Saturday, January 7, 2012

பிச்சாண்டி திரிந்து கொண்டிருக்கிறான்




வானத்தில் ஒரு நிலவுதான் என்பதைப் போல
அவனை தனியாக விட்டு விட்டு நீ சென்றிருக்கக்கூடாது
சினந்து கவனப்பிசகில் நீ செய்த ஒரு செயலால்
பித்தடைந்து அகத்தின் உச்சியிலேறி
காற்றிலேகிய சன்ன இழையாய்
மலையைச் சுற்றித் தனியனாய்த் திரிந்தபடியிருக்கிறான்.
இதை உன்னோடும் உன்னோடிருக்கும் அவனோடும்
நீ பொருத்திப் பார்க்கிறாய்
உனக்கு எல்லாமுமாய் அவன் இருக்கிறான்
அவனுக்கு நீ ஒன்றுமேயில்லை
தாங்கயியலாமல் அழுகிறாய்
பிச்சாண்டிக்கு அன்பு வெறுப்பு இரண்டுமே அகம் புறம்தான்
கழற்ற இயலாத சங்கிலிதான் இந்த வாழ்க்கை
இதை தாமதமாகவே உணர்கிறான் அவன்.
நினைவு தப்பிய வேளையில் அன்பே சிவம் என உள்ளுக்குள்
வெடித்துச் சிதறியபடி எதிரொலிக்கிறது­


பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname