ஒருவரையொருவர் அடைகாத்தபடி
அரவணைத்தலில்
இருப்பதையே நாம் விரும்புகிறோம்
அன்பின் அதீதத்தில்
திளைக்கிறோம்
அணைப்பு அவசியமாகி விடுவதால்
வேறெதிலும் இல்லாத
பாதுகாப்புணர்வை நாம் பெறுகிறோம்
அணைத்தலில் விலகுகிறது
பயம்
உலர்ந்த மார்புக் காம்புகளில்
உதடுகளின் ஈரம் நெகிழ்த்துவதைப்போல
ஒரு அணைப்பு
போதுமானாதாயிருக்கிறது
எல்லாவற்றுக்கும்
அதிருப்தி
கோபம்
நியாயம்
ஒழுங்கு
எல்லாவற்றையும்
சரி செய்து விடுகிறது ஒரு அணைப்பு
அணைத்திருப்பதிலிருந்து
விலகியிருப்பதாய் தோன்றும்
கணங்களில்
பேசும் எல்லாமே
கசப்பானதாயிருக்கிறது
*
பொன்.வாசுதேவன்
//அணைத்திருப்பதிலிருந்து
ReplyDeleteவிலகியிருப்பதாய் தோன்றும்
கணங்களில்
பேசும் எல்லாமே
கசப்பானதாயிருக்கிறது// ஆமாங்க பல நேரம் இப்படி தான் தோன்றுகிறது..
//அதிருப்தி
ReplyDeleteகோபம்
நியாயம்
ஒழுங்கு
எல்லாவற்றையும்
சரி செய்து விடுகிறது ஒரு அணைப்பு
அணைத்திருப்பதிலிருந்து
விலகியிருப்பதாய் தோன்றும்
கணங்களில்
பேசும் எல்லாமே
கசப்பானதாயிருக்கிறது//
உண்மைதான் கவிஞரே
சிறந்த அழகிய கவிதை