Tuesday, June 2, 2009

நீங்கள் யார் ?

முன்பின் தெரியாத ஒருவரிடம் நாம் பொதுவாக கேட்கின்ற ஒரு கேள்விதான் நீங்கள் யார் ?

இந்த கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். 'நீங்கள் யார் ?' என்று உங்களுக்குள் கேள்வியெழுப்பியதும் என்ன பதிலைக் கூற முடியும் ?

நான்.. நான் தான். சரி... நல்லது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். நீங்கள் உடலா, உயிரா, அறிவா? இதுதான் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது.

god1 நீங்கள் நம்பிக்கை, நல்லொழுக்கம் பற்றிய பல புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். ஆனால் இதுவரையிலும் நம்பிக்கையின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முழுமையடையாமலே இருப்பதன் காரணம் என்ன ? நல்லொழுக்கத்தின் நன்மைகளைப் பற்றி அன்பாகப் பேசியும் மிரட்டலாகவும் பல இடங்களிலும் கேட்டிருந்தும் ஒழுக்கம் என்பது ஒளிவு பொருளாகவே இருப்பது ஏன் ?

வெறும் உணர்வுத் தூண்டலுக்காக அந்தந்த நிமிடங்களுக்காகப் படித்து மனதிலிருந்து அழித்தெறிய மட்டுமே வாசிப்பு இருக்கக் கூடாது. 'நீங்கள் யார் ?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியாமலே இருப்பது போன்ற நிலை எதனால் ஏற்படுகிறது ?

சுலபமான ஒன்றுதான். ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்ட பிறகு அதைத் தெரிந்து மனம் செயலற்றுப் போய்விடுகிறது. இதுவரை நீங்கள் படித்த, படிக்கின்ற, படிக்கப்போகின்ற புத்தகங்கள் எல்லாமே எளிதில் பெறமுடியாதபடி வாழ்வுச் சிறகுகளைச் சிக்கலாக்கி விடுகின்றன.

எதுவும் இறுதியான ஒன்றல்ல. நல்ல விஷயங்களைப் படிப்பதிலும் தன்னம்பிக்கையைப் பற்றிப் பேசுவதிலும் ஆர்வம் செலுத்துகிற நீங்கள் செயலளவில் எதையும் நிறைவேற்றத் துணிவதில்லை.

இது போல நல்லதில் ஆர்வம் காட்டி பேசுவதும் படிப்பதும் அரிப்பெடுத்தால் சொரிந்து கொள்வதுபோல இழிவான செயலாகி விட்டது. இது எப்படி எல்லோருக்கும் பொருந்தும் என்று நீங்கள் கேட்கலாம். விதிவிலக்குகள் எங்கும் எதிலும் எதிலும் உண்டு.

உண்மை எப்போதும் எளிது. அதைத் தெரியாமல் அணுகும் போது பல குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு அதனை யாருக்குமே விளங்காமல் செய்து விடுகிறார்கள்.

எந்தவிதமான கூட்டல் குறைத்தலும் இல்லாமல் உங்களைப் பற்றி சுய மதிப்பீடாக நீங்கள் சொல்வதுதான் நீங்கள் யார்? என்ற கேள்விக்கு விடையாகும்.

நான் ஒரு பறவை. எப்போதும் சிறகு விரித்து பறக்கவே நான் விரும்புகிறேன். இதுபோல் நீங்கள் கூறினால், இது உங்கள் கனவைச் சொல்வதாகிறது.

பறவைபோல் பறக்க நினைப்பது என்பது மனித மன உணர்வு. மனிதன் eyeflowerlilybyroseonthxu5 பறவையாக முடியுமா? மனிதன் மனிதன்தான். எனவே நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

எல்லோருக்கும் (அனேகமாக) தெரிந்திருக்கும் கதை ஒன்று.

அவளை விடாதீர்கள், அடித்துக் கொல்லுங்கள் என்ற வெறிக் கூச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. மூச்சிரைக்க ஒரு பெண் ஓடி வ ந்து கொண்டிருந்தாள். அவளை நிறைய ஆட்கள் துரத்திக் கொண்டு ஓடிவரும் காலடி ஓசைகளும் கேட்டது.

தியானத்தில் ஆழ்ந்திருந்த இயேசு நாதர் தலை நிமிரவில்லை.

காலடி ஓசைகளும் பெண்ணின் விசும்பலும் நெருங்கி வந்தன. அப்போதும் இயேசு நாதர் தலை நிமிரவில்லை. தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

கண்ணீரும் புலம்பலுமாக "என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அலறலுடன் அந்தப்பெண் இயேசுவின் பாதங்களில் விழுந்தாள். தியானம் கலைந்தது. விழிகளில் கருணை மின்ன அந்தப் பெண்ணை ஏறிட்டார்.

"என்னைக் காப்பாற்றுங்கள்... இவர்கள் என்னைக் கொல்ல வருகிறார்கள்" அழுதபடியே சொன்னாள் அந்தப்பெண்.

இயேசுநாதர் நிமிர்ந்து பார்த்தார். அவரையும் அந்தப் பெண்ணையும் சுற்றி ஏராளமான ஆடவர்கள் நின்றிருந்தனர். எல்லோர் முகத்திலும் பழி உணர்வு, கோபம். ஒவ்வொருவர் கையிலும் கற்கள்.

"அவளை எங்களிடம் ஒப்படையுங்கள். அவள் உடலால் பாவம் செய்தவள். அவளைக் கல்லெறிந்து கொல்லப் பொகிறோம்" என்று கும்பல் கூச்சலிட்டது.

"இவள் பாவம் செய்தவள் என்றால் அவள் கல்லால் எறிந்து கொல்லப்படுவதே நியாயம். ஆனால் உங்களில் எவர் பாவம் செய்யாதவரோ அவர் முதல் கல்லை இவர் மீது எறியுங்கள்" என்று நிதானமாக சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் இயேசுநாதர்.

கற்கள் கைநழுவி அஞ்சி விழும் ஓசை கேட்டது. இரைச்சல் அடங்கியது. கால்கள் தோல்வியுற்றுப் பின்வாங்கின.

அந்தப் பெண்ணின் கண்ணீர் இயேசுவின் பாதத்தைக் கழுவின. நிமர்ந்தார்.

"மகளே, இனியாகிலும் பாவங்களிலிருந்து விலகியிரு" என்று ஆதரவாகச் சொன்னார் இயேசு. அந்தப் பெண்ணின் பெயர் மரிய மக்தலேனா.

இந்த பைபிள் கதை இப்போது எதற்கு?

காரணம் இருக்கிறது. உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நான் இதுவரை எத்தனைப் பேரை கோபமாகப் பேசியிருப்பேன், எத்தனை பேருக்கு பொறாமை காரணமாக தீங்கு செய்திருப்பேன், என்றெல்லாம் கேட்டுத் தெளிந்தால் நீங்கள் யார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்து விடும்.

மரிய மக்தலேனாவை துரத்திய மக்கள் சிந்திக்கத் தயங்கி இவரென்ன சொல்வது நம் பாவங்களைப் பற்றி என்று யோசித்திருந்தால் என்னவாகியிருக்கும் ?

உடலால் பாவம் செய்த அவள் உயிரிழந்திருப்பாள். ஆனால் அவர்களுக்கு என்ன இழப்பு...

blog111இதுதான் இந்த சிறிய கதை நமக்கு உணர்த்தும் உண்மை. மற்றவர்களைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்பதற்கு முன்பாக உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அன்பானவராக... எல்லோருக்கும் அன்பானவராக இருங்கள்.

அன்புதான் வாழ்க்கையை இனிமையாக்கி நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்ற சக்தி.

- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname