- வாழ்வின் முக்கியப் பருவங்களில் ஒன்று வளரிளம் பருவம். பதின் வயது மனங்களில் பதியும் நிகழ்வுகள் உளவியல் ரீதியாக வாழ்நாள் முழுவதும் நமது செய்கைகளில் பிரதிபலிக்கின்றன. அதிலும் குறிப்பாக பத்து வயது முதல் பத்தொன்பது வயதுக்குள்ளாக பாலுணர்வு சார்ந்து அறிந்து கொள்ளுதலும், பாலுணர்வு சார்ந்த புரிதல்களும், அனுபவங்களும் ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள் சார்ந்தே நாம் இயக்கப்படுகிறோம்.
- வலைப்பதிவர்களில் பெரும்பாலும் ‘மொக்கை‘ எனும் அர்த்தமற்றப் பதிவுகள் இடுகிறார்கள் என்பதான வெற்றுக் கூக்குரலுக்கு மாற்றாக வலைப்பக்க எழுத்தாளர்கள் பல புதிய முயற்சிகளை, அங்கீகாரங்களை, சமுகம் சார்ந்த முன்னகர்வுகளை எடுத்துச் செல்ல முனைந்துள்ளனர் என்பது உண்மையாகிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அந்த வகையில் வளரிளம் பருவத்தினருக்கும், குழந்தைகளுக்கும் ‘சரியான – தவறான தொடுதல்கள்‘ குறித்த புரிதலை ஏற்படுத்த பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவதற்கான முயற்சியாகவே டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி பங்கேற்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் வலைப்பதிவர்கள் மட்டுமின்றி அவர்களது நண்பர்களும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.
- டாக்டர் ருத்ரன் – ஷாலினி நிகழ்வு நடந்த அன்று காலையில் இலக்கிய இதழான யுகமாயினி நடத்திய ‘அடிமையின் மீட்சி‘ புத்தக அறிமுக விழாவில் நானும் தூறல்கவிதை ச.முத்துவேலும் கலந்து கொண்டோம். ‘புதுக்கவிதையும் இசையும்‘ என்ற தலைப்பில் ரவிசுப்ரமணியன் அவர்களும், ‘ஜீவனென் கவிதை‘ என்ற தலைப்பில் கவிஞர் வெங்கட் தாயுமானவனும் கட்டுரை வாசித்தனர். ம.ந.ராமசாமி மொழிபெயர்ப்பில் Booker T.Washington எழுதிய ‘அடிமையின் மீட்சி‘ புத்தக ஆய்வுரையை ‘இன்று‘ சுவாமிநாதன் வாசித்தார். அமெரிக்காவை கட்டமைத்ததில் கறுப்பர்களின் பங்கு குறித்தும், அவர்கள் சந்திக்க நேர்ந்த அவமானங்கள் குறித்துமான ஒரு வரலாற்றுப் பதிவாக இந்நாவல் கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு அருகாமையில் இருந்த பூங்காவில் அமர்ந்து, உயிர்மையில் வெளியான மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.
- வயதாகிக் கொண்டே வருவது பலருக்கும் ஒரு மனச்சிக்கலாக இருந்து வருகிறது. வாலிபமும் வயோதிகமும் வேறு வேறல்ல. வயது என்பது ஒரு மனோபாவம்தான். இருபதில் நாற்பதாகவும், நாற்பதில் இருபதாகவும் இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். வயது குறித்து பேசும் பலரும் தங்களுக்கும் வயதாகும் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் வயது என்பது ஒரு பொருட்டாக இருக்காது.
- பதிவர் கார்த்திகைப்பாண்டியன் ஏற்பாடின் பேரில் திருச்சியில் பதிவர்கள் சந்திப்பதென முடிவாகியது. முதல் நாள் இரவே திருச்சி சென்று விட்டேன். பெருந்துறையிலிருந்து கார்த்திகைப்பாண்டியனும் இரவே வந்து விட்டார். மறுநாள் காலை மெல்பர்ன் கமல் (அவரது மனைவியுடன்), சிங்கப்பூரிலிருந்து ஆ.ஞானசேகரன், இளையகவி கணேஷ், திருப்பூரிலிருந்து சொல்லரசன், காரைக்குடியிலிருந்து டாக்டர் தேவன்மாயம் என வந்திருந்தனர். பதிவுலகம், இலக்கியம், படித்தது, பிடித்தது, கணிணி தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் எனப் பலவும் பேசி மதிய உணவுக்கும் பின் மறுபடியும் பேசி மாலை ஐந்து மணியளவில் விடைபெற்றோம். சந்தோஷமான சந்திப்பாக இருந்தது.
- (முதல் படம் தேவன் மாயம், 2-வது ஆ.ஞானசேகரன், 3-வது படத்தில் (இடமிருந்து வலமாக) நான், மெல்பர்ன் கமல், தேவன்மாயம், சொல்லரசன், கார்த்திகைப்பாண்டியன், அமர்ந்திருப்பது இளையகவி கணேஷ்)
- தமிழில் பேசுவதை பலரும் அவமானமாகவும், கண்ணியக்குறைவாகவும் நினைத்துக் கொள்கின்றனர். நமது மொழி நாம் பேசுகிறோம் என்ற மனோபாவம் அனைவருக்கும் வரவேண்டும். கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வந்திருந்த ‘இப்படிக்கு ரோஸ்‘ ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை. தமிழில் பேசினாலும் அவர் ஆங்கிலத்தையே பயன்படுத்தினார். அது உயர்ந்த நிலையில் தங்களை காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் தமிழ் அல்லாத வார்த்தைகள்
உருது வார்த்தைகள் | போர்ச்சுக்கீஸ் வார்த்தைகள் | தெலுங்கு வார்த்தைகள் | |
இலாகா | அலமாரி | வேடிக்கை | |
அந்தஸ்து | கிராம்பு | எச்சரிக்கை | |
ஜாமீன் | சாவி | வாடகை | |
ஆசாமி | ஜன்னல் | பித்தலாட்டம் | |
கைதி | பாதிரியார் | பண்டிகை | |
கிச்சடி | பரங்கிக்காய் | கோரிக்கை |
ஞானக்கூத்தன் எழுதிய ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் பிறர் மேல்
அதை விடமாட்டேன்.
//வயது என்பது ஒரு மனோபாவம்தான். இருபதில் நாற்பதாகவும், நாற்பதில் இருபதாகவும் இருக்க முடியும்.//
ReplyDeleteஇதுதான் உண்மை.
பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் அருமை. பதிவில் மட்டுமே அறிமுகமாயிருந்த நண்பர்களை புகைப்படங்களில் பார்த்தது மகிழ்ச்சி.
வாழ்வின் முக்கியப் பருவங்களில் ஒன்று வளரிளம் பருவம். பதின் வயது மனங்களில் பதியும் நிகழ்வுகள் உளவியல் ரீதியாக வாழ்நாள் முழுவதும் நமது செய்கைகளில் பிரதிபலிக்கின்றன. அதிலும் குறிப்பாக பத்து வயது முதல் பத்தொன்பது வயதுக்குள்ளாக பாலுணர்வு சார்ந்து அறிந்து கொள்ளுதலும், பாலுணர்வு சார்ந்த புரிதல்களும், அனுபவங்களும் ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள் சார்ந்தே நாம் இயக்கப்படுகிறோம். ////
ReplyDeleteஅழகாச் சொல்லீட்டீங்க நண்பரே!!
வயதாகிக் கொண்டே வருவது பலருக்கும் ஒரு மனச்சிக்கலாக இருந்து வருகிறது. ///
ReplyDeleteவயதாகிறது உடலுக்கு. மனம் அப்படியேதான் உள்ளது இன்னும்!!
கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க!
ReplyDeleteதமிழ் அல்லாத வார்த்தைகளில் சிலது மறையுது, என்னான்னு பாருங்க கொஞ்சம்
கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வந்திருந்த ‘இப்படிக்கு ரோஸ்‘ ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை. தமிழில் பேசினாலும் அவர் ஆங்கிலத்தையே பயன்படுத்தினார். அது உயர்ந்த நிலையில் தங்களை காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.///
ReplyDeleteவிடுங்க!! விளம்பர விரும்பிகள் அப்படித்தான்.
//விளம்பர விரும்பிகள் அப்படித்தான்//
ReplyDeleteஆங்கிலம் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் அப்படி பேசினால் அது விளம்பரம்!
ரோஸ் லண்டனில் படித்தவர், உலக நாடுகள் சுற்றியவர், அவருக்கு ஆங்கிலம் பேசுவதற்கு சுலபமாக இருக்கலாம்!
ரோஸ் நிகழ்ச்சியை பார்த்தால் உங்களுக்கு தெரியும், தமிழ் எவ்வளவு கடினப்படுதுன்னு!
அதான பார்த்தேன். திருச்சி பதிவர் சந்திப்புக்கு போயிட்டு பதிவில்லையா.
ReplyDeleteபுகைப்படத்துடன் பதிவும் அருமை.
photoscape வைத்து புகைப்படங்கள் மீதே எளிதாக பெயர் எழுதி விடலாம் வாசு.
அனைவரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
வாழ்த்துகள்.
பதிவுலக மக்கள் சமுதாய அக்கறையோடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருப்பது நல்ல விஷயமே.. நம்ம படம் எல்லாம் போட்டு இருக்கேங்க.. கடைசியா சொல்லி இருக்கிற ஞானக்கூத்தனின் கவிதை அருமை
ReplyDeleteநண்பர் ஞானசேகரிடம் தொலைபேசினேன். உங்களை சந்தித்தது குறித்து பகிர்ந்து கொண்டார். நேரம் சென்றதே தெரியவில்லை என்றார்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்
//கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வந்திருந்த ‘இப்படிக்கு ரோஸ்‘ ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை. தமிழில் பேசினாலும் அவர் ஆங்கிலத்தையே பயன்படுத்தினார். அது உயர்ந்த நிலையில் தங்களை காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். //
ReplyDeleteஒருவேளை திருநங்கையரில் சரளமாக ஆங்கில பேசுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் வகையாகவு, அது திருநங்கையர் மீது பிறருக்கு இருக்கும் தவறான எண்ணங்களைப் போக்க உதவும் என்றும் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம்.
புகைப்படங்கள் அருமை..
ReplyDeleteதிருச்சி சந்திப்பில் நண்பர்களின் படங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஆமா, சென்னைக் கூட்டத்துல(யுகமாயினி-இலக்கியக்கூடல்) நான் உங்ககூட வந்தேன்னு மட்டும் எழுதிப்புட்டு, உங்க பக்கத்துல வேற யார் புகைப்படத்தையோ போட்டுவச்சுருக்கிறீங்க. சரி விடுங்க, அதுவும் நல்லதுக்குத்தான்.
ஊர் சுத்துனாலும் உருப்படியா சுத்தியிருக்கீங்க, எழுதியிருக்கீங்க.:)
எது எழுதினாலும் நல்லா எழுதறீங்களே.
சில நல்ல விசயங்களை தூரல்களாக சொல்லியிருக்கீங்க. பயனுள்ள பதிவு. தமிழ் வார்த்தைகள் பயணுள்ளது.
ReplyDeleteநண்பர்களின் புகைப்படம் போட்டமைக்கு நன்றி. வாசு சார்
தல நல்ல விஷயங்கள் எங்கே இருந்தாலும் தேடி செல்விர்களா..
ReplyDeleteசந்திப்பு இனிதாய் முடிந்ததில் சந்தோஷம்.. ராசா முதியகவி.. இரும்படிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை? :))
ReplyDeleteபதிவர் படங்கள் பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteமே10 தொடுதல் குறித்த மீட்டிங் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன்.
தமிழ்....??!!!!@##$$%
உங்களுக்கு ஓட்டு போட்டால் "இடுகைகளை இணைப்பதில் உள்ள பிரச்சினையை நீக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் சரி செய்யப்படும். தடங்கலுக்கு வருந்துகிறோம்." என்று வருகிறதே!!
ReplyDelete//விளம்பர விரும்பிகள் அப்படித்தான்//
ReplyDeleteஆங்கிலம் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் அப்படி பேசினால் அது விளம்பரம்!
ரோஸ் லண்டனில் படித்தவர், உலக நாடுகள் சுற்றியவர், அவருக்கு ஆங்கிலம் பேசுவதற்கு சுலபமாக இருக்கலாம்!
ரோஸ் நிகழ்ச்சியை பார்த்தால் உங்களுக்கு தெரியும், தமிழ் எவ்வளவு கடினப்படுதுன்னு!///
உலக நாடு சுத்தினால் தமிழ் கடினப்படாது.................இதெல்லாம் கூத்து.............நிகழ்ச்சி நான் பாத்திருக்கேன்.....
அதப்பத்தி சொல்ல பெரிய பதிவு நான் போடணும் !!!
வலைப்பதிவர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... அருமை. பதிவுலக நண்பர்களை கண்டுக்கொண்டேன்... கண்டுகொண்டேன்... மிக்க நன்றி!
ReplyDeleteபடங்கள் பக்கா! பக்கா!!
ReplyDeleteபதிவில் படித்து அறிமுகமான நண்பர்களை புகைப்படங்களில்
பார்ப்பது சந்தோஷம்!
(சரியா தூங்கலையோ எல்லாரும்?)
//மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் வயது என்பது ஒரு பொருட்டாக இருக்காது.//
ReplyDeleteஉண்மைதான் நண்பா
கூட்டங்கள் சந்திப்புகள் குறித்த தங்களின் இப்பதிவுகள் அருமை.
ReplyDeleteநன்றி உமா.
ReplyDeleteநன்றி டாக்டர் தேவன்மாயம் (உங்க பேரை நிறைய பேர் தேவன்மயம்னு நெனச்சிட்டிருக்காங்க. நானே அப்படித்தான் நினெச்சிருந்தேன்.
நன்றி வால்பையன்.
காக்டெயில், பிளையிங் பெக் எனக்கு எல்லாமே பிடிக்கும் அருண். (எப்போ)
என் கணிணியில் சரியாக தெரிகிறது நண்பா.
நன்றி வண்ணத்துப்பூச்சியார், போட்டோஸ்கேப் டிரை பண்றேன்.
ReplyDelete(என்ன பதிவே போடல)
நன்றி கார்த்தி. (முடிஞ்சா ஞானக்கூத்தனை முழுமையாக வாசியுங்க)
நன்றி கோவி.கண்ணன் (உங்களையும் சந்திக்கணும்)
ReplyDeleteவருகைக்கும் ஊக்கத்திற்கும்
நன்றி தீப்பெட்டி.
முத்துவேல் இந்த காமெடிதானே வேணாங்கிறது. பிரபல கவிஞரான உங்களோட நான் இருக்கற படத்தப்போட்டிருக்கேன். இதுக்கே இப்படியா.
ReplyDeleteநன்றி ஆ.முத்துராமலிங்கம்.
ReplyDeleteநன்றி வினோத்கௌதம் (செல்லும் வாய்ப்பும் வசதியும் இருந்தால் செல்வதற்கு தயக்கமில்லை நண்பா.)
நன்றி சஞ்சய்காந்தி (பாவம் இளையகவி அவர விட்ருங்க)
நன்றி ஆதவா.
ReplyDeleteடாக்டர் ருத்ரன் ஷாலினி நிகழ்வு குறித்து பலரும் எழுதிவிட்டார்கள். அதனால்தான் சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.
அதென்ன //தமிழ்....??!!!!@##$$%//
தலை சுத்துதா ?
இல்ல வேறெதாவதா.. புரியலை.
ஓட்டா... அப்படின்னா...?
நன்றி தேவன்மாயம் (சீக்கிறமா பெரிய பதிவிடுங்க)
ReplyDeleteநன்றி குடந்தை அன்புமணி.
நன்றி கலையரசன் (இரவு 2 மணி வரை நானும் கார்த்திகைப்பாண்டியனும் பேசிக்கொண்டிருந்தோம். மற்றவர்கள் முன்தினம் தூங்கினார்களா இல்லையா எனத் தெரியாது)
நன்றி சொல்லரசன், (நீங்க சொல்வது உண்மைதான்)
ReplyDeleteநன்றி யாத்ரா (நமது அடுத்த சந்திப்பு எப்போ.. காத்திருக்கிறேன்)
//கோவி.கண்ணன் said...
ReplyDelete//கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வந்திருந்த ‘இப்படிக்கு ரோஸ்‘ ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை. தமிழில் பேசினாலும் அவர் ஆங்கிலத்தையே பயன்படுத்தினார். அது உயர்ந்த நிலையில் தங்களை காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். //
ஒருவேளை திருநங்கையரில் சரளமாக ஆங்கில பேசுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் வகையாகவு, அது திருநங்கையர் மீது பிறருக்கு இருக்கும் தவறான எண்ணங்களைப் போக்க உதவும் என்றும் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம்.
//
அவகதான் நன்னா பேசுவாகன்னு விசய் தொலைக்காட்சி பாத்தே தெரிஞ்சிகிரோமே,,, அவக அமரிகாவுல படிச்சதா சொல்லுதாக, அத காண்பிக்கிறதுக்காக இருக்குமோ ?
//வாழ்வின் முக்கியப் பருவங்களில் ஒன்று வளரிளம் பருவம்.//
ReplyDeleteமிகவும் சரியாகச் சொன்னீர்கள் அக நாழிகை. நம்முடைய வாழ்க்கை முழுமைக்குமான அடித்தளம் இந்த வளரிளம் பரும் என்பதை அனைவரும் அறிந்து, அவ்வயதில் இருப்வர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்களில் தங்கள் வாழ்கையின் மிக முக்கியமான தருணங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெரும்பாலான வளரிளம் பருவத்தினர். சமூக ஊடகங்களான வலைப்பூக்களும், வலைபதிவர்களும், தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். அந்த வகையில் நீங்கள் அனைவரும் எடுத்த இந்த சிறந்த முயற்சிக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல தமிழில், விவரங்களுடன் கூடிய பதிவு. சுவராஸ்யமாக இருந்தது.
ReplyDelete//வயது என்பது ஒரு மனோபாவம்தான். //
உண்மை.
பதிவர் சந்திப்பில், புகைப்படங்களை வெளியிட்ட தாங்கள், பேசிக்கொண்டு இருந்த விஷயங்களையும் சுருக்கமாக சொல்லியிருக்கலாமோ!
அவியல் உண்டது போன்ற நிறைவு ஒரு பதிவில் பல தகவல்கள்.....பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் நன்றாக உள்ளது....பருவங்கள் பற்றி சரியாக பகர்ந்தீர்கள்....சுவையான பதிவு....
ReplyDeleteவணக்கம் வாசு,
ReplyDeleteஉங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிதான்... சந்திப்பைப்பற்றிய பதிவும் நல்லா இருக்கு, நானும் ஒரு பதிவிடுகின்றேன்.
அருமையானதொரு பதிவர் சந்திப்பிற்கு சென்றுவிட்டு வந்துள்ளீர்கள். அனைவரையும் இந்நிழற்படத்தில் கண்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteநாம் அடிக்கடி பயன்படுத்தும் தமிழ் அல்லாத வார்த்தைகளோடு, அதற்கான தமிழ் வார்த்தைகளையும் தந்திருக்கலாமே..
அன்புடன்
உழவன்
இன்று தான் தங்களின் இடுகை கூகிள் படிப்பான் வாயிலாக படித்தேன். மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல தமிழ் அல்லாத சொற்கள் என்பது தான் எனக்கு குழப்பத்தை அளிக்கிறது.
முடிவாக அந்தக் கவிதை அருமை
உண்மைதான் நாம் பேசும் தமிழ் தமிழ் அல்ல.
ReplyDeleteமன்னிப்பு தமிழ் ல எனக்கு பிடிக்காத வார்த்தை என்று விஜயகாந்த் சொல்றாரு. ஆனா பாருங்க அது ஒரு போர்ச்சுக்கீஸ் வார்த்தை