செய்வதற்கு வேலைகளுள்ள
இந்த அபூர்வ தினத்தில்
சிலந்தியின் மென்னிழையாக
ஒழுங்கற்று உமிழ்ந்து
உருப்பெற்றுக்கொண்டிருந்தது அது
நினைவுகளில் பிணைந்த உன்னை
வலியச் சென்று
நசுக்கும் யோசனைகளையெடுத்து
நகர்கிறது பொழுது
முன்னிரவு
பின்னிரவு
காலை பகல் மாலை
என நினைவுலாவிக்
கொண்டிருக்கும் வேளையில்
உன் பாதங்களைப் பற்றிய
எண்ணம் விழித்துக் கொள்கிறது
இதன் அர்த்தமின்மையைப் பேசும்
உன்னிடம்
அதற்கான சமாதானங்களைச்
சொல்ல முற்படுகையில்
முடிந்து விட்டிருக்கிறது
இன்றைய தினம்.
*
பொன்.வாசுதேவன்
