என்னைப் பற்றி

பொன்.வாசுதேவன்


1990களின் துவக்கத்தில் கணையாழி மற்றும் விருட்சம் இதழ்களில் அறிமுகக் கவிஞராக எழுதத் தொடங்கி, பரவலாக சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். 

*

'விருட்சம் கவிதைகள் (தொகுதி - 1)' மற்றும் 'காலச்சுவடு 100 கவிஞர்கள்' தொகுப்பிலும், வம்சி புக்ஸ் வெளியீடான 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன' தொகுப்பிலும் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

*


2009 முதல் ‘அகநாழிகை‘ என்ற பெயரில் சிற்றிதழும், பதிப்பகமும் நடத்தி வரும் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக ஒளியச்சு, புத்தக வடிவமைப்பு சார்ந்த பணிகளை செய்யும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அகநாழிகை பதிப்பகம் மற்றும் நயினார் பதிப்பகம் என்ற பெயர்களில் புதிய படைப்பாளிகளின் பனிரெண்டு புத்தகங்கள் இதுவரை வெளி வந்துள்ளது.


*


கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து தீவிர வாசிப்பு தளத்திலும், குறைந்த அளவு எழுத்துத் தளத்திலும் செயல்பட்டு வரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘ உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

வாசிப்பிலும், படைப்பிலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் வாழ்நாள் முழுவதும் ஆகச்சிறந்த முறையில் செயல்படுவதை விரும்புகிறார்.

*

தற்சமயம் மதுராந்தகத்தில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை.  சென்னையில் இளங்கலை வணிகவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இளங்கலை சட்டக்கல்வி முடித்து தற்போது  வழக்குரைஞராக பணி புரிகிறார். 


*Comments system

Disqus Shortname