கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை
(காயத்ரிக்கு...)
- பொன். வாசுதேவன்
"புதிய பார்வை" 16-31, 2007 இதழில் வெளியானது.
அருமையான கவிதை
ReplyDeletethanks jamaal.
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்கிறேன்
ReplyDeleteபல விளக்கங்கள் எனக்கு ...
உங்களின் நோக்கம் என்னவோ ...
thanks kavin... welcome you.
ReplyDelete