இந்த தொடர்பதிவை அழைத்தவர்களுக்கு நன்றி சொல்வதா அல்லது ஏன் என்னையும் இந்த இக்கட்டில் மாட்டி விட்டீர்கள் என்று சொல்வதா தெரியவில்லை. ஏனென்றால் நிறைய கேள்விகளுக்கு வாசிப்பவர்களையும் கருத்தில் கொண்டு நாகரீகமாகவே பதில் சொல்ல வேண்டியிருக்குமென்றே நினைக்கிறேன். அவ்வளவும் உண்மையென்று நம்பி ஏமாந்து போக வேண்டாம். இந்த கேள்வி பதில் தொடரின் நோக்கம் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாக இருந்தால் பொதுவான விஷயங்களை மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும்.
என்னை அழைத்த
டக்ளஸ் – ஆ.ஞானசேகரன் – தீபா – அன்பு - உமாஷக்தி (அனைவரும் ஒரே தினத்தில் அழைத்திருந்தனர்) ஆகிய நண்பர்களின் உணர்வுகளுக்கும் அன்பிற்கும் மதிப்பளித்து இந்த பதில்களை அளிக்கிறேன்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனக்கு பெற்றோர் வைத்த பெயர் வாசுதேவன். எனக்குப் பிடித்த பெயர்தான். அகநாழிகை என்பது என் விருப்பப் பெயர். அந்த வார்த்தையின் வசீகரம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பற்றிக் கொண்டு இன்று வரை தொடர்கிறது.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நெகிழ்வான நேரங்களில் கண்களில் தானாகவே நீர் சுரக்கும். அதை அழுகையென்று எடுத்துக் கொண்டால் சமீபத்தில் அழுதது 1.6.09 அன்று.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்பப் பிடிக்கும்
4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதம்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
எழுதுவபவர்கள், படிப்பவர்களில் மட்டுமல்ல, எனக்கு எல்லா தரப்பிலும் நண்பர்கள் அதிகம்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில் குளிக்கப் பிடிக்கும். ஒரு பயம் சூழ்ந்த மன உணர்வுடன், கடலில் குளிப்பவர்களை பார்க்கப் பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
தோற்றத்திற்கும், பேசும் போதும் அவர்கள் தரும் முக்கியத்துவம்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது : எழுதினாலும், எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும் மனோபாவத்துடன் இருப்பது.
பிடிக்காதது : நிறைய இருக்கிறது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எளிதில் யாரிடமும் பழகத்தயாராக இல்லாத மனோநிலை.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சிவப்பு நிற சட்டை..வெள்ளை நிற காற்சட்டை
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் அன்பே அன்பே (அயன்)
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14.பிடித்த மணம்?
மல்லிகை
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
யாத்ரா அவரது கவிதையும் ரசனையான மனதும்.
தூறல்கவிதை ச,முத்துவேல் கவிதையும், வெளிப்படையான பேச்சும்.
உயிரோடை எஸ்.லாவண்யா கவிதைகளை தனித்துவமாக விமர்சிக்கும் திறன்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
டக்ளஸ் – நகைச்சுவை உணர்வும், சிந்தனையும் கொண்ட இவரது பதிவுகள் பொதுவாகப் பிடிக்கும். சூரத்திலிருந்து தொலைபேசியில் அடிக்கடி இவர் என்னை கேட்பது “அய்யப்பனும் வாவர் சாமியும் ஓரினச் சேர்க்கையாளர்களா“ என்ற பதிவை எப்போது போடப்போகிறீர்கள் என்பதுதான். சென்னை வந்த போது நேரில் சந்தித்தோம். பழகுவதற்கு இனியவர்.
ஆ.ஞானசேகரன் – சிங்கப்பூரில் இருக்கும் இவர் சமுக சிந்தனையுடனும், குடும்ப உறவுகள் சார்ந்தும் பதிவிடுபவர். சமீபத்தில் திருச்சியில் இவரை நேரில் சந்தித்தேன். இவரது பதிவுகளை முழுவதுமாக வாசித்ததில்லை. பல பதிவுகளை வாசித்திருக்கிறேன்.
தீபா – இவரது பதிவுகளை முழுவதும் வாசித்து அவரது நடையின் ஈர்ப்பினால் பட்டாம்பூச்சி விருது அளித்தேன். இவருக்கு பட்டாம்பூச்சி விருது அளிக்கும்போது நான் கூறியவையே இப்போதும் பொருந்தும். மென்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை சந்தோஷம். அதிலும் ஒரு நிகழ்வை நாம் உணர்கிற அதே புரிதலுடன் நம் எழுத்தின் வாயிலாக வாசிப்பவரையும் உணர வைப்பது எத்தனை பேருக்கு சாத்தியமாகிறது. தீபாவின் பதிவுகளில் இதை உணர முடிகிறது.
அன்பு – ஓப்பன் ஹார்ட் என்ற பெயரில் எழுதும் இவர் என்னை அடிக்கடி தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்பு கொண்டு எனது எழுத்துக்களைப் பற்றி பேசுவார். நன்றாக எழுதக்கூடியவர். சிவகாசியைச் சேர்ந்தவ இவர் வாசிப்பிலும் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
உமாஷக்தி - கவிதை, கதை, அனுபவம், உலக சினிமா, புத்தக விமர்சனம் என அனைத்து தளங்களிலும் பரவலாக எழுதி வருபவர். தீவிர வாசிப்பு முனைப்பினை உண்டாக்கும் இவரது எழுத்துக்களில் ஒரு ஈர்ப்பு இருக்கும். தெளிவான நடை, கவனமான வார்த்தைக் கோர்ப்பு என இவரது எழுத்துக்களை வாசிக்கும் அனைவருக்குமே ஈர்ப்பு அனுபவம் வாய்க்கும். குடும்பம், பணி, எழுத்து, நட்பு வட்டம் எல்லாவற்றிலும் உமா காட்டும் அக்கறையும், ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டியது.
17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கை
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மிகைப்படுத்தலற்ற, இயல்பான படங்கள்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்
21.பிடித்த பருவ காலம் எது?
எல்லா காலமும்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
பிரமிள் கவிதைகள், உழைப்பை ஒழிப்போம்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படம் இல்லை, கருப்பு வண்ணம் மட்டும்தான்.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - இனிமையான இசை.
பிடிக்காதது – அதிக இரைச்சல்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தாய்லாந்து
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதுவும் இல்லை.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏமாற்றம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
காமம்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பிடித்த இடம் என்று சொல்லத் தெரியவில்லை. பயணமும், தனியாக ஊர் சுற்றுவதும் ரொம்பப் பிடிக்கும்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
படிப்பதும், எழுதுவதுமாக.
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மனைவி இருக்கும் போதும், இல்லாத போதும் செய்யும் எல்லாமே சுயவிருப்பத்தோடு செய்வதுதான்.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சந்தோஷமும், துன்பமும் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்.
/27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ReplyDeleteஏமாற்றம்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
காமம்/
/32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சந்தோஷமும், துன்பமும் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்./
அருமை
//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ReplyDeleteசந்தோஷமும், துன்பமும் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்.//
-:)
வாழ்த்துகள்!
ReplyDeleteஅவ்வளவும் உண்மையென்று நம்பி ஏமாந்து போக வேண்டாம்.\\
ReplyDeleteபிடித்திருக்கிறது.
//26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ReplyDeleteஎதுவும் இல்லை.//
இந்தக் கேள்வி - பதில்களில் இருந்து உங்களால் இலகுவாக பொய் சொல்லவும் முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
அருமையான பதில்கள், ரசித்தேன்.
ReplyDelete26 ஆம் கேள்விக்கு மட்டும் ஏன் பொய்?
பல பதில்கள் நான் சொல்ல நினைத்தவையே, ஒத்த கருத்துகள்.
ReplyDelete//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சந்தோஷமும், துன்பமும் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்.//
இவை உங்கள் வாழ்வு பற்றியதா அல்லது வாழ்வு பற்றிய உங்களது கருத்தா?
//மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
ReplyDeleteமனைவி இருக்கும் போதும், இல்லாத போதும் செய்யும் எல்லாமே சுயவிருப்பத்தோடு செய்வதுதான்.//
நாங்க நம்பிட்டோம் அண்ணே
17. பிடித்த விளையாட்டு?
ReplyDeleteவாழ்க்கை//
வித்தியாசமான பதில்...
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ReplyDeleteஎதுவும் இல்லை.//
என்னங்க நீங்க???
கலக்கலா எழுதிறீங்க..
நல்ல சிறப்பான பதில்கள்...
ReplyDeleteமிகவும் ரசித்தேன்...
தலைப்பு ..;)
ReplyDelete32..அழகாக கூறியுள்ளீர்கள்.
அன்பு அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு முதலில் நன்றி வாசு.
ReplyDelete//17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கை//
அருமை.
காமம் கட்டுக்குள் இருந்தால் அது தேவதை கட்டுஅவிழ்க்கபட்டால் சாத்தான் என்கிறார்கள் சிலர்,உங்களுக்கு எப்படி?
ReplyDelete//சந்தோஷமும், துன்பமும் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்.//
நேரில் சந்தித்த போது உங்களை பற்றிய எனது எண்ணமும் இதுதான், தற்போது உங்க பதில்மூலம் உறுதிபடுத்திகொண்டேன்
சாத்தான் --> காமம்?!?
ReplyDeleteபசியைப் போல காமமும் ஒரு உணர்வு தானே, எல்லை மீறிப் போகும் போது தான் அது தவறாகிறது?
சொல்லப் போனால் ஆண் என்றாலே எல்லை மீறிய காமம் இருக்கத் தானே செய்யும்? இல்லாதது போல நடிக்கத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.
எல்லா கேள்விகளுக்கும் மிக அழகான அருமையான பதிலளித்திருக்கிறீர்கள், என்னை வேறு பதிலிளிக்க அழைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி, நான் என்ன பதில் சொல்லப் போறேன்னே தெரியல.
ReplyDeleteநல்ல சிறப்பான பதில்கள்...அண்ணா
ReplyDeleteசில பதில்கள் மேலோட்டமாக இருந்தாலும் ஒரு சில பதில்களில் இருக்கும் நேர்மையும் ஒப்புக் கொள்ளும் மனமும் அவற்றை சரி செய்கின்றன வாசு..;-)
ReplyDeleteஅருமை தொனிக்கும் பதில்கள்...!
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க பாஸ்.
ReplyDelete26 ம் கேள்விக்கு ரொம்ப தன்னடக்கத்தோட பதில் சொல்லியிருக்கீங்களே சார்.
ReplyDeleteஎல்லா பதில்களையும் ரசித்தேன் அகநாழிகை - 26த் தவிர - உங்களுடைய தனித்திறமை எழுத்து, தவிர வெளிப்படையான பேச்சும், பழகும் தன்மையும். தன்னடக்கம் காரணமாக எதுவும் இல்லை என்று எப்படி சொல்லலாம் வாசு?
ReplyDeletenalla iruku pa unga pathilkal
ReplyDeleteஇவைகள் சாதாரண கேள்வி பதில்கள் மட்டுமல்ல.. சில இடங்களில் வாழக்கையின் இயல்பான நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteநேற்று உங்களையும், அடுத்த இத்தொடர்பதிவை எழுதப்போகும் யாத்ரா அவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்
@ திகழ்மிளிர்
ReplyDeleteவருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி திகழ்மிளிர்.
@ பித்தன்
நன்றி பித்தன்.
@ பழமைபேசி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@ நட்புடன் ஜமால்
நன்றி ஜமால்.
@ குளோபன்
வருகை மகிழ்வூட்டுகிறது. நன்றி.
@ தீபா
நிஜமாகவே எந்த தனித்திறனும் கிடையாது என்பதுதான் உண்மை.
@ சில்-பீர்
நன்றி சில் பீர்.
நான் வாழும் வாழ்க்கை பற்றிய கருத்து மட்டுமே அது.
@ அத்திரி
//நாங்க நம்பிட்டோம் அண்ணே//
அத்திரி நான் சொன்னது உண்மைதான். எதையும் விருப்பத்தோடுதானே நாம் செய்கிறோம். (கட்டாயத்திற்காக செய்வது வேறு)
@ வேத்தியன்
வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி வேத்தியன்.
@ மணிநரேன்
மிக்க நன்றி நண்பரே.
@ ஆ.ஞானசேகரன்
அழைப்பிற்கும், அன்பிற்கும் நன்றி.
@ சொல்லரசன்
காமம் சாத்தான்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
@ ஜோ
வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே.
@ யாத்ரா
நன்றி மாப்ளே.
@ அன்புடன்
மிக்க நன்றி.
@ கார்த்திகைப்பாண்டியன்
நன்றி கார்த்தி.
@ டக்ளஸ்
நன்றி டக்ளஸ்.
@ நர்சிம்
நன்றி நர்சிம்.
@ அமிர்தவர்ஷிணி அம்மா
மிக்க நன்றி வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி.
@ உமாஷக்தி
உமா,
நான் தனித்திறமை கொண்டவன் என்றோ, நல்லவன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை தெரியும்தானே.
தொடருக்கு அழைத்தற்கும், அன்பிற்கும் நன்றி.
@ காயத்ரி
நன்றிப்பா காயத்ரி, உங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும்.
@ உழவன்
நன்றி உழவன், உங்களைச் சந்தித்திலும் மகிழ்ச்சிதான்.
//
ReplyDeleteஇந்த கேள்வி பதில் தொடரின் நோக்கம் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாக இருந்தால் பொதுவான விஷயங்களை மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும்.
//
அப்படித்தான் இருந்தது
எல்லா பதிலும் அருமைதான்!!
ReplyDeleteநாகரீகமான எழுத்தில் வெளிப்படையாக விசயங்களைச்சொல்வது கடினம்தான்..
ReplyDelete//26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ReplyDeleteஎதுவும் இல்லை.//
இந்தக் கேள்வி - பதில்களில் இருந்து உங்களால் இலகுவாக பொய் சொல்லவும் முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.///
ரசித்த பின்னூட்டம்!!
கலக்கல் வாசு.
ReplyDeleteதாய்லாந்து எப்ப போகலாம்..??
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ReplyDeleteஎதுவும் இல்லை.
//
சமூக சிந்தனைகளோடு எழுதுவது என்பது அனைவருக்கும் வாய்க்காத ஒரு வரம்.ஆதலால் இந்த பதிலை நான் ஆட்சேபிக்கிறேன்.
பதில்கள் அனைத்தும் வெளிப்படையாக உள்ளது.
ReplyDelete