ஒன்றோடொன்று தானே
தடவிச் சிரிக்கிறாய்
எப்படிச் சாத்தியமாகிறது
ஒரு கணம் அழுது
உடன் சிரிக்க...
எதைப் தேடிப் பார்க்கிறாய்
பாழ்வெளியில் கையசைத்து
விரல் நீட்ட இறுகப்பற்றி
சிறு விழியுருட்டி
வெளி நோக்கும் உன்னை
பருகி வைத்த மிச்சமாய்
உற்றுப் பார்த்து
ஓய்கிறது விழிகள்
விதை புதைந்து வெளியாகும்
செடித் தளிராய்
யார் படைத்தார் உன்னை
இவ்வளவு அழகாய்.
- பொன். வாசுதேவன்
(புதிய பார்வை, 16-30 நவம்பர் 1997 இதழில் வெளியானது)
படமும் கவிதையும் கொள்ளை அழகு!
ReplyDeleteஎனக்குள் எழும் நெகிழ்வை வார்த்தைகளில் வடிக்க தெரியவில்லை
ReplyDeleteகொள்ளை அழகு படம்.
அப்பப்பா கவிதை வரிகள் அருமை.
// எதைப் தேடிப் பார்க்கிறாய்
ReplyDeleteபாழ்வெளியில் கையசைத்து
விரல் நீட்ட இறுகப்பற்றி
சிறு விழியுருட்டி
வெளி நோக்கும் உன்னை
பருகி வைத்த மிச்சமாய்
உற்றுப் பார்த்து
ஓய்கிறது விழிகள் //
சிறு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அனுபவித்து பார்த்துள்ளீர்கள்.
படம் மிக அருமை.
அருமையான கவிதை நண்பரே.. சிறு குழந்தையின் தேடல் என்னவாக இருக்கும்? நல்ல கற்பனை..
ReplyDeleteபடம் ரொம்ப அழகு.அந்த பெரிய பாப்பா சூப்பர்
ReplyDelete//விதை புதைந்து வெளியாகும்
ReplyDeleteசெடித் தளிராய்
யார் படைத்தார் உன்னை
இவ்வளவு அழகாய்.//
அருமையான ஒப்பீடு
//படமும் கவிதையும் கொள்ளை அழகு!//
ReplyDeleteஉங்கள் ரசனையான கருத்துக்கு நன்றி தீபா.
//எனக்குள் எழும் நெகிழ்வை வார்த்தைகளில் வடிக்க தெரியவில்லை//
ReplyDelete“குழலினிது யாழினிது என்பார்கள் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்“
வார்த்தைகளில் வடிந்து போய்விடுவதில்லை குழந்தைகளின் மீதான நேசம். வளர்ந்ததினால் நாம் இழந்த குழந்தைமை நினைவுகளை மீட்டெடுத்தலின் தொடர்ச்சியாகவே, குழந்தை செய்கைகள் எதுவானாலும் நெகிழ்கிறோம். மிக்க நன்றி, ஜமால்.
// சிறு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அனுபவித்து பார்த்துள்ளீர்கள்.//
ReplyDeleteஉண்மைதான்... இராகவ், இந்தக் கவிதை எழுதிய காலம் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. மிகச்சரியாக சொல்வதென்றால் 1995 டிசம்பரில் எழுதப்பட்ட இக்கவிதையின் கரு ‘குழந்தை‘ பற்றியது என்பதால் மட்டுமே, எளிமையான வார்த்தைகள் இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்துப் போய்விடுகிறது.
உங்கள் புதிய வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி இராகவ்.
//சிறு குழந்தையின் தேடல் என்னவாக இருக்கும்? //
ReplyDeleteஉணர்வறியத் தொடங்கும் பருவத்தில் குழந்தையின் தேடல் தொடுதலைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும். கருவறையிலிருந்து வெளிவந்து உலகில் சுவாசிக்க ஆரம்பிக்கும் குழந்தையின் முதல் தேடுகை ஸ்பரிசம். தொடுதலின் முலமே தாயையும், தந்தையையும் உணர்ந்து கொள்கிறது குழந்தை.
நன்றி, கார்த்திகைப்பாண்டியன்.
முதல் அந்தப் படம் கொள்ளை அழகு, மனதை அள்ளுகிறது,
ReplyDeleteஅப்படியே பின்னூடி வரும் வரிகள் ஒவ்வொன்றும் அப்படியே கண் முன் நிகழ்வதாய் விரிகிறது.
நல்லா இருக்கு.
நன்றி, ராஜி.
ReplyDeleteஉங்களோட “நினைவில் நின்றவன்“ (...?) சிறுகதையை படித்துவிட்டு பின்மொழியிட்டேன், ஆனால் பதிவாகவில்லை, நல்முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
//நல்லா இருக்கு//
ReplyDeleteரொம்ப மகிழ்ச்சி... அமிர்தவர்ஷினி அம்மா... உங்க முதல் வருகைக்கும், அன்பான வாழ்த்துக்கும்.
படம் அழகு
ReplyDeleteகவிதை அருமை
நன்றி அமுதா.
ReplyDeleteஇதுவும் மனதை மயக்கும் மழலைக் கவிதை. புகைப்படமும் மெருகு கூட்டுகிறது.
ReplyDeleteஅனுஜன்யா
நன்றி, அனுஜன்யா.
ReplyDelete