்காக பார்க்கலாம்.
  அனால் "never again"

  ReplyDelete
 42. நானும் படம் பார்க்க வில்லை, பதிவில் விமர்சனகள் மட்டும் (அதுவும் கூட அரை குறையாகத்தான்) படித்தேன்.

  நீங்கள் சொல்வது போல இருக்கிற குதிரைகளில் இந்த குதிரை கொஞ்சம் பரவாக இல்லை. ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு அது ரிலீஸ் ஆகும் காலமும் ஒரு காரணம்.

  அப்படித்தான் சுப்பிரமணய புரம், சந்திரமுகி போன்றவை வெற்றி படங்கள் ஆகின.

  ௨௦- ௨௦ விளையாட்டு போல தமிழ் படங்களும் நேரத்தை குறைக்கலாம். (1 hour or 1.30 hrs, I think that would pull crowd like me)

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 43. AnonymousJuly 06, 2009

  என்னைப் பொருத்த வரையில் உங்களோடது சுத்த பேத்தலான விமர்சனமுங்க...படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

  ReplyDelete
 44. நம்ம எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி செய்யிற படங்கள் வருவது அரிதுதான். விமர்சனம் என்பது அவரவர்கள் பார்வையையும் ரசனையையும் பொறுத்தது. இந்த படத்தையே இரண்டு முறை பார்த்தவர்களும் உண்டு.

  ReplyDelete
 45. மாமா, பாவம் சசி, சமுத்ரக்கனி, படத்த துவச்சி இப்படி தொங்க போட்டுட்டீங்களே.

  ReplyDelete
 46. ஒரு சினிமாவை விமர்சிக்கத் தெரியாதவன் என்பாதாலும், வெளிவரும் படங்களில் கிட்டத்தட்ட எல்லா படங்களையுமே பார்த்துவிடுபவன் என்கிற முறையிலும் எனக்கு இப்படம் பிடித்துப்போய்விட்டதோ என்று தெரியவில்லை. "எவளோ ஒருத்திக்கு வாகனத்தில் இடம் கொடுத்து, அவளுடன் மது அருந்தி நடனம் ஆடுவது போன்ற ஒரு சில காட்சிகளைத் தவிர்த்து படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்" இது போன்ற விமர்சனங்களை படம் பார்த்த முதல் நாளே தியேட்டரில் கேட்க முடிந்தது. படத்தின் மற்ற காட்சிகள் அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்குப் பிடித்துப்போனதால், இது போன்ற ஒரு சில காட்சிகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால்.. நண்பா.. நீங்கள் சொல்கிற அளவிற்கு படம் மோசம் எனத் தெரியவில்லை. :-)

  ReplyDelete
 47. AnonymousJuly 06, 2009

  உங்களின் இந்த விமர்சனத்தில் ஏற்றுகொள்ள முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன . சிலருக்கு மற்றவர்கள் எதாவது நல்ல இருக்கு, ரொம்ப நல்ல இருக்கு என்று கூறினால் அவர்கள் அதை ஏற்று கொள்ளவதில்லை. உங்களின் விமர்சனம் இந்த வகையை சார்ந்தது போல இருக்கிறது . இந்த படத்தை ஒரு தரசு கொண்டு விமர்சித்தால் அதில் உள்ள + points மட்டுமே அதிகம் நாம் காணமுடியும்.. தான் புடித்த முயலுக்கு முன்றே கால் என்பவரிடம் என்னத்த சொல்லுறது ..

  என்னை மாதுரி படங்களை பார்த்து ரசிக்கும் நபர்களுக்கு உங்களின் விமர்சனம் ஒரு தூசி. படத்தை விமர்சனம் பண்ணும் என்ன அன்பர்களுக்கும் ஒரு படம் நல்லவோ இல்ல மோசமா இருந்த அத பத்தி எழுதுங்க அத விட்டு மத படத்தோட இத இணைச்சி எழுதி எங்கள மண்டை காய வைகதிங்க .

  ReplyDelete
 48. மன்னிக்கவும் உங்களின் விமர்சனம் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை .

  ReplyDelete
 49. James RajendranJuly 07, 2009

  (என்னைப் பொருத்த வரையில் உங்களோடது சுத்த பேத்தலான விமர்சனமுங்க...)

  Yes I agree above.,

  Because entire Subject is below 25 age peoples Storey

  James Rajendran / Coimbatore

  ReplyDelete
 50. விமர்சனம் படித்தேன்.சிலது உடன்பாடே.

  சசிகுமாரின் தங்கையாக நடிப்பவர் அபிநயா.காது கேளாதவர்.வாய் பேச முடியாதவர்.கேரளா.

  நண்பர்களின் காரியம் அரைவேக்கட்டுத்தனமாக பட்டு
  நமக்கு பிடிக்காமல் போகிறது.

  சினிமாசினிமாத்தனத்தோடுதான் இருக்க வேண்டும்.அப்போதுதான் கலெக்‌ஷன்.

  // ஒரு காட்சியில் சிறு குன்று போலான மலை மேல் நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஒளிப்பதிவுக்கருவி//

  இது காமிராவை நட்டு வைத்து யார் வேண்டுமானும் எடுக்கலாம்.

  கேமிராக் காட்சி என்பது வேறு விஷயம்.

  ReplyDelete
 51. AnonymousJuly 11, 2009

  //‘அதே கண்கள்‘ என்றொரு பழைய படம். இசையிலேயே பயமுறுத்துவார்கள். அதுபோல பின்ணணி இசையின் மூலம் பயமுறுத்த முயல்கிறார் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு. பயத்திற்கு பதிலாக சிரிப்புதான் வருகிறது.//

  பாசு, உங்கள சிரிக்க வைக்க தான் அந்த மீசிக்...

  //முக்கியமான வேலையாகச் செல்லும் வழியில் சாலையில் நின்றிருக்கும் எவளோ ஒருத்திக்கு வாகனத்தில் இடம் கொடுத்து, அவளுடன் மது அருந்தி நடனம் ஆடுவது//
  அட யாருப்பா இவரு...இந்த நிமிஷம் நண்பனுக்காக வாழு அப்படின்னு சொல்றாங்க...இத தப்பா புரிஞ்சிக்கிட்டு....

  படம் பேரு நாடோடிகள்...( ஊர் சுத்துற பயலுவோ).

  //பல மோசமாக படிக்கும் மாணவர்கள் இருக்கும் வகுப்பில், சுமாராகப் படிக்கும் மாணவன் முதலிடம் பெறுவதில்லையா.. அதுபோலத்தான்.//

  பல மொக்கை ப்லோகுக்கு இடைல, வந்து உங்க ப்லோக் படிக்கிரேன்ல....

  குத்துங்க எசமான் குத்துங்க...

  ReplyDelete
 52. AnonymousJuly 18, 2009

  நான் பார்த்ததிலே ஒரு மொக்கையான கிறுக்குத்தனமான விமர்சனம் இது தான், எப்படி ஒரு நல்ல படத்தை இந்த மாதிரி கிறுக்கன் தான் இப்படி எழுத முடியும், ஒரு நல்ல படத்துக்கு கீழே இருக்கும் விமர்சனத்தை படிக்கவும் http://aganaazhigai.blogspot.com/2009/07/blog-post_04.html

  ReplyDelete
 53. WONDERFUL VIMARSANAM. PLEASE CONTINUE

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname