அமர்ந்து
பாரம் வைத்தது போல் தலையழுந்தி
உள்நோக்கிப் பார்த்தது காகம்
கிளம்பத் தயாராக இருந்த
மின்சார ரயிலொன்றில்..
வாலினில் இடித்துக்கொண்டு
மெல்ல உள்நோக்கி பறந்து
நீந்தியது காற்றினில்.
இருக்கையொன்றின்மேல்
அமர்ந்த பொழுதினில்
காற்றில் அதன் இறகுகள்
வரிசை கலைந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாக
நீட்டிக்கொண்டிருந்தது.
இரயில் புறப்பட தயாரான போது கூட
அங்கிருந்து அசையவில்லை அது.
தொலைத்துவிட்ட எதையோ
தேடுவதைபோல்
தலையை இங்குமங்கும் நீட்டி
சின்ன விழியுருட்டி பார்த்தது.
இரயில் கிளம்ப
அதன் அசைவில்
சட்டெனப் பறந்து
மேல் நோக்கி சென்றது வெளியே...
- பொன். வாசுதேவன்.
* கணையாழி - மார்ச் 1993 இதழில் வெளியானது.
ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. சாதரணமா பாக்குற விஷயங்களையே கவிதையா.. அழகா பதிவு பண்ணி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteகொஞ்சம் இந்த word verificationஐ எடுத்து விடுங்க நண்பா.. கஷ்டமா இருக்கு..
ReplyDeleteநன்றி.. கார்த்திகை பாண்டியன், word verification எடுத்து விட்டேன். பிரிக் லேன் படம் பற்றி நிறைய எழுத நினைத்தும் முடியவில்லை, (கணிணி பிரச்சனை)பெங்காலி மொழியும், ஆங்கிலமும் கலந்து வரும் இப்படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் அருமையாக உள்ளது. படம் பார்க்க விரும்பினால் அனுப்புகிறேன். எஸ்.ரா. பற்றிய உங்கள் பதிவை படித்து விட்டு பின்மொழியிட்டு இருந்தேன். ஆனால் பதிவாகவில்லை. கணிணியில் தமிழ் எழுதுவதில் எனக்கு சில சிரமங்கள் உள்ளது. அதனால்தான் நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டேன்.
ReplyDeleteநன்றி நண்பா.. நான் நாளைக்கு உங்களை அழைக்கிறேன் .. அப்போது நான் எழுதும் முறையை உங்களுக்கு சொல்கிறேன்...
ReplyDelete