Friday, June 12, 2009

வன்முறையும் வாழ்க்கையும்

scul வன்முறை உணர்வு நம்முள் எதன் காரணமாக நிகழ்கிறது?

வன்முறை என்றால் படுகொலை, வெடிகுண்டு, தீவிரவாதம் என்றெல்லாம் போகவேண்டியதில்லை. நாம் பேச வேண்டியது மனதுக்குள் அவ்வப்போது தோன்றும் தனி மனித வன்முறை பற்றி. பயம், சந்தோஷம், துக்கம் மற்றும் வன்முறை எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடைய வார்த்தைகள்.

நமக்குள்ளே ஒரு மிருகம் ஒளிந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா?

நமக்குள்ளே மிருகமா ? ஆம். நமக்குள்ளே நம்மோடு இணைந்திருக்கும் அந்த மிருகத்தின் அவ்வப்போதைய வெளிப்படல்களில்தான் நம்மை அறிந்தும் அறியாமலும் சமூகத்திற்குள் அதிகம் புழங்கும் சராசரி ஆதிக்க மனோபாவமுடையவர்களாய், சமூக ஒழுங்கிலிருந்து பிறழ்ந்து நடந்து கொள்வோம்.

சரி, எப்போதெல்லாம் நமக்குள்ளிருக்கும் மிருகம் வெளித் தோன்றுகிறது ? சின்னச் சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் பேருந்திற்கோ அல்லது இரயிலுக்கோ காத்திருந்து வராததினால், வீட்டிற்கு தாமதமாக வந்த எரிச்சலை மனைவியிடம் கோப முகம் காட்டி சிடுசிடுப்பதில், வெயில் நேரத்தில் ஏற்பட்ட அலைச்சலின் கோபத்தை நம் கீழ்பணிபுரியும் ஊழியர்களின் மேல் பிரயோகித்தலில், நாம் சொன்னதைக் கேட்கவில்லையே என்று குழந்தைகளை திட்டுவது, அடிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக நாம் விரும்பியபடிதான் எல்லோரும் நடக்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவத்துடன் செயல்படுவது, நம் கருத்துக்களை வலிந்து பிறர்மேல் திணிப்பது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் வன்முறை துளிர்விடுகின்ற இடங்கள்.

bp2 விரக்தி, தனிமை, வெறுப்பு, பயம், எரிச்சல், துக்கம், அதீத சந்ஷோசம் என மனதின் பல விதமான உணர்ச்சி எழுகின்ற பொழுதெல்லாம் வன்முறை எண்ணம் தூண்டப்படுகிறது. பாலியல் வன்முறை, எதிரி யார் என்று தெரியாமலே கோபம், எதிர்ப்பு மனப்பான்மை, வேலையின்மை இவையெல்லாம் நம்முள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டேயிருக்கும் வன்முறைகள்.

அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காண்கின்ற மனப்பான்மையும் வன்முறைதான். நம்மில் பலரும் இவ்வகை இன்பத்தை விரும்புபவர்களாய் இருக்கிறோம். அடுத்தவரை துன்புறுத்தல் என்றால் அடிப்பது, காயமேற்படுத்துவது மட்டுமல்ல. பொறாமை, கோபப்படுதல், கருத்துத் திணித்தல் இவையெல்லாம் துன்புறுத்தும் விஷயம் தான். சினிமாவில் வரும் காதல், சண்டைக் காட்சிகள், கதாநாயகன் இருந்தால் ஒரு வில்லன் இருப்பது, கற்பழிப்புக் காட்சிகள் என எல்லாவற்றிலும் வன்முறையைத்தான் ரசித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ரசிக்கும் நகைச்சுவையில் கூட ஒருவரிடம் இன்னொருவர் அடிவாங்குவதுதான் நம்மால் அதிகம் ரசிக்கப்படுகிறது.

இதன் காரணம் நம் மீது அதிகாரம் செலுத்த நினைக்கின்ற சமூகம் சிறுவயதில் பெற்றோர், பிறகு ஆசிரியர், வேலைக்குப் போனால் மேலதிகாரி என நடுவயது வந்து பக்குவப்பட்ட மனநிலை பெறுவதற்கு முன்பாக நாமும் பெற்றோர் நிலைக்கு வந்துவிடுகிறோம்.

வன்முறை நமக்கு எப்படியெல்லாம் சந்தோஷமளிக்கிறது? ஒருவரை பிடிக்கவில்லை என்று வெறுத்து ஒதுக்குதல், குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக இருத்தல், தனிநபரை புகழ்வதன் மூலம் அடுத்தவர் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துதல் வன்முறையாக இவற்றையெல்லாம் செய்யும் நாம் அதில் சந்தோஷமடைகிறோம்.

ஆக வன்முறைக்குக் காரணம் மனம்தான் என்பது தெளிவாகிறது. தனி நபருக்குள் எழுகின்ற வன்முறை உணர்வோ அல்லது குழுவின் ஒட்டுமொத்த வன்முறை எண்ணமோ எதுவானாலும் வன்முறை வேர்விட்டு வளர்கின்ற இடம் அடிப்படையில் மனம் என்பதை மறுக்க முடியாது.

வன்முறை எங்கிருந்து வருகிறது ? போராட்டமான வாழ்க்கைச் சூழலில் ஒருவரையொருவர் முழுமையாக நம்புவது சாத்தியமாக இருப்பதில்லை. என்றைக்கு ஆதிமனிதன் மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினானோ அன்றே வன்முறை உணர்வும் வளரத் தொடங்கிவிட்டது எனலாம். இதற்கு முடிவு என்ன ?

samurai நாம் எல்லோரும் முழுமையான அமைதியில் வாழ்க்கை நடத்துவதையே விரும்புகிறோம். இதற்கு நாம் முதலில் வன்முறை எண்ணத்தை விட்டு விலக வேண்டும். வன்முறையை நாம் எங்கிருந்து அணுகப்போகிறோம் ?

நம்முள்ளிருக்கும் கோபங்களை முதலில் களைய வேண்டும். ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுப் பழக வேண்டும். வாழ்வின் சிக்கலான கட்டங்களில் பிரச்சனையை நிதானத்துடன் ஆராய்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கோபம் என்கிற உணர்வு ஆரம்பத்திலேயே தவிர்க்கப்படுகிறது. வன்முறையின் விளைவில் பெரும்பங்கு வகிப்பது கோபம்தான். கோபம் கைவிடப்பட்டால் வன்முறையின் தீவிரத்தன்மை குறைகிறது.

நிதானத்தோடு பிரச்சனையை அணுகி சுய பரிசோதனையை நாமே மேற்கொள்வதன் மூலம் வன்முறை என்ற விஷயத்தை புரிந்து கொள்ளலாம்.

தன் சுபாவத்தை அறிந்து இயல்பை உணர்ந்து முற்றும் உணர்ந்த நிலையை அடைதல். இது ஜென் தத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. தன்னுடைய இயல்பை ஒருவன் அறிந்து கொண்டானெனில் வன்முறை அவனை விட்டு விலகி விடுகிறது.

சாதாரண மனிதன் தன் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே தியானம் செய்து விழிப்புணர்ச்சிப் பெற வேண்டும் என்பது ஜென் குருவில் ஒருவரான போதி தர்மரின் நோக்கம். சமய நூலைத் தவிர்த்து அவற்றிற்கு அப்பால் ஞானம் பெறுதல், வார்த்தைகளை நம்பியிருக்கும் நிலையை மாற்றுதல், மனிதனின் மனதை நேரடியாக தொட முயலுதல்.

நேரடியாக விரைவாக சுய அனுபவத்தின் மூலம் ஞானோதயம் பெற வழிகாட்டுகிற ‘ஜென்‘ மதங்கள், மத நூல்கள், சொற்பொழிவுகள் அவசியமற்றவை என்று கருதுகிறது. போதி தர்மர் சொற்பொழிவுகளை தவிர்த்து செயல் மூலம் ஜென்னை போதித்தார். ‘சூஹ்‘ என்ற மலையில் உள்ள ‘ஷோரின்‘ ஆலயத்திற்கு அருகில் உள்ள குகையில் தங்கினார். எதிரே இருந்த குன்றை உற்றுப் பார்த்து யாரிடமும் பேசாது ஒன்பது ஆண்டுகள் தவம் செய்தார்.

1218804502Ur7Bqz தாவோ (TAO), கன்பூஷியஸ் ஆகிய தத்துவங்களைக் கற்க ‘ஏகா‘ என்ற அறிஞர் போதிதர்மரைப் பார்க்க மலைக்கு வந்தார். குரு எதுவும் பேசவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து ஏகா திரும்பவும் மலையேறி வந்தபோது குரு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். ஏகா பணியிலேயே நின்று குரு ஏதாவது சொல்லுவார் என்று காத்திருந்தார். ஆனால் பயனில்லை. இரவு முழுவதும் பனியில் நின்றார். காலையில் அவர் இடுப்பளவு பனி உறைந்திருந்தது.

கடைசியாக போதி தர்மருக்கு இரக்கம் ஏற்பட்டு “பனியில் நின்று கொண்டு எதை சாதிக்க நினைத்தீர்கள் ?“ என்று கேட்டார்.

“நீங்கள் திருவாய் மலர்ந்து தூய தர்மத்தை போதிக்க வேண்டும்“ என்று பதிலளித்தார் ஏகா.

“ஆதி நாளிலிருந்து பிக்குகள் அதை அறிய முயன்று கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் கடினமானது. அதைப் பயிற்றுவிக்கும் படி கேட்க உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது ?“ என்றார் போதிதர்மர்.

ஏகா ஒரு கூரிய வாளை எடுத்து தனது இடது கையை வெட்டி “இது என் அந்தரங்க சுத்தியை நிரூபிக்க“ என்று கூறிச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தில் வரும் கையை வெட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஒரு குறியீடே. கையை வெட்டிக்கொள்வது என்பது ஞானோதயம் பெற பாரம்பரியமான வழிகளை உதறித் தள்ளுவ்தைக் குறிக்கும். அதே சமயம் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதென்பது வன்முறையின் உச்சநிலை. தன்னைத்தானே துன்புறுத்தி அதனை உணர்வதன் மூலம் வன்முறையின் விளைவை நேரடியாக பெறுகின்ற அனுபவம் ஏற்படுகிறது.

மனிதர்கள் வேட்டை நாயைப் போன்றவர்கள். இயந்திரத்தால் செய்யப்பட்ட முயலை வேட்டையாட மனிதர்கள் பந்தயத் தடத்தில் பறக்கிறார்கள். அதனால் அவர்கள் எப்போதும் இறுக்கத்துடனும் நிம்மதியில்லாமலும் இருக்கிறார்கள். உள ரீதியான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். உள்ளத்து வன்முறை வாழ்க்கையை சிக்கலாக்கிவிடும். நாம் இதை உணர்கின்ற போது வேட்கையையும் கோபத்தையும் கைவிட்டு மன அமைதியடைகிறோம்.

- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

30 comments:

  1. மனம் நிறைவாக இருப்பது போன்ற உணர்வு! நன்றி!!

    ReplyDelete
  2. http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/jun/11/96

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வன்முறையைப் பற்றி ஒரு முறையான பதிவு, பொருத்தமான படங்களுடன்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  4. ஆச்சரியமாயிருக்கு வாசு.எப்போ. எப்படி இந்தப் பதிவுங்கறதுதான்.

    ஒரு சந்தேகம் வாசு.
    /தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதென்பது வன்முறையின் உச்சநிலை/

    காந்தி இதை அடிக்கடி செய்தாரே.உண்ணாவிரதப்போராட்டம் இந்த வகைதானே. இவை வன்முறைதானா?

    நல்ல, அர்த்தமுள்ள பதிவு.

    ReplyDelete
  5. வன்முறை பற்றி நல்லா எழுதியுள்ளீர்கள்!!

    ReplyDelete
  6. //நமக்குள்ளே ஒரு மிருகம் ஒளிந்திருக்கிறது//

    வன்முறையாக வெளிப்படும்போதுதான் தெரிகிறது,நாம் அறியாமல் நமக்குள்ளே ஒளிந்திருந்த மிருகம் பூனையா, நரியா, சிங்கமா என்பது.

    பதிவு அருமை.

    ReplyDelete
  7. //ஆக வன்முறைக்குக் காரணம் மனம்தான் என்பது தெளிவாகிறது. தனி நபருக்குள் எழுகின்ற வன்முறை உணர்வோ அல்லது குழுவின் ஒட்டுமொத்த வன்முறை எண்ணமோ எதுவானாலும் வன்முறை வேர்விட்டு வளர்கின்ற இடம் அடிப்படையில் மனம் என்பதை மறுக்க முடியாது.
    //

    //நிதானத்தோடு பிரச்சனையை அணுகி சுய பரிசோதனையை நாமே மேற்கொள்வதன் மூலம் வன்முறை என்ற விஷயத்தை புரிந்து கொள்ளலாம். //


    அருமையாக இருக்கிறது .

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  8. நிறைவான பதிவு வாசு, மனதிற்குள் இருக்கும் மிருக உணர்வு வன்முறையாகிவிடுகின்றது. இந்த மிருக சக்தியை சரியான ஆக்க சக்தியாக மாற்றினால் மனிதன் வன்முறைகளிருந்து தனித்து வரமுடியும்... மிகவும் நல்ல அலசல்....

    ReplyDelete
  9. அருமை வாசு.

    ReplyDelete
  10. விரக்தி, தனிமை, வெறுப்பு, பயம், எரிச்சல், துக்கம், அதீத சந்ஷோசம் என மனதின் பல விதமான உணர்ச்சி எழுகின்ற பொழுதெல்லாம் வன்முறை எண்ணம் தூண்டப்படுகிறது.

    உண்மை தான் வாசு சார்

    மனிதமனத்தின் இயல்பினை
    அதன் ஆழத்திலிருக்கும் வக்கிரங்கள்
    என அழகான அலசல்...

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. Hi aganazhigai,

    Congrats!

    Your story titled 'வன்முறையும் வாழ்க்கையும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th June 2009 10:00:01 PM GMT
    Here is the link to the story: http://www.tamilish.com/story/72986

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  13. அருமையான பதிவு.

    //
    ஏகா பணியிலேயே நின்று குரு ஏதாவது சொல்லுவார் என்று காத்திருந்தார். ஆனால் பயனில்லை. இரவு முழுவதும் பணியில் நின்றார். காலையில் அவர் இடுப்பளவு பணி உறைந்திருந்தது
    //
    எழுத்துப் பிழைகளைச் சரி செய்யவும்.

    ReplyDelete
  14. AnonymousJune 13, 2009

    ம்ம்ம்... நல்ல பல கருத்துக்கள் வாசு!
    உபயோகமான ஒன்று!

    ReplyDelete
  15. மென்மையாய் வன்முறை பற்றி சொல்லியவிதம் அருமை

    ReplyDelete
  16. வாசு,

    நன்றாக பதிந்திருக்கின்றீர்கள். நிறைய விசயங்கள் நாம் உணர்ந்தாலும் செய்ய இயலுவதில்லை. காரணமும் தெரிவிதில்லை.

    //தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதென்பது வன்முறையின் உச்சநிலை//

    இதை நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் செய்து கொண்டு தான் இருக்கின்றோம்.

    ReplyDelete
  17. vasu ungalin intha pathivu thangalai oru sirantha manaviyal nibinarai adayalam kaattukirathu ..

    ReplyDelete
  18. ///வன்முறையை நாம் எங்கிருந்து அணுகப்போகிறோம் ?///

    யோசிக்க வைக்கிறது. அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  19. என்னை இன்னொரு விஷயமும் யோசிக்க வைத்தது.. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ற படங்களை எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்கள்? மிகவும் பொருத்தமாக அமைகிறதே? எழுத செலவிடும் நேரம், இப்படங்களுக்கும் ஆகுமோ?

    ReplyDelete
  20. முழுதும் படிக்க முடியாமல் கண்களில் நீர் திரண்டது.

    நன்றி வாசு சார்.

    ReplyDelete
  21. //தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதென்பது வன்முறையின் உச்சநிலை//

    //நம்முள்ளிருக்கும் கோபங்களை முதலில் களைய வேண்டும். ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுப் பழக வேண்டும். வாழ்வின் சிக்கலான கட்டங்களில் பிரச்சனையை நிதானத்துடன் ஆராய்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கோபம் என்கிற உணர்வு ஆரம்பத்திலேயே தவிர்க்கப்படுகிறது. வன்முறையின் விளைவில் பெரும்பங்கு வகிப்பது கோபம்தான். கோபம் கைவிடப்பட்டால் வன்முறையின் தீவிரத்தன்மை குறைகிறது. நிதானத்தோடு பிரச்சனையை அணுகி சுய பரிசோதனையை நாமே மேற்கொள்வதன் மூலம் வன்முறை என்ற விஷயத்தை புரிந்து கொள்ளலாம். தன் சுபாவத்தை அறிந்து இயல்பை உணர்ந்து முற்றும் உணர்ந்த நிலையை அடைதல்//

    மனோவியல் சம்மந்தமான பதிவு வாசுதேவன் சார்
    மனது ஒரு தெளிவான நிலையில் இருக்கிறது

    ReplyDelete
  22. @ பழமைபேசி

    @ ஸ்ரீ

    @ முத்துவேல்

    @ தேவன்மயம்

    @ சில்-பீர்

    @ பிரவின்ஸ்கா

    @ ஆ.ஞானசேகரன்

    @ வண்ணத்துப்பூச்சியார்

    @ யாத்ரா

    @ சக்தி

    @ ஜோ (சரி செய்துவிட்டேன், சுட்டியமைக்கு நன்றி)

    @ ஷீ-நிசி

    @ நர்சிம்

    @ சாம் (உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கலாமே)

    @ உயிரோடை

    @ அகிலா (இன்னும் தமிழ் முயற்சிக்கவில்லையா)

    @ ஸ்ரீதர்

    @ விதூஷ் (படங்களை தேர்ந்துதான் போடுகிறேன், வித்யா)

    @ தீபா (ஏன் இப்படி?)

    @ குமாரை நிலாவன்

    அனைவரின் ஊக்கத்திற்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  23. அருமையான மற்றும் ஆழ்ந்த பதிவு..

    (ஊருக்கு சென்று விட்டதால் தாமதமான பின்னூட்டம்)

    ReplyDelete
  24. மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
    அருமையா சொல்லியிருக்கீங்க சார்.

    ReplyDelete
  25. AnonymousJune 15, 2009

    வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


    தமிழர்ஸின் சேவைகள்

    இவ்வார தமிழர்

    நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

    இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

    இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

    இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

    சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

    Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
    உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

    நன்றி
    உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
    தமிழர்ஸ்
    தமிழர்ஸ் பிளாக்

    ReplyDelete
  26. கருத்து சொல்வதையே கொஞ்சம் நீளமாக சொன்னால் அதுவும் வன்முறை தான்னு என் நண்பன் சொல்றான், உண்மையா!

    ReplyDelete
  27. ஏதோ ஒரு தியான பீடத்திற்குள் சென்றுவிட்டு வந்த ஒரு பிரமை படித்து முடிக்கும்போது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname