அன்பின் தடம் பல தேடியலைந்து
கூடடைந்தேன் சிலகாலம்
எண்ணங்களில் மிதந்த
உன் வசீகர ஆசைகளும்
மொட்டவிழ்ந்து
கரை சேர்ந்த நேரம் அது
பேசி முடித்த கணத்திலிருந்து
அடுத்த ஆரம்பத்தை எதிர்நோக்கி
விடிந்த பொழுதுகள்
புன்னகை விளையும்
விழிகளின் நொடிகளுக்கு காரணமாய்
தொடர்ந்தன நினைவுகள்
பறவையின் காலடி தேடும்
வான்வெளி விளையாட்டாய்
முளைத்தெழுந்தன
நமக்கான நட்சத்திரங்கள்
தீண்டாமல் நீ தந்த வெதுவெதுப்பில்
இதயம் உறங்கச் சென்ற நாட்கள் பல..
நான் உனக்கானவன் இல்லை
நீ எனக்கானவள் இல்லை
நீ இருக்கிறாய்
நானும்...
வளராதிருக்கும்வரை
வலைகளின் இடுக்கில் கசிந்து
தப்பியோடும் சிறு மீன்களின்
குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
இறுக்கிய விரல்களுக்குள்
கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
மாலையாக....
- பொன். வாசுதேவன்
தலை சுத்துதுங்க.. நீங்க எல்லாம் பின்நவீனத்துவ வாதியா????ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeletethanks kaarki.
ReplyDeleteகவிதை நல்லாருக்கு. சிறு புன்னகை முகிழ்வதை தவிர்க்க இயலவில்லை...
ReplyDelete//வளராதிருக்கும்வரை
வலைகளின் இடுக்கில் கசிந்து
தப்பியோடும் சிறு மீன்களின்
குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
இறுக்கிய விரல்களுக்குள்
கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
மாலையாக....//
மிக அற்புதமான வரிகள் அவை...அன்பிற்கும் காதலுக்கும் நட்பிற்கும் இடையே ஊசலாடும் ஆண் பெண் உறவுகளை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த நாள் இந்தக் கவிதையுடன் தான்....
கவிதை நல்லாருக்கு. சிறு புன்னகை முகிழ்வதை தவிர்க்க இயலவில்லை...
ReplyDelete//வளராதிருக்கும்வரை
வலைகளின் இடுக்கில் கசிந்து
தப்பியோடும் சிறு மீன்களின்
குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
இறுக்கிய விரல்களுக்குள்
கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
மாலையாக....//
மிக அற்புதமான வரிகள் அவை...அன்பிற்கும் காதலுக்கும் நட்பிற்கும் இடையே ஊசலாடும் ஆண் பெண் உறவுகளை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த நாள் இந்தக் கவிதையுடன் தான்....
நன்றி உமா...
ReplyDelete