Thursday, April 9, 2009

‘விருட்சம்‘ இதழில் வெளியான எனது கவிதைகள்

 1. இருத்தல்

  எங்கெல்லாமோ திரிந்து
  சலித்துப்போய்
  இறுதியில் நுழையும்
  ஊர் நடுவிலிருக்கும்
  காய்கறி மண்டியில் மாடு
  உதிர்ந்த தழைகளுக்கும்
  அழுகி நசுங்கிய காய்களுக்கும்
  ஆசைப்பட்டுச்
  செல்லும் நாவில் நீர் வடிய...
  அதற்கெனவே
  காத்திருந்தது போல் வந்து அடிப்பான்
  வாழைத்தாரின் நடுத்தடியால்
  கூலிக்கென ஓடும் பையன்
  வியாபாரம் ஓய்ந்து
  வீடு திரும்பும் வேளையில்
  சேகரிக்கத் தொடங்குவான்
  உருண்டோடிய காய்கறிகளையும்
  உதிர்ந்து
  குவியலாகக் கிடக்கும்
  தழைகளையும்
  யாருக்கும் தெரியாமல்.

  ‘விருட்சம்‘ டிசம்பர் ’91 இதழில் வெளியானது.
  ‘விருட்சம் கவிதைகள்‘ முதல் தொகுதியில் உள்ளது.

  நகரின் வெளியே

  நாதாங்கியின் மேல்

  பட்டும் படாமலுமிருக்கிறது பூட்டு

  வந்தது யாரென

  எட்டிப் பார்க்கின்றன

  பக்கத்து வீட்டின் மரத்துக் குயில்கள்

  பெருமூச்சு விட்டு அழைக்கிறது காற்று

  மர நிழலுக்கு

  வந்த காரியம் மறந்து

  அங்கேயே அமர்ந்தேன்

  கடிகாரத் துடிப்பும் குருவி மற்றும்

  காற்றின் சப்தம் மட்டுமே

  எந்த வீட்டிலும் எவருமில்லாதது

  போலத் தோன்றியது

  தொலைவுகளுக்கிடையில்தான் வீடுகள்

  எங்கே போயிருக்கக்கூடும்

  யோசனை இப்பொழுதுதான்

  சுற்றியலைவதில் அர்த்தமில்லையென

  குறைந்த பட்சம்

  சும்மாவாவது இருக்கலாமென்றிருந்தேன்

  மூடப்பட அவசியமற்று

  முந்திக் கொண்டிருக்கும் கதவுகள் முன்னால்.

‘நவீன விருட்சம்‘ ஜுன் 1997 இதழில் வெளியானது.

பொன்.வாசுதேவன்

36 comments:

 1. கவிதைகள் நன்றாக உள்ளன, நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 2. "வீடு திரும்பும் வேளையில்
  சேகரிக்கத் தொடங்குவான்
  உருண்டோடிய காய்கறிகளையும்.."
  பரிதாபம் அவர்கள் வாழ்க்கை. சமூகத்தை ஆழ்ந்து பார்க்கிறீர்கள்.

  ReplyDelete
 3. கவிதை நன்றாக இருக்கிறது வாசு சார்!

  ReplyDelete
 4. இரண்டாவது கவிதை பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 5. முதல் கவிதை அருமை நண்பா.. யதார்த்தம், வறுமை எல்லாமே ஒரே நேரத்தில் வெளிப்படுகிறது..

  ReplyDelete
 6. இரண்டாவது கவிதை வாசு ஸ்பெஷல்.. சாதாரண நிகழ்வை கவிதையாக வடித்து இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. யதார்த்தமான கவிதைகள்,
  இரண்டும் நல்லா இருக்கு,
  அதிலும் இரண்டாவது கவிதை
  மனதில் ஏதோ ஒரு வெறுமையை
  விட்டுச் செல்கின்றதை.

  ReplyDelete
 8. முதல் கவிதை இன்னும் காட்சியாகவே மனதினுள் தங்கியிருக்கிறது.

  அழகான காட்சிபடுத்தல்.

  இரண்டாவது கவிதை கார்த்திகைப் பாண்டியன் சொன்னது போல, சாதாரண நிகழ்வை உங்கள் பாணியில் கொடுத்திருக்கீங்க. ((நாதாங்கின்னா என்னங்க))

  கலக்கல்ஸ்ஸ்

  ReplyDelete
 9. கவிதை 2 நல்லா இருக்கு.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. இரண்டு கவிதைகளும் அருமை!

  ReplyDelete
 11. அருமையான கவிதைகள்

  ReplyDelete
 12. அப்பவே ஆரம்பிச்சிடிங்களா?

  ReplyDelete
 13. இரண்டாவது கவிதையையும் இங்கே படிக்கமுடிந்ததற்கு நன்றி.இன்னும் உங்களின் எல்லாக் கவிதைகளையும் எடுத்து இங்கே எங்கள் பார்வைக்கு தரவும்.

  ReplyDelete
 14. இப்பதான் உயிரோசையில் உங்களுடைய நகம்...... கவிதை வாசிட்டு வந்தேன். நல்லா இருக்குதுன்னு சொல்ல வந்தா,
  இங்க இருக்கிற இந்தக் கவிதைகள்

  அருமை........

  முதல் கவிதை யதார்த்தம்

  ReplyDelete
 15. இரண்டாம் கவிதை,மனதில் ஒரு வருத்தம் கலந்த மவுனத்தை கொடுக்கிறது..

  இரு கவிதைகளும் அருமை...

  உயிரோசையில் “நகம்” சூப்பர்

  ReplyDelete
 16. கும்மாச்சி said...
  //கவிதைகள் நன்றாக உள்ளன, நிறைய எழுதுங்கள்.//

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்,

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 17. கவின் said...
  //nalla eruku//


  நன்றி நண்பா.

  ReplyDelete
 18. டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
  //"வீடு திரும்பும் வேளையில்
  சேகரிக்கத் தொடங்குவான்
  உருண்டோடிய காய்கறிகளையும்.."
  பரிதாபம் அவர்கள் வாழ்க்கை. சமூகத்தை ஆழ்ந்து பார்க்கிறீர்கள்.//


  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 19. குடந்தைஅன்புமணி said...
  //கவிதை நன்றாக இருக்கிறது வாசு சார்!//

  நன்றி நண்பரே...

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 20. ஜ்யோவ்ராம் சுந்தர் said...
  //இரண்டாவது கவிதை பிடித்திருக்கிறது.//

  சுந்தர்,
  உங்கள் வருகை மகிழ்ச்சியடையச் செய்கிறது.
  ஒருநாள் நேரில் பேசுவோம்.
  நிறைய பேச வேண்டும்.
  ஊக்கத்திற்கு நன்றி.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 21. கார்த்திகைப் பாண்டியன் said...
  //இரண்டாவது கவிதை வாசு ஸ்பெஷல்.. சாதாரண நிகழ்வை கவிதையாக வடித்து இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..//

  கார்த்தி,
  நன்றி. உங்களைப் போன்ற நல்ல நண்பர்களின் ஊக்கம்தான் தொடர்ந்து பதிவிட வைக்கிறது.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 22. ஆ.முத்துராமலிங்கம் said...
  //யதார்த்தமான கவிதைகள்,
  இரண்டும் நல்லா இருக்கு,
  அதிலும் இரண்டாவது கவிதை
  மனதில் ஏதோ ஒரு வெறுமையை
  விட்டுச் செல்கின்றதை.//

  நண்பா,
  இரசனையான உங்கள்
  ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 23. ஆதவா said...
  //முதல் கவிதை இன்னும் காட்சியாகவே மனதினுள் தங்கியிருக்கிறது.

  அழகான காட்சிபடுத்தல்.

  இரண்டாவது கவிதை கார்த்திகைப் பாண்டியன் சொன்னது போல, சாதாரண நிகழ்வை உங்கள் பாணியில் கொடுத்திருக்கீங்க. //

  கலக்கல்ஸ்ஸ்//

  நன்றி ஆதவா,


  ((நாதாங்கின்னா என்னங்க))

  ‘நாதாங்கி‘ என்றால் ‘தாழ்ப்பாள்‘ என்று பொருள்,  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 24. கே.ரவிஷங்கர் said...
  //கவிதை 2 நல்லா இருக்கு.

  வாழ்த்துக்கள்!//

  ரவிஷங்கர்,
  நன்றி. உங்கள் வருகையில் அகமகிழ்கிறேன்.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 25. சந்தனமுல்லை said...
  //இரண்டு கவிதைகளும் அருமை!//


  வாழ்த்துக்கு நன்றி தோழி.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 26. அமுதா said...
  //அருமையான கவிதைகள்//

  நன்றி தோழி.

  - பொன். வாசுதேவன்

  ReplyDelete
 27. வால்பையன் said...
  //அப்பவே ஆரம்பிச்சிடிங்களா?//

  நீங்க எதைப் பத்தி கேக்கறீங்க,
  தயவு செஞ்சு தெளிவா சொல்லிடுங்க,
  பார்க்கறவங்க தப்பா நெனச்சுக்கப் போறாங்க.
  ((வருஷத்த பார்த்திருக்கீங்க ஒத்துக்கறேன், உங்க வால் நீளந்தான்))

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 28. ச.முத்துவேல் said...
  //இரண்டாவது கவிதையையும் இங்கே படிக்கமுடிந்ததற்கு நன்றி.இன்னும் உங்களின் எல்லாக் கவிதைகளையும் எடுத்து இங்கே எங்கள் பார்வைக்கு தரவும்.//


  நிச்சயம் தருவேன் முத்துவேல்.
  ஊக்கத்திற்கு நன்றி,

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 29. அமிர்தவர்ஷினி அம்மா said...
  //இப்பதான் உயிரோசையில் உங்களுடைய நகம்...... கவிதை வாசிட்டு வந்தேன். நல்லா இருக்குதுன்னு சொல்ல வந்தா,
  இங்க இருக்கிற இந்தக் கவிதைகள்

  அருமை........

  முதல் கவிதை யதார்த்தம்//

  நன்றி தோழி,
  நீங்கள் சொன்ன பிறகுதான் உயிரோசையில் கவிதை வெளிவந்திருக்கும் தகவல் தெரியும்.
  தகவலுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி,

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 30. Suresh said...
  //valthukkal thozla//

  நன்றி சுரேஷ்

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 31. Rajeswari said...
  //இரண்டாம் கவிதை,மனதில் ஒரு வருத்தம் கலந்த மவுனத்தை கொடுக்கிறது..

  இரு கவிதைகளும் அருமை...

  உயிரோசையில் “நகம்” சூப்பர்//


  தொடர்ந்து தங்களின் ஊக்கத்திற்கு
  மிக்க நன்றி தோழி ராஜி.

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 32. அன்றாட நிகழ்வில் அருமையான கவிதை.

  ReplyDelete
 33. நெம்ப அருமையான கவிதைங்கோ தம்பி.......!!! வாழ்த்துக்கள்.......!!  " வாழ்க வளமுடன்....."

  ReplyDelete
 34. இரண்டுமே நல்லா இருக்கு வாசு. ஆயினும் 'நகரின் வெளியே' சிறப்பு.

  அனுஜன்யா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname