அடர் மழை மௌனமாய்
யாருக்கும் தெரியாமல்
இறங்கும் வேலையில்
உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது
நீ வீசிய வலை
விழி தீண்டும் தூரம் அறியாது
அப்பிக்கிடக்கிறது இருள்
வெடிக்காத இசையின்
அரூப ஒலியாய்
காத்திருக்கிறது
வலை வருடிய கைகள்
தனியுச்சியில் புதையுண்டு
தருணம் நோக்கி
காத்திருக்கிறேன்
வலைக்குள் உன்னை இருத்த.
- பொன். வாசுதேவன்
"புதிய பார்வை" ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.
\\"மிதந்து கொண்டேயிருக்கும் வலை"\\
ReplyDeleteஉலா வரும் வலை
\\காத்திருக்கிறேன்
ReplyDeleteவலைக்குள் உன்னை இருத்த.\\
எங்களை இருத்திவிட்டீர்கள் சிறுது நேரமேனும் உங்கள் வலையில்.
நன்றி ஜமால், உங்கள் மனதில் சிறு சலனமேனும் என் கவிதை ஏற்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதான்.
ReplyDelete