Friday, December 26, 2008

மிதக்கும் வதந்திகள்

நிழல் மிதிபடாத

மாலை வேளையில்

கண்களின் குளுமை
இதயத்தை நிரப்ப
இணைந்திணைந்து
செல்கின்றனர் நண்பர்கள்
முகம் உமிழ்ந்த
புன்னகையின் மிச்சமாய்
தொடர்கிறது உரையாடல்
களைப்பின்றி
அந்தரங்கப்பூக்கள் மலர
உன்னைப்பற்றி
என்னைப்பற்றி
இவரைப்பற்றி
அவரைப்பற்றி
யாவரையும் பற்றி
ஊற்றாய் பரவுகிறது பேச்சு
கைபிடியளவு அள்ளிக்கொண்டு
ஒரு புள்ளியில் விலகிச் செல்கின்றனர்
வீதியெங்கும்
அணுவணுவாய் இறைத்தபடி...

- பொன். வாசுதேவன்

ஆகஸ்ட் 2007 இதழில் வெளியானது.

6 comments:

  1. \\நிழல் மிதிபடாத மாலை வேலையில்\\

    ஆஹா அருமை நல்ல துவக்கம் ...

    ReplyDelete
  2. \\கைபிடியளவு அள்ளிக்கொண்டு
    ஒரு புள்ளியில் விலகிச்செல்கின்றனர்வீதியெங்கும் அணுவணுவாய் இறைத்தபடி...\\

    அருமை சொன்னீங்க

    ஆனா நண்பர்களா ...

    ReplyDelete
  3. அந்த கண்கள்

    இல்லை இல்லை

    காந்தங்கள் மிக அழகு

    ReplyDelete
  4. ஜமால் வணக்கம்.
    நான் இன்னும் பதிவ முழுசா முடிக்கவே இல்ல.
    அதுக்குள்ளே உங்களோட கருத்துரை. ரொம்ப மகிழ்ச்சி.
    உங்களோட வருகைக்கும் பின்மொழிக்கும் நன்றி...
    (ஆமாம் நண்பர்கள்தான்... கவிதைய மறுபடியும் படிங்க)

    ReplyDelete
  5. கவிதையின் வரிகள், மடிப்பாக்கம் சந்தியில் மசாலா பால் குடித்து கொண்டு சம்பாசித்த நாட்களை நினைவு கோருகின்றது.

    ReplyDelete
  6. வாங்க காரூரன், நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname