33ஆவது சென்னை புத்தக கண்காட்சி 30.12.09 முதல் 10.1.2010 வரை
சென்னையில் நடைபெறவுள்ளது.
இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி
(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 வரை
மற்ற நாட்களில் மதியம் 2.மணிமுதல் இரவு 8.மணி வரை
இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சிக்கு அகநாழிகை பதிப்பகம் ஒன்பது புதிய நூல்களைக் கொண்டு வருகிறது.
புதிய எழுத்துக்களை அடையாளப்படுத்தும் விதமாக இணையம் மற்றும் சிற்றிதழ்களில் சிறப்பாக கவனம் பெற்று எழுதிவரும் படைப்பாளிகளான பா.ராஜாராம், நர்சிம், என்.விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், டிகேபி காந்தி, மதன் ஆகியோரது புத்தகங்களுடனும், ஏற்கனவே சிறப்பான எழுத்துகளின் வழியே அறியப்பட்டுள்ள வளர்மதி, பாரதிவசந்தன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புகளுடனும் இந்த புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு கிடைக்கும்.
புத்தக கண்காட்சியில் சிறப்புச் சலுகை விலையில் அகநாழிகை வெளியிட்டுள்ள நூல்களை பெற்றுக்கொள்ளலாம்
அகநாழிகை இதழின் ஆண்டுச் சந்தா கண்காட்சியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.150 மட்டும்.
அகநாழிகையின் வாசகர்களோடும், இணைய எழுத்தாள நண்பர்களோடும் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் புத்தக கண்காட்சி அளிப்பது மகிழ்வுக்குரியது.
கண்காட்சி நாட்களில் நண்பர்கள் என்னை இந்தத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். 999 454 1010
