Thursday, March 19, 2009

இரண்டு ‘குட்டி‘ கதைகள் (மெல்லிய இதயம் கொண்டவர்கள் படிக்க வேண்டாம்)

வாலிப, வயோதிக அன்பர்களே... இளைஞர்களே, இளநிகளே... மன்னிக்கவும் இளைஞிகளே...

ரொம்ப போரடிக்காமல்... நானும் இரண்டு ‘குட்டி‘ கதைகள் (சொந்த சரக்கில்லை, படித்ததுதான்) சொல்லி விடுகிறேன். படித்த பின் பிடித்திருந்தால், இரசித்ததை பின்மொழியில் தெரிவியுங்கள். ‘குட்டி‘ கதை பிடிக்கவில்லையென்றால் ‘குட்டி‘ சொல்லுங்கள்...

(குறிப்பு : மெல்ல்லிய... இதயம் கொண்டவர்கள் இக்கதைகளை படிக்க வேண்டாம்)


சரி, கதைக்கு போவோம்.


கதை : 1

பல ஊர்களுக்கும் தேசாந்திரியாக சுற்றிச் சென்று பிச்சை பெற்று வாழ்க்கையை கழிக்கும் துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் புதியதாக ஒரு நகருக்குள் சென்ற அவர் தனக்கு முன்னே, ஒரு காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் நீண்ட கொம்பை வைத்து தரையில் ‘தொம்‘ தொம்‘ என சப்தம் எழுப்பியபடி நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை கண்டார். அவனது செய்கையும், ஒரு காலில் சலங்கை அணிந்திருந்த காட்சியும் வித்தியாசமாக இருந்ததால் அன்று முழுவதும் அவன் சென்ற வழியெல்லாம் பின்னால் சென்றார்.

இருட்டத் தொடங்கியதும், அந்த இளைஞன் ஊரின் கோடியில் இருந்த ஒரு சத்திரத்தில் சென்று தங்க ஆயத்தமானான். அவன் பின்னாலேயே வந்த துறவியும் அவனுக்கு அருகில் சென்றார். அவன் எதற்காக ஒரு கையில் கம்புடனும், ஒரு காலில் சலங்கை அணிந்தும் இருக்கிறான் என்று அறிந்து கொள்ள அவருக்கு அதிக ஆர்வமாக இருந்தது.

அவனருகில்சென்று அமர்ந்த துறவி ‘தம்பி, இன்று காலை முதல் நான் உன்னை பின் தொடர்ந்து வருகிறேன். ஒரு கையில் கம்பு, ஒரு காலில் சலங்கை மணி என்ற கோலத்தில் நீ இருப்பதன் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா ?“ என்றார்.

“ அதுவா ஐயா, நான் எந்த உயிர்களுக்கும் துன்பம் இழைக்காமல் வாழ விரும்புகிறேன் “ என்று பதில் கூறினான் அந்த இளைஞன்.

“நல்லது தம்பி, அதற்கும் உன் கோலத்திற்கும் என்ன தொடர்பு“ என்றார் துறவி.

“ஐயா, நான் நடந்து வரும் போது கம்பினால் நிலத்தில் தட்டி ஒலியெழுப்பியபடி வருவேன், அப்போது பூச்சிகள், சிறு உயிர்கள் விலகிச் சென்று விடும். அதே போல சலங்கை மணி ஒலி கேட்டும் உயிரினங்கள் விலகிச் சென்று விடும். இதன் மூலம் உயிரினங்களுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாமல் இருக்கிறேன்“ என்றான் இளைஞன்.

துறவிக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. “வயதில் இளையவனாக இருந்தாலும் உன்னுடைய நோக்கம் மேன்மையானதாக உள்ளது“ என்று இளைஞனை பாராட்டினார்.

பின்னர், “தம்பி இதற்கு முன் ஏதாவது பாவ காரியம் செய்தது உண்டா ?“ என்று கேட்டார் துறவி.

சிறிது நேரம் யோசித்த இளைஞன், சற்றே தயக்கத்துடன் கூறினான் “ஆம் ஐயா, எனது வீட்டின் பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஒரு முறை உடலுறவு கொண்டேன்.“

சற்றே குரலை உயர்த்தி “வேறு பாவ காரியம்...“ என்றார் துறவி.

“ஒரு முறை என் எதிர்வீட்டில் உள்ளவரின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டு, அது ரொம்ப நாள் நீடித்தது ஐயா“

சலிப்புற்ற துறவி, விரக்தியான குரலில் “வேறு ஏதாவது“ என்றார்.

“வேறொருவர் மனைவியுடன் எனக்கிருந்த தொடர்பு பல பெண்களுக்கு தெரிந்து, அவர்கள் யாரிடமும் தெரிவித்து விடாமல் இருக்க நிறைய பல பெண்களிடமும் தொடர்பு ஏற்பட்டு விட்டது ஐயா“ என்றான் இளைஞன் தயங்கித் தயங்கி,

துறவிக்கு கடும் கோபம் ஏற்பட்டு விட்டது.

“தம்பி, நீ மணி கட்ட வேண்டிய இடம் கால் அல்ல“ என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றார்.


******


கதை : 2

மழை பொய்த்துப் போய், பூமி வறண்டதால் விவசாயம் செய்து நஷ்டப்பட்ட விவசாயி ஒருவன் தன்னிடமிருந்த ஒரே மாட்டையும், கன்றுக்குட்டியையும் விற்று பிழைக்க முடிவு செய்தான். மாட்டை விற்பதானால் சில மைல் தூரத்தில் உள்ள பக்கத்து ஊருக்கு சென்றுதான் விற்க வேண்டும். பக்கத்து ஊருக்கு செல்வதானால் காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். தன்னிடமிருந்ததில் புதியதான வேட்டியை கட்டிக் கொண்டு மாட்டையும் கன்றையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்கு புறப்பட்டான் விவசாயி.

போகிற வழியில் நடுக்காட்டில் இரவாகி விட்டது. எப்படியாவது விடிவதற்குள் போய் விடலாம் என வேகமாக நடந்து கொண்டிருந்தான்.

திடீரென எதிரே இரண்டு திருடர்கள் வந்து விட்டனர்.

“டேய் மரியாதையா உன் கிட்ட இருக்கற பணத்த கொடு“ என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்கள் திருடர்கள்.

விவசாயி பயந்து போய் “ஐயோ, என் கிட்ட ஏது பணம். நானே விவசாயம் செஞ்சு நொந்து போய், நஷ்டப்பட்டு மாட்டை விற்க போயிட்டிருக்கேன்“ என்றான்.

பணம் இல்லை என்றதும் கோபமான திருடர்கள் அவனைப் பிடித்து அருகே இருந்த மரத்தில் கட்டிப்போட்டு விட்டு மாட்டை ஓட்டிக் கொண்டு சென்று விட்டனர்.

இரவு முழுவதும் “காப்பாத்துங்க... காப்பாத்துங்க“ என்று கத்தி சோர்ந்து போனான் விவசாயி.

பொழுது விடிந்ததும் இரண்டு பேர் அந்தப் பக்கமாக வந்த இரண்டு பேர் விவசாயி கத்திக் கொண்டிருந்ததை பார்த்து அவனை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு காப்பாற்றினார்கள்.

கட்டை அவிழ்த்து விட்டதுதான் தாமதம்... சுற்றும் முற்றும் பார்த்த விவசாயி, அருகில் இருந்த மரத்தில் இருந்து ஒரு கொம்பை உடைத்தான். உடைத்த கொம்பை எடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக் குட்டியை அடியோ அடியென்று அடிக்கத் துவங்கினான்.

காப்பாற்றிய இருவருக்கும் கடுமையான கோபம் வந்து விட்டது. “அடே மடையா, ஆபத்திலிருந்து உன்னை காப்பாற்றியதற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் வாயில்லா ஜீவனான அந்த கன்றுக் குட்டியை போய் இரக்கமில்லாமல் அடித்துக் கொண்டிருக்கிறாயே“ என்று கூறினர்.

அதற்கு அந்த விவசாயி “பின்ன என்ன சாமி... நானும் ராத்திரி புஃல்லா கத்தறேன், நான் உன் அம்மா இல்ல... அம்மா இல்லன்னு... எங்க சாமி நான் கத்துனத கேட்டுச்சு அது“ என்றான்.


******


அவ்ளோதான்.

32 comments:

 1. \\மெல்ல்லிய... இதயம் கொண்டவர்கள் இக்கதைகளை படிக்க வேண்டாம்\\

  அப்ப நான் படிக்க இயலாதா ...

  ReplyDelete
 2. நண்பா.. உங்கக்கிட்ட இருந்து அஜால் குஜால் கதைகளா.. எதிர்பார்க்கவே இல்லை.. முதல் கதை கும்ஸ்.. இரண்டாவது கதை ஏற்கனவே தெரியும்.. நடத்துங்க..

  ReplyDelete
 3. ரெண்டு கதைகளும் ஒரு மார்க்கமாதான் இருக்கு :)

  ReplyDelete
 4. இஃகி, இஃகி..

  செம குஜாலா கீதுப்பா...

  ReplyDelete
 5. முதல் கதையில் எனக்கு அப்படி ஒன்றும் விரசம் தெரியவில்லை... இரண்டாம் கதை ஓரளவு இருந்தது!!! (நாங்க இதைவிட அதிகம் படிப்போம்ல...ஹி ஹிஹி)

  படிச்சு எழுதின நேரத்தைப் பாருங்க... நடுராத்திரி!!! ம்ஹூம்.. இன்னிக்கி என்ன கனவோ?

  ReplyDelete
 6. நானும் வந்தேன்.கதைகள் இரண்டையும் படிச்சிட்டேன்.

  ReplyDelete
 7. ரசிக்கும்படி இருந்தது இரண்டு கதைகளும்

  ReplyDelete
 8. நட்புடன் ஜமால் said...
  \\மெல்ல்லிய... இதயம் கொண்டவர்கள் இக்கதைகளை படிக்க வேண்டாம்\\

  அப்ப நான் படிக்க இயலாதா ...//

  பாருங்க இந்த குறும்பை...
  அது உங்கள சொன்னது இல்ல, ஜமால்.
  நீங்கதான் இரும்பு மனிதராச்சே...

  ReplyDelete
 9. //நண்பா.. உங்கக்கிட்ட இருந்து அஜால் குஜால் கதைகளா.. எதிர்பார்க்கவே இல்லை.. முதல் கதை கும்ஸ்.. இரண்டாவது கதை ஏற்கனவே தெரியும்.. நடத்துங்க..//

  ReplyDelete
 10. நன்றி, கார்த்தி, சும்மா ஒரு மாறுதலுக்காக. (ஆனா நீங்க தப்பா எடை போட்டுட்டீங்க. இதுபோல கதை கைவசம் நிறைய இருக்கு)

  ReplyDelete
 11. //ரெண்டு கதைகளும் ஒரு மார்க்கமாதான் இருக்கு :)//

  ஷீ-நிசி, (பெயரை சரியா அடிச்சிருக்கேனா..?)
  எல்லாமே மனிதனை ஆற்றுப்படுத்தும் மார்க்கம் தான் நண்பா.

  ReplyDelete
 12. //இராகவன் நைஜிரியா said...
  இஃகி, இஃகி..

  செம குஜாலா கீதுப்பா...//

  குஜாலா இருங்க, குதூகலமா இருங்க...

  தேங்ஸ்சுப்பா..

  ReplyDelete
 13. //ஆதவா said...
  முதல் கதையில் எனக்கு அப்படி ஒன்றும் விரசம் தெரியவில்லை... இரண்டாம் கதை ஓரளவு இருந்தது!!! (நாங்க இதைவிட அதிகம் படிப்போம்ல...ஹி ஹிஹி)

  படிச்சு எழுதின நேரத்தைப் பாருங்க... நடுராத்திரி!!! ம்ஹூம்.. இன்னிக்கி என்ன கனவோ? //


  ஆதவா, கண்டிப்பா பேய்க்கனவுதான் உங்களுக்கு..
  அப்படி ஒரு படம் வெச்சுருக்கீங்க (ஏன் இந்த கொல வெறி)

  ReplyDelete
 14. //ஹேமா said...
  நானும் வந்தேன்.கதைகள் இரண்டையும் படிச்சிட்டேன்.//

  மிக்க நன்றி, தோழி ஹேமா.

  ReplyDelete
 15. //புருனோ Bruno said...
  ஹி ஹி ஹி//

  தங்கள் முதல் வருகைக்கு நன்றி, புருனோ.

  ReplyDelete
 16. முரளிகண்ணன் said...
  //ரசிக்கும்படி இருந்தது இரண்டு கதைகளும்//

  வாங்க முரளிகண்ணன்.
  நண்பா, நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். உங்களோட பேசணும்னு நினைச்சிட்டிருந்தேன். (கார்த்திகை பாண்டியனுடன் தொலைபேசியில் பேசும்போது)

  ReplyDelete
 17. //இளநிகளே... மன்னிக்கவும் இளைஞிகளே...//

  ஆரம்பமே ஒரு தினுசா இருக்கேனு நினைச்சேன்

  ReplyDelete
 18. //ஹேமா said...
  நானும் வந்தேன்.கதைகள் இரண்டையும் படிச்சிட்டேன்//

  நானும் கதை படிச்சிட்டேன்/.........

  ReplyDelete
 19. நன்றாக இருக்கிறது அண்ணா..முதன்முறையாக உங்களுடைய தளத்திற்கு வருகை தந்துள்ளேன்..

  ReplyDelete
 20. .

  உங்களை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டேன் அண்ணா

  ReplyDelete
 21. \\அன்பாக இருப்பதுதான் அன்பு\\ என்னைப்பற்றி எல்லாம் எழுதி இருக்கீங்க..

  என் பெயரும் அன்பு தான்

  ReplyDelete
 22. எஸ்.ஜெ சூரியா படம் பார்த்த எபெக்ட்டு போங்க...

  ReplyDelete
 23. அகநாழிகைக்கு என்ன ஆச்சு? ஸம்மர் ஸ்பெஷலா? முதல் கதை படிச்சதும் புரிஞ்சுது ரெண்டாவது புரியலை, மறுபடியும் படிச்சப்போ...ச்சீ...

  நடத்துங்க நடத்துங்க...

  ReplyDelete
 24. :)) நன்றி TVR.

  Rajeswari said...
  //இளநிகளே... மன்னிக்கவும் இளைஞிகளே...//

  ஆரம்பமே ஒரு தினுசா இருக்கேனு நினைச்சேன்//
  //ஹேமா said...
  நானும் வந்தேன்.கதைகள் இரண்டையும் படிச்சிட்டேன்//

  நானும் கதை படிச்சிட்டேன்/.........

  மிக்க நன்றி தோழி ராஜி.. மறுபடியும் நன்றி தோழி ஹேமா.

  //Anbu said...
  நன்றாக இருக்கிறது அண்ணா..முதன்முறையாக உங்களுடைய தளத்திற்கு வருகை தந்துள்ளேன்..
  உங்களை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டேன் அண்ணா//


  நன்றி த்தம்ம்பி நன்றி, இத நாழ்ன் வாழ்க்கையில என்னிக்குமே மறக்க மாட்டன் ‘அன்பு‘ த்தம்ம்பி. நல்லது சொன்னா உடனே பாலோ பண்ற உங்க பம்ப மதிக்கறன். வாழ்க... ‘அன்பு‘ த்தம்ம்பி நாமம்.
  கொஞ்சம் கேப் வுட்டு பாலோ பண்ணு அன்பு (சும்மா... தமாசுக்குதான்)

  ReplyDelete
 25. //Sriram said...
  எஸ்.ஜெ சூரியா படம் பார்த்த எபெக்ட்டு போங்க...//

  ரொம்ப நன்றி ஸ்ரீராம்.
  தங்கள் வருகை எனது உவகை.

  ReplyDelete
 26. //உமாஷக்தி said...
  அகநாழிகைக்கு என்ன ஆச்சு? ஸம்மர் ஸ்பெஷலா? முதல் கதை படிச்சதும் புரிஞ்சுது ரெண்டாவது புரியலை, மறுபடியும் படிச்சப்போ...ச்சீ...

  நடத்துங்க நடத்துங்க...//

  நன்றி உமா. (சம்மர் ஸ்பெஷலா..?)
  எங்க ஆளையே காணம்... எந்த ஊர்ல இருக்காப்ல...?

  ReplyDelete
 27. இரண்டாவது கதை ஏற்கெனவே படித்தது தான்,.. சாமி ஆசாமியா இருக்காரே.. கிளு கிளு தான்.. தொடர்ந்து வாரா வாரம் வருமா? ;)

  ReplyDelete
 28. LOSHAN said...
  //இரண்டாவது கதை ஏற்கெனவே படித்தது தான்,.. சாமி ஆசாமியா இருக்காரே.. கிளு கிளு தான்.. தொடர்ந்து வாரா வாரம் வருமா? ;)//

  லோஷன், வணக்கம். உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. ‘குட்டி‘க் கதைக்கு இருக்கிற வரவேற்பை பார்த்தால் மீண்டும் பதிவிட அதிக வாய்ப்புள்ளது. விரைவில் எதிர்பாருங்கள்.

  ReplyDelete
 29. முதல் கதையில் விஷயமும் இருந்தது விவகாரமும் இருந்தது
  எப்படியோ இரண்டும் ரொம்ப நல்லா இருந்தது

  ReplyDelete
 30. நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname