நிழல் மிதிபடாத
மாலை வேளையில்
கண்களின் குளுமை
இதயத்தை நிரப்ப
இணைந்திணைந்து
செல்கின்றனர் நண்பர்கள்
முகம் உமிழ்ந்த
புன்னகையின் மிச்சமாய்
தொடர்கிறது உரையாடல்
களைப்பின்றி
அந்தரங்கப்பூக்கள் மலர
உன்னைப்பற்றி
என்னைப்பற்றி
இவரைப்பற்றி
யாவரையும் பற்றி
ஊற்றாய் பரவுகிறது பேச்சு
கைபிடியளவு அள்ளிக்கொண்டு
ஒரு புள்ளியில் விலகிச் செல்கின்றனர்
ஒரு புள்ளியில் விலகிச் செல்கின்றனர்
வீதியெங்கும்
அணுவணுவாய் இறைத்தபடி...
- பொன். வாசுதேவன்
ஆகஸ்ட் 2007 இதழில் வெளியானது.
\\நிழல் மிதிபடாத மாலை வேலையில்\\
ReplyDeleteஆஹா அருமை நல்ல துவக்கம் ...
\\கைபிடியளவு அள்ளிக்கொண்டு
ReplyDeleteஒரு புள்ளியில் விலகிச்செல்கின்றனர்வீதியெங்கும் அணுவணுவாய் இறைத்தபடி...\\
அருமை சொன்னீங்க
ஆனா நண்பர்களா ...
அந்த கண்கள்
ReplyDeleteஇல்லை இல்லை
காந்தங்கள் மிக அழகு
ஜமால் வணக்கம்.
ReplyDeleteநான் இன்னும் பதிவ முழுசா முடிக்கவே இல்ல.
அதுக்குள்ளே உங்களோட கருத்துரை. ரொம்ப மகிழ்ச்சி.
உங்களோட வருகைக்கும் பின்மொழிக்கும் நன்றி...
(ஆமாம் நண்பர்கள்தான்... கவிதைய மறுபடியும் படிங்க)
கவிதையின் வரிகள், மடிப்பாக்கம் சந்தியில் மசாலா பால் குடித்து கொண்டு சம்பாசித்த நாட்களை நினைவு கோருகின்றது.
ReplyDeleteவாங்க காரூரன், நன்றி.
ReplyDelete