நூலிடையே சிக்குண்டு கிடக்கிறான் சிறுவன்
சிக்கலவிழ்க்க
முடிந்தும் முடியாமலும்...
அருகே
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது காற்றாடி
நூலுடன் தொடர்பறுந்து போய்...
அகாலமாய் செத்து அழுகின
நாயின் வாசத்தை
நினைவூட்டுகின்றது காற்று
ஒரு வாரத்திற்குப் பின்னும்...
கடக்கப்படாத மைதானத்தின் தூரத்தை
ஓரம் நின்று பார்க்கின்றான்
ஓட்டம் பயில வந்தவன்.
எந்த அவசரமுமில்லாமல்
சிக்கலிலிருந்து மெதுவாக
வெளியேறிக் கொண்டிருக்கிறான் சிறுவன்.
அருகே கிடக்கின்றது
படிக்கப் போவதாக வீட்டில் சொல்லி
எடுத்து வந்த புத்தகங்களும் நோட்டும்...
- பொன். வாசுதேவன்
(தமிழ் அரசி - 7.12.97 இதழில் ‘வாரம் ஒரு கவிஞர்‘ பகுதியில் வெளியானது)
வழக்கம் போலவே கவிதை அருமை நண்பா.. உங்கள் எல்லா கவிதையுமே அன்றாட நிகழ்வுகளை சற்று வித்தியாசமான கோணத்தில் அனுகுபவையாகவே இருக்கின்றன.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி, கார்த்தி, (ஊருக்குப் போய் வந்தாச்சா ?)
ReplyDeleteரிவர்ஸ் ஆர்டரில் படிக்கிறேன் :)
ReplyDeleteஅவ்வபோது பார்க்கக்கூடிய காட்சி அழகான கவிதை ஆகிவிட்டது. வாழ்த்துகள். உங்களை எப்பிடிக் கூப்பிட்டால் நெருக்கமாக உணர்வீர்கள்?
அனுஜன்யா
அனுஜன்யா... உங்கள் பெயரில் கூட ஏதோ வசீகரம் இருக்கிறது. உங்கள் உண்மைப் பெயரை தெரிந்து கொள்ளலாமா ?
ReplyDeleteஎன்னை அகநாழிகை, பொன்.வாசுதேவன், வாசுதேவன், வாசு என்றெல்லாம் நண்பர்கள் குறிப்பிடுவார்கள். வாசு என்பது பேச்சு வழக்கில் உள்ள சொல். நெருக்கமாக உணரும் சொல்லும் அதுதான். நீங்கள் விரும்பினால் என் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எண். 999 454 1010
அருமை!!! கார்த்திகைப் பாண்டியன் சொன்னது போல, வாழ்க்கை நடப்புகளை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள் (1997 ஆ? )
ReplyDeleteகேட்பாரற்று சிதறிக் கிடக்கும் நோட்டுகளை காற்றாவது படித்ததா?? தன் ஓங்கார வாயை வைத்து?? ஹிஹி ஹி.
///அவ்வபோது பார்க்கக்கூடிய காட்சி அழகான கவிதை ஆகிவிட்டது.///
ReplyDeleterepeateyyyy