பிசைந்தெடுத்து வழிய விடுவாய் அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஒசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்து குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து...
- பொன்.வாசுதேவன்
" புதிய பார்வை " ஆகஸ்ட் 16-31, 2007- ல் வெளியானது.
வரிகளும் - புகைப்படமும் அருமை...
ReplyDeleteஅருமையான கவிதை அகநாழிகை.."நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
ReplyDeleteஉருகி வழிந்து ஓயும் ஊற்றாய் // மற்றும்/ உள் பேசும் நான்/ மிகவும் ரசித்த வரிகள்.புகைப்படமும் அருமை...
வாழ்த்துக்கள்தோழர்.
ஜமால், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...!
ReplyDeleteநன்றி உமா...!
ReplyDeletethank u for your wishes and wishing u a prospereous new year 2009.
ReplyDelete