Thursday, November 5, 2009

இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்களா…?

images (5) சமீபத்தில் மதுரையில் நடந்த ‘உயிர்மை புத்தக வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழா‘ நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கு இணைய எழுத்துக்களைப் பற்றி பேசும் போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. சாருநிவேதா தான் இணைய எழுத்துக்களையே வாசிப்பதில்லை என்றும், இணையத்தில் வெறும் குப்பைகள்தான் எழுத்தாக்கப்படுவதாகவும், இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றும் தனது கருத்தை கூறினார். எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில் இதற்கு நேரெதிர் கருத்தை முன் வைத்தார். இணைய எழுத்தில் பலர் நன்றாக எழுதுவதாகவும், அவர் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை வாசித்து வருவதாகவும் கூறினார். இரு வேறு பல தளங்களில் பதியப்பட்ட இந்த கருத்துக்கள் யோசிக்க வேண்டியவை.

எழுத்தார்வம் உள்ளவர்கள் எல்லோருமே எழுதுகிறார்கள். அச்சு ஊடகமானாலும், இணைய எழுத்து என்றாலும் யார் எழுதுவது சரி ? எது நல்ல எழுத்து என்பதை தீர்மானிப்பது யார் ? வேறு யாருமல்ல… வாசிப்பவர்கள்தான். ஒருவர் எழுதுவதை வாசிக்கும் நபர்தான் அதை நல்ல எழுத்தா, ரசனையானதா என்பதை தீர்மானிக்கிறார்,

ஆக ஒரு படைப்பின் தரத்தை தீர்மானம் செய்வது வாசகனின் மனம்தான். வாசிப்பதற்கு முன்பே இவர் இப்படித்தான் எழுதுவார் என்ற முற்சாய்வு மனோநிலையுடன் ஒரு படைப்பை அணுகும்போது, படைப்பின் தரம் குறித்து முன்கூட்டியே தீர்மானித்து பிரதி அணுகப்படுகிறது. ஒரு படைப்பை பணம் கொடுத்து வாங்கி வாசிக்க எண்ணுபவர்கள் அதை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே வாங்குகிறார்கள். அல்லது குறைந்தபட்சம், இந்த எழுத்தாளர் நன்றாக எழுதியிருப்பார் என்ற முந்தைய வாசிப்பு அனுபவத்தை வைத்து முடிவு செய்கிறார்.

ஆனால், இணையத்தில் வாசிப்பிற்கும், நிராகரிப்பிற்கும் பெரிய ஊடக சுதந்திரம் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கப்படும் திரைப்படங்களை நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்லி கருத்து ஏற்படுத்துவது எளிதாக உள்ளது. அவர் செய்தது சரி, இல்லை இவர் செய்ததுதான் சரி என்று காத்திரமான உரையாடல்களையும் அதையொட்டிய கருத்து முற்சாய்வு ஏற்படுத்துவதும் மிக எளிதாக இருக்கிறது. இது குழு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது.

images (6) சரி, இணையத்தில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்லலாமா...? நிச்சயம் சொல்லலாம். காரணம், எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தானே… எது தகுதியான எழுத்து, எது மொக்கையான எழுத்து என்பதையெல்லாம் வாசிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். காலம்தான் படைப்பின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானம் செய்கிறது. லட்சக்கணக்கான ஆட்கள் எழுதுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் வாசிக்கிறார்கள். எழுத்தும் வாசிப்பும் ஒரு இயக்கம். அது தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் வேறு யாராவது எழுதிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதை வாசிக்கவும் மக்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே இணையத்தில் எழுதுபவர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தற்போது இணையத்தில் எழுதுபவர்களை பிற ஊடகங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இணைய பிரதிகளை உருவாக்குபவர்களை பொறுத்தவரையில் இது வளர்ச்சிக்கான அடுத்த கட்டம். ஒரு படைப்பை வேறு எங்கும் தேடியலையாமல் தன்னறையிலோ அலுவலகத்திலோ வாசிக்க முடிகிற கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் இணைய எழுத்தாளர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

இணைய எழுத்தாளர்கள் ஒன்றுகூடி பேசுவது இணைய எழுத்தின் வளர்ச்சியினை அதிகரிக்கும். மேலும், மனங்களின் சந்திப்பு (Meeting of Minds) நிகழும் போது ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் ஏற்படலாம். இதற்கு பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சந்திப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும்.

வழக்கமாக திறந்த வெளியில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த இணைய எழுத்தாளர்கள் சந்திப்பு ஒரு முயற்சியாக அரங்கத்தினுள் நடத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பு ‘நமக்கு நாமே‘ நடத்திக் கொள்வது என்பதால் இதில் குழுவோ, நிர்வாகிகளோ கிடையாது. அனைவரும் ஒருங்கிணைப்பாளர்கள்தான்.

இந்நிகழ்வு நடத்தப்பட இருக்கும் இடமான டிஸ்கவரி புத்தக மாளிகை புதிதாக திறக்கப்பட்டுள்ள புத்தகக்கடை. இங்கு அனைத்து பதிப்பக புத்தகங்களும் கிடைக்கிறது. இணைய எழுத்தாளர்களுக்கு புத்தக விலையில் கழிவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இதன் பொறுப்பாளர் நண்பர் வேடியப்பன்.

இணைய எழுத்தாளர்கள் சந்திப்பு

இடம் : DISCOVERY BOOK PALACE No. 6. Mahaveer Complex, 1st Floor, Munusamy salai, West K.K. Nagar, Chennai-78. Ph; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)

நாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.

திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை நம்முடன் பகிர இசைந்திருக்கிறார்.

நம்முடைய கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.

புதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்

பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..

- பொன்.வாசுதேவன் (பேச : 999 454 1010)

இந்த கட்டுரை “உலகத்தமிழ் ஊடகம்“ என்ற வலைக்குழுமத்தில் எழுதப்பட்டது.

தொடர்புகளுக்கு :
பாலபாரதி : 9940203132
கேபிள் சங்கர் : 9840332666
தண்டோரா : 9340089989
நர்சிம் : 9841888663
முரளிகண்ணன் : 9444884964

45 comments:

  1. ஆஹா.. இப்படி ஒரு வில்லங்கமான தலைப்பா என்று வந்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் :)

    ReplyDelete
  2. நான் வருகிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நானும் வரலாமா?

    ReplyDelete
  4. அதே சாரு தான் ப்ளாக்கர்களின் உலகை ஊரரிய செய்தவர். lucklook, Narsim, jyovramsundar etc அறிமுகப்படுத்தியது அவரே. அப்புறமென்ன இந்த உலகில் நுழைந்தவுடன் முதலில் தலையும் புரில வாலும் புரில. மெல்ல தெளிய 8மாதங்களாக ஆகிற்று.

    நல்லதோர் அழைப்புங்க.

    ReplyDelete
  5. solavathu sarithaan

    thangkal karuththai arruk kolkiRen

    mikka nanri

    ReplyDelete
  6. //"இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்களா…?"//

    பேனாவில் எழுதுபவர்கள் தான் எழுத்தாளர்கள் .... இணையத்தில் அனைவரும் டைப்பிஸ்டுகள் என்று "சாரு" கருதுகிறார் போலும்....

    ReplyDelete
  7. தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டேன்!!

    ReplyDelete
  8. நல்லாயிருங்கடா...

    ReplyDelete
  9. //இணையத்தில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்லலாமா...? நிச்சயம் சொல்லலாம்.//

    அய் அப்ப நாங்க‌ளும் ரௌடி தான்.

    ReplyDelete
  10. ஒருதரம் குமரி அனந்தன் சொன்னார், "எழுந்து வருவதுதான் எழுத்து. அது எழுப்பி வரக்கூடாது" என்று. வலைப்பதிவாளர்களில் பலர் (நான் உள்பட) எழுத்துக்களை எழுப்பித்தான் வரவழைக்கிறோம்!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  11. பொறுப்பான பதிவு வாசு.

    //சரி, இணையத்தில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்லலாமா...? நிச்சயம் சொல்லலாம். காரணம், எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தானே… எது தகுதியான எழுத்து, எது மொக்கையான எழுத்து என்பதையெல்லாம் வாசிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். காலம்தான் படைப்பின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானம் செய்கிறது. லட்சக்கணக்கான ஆட்கள் எழுதுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் வாசிக்கிறார்கள். எழுத்தும் வாசிப்பும் ஒரு இயக்கம். அது தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் வேறு யாராவது எழுதிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதை வாசிக்கவும் மக்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே இணையத்தில் எழுதுபவர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தற்போது இணையத்தில் எழுதுபவர்களை பிற ஊடகங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இணைய பிரதிகளை உருவாக்குபவர்களை பொறுத்தவரையில் இது வளர்ச்சிக்கான அடுத்த கட்டம். ஒரு படைப்பை வேறு எங்கும் தேடியலையாமல் தன்னறையிலோ அலுவலகத்திலோ வாசிக்க முடிகிற கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் இணைய எழுத்தாளர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது//....nice!

    ReplyDelete
  12. ம்.. ரைட்டு வந்திருவோம்

    ReplyDelete
  13. உங்கள் தலைப்பு என்னை அவசரமாக இங்கே கொண்டு வந்தது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. வாசு,
    எழுத்துக் குப்பையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது வாசகர்கள்தான். எழுத்துக்களை வாசிக்காமலே குப்பை என்று ஒதுக்குபவர்களல்ல. எல்லாம் எழுதி கடைசியாக எல்லோரும் பதிவர் சந்திப்பு என்று விளம்பரம் செய்வதை ‘இணைய எழுத்தாளர் சந்திப்பு' என்றிருக்கிறீர்கள். அதுதான் சூப்பர்

    ReplyDelete
  15. <>சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் - Sugumar<>

    ReplyDelete
  16. முன்பெல்லாம் அறிவியல் பற்றியோ, ஏதாவது ஒரு துறை சார்ந்த தகவல்களைப் பற்றியோ செய்திகள் அல்லது கட்டுரை படிக்க வேண்டுமானா‌‌‌ல் அந்த துறை சார்ந்த நிபுணர்களை தேடிப் பிடிக்க வேண்டும். புத்தகங்களை தேடி அலைய வேண்டும். சுஜாதா, மதன் போன்றோர் நிறைய தகவல்கள் தருவார்கள். அதற்காகவே அவருக்கு நிறைய இள‌ம் வாசகர்கள் இருந்தார்கள். இணையம் வ‌ந்து எல்லா கதவுகளையும் எல்லாருக்கும் திறந்து விட்டிருக்கின்றது. சிலர் ஏனோ இணையத்தில் எழுதுபவர்கள் இரண்டாந்தர எழுத்தாளர்கள் எ‌ன்று திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றார்கள். அச்சு ஊடகத்தை விட இணைய ஊடகம் மட்டம் எ‌ன்று அல்லது இரண்டாவது வரிசை எ‌ன்று திட்டமிட்டு சொல்கின்றார்கள். ஆயிரம் பக்க குப்பைகளுக்கு ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி பேப்பர்களை வீணாக்கி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் எழுதுபவர்களை விட இணையத்திலும் பொறுப்பை உணர்ந்து எழுதுபவர்கள் இருக்கின்றார்கள். இணையம் இருவழி ஊடகம். நீ என்ன பெ‌‌ரிய ஆளா..? நான் சொல்வதை கேள் ; நான் எழுதுவதை மட்டும் படி எ‌ன்று இல்லாமல் உடனுக்குடன் இங்கு விமர்சகர்களது கருத்துகளுக்கும் செவிமடுத்து விவாதிக்க முடிகின்றது.    கூட்டத்துக்கு ஆஜராகி விடுகின்றேன் வாசு.

    ReplyDelete
  17. உலகில் இரண்டு வகை மனிதர்கள்
    ஒன்று எழுதுவபவர்கள்
    இன்னொன்று எழுதாமல் இருப்பவர்கள்

    எல்லோருகுள்ளும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான்!

    சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. எழுத்தாளன் /எழுத்தாளர் என்ற ஒரு வார்த்தையும் அதனை ஒட்டிய படைப்பு என்ற வார்த்தையும் தமிழில் கோமாளிக்கூட்டங்களால் கேவலப்படுத்தப்பட்டுவிட்டது.

    அச்சு ஊடகத்திற்கு முன்னால ஓலையிலும் பாறையிலும் எழுதிவைத்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா?

    அன்புள்ள அப்பா, ஹாஸ்டலில் எல்லோரும் டூர் போறாங்க எனக்கும் பணம் அனுப்பவும்....

    அன்புள்ள அம்மா, தங்கை எப்படி இருக்கிறாள் ...என்றும் சன்னமான ஒலியில் கடிதம் போடும் அஞ்சாம் கிளாஸ் பையனின் எழுத்துக்கு முன்னால் எழுத்துலக கோமாளிகளின் எழுத்து சும்மா ஒரு டுபாக்கூர்.

    ***

    எழுத்து என்பது ஒரு ஊடகம் (மீடியம்)
    உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு கம்யூனிக்கேசன் டூல்.

    எழுத்து.... உரையாடல்,கதை,கவிதை,கடிதம்,கட்டுரை,பாட்டு,பிளாக்,டுவீட்,கல்வெட்டு, .... எந்தவடிவத்தில் வந்தாலும் அது ஒரு கம்யூனிக்கேசன் டூல் அவ்வளவே. அதை சுவராசியமாகச் சொல்லும்போது நிறையபேர் வாசிக்கிறார்கள்.

    எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் எழுதுத்தாளர்களே அனைவரும் வாசகர்களே.

    நல்ல எழுத்து கெட்ட எழுத்து என்றெல்லாம் ஏதும் கிடையாது...

    Why..?
    காமிக்ஸ் படிப்பருக்கு ஜெயகாந்தன் , மோகன் ,சாரு போன்ற புண்ணாக்கு வியாபரிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை.

    அம்புலிமாமா படிக்கும் குழந்தைக்கு புதிய ஜனநாயகம் ஒரு குப்பை.

    எல்லாம் ஒரு வட்டத்திற்குள் மட்டுமே. அந்த வட்டத்தை தாண்டினால் ஒரு பிரயோசனமும் இல்லை.

    ஒரு வட்டத்தில் இருப்பவன் அடுத்த வட்டத்தின் பயனாளிகளை மொக்கை என்று சொல்லும்முன் இவர்களும் அவர்களுக்கு மொக்கைதான் என்ற புரிதல் வேண்டும்.


    கிணற்றுத்தவளைகள் !!!!!

    ReplyDelete
  19. வருவதற்கு முயற்ச்சிக்கிறேன்.

    ReplyDelete
  20. ஹைய்யா.. நானும் எழுத்தாளன்.!

    (அழைப்பையே நல்லதொரு பதிவாகவும் ஆக்கியுள்ளீர்கள் வாசுதேவன்)

    ReplyDelete
  21. தலைப்பைப் பார்த்ததும் பயந்து விட்டேன். பொதுவாக நான் எழுதுவது பற்றி எனக்கு சந்தேகம் இருக்கும். சரியாக எழுதுகிறோமோ... இல்லையோ என்று. ஆனால்,கட்டுரை எனக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது.

    'மூடு வந்தால் எழுதுகிறவன் எழுத்தாளன். மூடு வந்தாலும் வராவிட்டாலும் எழுதுகிறவன் பத்திரிகையாளன்'. இது என் கணிப்பு. இணையத்தளங்களில் சிறப்பான முறையில் எழுதுகிறவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அரசியல், சமுகம், திரைப்படம்,இலக்கியம் என்று பல துறைகளில் தங்களது சிறப்பான எழுத்தாற்றலை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் தங்களது படைப்புத்திறனை இணையத்தளத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் வெகு ஜன ஊடகத்திலும் வரவேண்டும். அந்தவகையில் உங்களது கட்டுரை இணையத்தள எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் உள்ளது.

    அன்புடன்
    தோழன் மபா.

    ReplyDelete
  22. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  23. this meeting at Madurai happened 2 months back, is this your old post or old post. I am confused.

    ReplyDelete
  24. முடிந்தால் தொடரவும்...
    http://www.yetho.com/2009/11/blog-post_06.html

    ReplyDelete
  25. பதிவர்கள் என்கிற சொல் மறையட்டும்.
    இணைய எழுத்தாளர் மலரட்டும்.

    அருமையான பதிவு வாசு :)

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. //நிலாரசிகன் said...
    பதிவர்கள் என்கிற சொல் மறையட்டும்.
    இணைய எழுத்தாளர் மலரட்டும்//

    இது கூட நல்லா இருக்கு நிலா.
    -இணைய எழுத்தாளர் அதி பிரதாபன்.

    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  27. அகநாழிகை ரொம்ப அற்புதமா எழுதி இருக்கீங்க..வாழ்த்துக்கள் விழா சிறக்க

    ReplyDelete
  28. சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  29. கண்டிப்பாக வர முயற்சி செய்கிறேன் அகநாழிகை. உங்களுடைய பிரசண்டேஷன் அழகா இருக்கு. அடுத்த அகநாழிகை இதழின் பணிகள் எந்த அளவில் உள்ளன.

    ReplyDelete
  30. தான் மட்டுமே எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். மற்றவர்கள் அனைவரும் ஐந்தறிவு பிறவிகள் என்ற தலைக்கனம் சாருநிவேதா மட்டுமல்ல, பல பிரபல எழுத்தாளர்களுக்கும் உண்டு.

    வாய்ப்புகள் சில கிடைத்து விட்டதால் மட்டும் இவர் போன்ற எழுத்தாளர்கள் பிரபலமானார்கள். அவர்கள் எழுதும் குப்பைகளை விட நன்றாக எழுதும் எழுத்தாளர்கள் வெளிப்படாமல் அல்லது வெளிப்படுத்தப்படாமல் உள்ளளனர் என்பதுதான் உண்மை.

    வளரும் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்திடும் நற்குணம் உங்களைப்போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு. நன்றி .

    ReplyDelete
  31. நல்ல கட்டுரை

    ReplyDelete
  32. //எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தானே… எது தகுதியான எழுத்து, எது மொக்கையான எழுத்து என்பதையெல்லாம் வாசிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். காலம்தான் படைப்பின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானம் செய்கிறது.//

    முற்றிலும் உண்மைதான்.

    ReplyDelete
  33. அப்பாடா நானும் எழுத்தாளந்தான் எழுத்தாளந்தான் எழுத்தாளந்தான் எழுத்தாளந்தான் .

    நல்ல பதிவு

    ReplyDelete
  34. அய்யோ இந்த சாரு சும்மாவே இருக்க மாட்டானா?வயிற்றெறிச்சல். நீங்க பத்திரிக்கை தொடங்கியது கூட உறுத்தியிருக்கும், தலகானி என்பான். இல்லை டிச்சூ பேபெர் என்பான்.

    எஸ்ரா இஸ் ய ஜீனியஸ் அண்ட் மெசூர்ட். உங்க போட்டோ ரொம்ப நல்லா இருக்கு, ப்ளிஸ் இதை எப்போவும் மாத்தாதிங்க சகா.

    தயவு செஞ்சு அந்த விவசாயி கெட் அப் போட்டோவெல்லாம் போடாதீங்க

    ReplyDelete
  35. //நிச்சயம் சொல்லலாம். காரணம், எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தானே//

    பதிவர்களின் கருத்து மட்டுமே கேட்பதை விட்டு இதற்கு ஒரு வாசகர் சர்வே நடத்துங்கள் . அப்போது தெரியும் மேற்சொன்ன வாக்கியத்தின் உண்மை.

    'கான மயிலாட கண்டிருந்த வான்கோழி' பாடல் ஞாபகம் வருகிறது

    ஒரு வாசகன்

    ReplyDelete
  36. படிக்கத் தெரிந்தவன் படிப்பாளி
    நடிக்க வந்தவனெல்லாம் நடிகன்
    சண்டை போடத் தெரிந்தவன் வீரன்
    பாடம் நடத்துகிறவன் எல்லாம் வாத்தியார்
    மற்றவர்க்கு புத்தி சொல்றவன் எல்லாம் புத்திசாலி
    மேடையில் பேசுபவனெல்லாம் பேச்சாளன்
    அறிவியல் படிச்சவனெல்லாம் விஞ்ஞானி
    கட்சியில் இருக்கிறவனெல்லாம் அரசியல்வாதி
    வாசிக்கத் தெரிந்தவன் எல்லாம் வாசகன்

    இப்படியே சொல்லிக்கிட்டு போங்க..!

    ஒரு வாசகன்

    ReplyDelete
  37. படிக்கத் தெரிந்தவன் படிப்பாளி
    நடிக்க வந்தவனெல்லாம் நடிகன்
    சண்டை போடத் தெரிந்தவன் வீரன்
    பாடம் நடத்துகிறவன் எல்லாம் வாத்தியார்
    மற்றவர்க்கு புத்தி சொல்றவன் எல்லாம் புத்திசாலி
    மேடையில் பேசுபவனெல்லாம் பேச்சாளன்
    அறிவியல் படிச்சவனெல்லாம் விஞ்ஞானி
    கட்சியில் இருக்கிறவனெல்லாம் அரசியல்வாதி
    வாசிக்கத் தெரிந்தவன் எல்லாம் வாசகன்

    இப்படியே சொல்லிக்கிட்டு போங்க..!

    ஒரு வாசகன்

    ReplyDelete
  38. 'பதிவர்' சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்!

    ஒரு வாசகன்

    ReplyDelete
  39. Anonymous said...
    படிக்கத் தெரிந்தவன் படிப்பாளி
    நடிக்க வந்தவனெல்லாம் நடிகன்
    சண்டை போடத் தெரிந்தவன் வீரன்
    பாடம் நடத்துகிறவன் எல்லாம் வாத்தியார்
    மற்றவர்க்கு புத்தி சொல்றவன் எல்லாம் புத்திசாலி
    மேடையில் பேசுபவனெல்லாம் பேச்சாளன்
    அறிவியல் படிச்சவனெல்லாம் விஞ்ஞானி
    கட்சியில் இருக்கிறவனெல்லாம் அரசியல்வாதி
    வாசிக்கத் தெரிந்தவன் எல்லாம் வாசகன்//

    சுவாரசியமான பின்னூட்டம்.!

    அப்புறம் பின்னூட்டம் ஃபாலோ பண்ணும் நண்பர்களுக்காக ஒரு செய்தி : மழை காரணமாக இன்றைய பதிவர் சந்திப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  40. எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள் - என்ற பதிவுக்கு நான் இட்ட பதிலில் (5.11.2009)பின்வருமாறு குறிப்பிட்டேன்.
    //இப்போது - இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்களா? - என்ற கட்டுரையை தமிழ் வெளியில் - கண்டு படித்தேன். உங்களுக்கும் இது உதவியாக இருக்கும்! விரும்பினால் பாருங்கள் - http://www.aganazhigai.com/2009/11/blog-post.html//

    தங்களுடன் நேரில் பேசவேண்டும் என்பதால் நானும் 2 நாட்கள் தாமதித்து தற்போது பேசியதன் பின் இப்பதிவை இடுகிறேன். மன்னிக்கவும். நேரமின்மை மிகமுக்கியமான காரணம் - அதனால்தான் - குறைநினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  41. மன்னிப்புக் கேட்டதற்குக் காரணம் - தங்களின் அனுமதியில்லாமல் உங்கள் இணையத்தள முகவரியைக் கொடுத்தமைக்கு!

    ReplyDelete
  42. sir pls put the postponed date of our meeting.

    ReplyDelete
  43. sir vanakkam,pls inform the postpond date of our meet.

    thank u.

    ira.sendhil

    ReplyDelete
  44. தற்போதுதான் படித்தேன். ஆழ்ந்த கருத்துகள். அருமை!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname