நேரில் கண்டறியாதவை மீதான ஆர்வமும், வசீகரமும் எப்போதும் மனித மனங்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. தனி மனவோட்டங்களின் போக்கு குறித்த ஆர்வத்தையே வரலாற்றுப் நிஜங்களும், புனைவுகளும் ஏற்படுத்துகின்றன.
கடந்து சென்ற வாழ்வையும், அதன் வேதனைகளையும், சந்தோஷங்களையும் உணர்கின்ற வாய்ப்பினை தருகின்றன தொன்மை சார்ந்த வரலாற்றுப் பதிவுகள். இப்பதிவுகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று ஆராய விருப்பமற்று அதன் யதார்த்தப் புள்ளிகளை தாங்கிச்செல்லும் நம் மனது அதன் மீதான லயிப்பில் தன்னையிழக்கிறது. புனைவுகளும், புராணங்களும் நம்முள் நிகழ்த்தும் உளமாற்றங்கள் ஏராளம்.
எளிய மக்களிடையே பிறந்தவராகவும், சமகாலத்து மக்களிடையே புழங்கி மதத்தின் மீதான கேள்விகளை எழுப்பி, மக்களுக்கெதிரான அதே சமயம் வழக்கத்திலிருந்த பொதுப்போக்கினை மறுதலித்து ஒரு புரட்சியாளராகவும், புதிரானவராகவும் கருதப்பட்ட இயேசு என்பரின் வாழ்வைக் குறித்தான ஒரு அறிமுக நூலாக ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்‘ புத்தகம் வெளியாகியுள்ளது.
நம்மில் பலருக்கும் இயேசு என்றால் கிறித்தவ மதமும், அவர்களின் விடாமுயற்சியுடனான மதப்பிரசாரமும், கல்வி சார்ந்த் அவர்களின் சீரிய பணிகளும், கிறித்தவத்தின் உலகளாவிய பரவலாக்கமும்தான் முதல் நினைவுக்கு வருகிறது.
புதியதாக எந்த மதத்தையும் உருவாக்கியவர் அல்லர், எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை இயேசு. தான் வாழ்ந்த காலத்தில் மத ரீதியாக வழக்கத்தில் இருந்த பல நிகழ்வுகளின் மீதான தனது மாற்றுக்கருத்தை வெளிப்படையாக தெரிவித்து மதகுருக்களிடம் எதிர்ப்பையும், விரோதத்தையும் பலனாகப் பெற்றவர்தான் இயேசு.
வரலாற்றின் ஏடுகளில் சமய சீர்திருத்தவாதியாக பதிவு செய்யப்பட வேண்டிய இயேசு அவர் மீது பெரும்பான்மை யூத மக்களுக்கு ஏற்பட்ட அன்புணர்வின் காரணமாக அவரே கடவுளாகவும், மதத்தலைவராகவும், வழிபாட்டு நாயகனாகவும் ஆக்கப்பட்டார்.
யூத மதத்தில் அக்காலத்தில் நிலவிய மூடப்பழக்கங்கள் குறித்த தனது கருத்துக்களை எதிர்த்தவர் இயேசு. ‘மனிதர்கள் மீதான அன்பும் நேசமும் மட்டுமே உண்மையான இறையியல்‘ என்று கூறிய இயேசுவுக்கு கிடைத்த பரிசே சிலுவையில் அறையப்பட்டு உயிரை இழக்கச் செய்தது.
கிறித்தவ மதத்திற்கே உரியவராகவும், மதத்தலைவராகவும், நம்மால் அறியப்பட்ட இயேசுவின் வாழ்க்கை பற்றிய எளிமையான புரிதலை இந்நூல் அளிக்கிறது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் போதனைகளின்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் அவரது வழித்தோன்றல்கள் காலம் காலமாக மேன்மேலும் உருகி, புனைந்து வந்த கருத்துக்களே இன்று நாம் காண்பவை.
இயேசு என்றொருவர் இருந்தார் என்பதும், அவரது வாழ்நாளில் தான் சார்ந்திருந்த மதத்தின் மீதான புதிய கருத்தாக்கங்களை உருவாக்கிய மதச்சீரமைப்பாளர் என்பதும் மறுக்கவியலா உண்மை. இயேசு என்ற மனிதரை மதம் சார்ந்த ஒருவராக அறிந்து கொள்ளாமல் மனிதர்களிடையே பிறந்து மனிதத்திற்காக உயிர் நீத்த ஒரு மனிதர் என்பதை இப்புத்தகம் அறியச்செய்கிறது.
‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்‘
ஆசிரியர் : சேவியர்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரு.100/-
yaaru namma "alasal "xavier aaaaaaaa
ReplyDeletevasu sir
உங்கள் அறிமுகமே அப்புத்தகத்தை வாங்க தூண்டுகின்றது.
ReplyDeleteநல்ல புத்தகங்களை அறியப்படுத்துவது
என்போன்றோருக்கு உதவியாகவே இருக்கும், நான் ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு புத்தக்கடைக்கு சென்றால் அதிக நேரம் சுற்றி சுற்றியே வந்து கொண்டிருப்பேன் எந்த புத்தகத்தை வாங்களாம் என்ற குழப்பம் ஒவொரு முறையும் இருந்து கொண்டேதானிருக்கிறது. தற்போது இது போன்று படித்து அறிமுகம் செய்யும் நூல்களை குறித்து வைத்துக் கொண்டு செல்வதால் சற்று குழப்பம் தீர்ந்து வருகின்றது.
அறிமுகத்திற்கு நன்றி.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் உங்களிடம் கேட்களாம் என்று நினைக்கிறேன்.. ஏசுநாதர் பிறப்பதற்கு முன் கிருஸ்துவ மதம் இல்லையா?
ஆஹா ....!! நெம்ப அருமையான பதிவுங்கோ.....!! கண்டிப்பா வாங்கி படிக்கிறேனுங்கோ ...!!!!! நெம்ப கரக்ட்டுங்கோ .......!!! மதம் சார்பற்ற ஒரு ஏசுவா பாக்கும்போது அவுரு ஒரு அற்புத நாயகனா தெரிவாருங்கோ....!! எத்தன மூட பழக்க வழக்கங்கள அவுரு அன்பால முறியடுச்சிருக்காரு ...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்......!!!
அருமையான, முக்கியமான பதிவு. புத்தருக்கும் இந்த பார்வை பொருந்தவேச் செய்யும். மனிதகுல விடுதலைக்காக போராடிய மகத்தான மனிதர்களை, மனிதர்கள் தங்கள் ஆதர்சனப் புருஷனாக ஏற்றுக்கொள்வதும், ஆராதனை செய்வதும், வழிபடுவதும் நடக்கிறது.
ReplyDeleteபுத்தகத்தை எப்படியும் வாங்கிப் படிக்க தூண்டியிருக்கிறது. மிக்க நன்றிகள்.
Nalla pakirthal
ReplyDeleteநல்ல அறிமுகன் நண்பா! என்க்குள் இருக்கும் கருத்துகளை பிரதிபலிப்பாதாகவே இருக்கின்றது. உங்களின் சொல்லாற்றல் மேலும் பிரகாசமாக இருக்கின்றது.. நீங்கள் சொல்லும் பாங்கு அந்த புத்தகத்தை தேடி செல்கின்றது... நல்ல அறிமுகம் நன்றி நண்பா
ReplyDeleteமுதலில் "உன்னைப்போல் ஒருவன்" என்று எதற்காக தலைப்பை வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
ReplyDeleteபுத்தக விமர்சனங்களை இதுவரையிலும் நான் எழுதியதில்லை. ஏனெனில் அது எப்படி எழுதப்படவேண்டும் என்று இதுவரையில் அறியவில்லை. உங்கள் விமர்சனம் ஒரு தெளிவைக் கொடுத்தது. அந்த புத்தகம் பல புதிய தகவல்களை அல்லது எனக்குத் தெரியாத தகவல்களைக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் எழுத்தின் தரத்திலிருந்து அந்த புத்தகமும் தரமானதாக இருக்குமென்பது தெரிகிறது!!!
விரைவில் அப்புத்தகத்தை வாங்க முற்படுகிறேன்.
பதிவிற்கும் அறிமுகத்திற்கும் நன்றி வாசு.
ReplyDelete//வரலாற்றின் ஏடுகளில் சமய சீர்திருத்தவாதியாக பதிவு செய்யப்பட வேண்டிய இயேசு அவர் மீது பெரும்பான்மை யூத மக்களுக்கு ஏற்பட்ட அன்புணர்வின் காரணமாக அவரே கடவுளாகவும், மதத்தலைவராகவும், வழிபாட்டு நாயகனாகவும் ஆக்கப்பட்டார்.//
ReplyDeleteஅருமையான வரிகள்.. உண்மையும் கூட.. நமக்கு பிடித்தமான ஒன்றை நாம் எவ்வாறு அர்த்தம் செய்து கொள்கிறோம் என்பதற்கு இதெல்லாம் நல்ல எடுத்துக்காட்டு.. நல்ல பகிர்தல் வாசு..
எதுவும் தெரியாமல் ஒரு புத்தகம் வாங்குவதைவிட, இப்படியொரு அறிமுகத்திற்குப்பின் புத்தகம் வாங்குவது படிக்கின்ற ஆவலையும் தூண்டுகிறது.
ReplyDelete/--நம்மில் பலருக்கும் இயேசு என்றால் கிறித்தவ மதமும், அவர்களின் விடாமுயற்சியுடனான மதப்பிரசாரமும், கல்வி சார்ந்த் அவர்களின் சீரிய பணிகளும், கிறித்தவத்தின் உலகளாவிய பரவலாக்கமும்தான் முதல் நினைவுக்கு வருகிறது. --/
ReplyDeleteஏனோ தெரியவில்லை பல நாள் இந்த புத்தகத்தை வாங்குவதற்க்காக கையிலெடுத்து மீண்டும் வைத்து இருக்கிறேன்.
நல்லா எழுதி இருக்கீங்க. நானும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டுமென்று தான் இருக்கிறேன்.
நண்பர்களே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ;என் பரமபிதாவை பற்றி நீங்கள் அறிய விரும்புவது மகிழ்ச்சிக்குறிய விஷயமே. திரு சேவியர் அவர்கள் எந்த ஆதாரத்தை கொண்டு இயேசுவை மனிதர் என்று குறிபிட்டார் என்று தெரியவில்லை..இயேசு கிறிஸ்துவை பற்றி ஒரு 100 பக்க புத்தகத்தால் விளக்கி விடமுடியுமா? உலகின் மிக பழமையான புத்தகம் பைபிள் என்பது சேவியர்க்கு தெரியும் என்று நினைக்கிறேன்..அந்த பைபிள் எழுதப்பட்ட காலத்திலே இயேசுவின் வருகையை முன்னருவிக்கிறது...இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளவேண்டும் என்றால் அது பைபிளின் துணை கொண்டே முடியுமே தவிர இந்த சேவியர் போன்றவர்களால் எழுதப்படும் முட்டாள் தனமான புத்தகங்களால் முடியாது
ReplyDelete